முதலாம் குறிச்சி தரம் 01 மாணவர்களின் பாடசாலை அனுமதி கேள்விக்குறியாகிறதா?

– எமது விஷேட செய்தியாளர் –

காத்தான்குடி 01 அந் நாசர் வித்தியாலயம் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அடுத்த வருடத்துக்கு தரம் 01ல் சேர அனுமதி கோரிய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்திற்குட்படும் பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகள் நீக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு அமைவாகவே தரம் 01 அனுமதி கோரிய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அவர்களை வேறு பாடசாலைகளில் அனுமதி கோருமாறு அந் நாசர் வித்தியாலய நிர்வாகம் கோரியுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக சாவியா வித்தியாலயம் தனிப் பெண்கள் பாடசாலையாக மாற்றப்பட்டு அங்கிருந்த ஆண் மாணவர்கள் அந் நாசர் வித்தியாலயத்துக்கும் அந் நாசர் வித்தியாலயம் தனி ஆண்கள் பாடசாலையாக மாற்றப்பட்டு அங்கிருந்த மாணவிகள் சாவியா வித்தியாலயத்துக்கும் மாற்றப்பட்டனர்.

இதன் காரணமாக தற்போது சாவியா வித்தியாலயத்துக்கு ஆண் மாணவர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் அவர்கள் ஹிளுறியா வித்தியாலயத்தில் அனுமதி கோரியுள்ளனர். எனினும் இடப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறான நூற்றுக்கும் அதிகமான மாணவர்களை அனுமதிக்க முடியாத நிலையில் ஹிளுறியா பாடசாலை நிர்வாகம் இருப்பதாகத் தெரிய வருகின்றது.

கடந்த சில வருடங்களாக கல்வி அமைச்சின் பணிப்புரையின் பேரில் தரம் 01ல் மாணவர்களைச் சேர்ப்பதில் புதிய நடைமுறைகள் அமுலில் உள்ளன. முந்திய வருடம் ஜூன் மாதமளவில் பெற்றோர் பாடசாலைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டி இருக்கிறது. அதிக விண்ணப்பங்கள் வருமிடத்து சில வகைப்படுத்தல்களுக்கு அமைவாகவே அனுமதி வழங்கப்படுகின்றது. இவற்றில் பாடசாலைக்கு அண்மையில் வசிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை ஹுசைனியா பள்ளிவாயல் பகுதியில் மிகக் குறைந்த மாணவர்களுடனும் குறைந்த வசதிகளுடனும் ஆரம்பப் பாடசாலை ஒன்று இயங்கி வருகிறது. தற்காலிக கட்டடங்களுடனாவது இப்பாடசாலைக்கு மாணவர்களை அனுமதித்து உடனடியாகத் தேவைப்படும் வளங்களை வழங்கி இப்பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வு காணப்பட முடியும். எனினும் இந்தப் பாடசாலையும் நீண்ட கால நோக்கில் உரிய வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

அரசியல்வாதிகள், பள்ளிவாயல் நிர்வாகிகள், சம்மேளனம், கல்வி ஆர்வலர்கள் உட்பட்ட தரப்புகள் இப்பிரச்சினையை கருத்திற்கொண்டு இம்மாணவர்களின் பாடசாலை அனுமதிப் பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Comments

 1. mmsa says:

  it is the fundamental rights of the children every one must pay attention and do the needful for the innocent children’s thanks for Kattankudi Info bringing to highlight

 2. manzoor says:

  this is the big problem in our children education not only in Annasar vidiyalayam but the kattankudy central college also facing that problem.

 3. Aliyar says:

  அபிவிருத்தி செய்றம், மக்களுக்கு நல்லது செய்யிறம் என்ட பெயருல ஸ்கூல்ற பெயராலட தேவல்லாத தேவைகள செய்யிறதுக்கம் செலவழிக்கிறதுக்கும் ஒரு கூட்டம் திரியுது… அதுல எங்கடா புழ புடிக்கலாம் அவகள மட்டம் தட்டலாலெமன்டு மத்தொரு கூட்டம் அலையுது…

  ஆனா எல்லாரும் கண்டிப்பா பாக்க வேண்டிய இந்த மாதிரி விசயங்கள பாக்குறதுக்கு ஒருத்தரும் இல்ல… ஐயகோ… இதப்போய் யாரிட்டச் சொல்றது…..

  இறைவா எங்கட எல்லாத் தேவைகளையும் நிறைவேத்தி தர உன்னால மட்டும் தான் முடியும் இறைவா…. எங்கட சின்னப் புள்ளையல்ற படிப்ப நல்லபடியா ஆரம்பிக்க நல்ல வழி காட்டு றஹ்மானே……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,136 other followers

%d bloggers like this: