இம்முறை பழைய புதிய பாடவிதானங்களின் அடிப்படையில் பரீட்சைகள் இடம்பெறும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு

– எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் –

இசெட் புள்ளி கணிப்பீட்டின் போது அநீதி இழைக்கப்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் இசெட் புள்ளியை புதிய முறைக்கமைய தயாரித்து வெளியிடுமாறு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் கட்டளைக்கமைய பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட புதிய முறைகளுக்கினங்க  இசெட் புள்ளி கணிப்பீட்டு பணிகள் பரீட்சை திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டன.

2011ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் இசெட் புள்ளி மாவட்ட தேர்ச்சி மட்டம் உட்பட தேசிய தேர்ச்சி மட்டமும் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். http://www.doenets.lk எனும் இணையத்தளம் ஊடாக தகவல்களை பெற்றுக் கொள்ளமுடியும்.

இதேவேளை புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கமைய 2012ம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு தேற்ற இருக்கம்  பரீட்சாத்திகளுக்கு அவர்கள் விண்ணப்பிப்பதற்காக பரீட்சை திணைக்களம் விசேட சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளது. தனிப்பட்ட ரீதியிலான பரீட்சாத்திகளுக்காக பரீட்சை திணைக்களத்தின் http://www.doenets.lk  என்ற உத்தியோபூர்வ இணையத்தளம் ஊடாக விண்ணப்பத்தினைப் பெற்று அதனை பூர்த்தி செய்து பரீட்சைக் கட்டணத்தினை தபால் அலுவலகத்தில் கட்டி பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டினை விண்ணப்பப்படிவத்தில் ஒட்டி தொலைநகல் மூலம் விண்ணப்பப்படிவத்தை அனுப்பவேண்டும்.

பாடசாலை பரீட்சாத்திகள் பாடசாலை விண்ணப்பப் படிவத்ததிலுள்ள தகவல்களை உள்ளடக்கி கடிதம் ஒன்றினை அதிபர் ஊடாக பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பவேண்டும். விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் 0112785220, 0112785779, 0112784422, 0112785013, 0112177411 ஆகிய தொலைநகல் ஊடாக விண்ணப்பப்படிவத்தை அனுப்பமுடியும்.

இம்முறை பழைய புதிய பாடவிதானங்களின் அடிப்படையில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளது. புதிய பாடவிதானத்தின் கீழ் 235774 பேர் இம்முறை பரீட்சைக்கு தோற்றுகின்றனர். 41323 பேர் பழைய பாடவிதானத்தின் கீழ் தோற்றவுள்ளனர். புதிய பாட விதானத்தின் கீழ் 1746 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளது. இதற்காக 259 இணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 347 நிலையங்களில் பழைய பாடவிதானத்தின்கீழ் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. இதற்காக 207 இணைப்பு மத்திய நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,136 other followers

%d bloggers like this: