முஸ்லிம் காங்கிரஸ் அநாகரிகமாக நடந்துகொண்டது: சுரேஷ்

நேற்றிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திப்பதாக கூறி, இறுதி நேரத்தில் அநாகரிகமான முறையில் சந்திப்பை தவிர்த்துக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

‘நேற்றிரவு எமது கட்சி தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் இரு கட்சியினருக்கும் ஏற்கனவே அறிவித்து அனுமதியும் பெற்றிருந்தோம். இந்நிலையில் நேற்றிரவு எமது கட்சி தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்காக நீண்டநேரம் காத்திருந்தோம். ஆனால் அவர்கள் குறித்த நேரத்திற்கு வருகை தரவில்லை. எமது கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் – ரவூப் ஹக்கீமுக்கு பலமுறை தொடர்பை ஏற்படுத்தியபோதும் பதிலில்லை. ஒருகட்டத்தில் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தொடர்புக்கு பதிலளித்தார். எமது விடயம் தொடர்பாக அவருக்கு கூறியதும், தொலைபேசியை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயலாளர் ஹஸன் அலியிடம் கொடுத்தார்.

முஸ்லிம் காங்கிரஸுடனான சந்திப்புக்காக காத்திருப்பதாக சுமந்திரன் கூறினார். தாங்களும் ரவூப் ஹக்கீமின் வருகையை எதிர்பார்த்திருப்பதாகவும், அலரி மாளிகையில் ஹக்கீம் சந்திப்பொன்றில் இருப்பதால் தொடர்புகொள்ள முடியவில்லை, தலைவர் வந்ததும் சொல்வதாக கூறினார். ஆனால் நீண்ட நேரமாகியும் பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து தொடர்பினை ஏற்படுத்த முயன்றபோது அனைவரது தொலைபேசிகளும் ஓஃப் செய்யப்பட்டிருந்தது.

எங்களுடனான சந்திப்பை அநாகரிகமான முறையில் முஸ்லிம் காங்கிரஸ் தவிர்த்திருக்கிறது. நாகரிகமான முறையில் சந்திப்பை தவிர்த்திருக்கலாம், ஆனால் எங்களை காத்திருக்க வைத்து அநாகரிகமான முறையில் முஸ்லிம் காங்கிரஸ் நடந்துகொண்டமை வருத்தமளிக்கிறது’ என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறினார். (Tamil Mirrorr)

Comments

 1. Azeeza Azeez says:

  முஸ்லிம்களுக்கு உரிமை தேவை என்றால் நீங்கள் பொராடுங்க்ல் என்று சொன்ன சுரேஷ்உம் அந்த கூட்டமைப்பும் இப்போது முஸ்லிம் ஆதரவுக்கு வாயூறுகிறது. முஸ்லிம்கள் புலிகளால் பட்ட துன்பம் இன்னும் ஆரவில்லை. இன்னும் புலியிடம் சேர்வதா.

  • Nawas says:

   dear Azeeza ,

   this is not the matter of LTTE, we muslim what islam says, we have to respect other religion , see mr hakeem took bayyath to his favor. as a muslim he has to talk atleast ,deciscion can be changed, how can we call Mr Hakeem & Company …or ?

   • Azeeza Azeez says:

    Nawas
    I agree what you are saying , i am not saying that Hakeem is right. I hate to hear that this LTTE political wing said ” the act of SLMC is uncivilised”
    Recently suresh said “You muslims go and fight to get your rights , we fought to get our rights” . I agree with you but I cannot stand infront of LTTE. in my point of view, we should not joint with TNA.

   • Mohamed Anees says:

    hakeem did not promised to TNA then why should worry or hesitate to take decision??

 2. Really its bad and shame on for hikkaim

 3. Mohideen says:

  இது என்ன புதிசா? as usual…

 4. குமாரி says:

  கொஞ்சம் பொறுங்கள் மகிந்தர் ஆப்படித்தவுடன் அதனைக் கழட்ட உங்களிடம் ஐடியா கேட்டு வருவார்கள். .

 5. கஹ்தான் says:

  இச் சம்பவம் உண்மையாக இருப்பின் மனவேதனைக்கு உரியதாகும் ஒரு சமூகத்திடம் எவ்வாறு தமது தலைமைகள் நடந்து கொள்கிறதோ அவ்வாறே அச்சமூகதை மற்றைய சமூகம் பார்க்கிறது .

  இது இன்னும் எமது உறவுக்கு விரிசலுக்கு வழி அமைக்கிறது. நாகரீகமான முறையில் தவிர்த்து இருக்கலாம்.

  • Azeeza Azeez says:

   Kahtan
   What is your opinion? TNA is better or Government?

   • this not about who is better , there is a way to deal with people, if you don’t want to meet just do it in a polite way.

 6. அவர்களிடம் விளக்கம் கோராமல் நாகரீகம் இல்லாமல் அறிக்கை விட்டு மீண்டும் ஒரு செயட்கையான முறன்பாட்டை ஏட்படுத்தவேண்டாம்??? ஆமா முஸ்லிம்காங்கிரஸ் உங்க ஊட்டு அடிமையா நீங்க வர சொன்னா வாரதிட்கும் சேர சொன்னா வந்து சேர்வதட்கும் அரசியல் நாகரீகம் யாறுக்கு இன்னும் நவீனம் எவ்வளவோ வளர்ந்துள்ள காலத்திலும் விளங்க வில்லை என்பது உங்கள் அறிக்கைகளே உலகிட்கு காட்டி நிட்கிறது!!!

  சுதந்திரமான ஒரு அரசியல் கட்சியை சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்காமல் தங்களோடு இணைய வில்லையெனில் சமூக துரோகம் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என தலைக்கும் கைக்கும் சம்மந்தமில்லாமல் மடதனமாக அறிக்கைவிட்டு மிரட்டிபார்பது மிரட்டலுக்கு அடிபணியாத விடத்து நாகரீகம் இல்லாமல் வசை பாடுவது இதெல்லாம் ஒரு புலப்பா??? இப்படி அடுத்த இன அரசியல் கட்சிகளை வசைபாடி எத்தனை காலதிட்கு தமிழ் மக்களை ஏமாற்றி நீங்களும் உங்கள் குடும்பங்களும் அரசியல் ஆதாயம் தேடி இராஜபோகத்தை அனுபவித்து உங்களுக்கு வாக்களித்த மக்களை வாழவும் விடாது சாகவும் விடாது நெருக்கடியிலேயே காலத்தை கழிக்கவைக்கும் உத்தேசம்???

 7. rinoz1234 says:

  this is too bad as he insulted entire community

 8. Ali.sm says:

  When a person is not in position to keep his appointment, he has to call and cancel prior to that time. It is gentleman qualification. Mr. Rauff Hakeem is a minister of Justice. What is a justice we can expect from the indecent fellow.

 9. marzook says:

  முனாபிகின் அடையாளம் வாய் திறந்தால் பொய் சொல்வான்,வாக்குறுதி அளித்தால் நிறைவேற்ற மாட்டான்,நம்பினால் மோசம் செய்வான், இது நமது இன்றைய முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு மிக பொருத்தம், ஆனால் மாற்று சகோதர இன அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தைக்கு நேரம்,ஒப்புதல்,அவகாசம் எல்லாம் ஒதுக்கிவிட்டு அவர்களையும் வரவழைத்து பல மணிநேரம் காக்கவைத்து காய் வெட்டுதல்….? ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை திடிரென்று ஒழுங்கு செய்யப்பட்டதென்றால், இது சம்பந்தமாக தமிழ் தலைமகளுக்கு உடனடியாக கையடக்க தொலைபேசி ஊடாக இது பற்றி மு.கா.தலைமையோ,அதன் தவிசாளரோ செயலாளர் நாயகமோ இது பற்றி அறிவிக்காததன் மர்மம் என்ன? உண்மையில் இவர்கள் இஸ்லாமிய அரசியல் செய்கிறார்களா அல்லது நபியவர்களின் பொன் மொழிக்கு சான்று பகர்கிறார்களா …….?

  • Azeeza Azeez says:

   Brother Marzook,

   If you are in an important meeting and cannot go to another meeting what you will do? Hakeem was discussing the issue with president and he cannot make the next meeting with TNA. he informed them that he will be late but TNA closed the meeting after 1.5 hours. Normally people are late for meeting in srilanka. It is not a good idea to call your brother Munafiq. please use very civilised words.

   on the other hand, he didn’t avoid this meeting because of his own work. he was in a meeting with Rajapakse who defeat LTTE and gave us a good life to sleep peacefully in our houses. Also, SLMC should not joint with TNA because TNA is the political wing of LTTE.

   Please I beg you not to use the bad words to anyone.

  • ILLAI UNGAL PMGG THAAN USATHTHI…. POVEENGALA SUMMA …. IDAM PORUL THERIYAAMA ULARAAMA…

  • Mohamed Anees says:

   Dear Marzook,

   Try to understand that, hakeem did not promised to TNA then why are u bring misunderstanding point??

   • marzook says:

    if Hakeem did not promised why should they come and wait hours what is the reason to switch off phone? may be the president or peasant the priority given to first appointment other wise he should have inform them politely and postpone the meeting, it is my stand in this matter anyway the word which I used Munafic is harsh pardon me. our political leadership behaviors leads me use such words I regret for the inconvenience caused.

 10. Haptam says:

  Muslim Political leaders always do dirty politics activities that is why they busy with Govt for more posts in PC and Cabinet.
  TNA also made mistake why they waited such as long ? as small child knows what they are doing with Govt (demanding more post)

  TNA should do immediately and Independently support the Govt with any demand.

  Then Muslim politicians understand why Muslim voted them and what problems need to be solved between Tamil and Muslim.

  .

 11. vadivElu says:

  ஐயோ ஐயோ.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா .. வரல்லேன்னா மாத்திரம் அறிக்கை விடுவாங்க . வந்துட்டா தலைமைத்துவம் தனது முடிவை பின்னர் அறிவிக்கும் என்பாங்க . இதெல்லாம் கேட்டு கேட்டு புளிச்சுப் போச்சுப்பா . வித்தியாசமா எதாச்சும் சொல்லுங்களேன் .

 12. vadivElu says:

  திங்கள் எண்டீங்க , செவ்வாய் என்டீன்காக , புதனுக்கு முன்னர் ஆளுநருக்கு அறிவுக்கனும் எண்டீங்க இப்போ இன்னும் பேச்சு முடியலையாம். எவனாவது காதுல பூ வச்சிட்டு இருப்பான் அவங்கிட்ட சொல்லுங்க்க. பள்ளிவாசல் விடயத்தை சொல்லி சொல்லி ஓட்டு எடுத்தீங்க .நாங்களும் நம்பி வாக்குப்போட்டோம். …… என்ன மானம் கெட்ட அரசியல்டா இது . என்னதான் சொன்னாலும் ஆசாத் சாலி கிரேட் . ஏன்னா முஸ்லிம்களுக்காக தனது பதவியினையே வீசிட்டு வந்தாரு பாருங்க .

  • Azeeza Azeez says:

   This is not a simple decision such as the decision to buy chicken or meat. This is an important decision to satisfy all the parties in the society. we need to be ptient. why are you in hurry for decision? just wait couple of days, will you?

 13. aboo abdurrahman says:

  கூட்டணியோடு காங்கிரஸ்
  கூட்டுச் சேர்ந்தால்
  கூட்டணிக்குக் கொண்டாட்டம்.
  காங்கிரசுக்கு திண்டாட்டம்.
  சர்வதேச சமூகத்தில் கூட்டணி,
  கொடிகட்டிப் பறக்கும்.
  நம்சமூகத்தில் காங்கிரஸ்,
  வாய்பொத்தி நிற்கும்.
  அநீதி இழைக்கப்பட்ட போதெல்லாம்
  கூத்துப்பார்த்து நின்ற கூட்டணி,
  இப்போது மட்டுமேன்?
  தமிழ்பேசும் மக்களின் உரிமையென்று
  கூப்பாடு போடுகிறது!
  போதுமப்பா சம்மந்தா!
  உன்சம்பந்தமே வேணாமப்பா!

  • வடக்கு கிழக்கு இணைபிட்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டோம் என்றும் உறுதியாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கி முஸ்லிம் காங்கிரஸ் மக்களிடம் ஆணை பெற்றிருக்க வடகிழக்கை எப்பாடு பட்டாவது இணைக்க துடாக துடிக்கும் அதனையே தேசிய கொள்கையாக பிரகடனபடுத்தி இருக்கும் கூட்டமைபுடன் வடகிழக்கை இணைக கோரமாட்டோம் என்ற உத்தரவாத்தை எழுத்துமூலம் பகிறங்கமாக பெற்றுகொள்ளாமல் கூட்டமைபுக்கு ஆதரவு வழங்குவதே மிக பெரிய துரோகம் மக்களுக்கு செய்யும் என்பதையும் உறக்க சொல்லி இருக்கலாமே???

 14. ali.sm says:

  Why Mr. Hakeem is silent? It means he’s wrong

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,136 other followers

%d bloggers like this: