மன்னார் முசலி பிரதேசத்தில் கடும் வறட்சியினால் மக்கள் பாதிப்பு

– முகம்மட் வாஜித்

மன்னார் முசலி பிரதேச செயலார் பிரிவில் கடும் வரட்சி மக்கள் பாதிப்பு மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலார் பிரிவுக்குட்பட்பட்ட பிரதேசத்தில் கடும் வரட்சி காரணமாக 550 ஏக்கர் விவசாய செய்கை பாதிப்பாடைந்துள்ளதுடன் 7500 உட்பட்ட மக்கள் குடிநீரின்றி பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

குறிப்பாக பாண்டாவெளி, பூனைச்சிக்குளம் .வெளிமல ஆகிய கிராம அதிகாரி பிரிவு உட்பட பிரதேசத்தில் கடந்த 4 வாருட காலமாக மீள்குடியேரிய நிலையில் வாழும் மக்களே இவ்வாறான பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

குடிநீர் இல்லாத பிரச்சினையினை தீர்க்க முசலி பிரதேச சபையோ,அல்லது பிரதேச செயலகமோ கூடிய கவனம் செலுத்த தவறியுள்ளதாக அக்கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தற்போது நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வரட்சி நிலையினையடுத்த பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவென ஜனாதிபதி மன்னார் மாவட்;டத்துக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் நிதி ஒதுக்கீட்டினை செய்துள்ள போதும், முசலி பிரதேச மக்களுக்கு அவை கிடைக்கப் பெறாமல் இருப்பது குறித்து கவனம் செலுத்துமாறும் அரசியல் தலைமைகளிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.

முசலி பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்ட விவசாய செய்கை முற்றாக பாதிப்பாடைந்துடன் குடிநீருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அதே வேளை தற்போது மீள்குடியேறியுள்ள மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி,உள்ளிட்ட பல கிராமங்களில் குளங்கள் நீரின்றி வரண்டு காணப்படுவதாலும்.அங்குள்ள ஒரு சில கிணறுகளிலும் நீர் வற்றிக் காணப்படுவதாகவும் அம்மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமது கவனத்தை செலுத்துமாறும்,அமைச்சர் றிசாத் பதியுதீன்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,முசலி பிரதேச சபை தலைவர்.எம்.எஹியான்,பிரதேச செயலாளர்; கேதீஸ்வரன்; ஆகியோரிடம் இம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,136 other followers

%d bloggers like this: