முன்னால் அமைச்சர் அமீர் அலியே கிழக்கு முதல்வருக்கு தகுதியானவர் – ஹூனைஸ் பாருக்

-இர்ஷாத்  றஹ்மத்துல்லா–

சிலர் பதவிகளுக்கு வருவது தங்களது வசதி வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கும், சொகுசு வாழ்க்கைக்குமாக இருக்கலாம், ஆனால் எமது கட்சி முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்திற்கும் விடிவுக்குமாகத்தான் இருக்கின்றது என்பதை தெளிவாக கூறுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், கிழக்கில் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக இருக்க வேண்டும் அந்த பதவிக்கு சகல வழிகளிலும் தகுதியுடையவர் முன்னால் அமைச்சர்  அமீர் அலி என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை வானொலியின் தென்றல் அலை வரிசையில் இடம் பெற்ற 7 வது நாள் நேரடி நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு பேசும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் மேலும் கருத்துரைக்கையில் கூறியதாவது,

இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் 7 மாகாணத்தில் சிங்களச் சகோதரர்களே முதலமைச்சராக  வரமுடியும், வடக்கில் ஒரு தமிழரே முதலமைச்சராக வரலாம் என்ற நிலையில் கிழக்கில் 42 சதவீதமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அப்படியெனில் இந்த மாகாணத்தில் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரே வர வேண்டும் என்பது யதார்த்தமாகும்.

தமிழ் அரசியல் வாதிகளை நம்பி இன்னும் மக்கள் இருப்பார்கள் என்றால் இன்னும் அந்த மக்கள் பாவம் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் கூட்டமைப்பின் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள், உரிமைகளை பற்றி   பத்திரிகையில் மற்றும் பேசுகின்றனர். இன்று தமிழ் மக்களுக்கு அவர்கள் பெற்றுக் கொடுத்த உரிமையென்ன? என்ன என்று கேட்க விரும்புகின்றறேன்.

மன்னார் மறிச்சுக்கட்டியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான குடியிறுப்புக்கள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து எடுக்க வேண்டிய அனைத்த நடவடிக்கைகளும் எமது கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் நான் அங்கு சென்று எடுத்துள்ளோம். அதே போன்று முல்லிக்குளம் தமிழ் மக்களின் தேவையான பாடசாலையினை ஆரம்பித்தும் வைத்துள்ளோம்.

இ்ன்று எமது மக்களுக்கு தேவையானது நிம்மதியான வாழ்வும், அச்சமற்ற சூழலும், அதனை தற்போது இந்த ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார். கடந்த 3 தசாப்த காலம் நாம் அனுபவித்த துன்பங்கள் பற்றி மீள பார்க்க வேண்டியுள்ளது. ஏன் தமிழ் கட்சிகள், ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக நின்று தான் உரிமையினை பேசிவருகின்றனர். அதற்கு மாறாக ஏன் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அந்த உரிமைகள் பற்றி பேசி அவற்றை பெற்றுக் கொள்ளும் ஒரு இணக்கப்பாட்டு அரசியலுக்கு வரமுடியாது என கேட்கவிரும்புகின்றேன்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். முதலில் ஏமாறுபவர்களை  மாற்ற வேண்டும். அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வைத்துக்கொண்டு, தேர்தல் லாபங்களுக்காக அரசாங்கத்தை விமர்சிப்பதும், பேசுவதும், மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ளுவதுமான ஒரு அரசியல் கலாச்சாரத்தை தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்துவருகின்றது.

இணைந்த வடகிழக்கை மீள ஏற்படுத்த துடிக்கும் சக்திகளின் எடுபிடிகளுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்கக் கூடாது என்பதை மக்கள் அரசாங்கத்திற்கு அமோக வெற்றியினை வழங்கி நிரூபித்துள்ளனர். எனவே இணைந்த வடகிழக்கு என்பது தோற்கடிக்கப்பட்ட ஒன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பிரதான கோறிக்கை வடக்கையும், கிழக்கையும் இணைக்க வேண்டும் என்பது, அதனோடு ஒரு போதும் முஸ்லிம் சமூகம் இணைந்து செல்ல முடியாது என்பதை வலியுறுத்தி கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலத்தில யுத்தத்தை காட்டி தமது அரசியல் வாழ்வை முன்னெடுத்தார்கள். இன்று தமிழ் மக்களுக்கு உரிமை தேவை என்று கூறி அரசியல் செய்கின்றார்கள். பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தீர்வு காத்திருக்கின்றது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை புறந்தள்ளி, கால தாமதத்தை ஏற்படுத்தி வருகி்ன்றது. இங்கு ஒரு தீர்வு வரும் எனில் தமிழ் மக்கள் நன்மையடைந்து விடுவார்கள் என்பதை தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகவே இந்த கூட்டமைப்பு இருக்கின்றது. இதற்கு தமிழ் மக்கள் முழுமையான தமது அழுத்தத்தை தமிழ் கூட்டமைப்புக்கு கொடுக்க வேண்டும்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் குறித்து தெளிவான பார்வையில் பார்க்கும் போது தான் அவரது பணிகளின் பெறுமதியினை அறிந்து கொள்ள முடியும். ஆனால் அவருக்கு எதிரான பார்வையுடன் அவரது பணியினை நோக்கினால் அது எதிராகவே இருக்கும். இன்று வடக்கில் அதிமாக கிறிஸ்தவ மதத் தலைவர்கள், குருமார்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணியினை பாராட்டியுள்ளனர். முஸ்லிம்களின் மீள்குடிறே்றத்திற்க எதிராக செயற்படுபவர்கள் குறித்தும் எமக்கு தெரியப்படுத்திவருகின்றனர்.

இ்வ்வாறு பாதிக்கப்படு் எந்த ஒரு சமூகமாக இருந்தாலும் அந்த சமூகத்திற்காக குரல் ஒடுக்கும் ஒரு தலைவராக இன்று மக்கள் அவரை ஏற்றுக் கொண்டுள்ளதுடன், ஆசிய கண்டத்தின் சிறந்த மக்கள் சேவகனாகவும் அவர் பாராட்டுப் பெற்றுள்ளார் என்பதையும் தெரிவிக்கவிரும்புகின்றேன்.

Comments

 1. இப்படியே ஆலாலுக்கு பேசி பேசி இருக்காம யாரயாச்சி முதல் அமைசராக்கி மாகாண சபைய இயங்கவைத்து ஒதுக்கபட்ட நிதிகளையும் திரட்டிய வருமானங்களையும் பஜ்ஜட் காலத்துக்கு முதல் செலவழித்து மாகாணத்தை உறுபட வைக்கிற வழிய பாறுங்கப்பா???

 2. baiyath says:

  ivargal ellorum marumail visarikapaduvaargal.

 3. Ossan Salam - Doha says:

  இன்னும் முதலமைச்சர் ஒருவரை தேர்வு செய்வதில் இவ்வளவு சிக்கலா? அப்படித் தெரிவு செய்வதில் முரண்பாடுகள் இருக்குமாயின் ஜனநாயக ரீதியில் தேர்தல் இடம்பெற்றுள்ளது போலவே ஜனநாயக ரீதியிலேயே முதலமைச்சரையும் தேர்ந்தெடுக்கலாம். அப்படி தேர்ந்தெடுக்கும் போது மாகாண சபையிலும் ஜனநாயகம் உறுதி செய்யப்படும். அதாவது மாகாண சபை உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்து அனுப்பியது போல் சபையின் முதலமைச்சராக வருபவரை இந்த மாகாண சபையிலுள்ள அங்கத்தவர்கள் தமது ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதே தற்போது எழுந்திருக்கக் கூடிய இந்த முதலமைச்சர் சம்பந்தமான அமளி துமளிகளுக்கு தீர்வாக அமையும். ஏனெனில் கட்சித் தலைவர்களால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாத பட்சத்தில் கட்சிகளினால் பரிந்துரைக்கப்படும் அங்கத்தவர்களை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்தால் இந்த ஜனநாயக மரபுரிமைக்கு மதிப்பளிக்க சகல அங்கத்தவர்களும் கடமைப்பட்டிருக்கின்றார்கள்.

 4. katheer says:

  பாருக் எம்.பி சொல்வது தான் சரி..

 5. Niththilan says:

  ”ஏன் தமிழ் கட்சிகள், ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக நின்று தான் உரிமையினை பேசிவருகின்றனர். அதற்கு மாறாக ஏன் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அந்த உரிமைகள் பற்றி பேசி அவற்றை பெற்றுக் கொள்ளும் ஒரு இணக்கப்பாட்டு அரசியலுக்கு வரமுடியாது என கேட்கவிரும்புகின்றேன்” Great quotation of the year. . I would like to know what are the rights have been drawn for Muslim people by Muslim MPs who are with government until now? Before pointing out someone, they must gauge what they have done in terms of rights to their people? Even they didn’t take any action against the Bhuddist monks destroyed/locked the Mosques,but just leaving some statements. They are just decorating positions for their self benefits, not for the community. Supporting government whether UNP or SLFp or even sometime in the future Jathika hela Urumaya, Muslims are ready to go with them. This is the Great Policy’ of Muslim Politicians.

 6. பஸ்லி- பலபிட்டிய says:

  அரசாங்கத்தை விமர்சிப்பது முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க.

  அமைச்சர் பதவிகளை கோருவது உங்களை மாதிரி ….களிடம் இருந்து கட்சியை பாதுகாக்க.

  மக்கள் அரசாங்கத்திற்கு அமோக வெற்றியினை வழங்கி யுள்ளார்களா? என்ன இது முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க எடுக்கும் முயட்சிபோல் இல்லையா? எம் பி அவர்களே கடந்த கால தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அரசாங்கம் படு தோல்வி அல்லவா அடைந்து இருக்கிறது. அதேபோல் கடந்த கால முடிவுகளை ஒப்பிடும் போது முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்றியல்லவா அடைந்து இருக்கிறார்கள். இப்படி எல்லாம் பேசி யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள். கிழக்கில் வெறும் 20 , 30 ஆயிரம் வாக்கு வாக்குகளை வைத்துள்ள உங்களுக்கு இவ்வலவு திமிரன்னா 130,௦௦௦ வாக்குகளை கொண்ட முஸ்லிம் காங்கிரசுக்கு எவ்வலவு திமிரு வரனும்.

 7. Dr M L Najimudeen says:

  பின்வரும் பிரமுகர்களில் ஒருவர் தான் முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன.
  அமீர் அலி அவர்கள் முதலமைச்சர் ஆக வேண்டுமென்று ஹிஸ்புல்லாவும் அத்தாவுல்லாஹ்வும் அழுத்தம் கொடுக்கின்றார்கள்.
  ஹாபிஸ் நஸீர் அவர்களின் பணம் பாதாளம் மட்டும் பாயும் சக்தி வாய்ந்தது
  சுதந்திரக்கட்சியில் இருந்து தெரிவான நஜீப் ஏ மஜீத் அவர்களை அக்கட்சியினர் சிபார்சு செய்கிறார்கள்
  வெற்றிலையில் கேட்டவர்களில் மிகவும் அதிகமான விருப்பு வாக்குகள் பெற்ற முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் அவர்களை நியமிக்க வேண்டுமென்பதில் இந்தியா பிடிவாதமாக இருக்கின்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,136 other followers

%d bloggers like this: