முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் அமீர் அலியே – உலமா கட்சி

-நப்ரீஸ்/ அஸ்லம் எஸ்.மௌலானா-

முஸ்லிம்களின் சமய விடயத்தில் கை வைத்ததாலேயே கிழக்கின் ஆட்சி அமைப்புக்கு முஸ்லிம் காங்கிரசிடம் பிச்சை கேட்கும் நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.

அதேவேளை கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகிப்பதற்கான அத்தனை தகுதியும் முன்னாள் அமைச்சர் அமீர் அலியிடம் மாத்திரமே உண்டு என்றும் உலமாக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“தம்புள்ள பள்ளிவாயல் தொடக்கம் கடந்த நான்கு மாதங்களாக முஸ்லிம் மக்களுக்கும் அவர்களின் சமயஸ்தலங்களுக்கும் எதிரான பேரினவாதிகளின் நடவடிக்கைகளாலும் அதில் ஈடுபட்டோரை கைது செய்யாத அரசின் பொடுபோக்கு தனத்தாலுமே இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்று அதனிடம் பிச்சை கேட்க வேண்டிய நிலைக்கு அரச கட்சி தள்ளப்பட்டுள்ளது.

பள்ளிவாயல் பிரச்சினைகளில் அரசு ஒரு பக்கச்சார்பாக நடக்க வேண்டாம் என நாம் பல தடவைகள் அறிவுரை சொன்னோம். ஆனால் சிலரின் மமதை காரணமாகவும் பேரினவாதிகள் தமக்குப் போதும் என்ற நிலைமை காரணமாகவும் எமது பேச்சுக்கள் எடுபடவில்லை. இத்தகைய சூழ்நிலையிலேயே மாகாண சபை தேர்தலில் நாம் எதிர்கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டி ஏற்பட்டது. ஆனாலும் தொடராக இறங்கு முகம் கொண்டிருந்த ஐ தே க. இத்தேர்தலில் கொஞ்சம் நிமிர்ந்துள்ளது திருப்தியை தருகிறது.

உண்மையில் அரசாங்கம் தமிழ், முஸ்லிம் சமூகத்தை சரியாக அணுசரித்திருந்தால் கிழக்கில் இருபது உறுப்பினர்களை மிக இலகுவாக பெற்றிருக்க முடியும். இதற்க மாறாக காணிகளை ஆக்கிரமித்தல், சிலை வைத்தல், சமயஸ்தலங்களை அச்சுறுத்தல் போன்ற செயல்களால் தமிழ் பேசும் மக்கள் வெறுப்புற்றனர். பொதுவாக முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரை தமது உடல் உயிர் என்பவற்றுக்கான அபிவிருத்தியை விட தமது மதமே முக்கியமானது என்ற உணர்வலையையே முஸ்லிம் சமூகம் இத்தேர்தலில் காட்டியுள்ளது. இதன் காரணமாக அரசாங்கம் கிழக்கில் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எது எப்படியோ அரசாங்க கட்சி கிழக்கில் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் கிழக்கு முதலமைச்சராக பதவி வகிப்பதற்கான தகுதி மட்டக்களப்பு மாவட்ட ஐ ம சு கூட்டணியின் உறுப்பினரான அமீரலிக்கே உண்டு என்பதே எமது கருத்தாகும்.

இதனை அரசியல், கட்சி வேறுபாட்டுக்கு அப்பால் நின்று நாம் கூற வேண்டியது அவசியமாகும். காரணம், கல்வி மற்றும் அரசியலில் நன்கு அனுபவம் உள்ளவரான அவர் பாரிய பல சவால்களுக்கு மத்தியில் தனது தொகுதியில் அரச கட்சியை வெல்ல வைத்திருக்கின்றார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில் கல்குடாவில் மட்டுமே அரச கட்சி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் தனிப்பட்ட வகையில் உலமாக்களை கௌரவிக்கும் தன்மை கொண்ட ஒருவராகவும் அவர் இருப்பதால் அவரது தலைமையின் கீழ் கிழக்கில் இனபேதமற்ற ஆட்சியை கொண்டு வர முடியும் என நாம் எதிர் பார்க்கின்றோம்.

அரசாங்கம் எதிர் காலத்திலும் முஸ்லிம் காங்கிரசிடம் பிச்சை கேட்கும் நிலைமை ஏற்படாதிருக்க வேண்டுமாயின் அமீர் அலியை முதலமைச்சராக்குவதே சிறந்த வழியாகும்” எனவும் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

Comments

 1. Farhan says:

  Once more time, Political Joker Moulavi Mubarack Crack joke by saying Ameer Ali suitable for CM, Further he said coz of UPFA won kalkudah coz of Ameer Ali, wow what a political knowledge mubarack moulavi having

  For the information of Mubarack Moulavi, Kalkudah electorate consist of Tamil and Muslim Voters and Majority are Tamils ,Even pillayan also from Kalkudah Electorate, Ameer ali got only around 9000 votes from Kalkudah Muslim Area

  I have one question for Mubarack Moulavi, that you are saying something about education qualification of Ameer Ali, can you lets know what is the qualification he is having?

  • போடியார் says:

   Mr. Farhan,

   He is an Attorney-at-law (Lawyer). That qualification more than enough for the post of CM.

 2. kalkudah community says:

  DEAR BROTHER MUBARAK,

  R U OK? WAT HAPPEN U? U MUST THING IF U WANT TO SAY ANYTHING THING, DO U KNOW WHO IS AMEER ALI? IF U WANTS KNOW GO BACK & GO THOROUGH HIS UNCIVILISATION POLITICS OK.

  IF SLMC GET CHANCE ONLY PERSON BROTHER NISSAM KARIYAPPAR INSHA ALLAH.

 3. Shaamil B.Sc (Hons) says:

  இவருக்கு வேற வேல இல்ல…
  எப்ப பாரு அறிக்கை விற்றதும், எவனையாச்சு வம்புக்கு இழுக்கிறது தான். இப்ப கூட நல்ல இருக்கிற சூழ்நிலைய குழப்பத்தான் இப்படி ஒரு அறிக்கை.
  இனியாச்சு அறிக்கை விர்ர வேலெய விட்டுப்போட்டு ஏதும் பிரயோசனமா நல்ல வேலையா பாருங்க மௌலவி…

 4. marzook says:

  மௌலவி அவர்களுக்கு அறிக்கைகளை விடுவதே வழக்கமாகி விட்டது,நேற்று முன் தினம் முஸ்லிம் கலாசார அமைச்சை உருவாக்கி முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருக்கு கொடுக்கவேண்டும் அவர் கிழக்கை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டு,இன்று அமீர் அலியே முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவர் அரசின் தவறான செயல்பாடுகளே முஸ்லிம் காங்கிரசிடம் அரசு இன்று பிச்சை கேட்கவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது என்றும் சொல்லுகிறார், ஒன்றுமே புரியிதில்லையே …..இதுதான் மௌலவியின் அரசியல் சதுரங்கமோ….?

 5. mohamed says:

  ivar entha katchi

 6. முஸ்லிம் காங்கிரஸ் அரசின் முன்வைக்க வேண்டிய பேரம் பேசும் உரிமைகளை சுட்டிக்காட்டுவது வேறு. அது நேற்று வரை நாட்டின் அரசியல் நிலைமை. இன்று மு கா அரசுடன்தான் என்பது பெரும்பாலும் உறுதியான நிலை. இந்நிலையில் ஆளுந்தரப்பில் யார் முதலமைசர என்கிற கணிப்புத்தான் நடக்கிறது. முபாறக் மவ்லவி தனது கருத்தை சொல்லியுள்ளார். அவ்வளவுதான். நாட்டில் கருத்து சுதந்திரத்தை ஏற்க மறுப்பவர்களாக முஸ்லிம்கள் உள்ளார்களா? அரசியல் நிலைமை புரியாதவர்கள் கொமான்ட் பண்ணுவதை தவிர்ப்பது நல்லது.

  • Farhan says:

   Dear Brother ,

   I agreed with your comment but the issue is Mubarack moulavi kept on cracking poltical Joke, everything has limit

   Ya Allah give knowledge and wisdom to Mubarack Moulavi

   Kind request to Moulavi,For the shake of Allah, Stop your joke Statement and be a realistic and use your commonsense, please thing twice before issue statement

 7. சாதாரண மானவன். says:

  முபாரக் மௌலவி யின் கருத்து எப்பவும் முஸ்லிம் காங்கிறசுக்கு எதிராக இருப்பதன் புதிர்தான் எனக்கு இன்னும் விளங்காமல் இருக்கின்றன தெரிந்தால் யாராவது சொல்லுங்கப்பா

 8. jesmin says:

  முதலமைச்சர் பதவியைக் கொடுத்தால் பட்டாசு தொழில்சாலை ஒன்றை கிழக்கில் ஆரம்பிக்கவேண்டுமே.

 9. Rizvi Mohamed says:

  it seems to me that Moubarak is thinking he knows everything but nothing he knows, keep your your mouth closed don’t talk about SLMC.

  Do u know about Ameer Ali we know about him better than u.

  As Farhan asked u explain Ameer Ali’s qualifications.

 10. Nallavan says:

  Mr. Mubarak….first you think and do the best in your personal life to show the social acumulation. then come to public. Dont show film Mr. Mubarak. are you a religious leader?

 11. என்ன கொடுமையடா இது இந்த நாட்டுல் ஜனநாயக உரிமையுடன் கருத்து சொல்லவருபவர்களையும் கொலை வெறிய்டன் எதிர்கிறார்களே இந்த ம.. போராளிகள்??? இவகட கையில ஆட்சிய ஒப்படச்ச மாற்றுகட்சி ஆதரவாளர்களை மயானத்தில்தான் தேட வேண்டுமோ???

 12. Ruwaiz NZ says:

  whats wrong with you?

 13. இவர்தான் தகுதி என்று ஆளும் கட்சி விளம்பரபடுத்தாது யாராவது தகுதியாக இருந்தால் உடனே நியமித்துவிடும் அரச வர்தமாணியில் தெறிவு செய்யபட்டோரின் பெயர்பட்டியல் வந்ததன் பிட்பாடு அதுவரை ஏன் இந்த அவசரம்???

 14. ismail hameed says:

  just during election time Mr. mubarak has defended the Govenrment saying that government has nothing to do with masjith problems.now he has turn to 360 degree saying that government did.Mr.Mubarak has not won the local government election his own home down.so he does not have any authority to comment in politics.

 15. Nasar says:

  தம்புள்ள பள்ளிவாயல் தொடக்கம் கடந்த நான்கு மாதங்களாக முஸ்லிம் மக்களுக்கும் அவர்களின் சமயஸ்தலங்களுக்கும் எதிரான பேரினவாதிகளின் நடவடிக்கைகளாலும் அதில் ஈடுபட்டோரை கைது செய்யாத அரசின் பொடுபோக்கு தனத்தாலுமே இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்று அதனிடம் பிச்சை கேட்க வேண்டிய நிலைக்கு அரச கட்சி தள்ளப்பட்டுள்ளது என்ற விடயத்தை காலம் கடந்தாவது மொலவி அவர்கள் புரிந்து கொண்டமை மெச்சத்தக்கது.

  கருத்துத் தெரிவிக்கும் சுததந்திரம் மௌலவி அவர்களுக்கு இருக்கிறது அந்த சுதந்திரத்தை வெறுமனே விமர்சிப்பதற்காகவும், பிரதேசவாதத்தை மேலும் கூர்மைப்படுத்துவதற்காகவும் பயன்படுத்துவது மிகவும் கவலையளிக்கிறது. மௌலவி அவர்கள் தனது அரசியல் பிரசன்னத்தை ஞாபகமூட்டுவதற்காக இவ்வாறான அறிக்கைகளை விட்டு தனது கால நேரத்தையும் காத்தான்குடி இன்போ வாசகர்களினதும் நேரத்தையும் வீணடிக்காது ஆக்கபூர்வமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சமூகத்திற்கு மிகப் பிரயோசனமானதாக இருக்கும் (மௌலவி அவர்களுக்கு தெரிந்த அரசியலே அறிக்கை விடுவது மாத்திரம்தான் என்றால் எமது தலைவிதியை நொந்து கொள்வதைத்தவிர வேறு வழி இல்லை)

 16. முஸ்னத் says:

  Mr. Ismail. Who told u mubarak moulavi has defended the govmt during last election. He only blamed the govermnt 4 dambulla incident and came back from govermnt.

 17. baawaajee says:

  இந்த ஆண்டின் இலங்கையின் சிறந்த அரசியல் ஜோக்கர் என்ற தலைப்பில் ஒரு வாக்கெடுப்பு அஸ்வர் ஹாஜிக்கும் ,முபாரக் மௌலவிக்கும் இடையில் நடாத்தி பாருங்களேன் .இருவருக்கும் ஒரே அளவிலான வாக்குகளே கிடைக்கும் என நான் சொல்கின்றேன் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,136 other followers

%d bloggers like this: