காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info  • Online Viewers

    web stats

நோன்புப் பெருநாள் இன்பப் பெருநாள்

Posted by infoauthor9 on 28/07/2014

-காத்தான்குடி அனு-

பிறைப்பூ   வானில்  மலர்ந்தது

பெருநாள்  இன்று   புலர்ந்தது   
இறையோன்  கருணை    கிடைத்தது
இன்பம்    நெஞ்சில்   திளைத்தது
நிறைவாய்  ரமழான்  முடிந்தது Read the rest of this entry »

About these ads

Posted in News | Leave a Comment »

பொதுபலசேனாவும் “இப்தார்”நிகழ்வு க்கு அழைப்பு விடுத்தாலும் ஆச்சரியம் இல்லை- பா.அரியநேத்திரன்

Posted by infoauthor9 on 28/07/2014

ariyanenthiranமுஸ்லிம் சமூகத்தின் மிகவும் உன்னதமான விரதமாக நோக்கப்படும்நோன்புவிரதம்”இப்தார்”என புனித்திருக்குறானில் கூறப்படுகிறதுஇதை நான் புனிதமத அனுஷ்டானமாகமதிப்பதனால்தான் எந்த ஒரு இப்தார்நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதில்லைஎன மட்டக்களப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.கடந்த தினங்கள் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹிஷ்புல்லா காத்தான்குடியில் ஏற்பாடுசெய்த இப்தார் நிகழ்வில் ஏன் கலந்துகொள்ளவில்லை என கேட்டபோதுஅதுதொடர்பாக கருத்துகூறிய அரியம்எம்.பி Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

ஸல்மா ஹம்சாவின் பெருநாள் செய்தி

Posted by infoauthor9 on 28/07/2014

Salma Hamzaபலஸ்தீன் காஸாவில் நமது சகோதரர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது நோன்புப் பெருநாளை களியாட்டங்களை நடாத்தி வேடிக்கையாக கொண்டாட வேண்டாமென பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் தலைவியும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்ஸா விடுத்துள்ள பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பலஸ்தீன் காஸாவில் பரிதவிக்கும் இன்றைய நாளில் அவர்களுக்காக பிராத்திப்போம் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக்

Posted by infoauthor9 on 28/07/2014

IMG-20131119-00293ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பலஸ்தீன் காஸாவில் பரிதவிக்கும் இன்றைய நாளில் முஸ்லிம்களாகிய நாம் நோன்புப் பெருநாளை சந்திக்கின்றோம்.

இன்றைய நாளில் அந்த பலஸ்தீன் காஸா மக்களுக்காக நாம் பிராத்திக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளா சிப்லி பாறூக் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

-மாகாண சபை பிரதி தவிசாளர் சுபைர் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Posted by infoauthor9 on 28/07/2014

Subair MPCஇலங்கையிலும் உலகிலும் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் கஸ்டங்கள் நீங்கி நிம்மதியாகவும் சந்தேசமாகவும் வாழ இந்த நோன்புப் பெருநாள் தினத்தில் அனைவரும் பிராத்திக்க வேண்டுமென கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டில் அன்மைக்காலமாக முஸ்லிம்கள் எதிர் நோக்கி வரும் ஆபத்துக்கள் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் நீங்கி முஸ்லிம்கள் தமது சமய கலாசார விழுமியங்களை சுதந்திரமாக பின் பற்றக் கூடிய சூழ் நிலையை இறைவன் ஏற்படுத்தி தரவேண்டுமென இந்த தினத்தில் நாம் பிராத்திக்க வேண்டும்.

Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

பிரதி அமைச்சர்; ஹிஸ்புழ்ழாஹ் பெருநாள் வாழ்த்துச்செய்தி

Posted by infoauthor9 on 28/07/2014

Hisbullahஇனங்களுக்கிடையில் ஒற்றுமையும், பரஸ்பரமும், புரிந்துணர்வும் ஏற்பட
நாம் எல்லோரும் அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக

முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராகவும், முஸ்லிம் மக்களுடைய மார்க்க கடமைகளுக்கு எதிராகவும், சில பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் மிக மோசமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நாம் புனித ஈதுல் பிதுர் நோன்பு பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

கிழக்கு மாகாண சபை மு.கா.குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் பெருநாள் வாழ்த்து!

Posted by infoauthor9 on 28/07/2014

Jameel-4-150x150 (1)(அஸ்லம் எஸ்.மௌலானா)

முஸ்லிம்கள் தமது தாய் நாட்டிலேயே அடக்கி ஒடுக்கப்படுகின்ற இக்கால கட்டத்தில் சமூக இருப்பை ஸ்திரப்படுத்துவதற்கு அனைவரும் ஒரே தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் அவர்களின் பெருநாள் வாழ்த்து

Posted by infoauthor9 on 28/07/2014

Mayor (1)(அஸ்லம் எஸ்.மௌலானா)

முஸ்லிம்களுக்கு மிகவும் சோதனை நிறைந்த இக்கால கட்டத்தில் ஈமானிய பலத்துடன் ஏனைய சமூகத்தினருக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வதற்கு நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம் என்று கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

காத்தான்குடியில் சர்வதேச பிறை அடிப்படையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை

Posted by infoauthor9 on 28/07/2014

???????????????????????????????-பழுலுல்லாஹ் பர்ஹான்-

முஸ்லிம்களின் புனித பெருநாள் தினங்களில் ஒன்றான ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இன்று உலக முஸ்லிம்கள் கொண்டாடிவருகின்றனர்.இலங்கையில் சர்வதேச பிறை அடிப்படையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பாப் பிரசங்கம் என்பன 28-07-2014 இன்று திங்கட்கிழமை கொழும்பு புத்தளம், அக்கறைப்பற்று,  காத்தான்குடி  நீர் கொழும்பு ,  ஹபுகஸ்தலாவ, உட்பட பல பிரதேசங்களில் இடம்பெற்றது. Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

கண்களை குத்தும் சொந்த விரல்கள்!

Posted by infoauthor9 on 28/07/2014

gaza_graphic_july_13_3DR. ILM றிபாஸ் -

சர்வதேச ஊடகங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் உசாத்துனையாகக் கொண்டு  பாலஸ்தீன கள நிலவரம் பற்றி  எழுதப்பட்ட ஆய்வறிக்கை

“இந்த கற் துண்டுகளைத் தவிர இந்த பாலஸ்தீன தேசத்தில் எதுவும் மீதமில்லை” ஜூலை எட்டாம் திகதியிலிருந்து  பிணக் காடாக மாறி இருக்கும் காசா பிரதேசத்தில் சுவாசிப்பதற்காக வழங்கப்பட்ட பனிரெண்டு மணி நேரயுத்த நிறுத்தத்தில் காற்றிலே காணாமல் போயுள்ள தனது வீட்டு அழிவுகளுக்குள் நின்று புலம்புகிறார்  உம்மு அஹ்மத் Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

சமூக ஒற்றுமையைச் சிதைக்கும் சர்வதேசப் பிறை

Posted by infoauthor9 on 28/07/2014

-எம்.எம்.ஏ.ஸமட்-

அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்! புனித ரமழான் மாதம் நிறைவுற்று ஷவ்வால் மாதத் தலைப்பிறையுடன் ஈத்துல் பித்தர் நோன்புப் பெருநாளை நாளை(29) கொண்டாடுவதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் தயாராகி வரும் வேளை  உலகின் பல நாடுகளில் இன்று(28) திங்கள் கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. Read the rest of this entry »

Posted in News | 4 Comments »

நபிமொழி அறிவோம்

Posted by infoauthor9 on 28/07/2014

IMG_172098373313319-1இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள்.” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பில் “ரமலான் பிறை” என்று உள்ளது.
.ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்குத்) தயாராகித் தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் (உரை நிகழ்த்தி) முடித்து இறங்கிப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையை ஏந்திக் கொள்ள, பெண்கள் தங்கள் தர்மத்தை அதில் போடலானார்கள். உரை நிகழ்த்தி முடித்துவிட்டுப் பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்குப் போதனை செய்வது இன்றைக்கும் இமாம்களின் மீது கடமை என நீங்கள் கருதுகிறீர்களா? என அதாஃவிடம் கேட்டேன். அதற்கு “நிச்சயமாக அது அவர்களுக்குக் கடமைதான். அவர்கள் எப்படி இதைச் செய்யாமலிருக்க முடியும்?“ என்று கேட்டார் என இப்னு ஜுரைஜ் கூறுகிறார்.
(ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 13. இருபெருநாள்கள்)

தொகுப்பு : அல்ஹாஜ் மௌலவி H.M. ஷாஜஹான் (பலாஹி) BA JP

Posted in News | Leave a Comment »

இலங்கையில் அல்- கைதா இல்லை

Posted by infoauthor9 on 28/07/2014

அல்- கைதா அமைப்போ ஏனைய பயங்கரவாத அமைப்புகளோ இலங்கையில் தளங்களை கொண்டிருக்கவில்லை என்று இராணுவப்பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

அல்- கைதா அமைப்பைச்சேர்ந்த சிலர் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read the rest of this entry »

Posted in News | Tagged: | Leave a Comment »

காசாவில் 1000க்கும் அதிகமான பலஸ்தீனர் பலி

Posted by infoauthor9 on 28/07/2014

w-1-2காசாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 24 மணிநேர மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் மற்றும் ஏனைய பலஸ்தீன தரப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன. ஐ.நா. முன்வைத்த யுத்த நிறுத்த பரிந்துரையை ஆய்வு செய்த பின்னர் இந்த முடிவை எடுத்ததாக ஹமாஸ் பேச்சாளர் சமி அபு+ சுஹ்ரி அறிவித்தார். நாளை திங்கட் கிழமை கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற புனித நோன்புப் பெருநாள் மற்றும் பலஸ்தீன மக்களை கருத்தில் கொண்டு யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த பதிலும் உடன் வெளி யாகவில்லை.

Read the rest of this entry »

Posted in News | Tagged: | Leave a Comment »

பெருநாள் மகிழ்வில் ஏழைகளையும் இணைப்போம்!

Posted by infoauthor9 on 28/07/2014

பெருநாள் என்பது மிகவும் பெருமைக்குரிய ஒரு நாள். முஸ்லிம்களுக்கு இருபெரும் பெருநாட்கள் ஒன்று “நோன்புப் பெருநாள்” அடுத்தது “ஹஜ்ஜுப் பெருநாள்” இவ்விரண்டு பெருநாட்களும் கொண்டாடப்படுவது அல்லாஹ்வுக்காக நாம்புரிந்த தியாகங்களின் பின்புதான். ரமழான் நோன்பு மாதத்தில் அல்லாஹ் எமக்காக அருளிய. பர்ழான நோன்புகளை நாம் பல்வேறுபட்ட சிரமங்களை மேற்கொண்டே நோற்கின்றோம். பசித்திருப்பது, தாகித்திருப்பது விழித்திருப்பது, நின்று வணக்கம் புரிவதெல்லாம்…

Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

நோன்பை தூய்மைப்படுத்தும் ஸகாதுல் பித்ர்

Posted by infoauthor9 on 28/07/2014

அல்லாஹுத் தஆலா மனித னுக்கு இவ்வுலகில் எண் ணற்ற அருட் கொடைகளை வழங்கியுள்ளான். அதனை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக வழிகளை அமைத்துத் தந்துள்ளான். ஒரு மனிதனுடைய செல்வத்தை ஹஜ்ஜுடைய காலத்தில் ஹஜ் செய்வதன் மூலமும் ரமழானுடைய காலம் வந்தால் சதகா மூலம் பணத்தையும் பொருளையும் செலவிடக் காட்டித் தந்துள்ளான்.

Read the rest of this entry »

Posted in News | Tagged: | Leave a Comment »

தட்டுப்பாட்டை தவிர்க்க 50,000 மெ.தொ. அரிசி இறக்குமதி

Posted by infoauthor9 on 28/07/2014

நிலவும் கடும் வரட்சியினால் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதனை தவிர்க்கும் வகையில் மேலதிக கையிருப்புக்காக 50 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது போதுமான அளவு அரிசி கையிருப்பில் உள்ளபோதும், மேலதிக கையிருப்பினை நோக்கமாக கொண்டே இந்த அரிசி இறக்குமதி செய்யப்பட விருப்பதாகவும், இவை உடனடியாக சந்தைப்படுத்தப்படாமையினால் விவசாயிகள் பாதிப்படையமாட்டார்களெனவும் கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சின் பேச்சாளர் நிப்புள் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »

Posted in News | Tagged: | Leave a Comment »

நாட்டுக்கு பிரதமர் பதவி தேவையில்லை

Posted by infoauthor9 on 28/07/2014

Prime-Ministerநாட்டுக்குப் பிரதமர் பதவி தேவை இல்லை. எனவே தற்போதைய பிரதமர் பதவியை ரத்துச் செய்ய வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட யோசனையாகும்.

இந்த நாட்டை சுதந்திர அபிவிருத்தி நாடாகக் கட்டி எழுப்ப வேண்டுமானால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்ந்தும் நாட்டுக்குத் தேவையென பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ரத்துச் செய்யும் கோஷங்கள் முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின் போதும் எழுப்பப்பட்டன.

Read the rest of this entry »

Posted in News | Tagged: | Leave a Comment »

பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்த சர்வதேசம் ஒன்றிணைய வேண்டும்

Posted by infoauthor9 on 28/07/2014

Aswar-mglகாஸா பகுதியில் நடைபெறும் கண்மூடித்தனமான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி பலஸ்தீன மக்களின் வாழ்விட உரிமையை உறுதிப்படுத்த சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையொன்றை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அஸ்வர் எம்பி இவ்வாறு கூறினார்.

Read the rest of this entry »

Posted in News | Tagged: | 1 Comment »

காசாவில் பெருநாளையொட்டி மனிதாபிமான யுத்த நிறுத்தத்திற்கு ஹமாஸ் இணக்கம்

Posted by infoauthor9 on 28/07/2014

காசாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 24 மணி நேர மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் மற்றும் ஏனைய பலஸ்தீன தரப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

ஐ. நா. முன்வைத்த யுத்த நிறுத்த பரிந்துரையை ஆய்வுசெய்த பின்னர் இந்த முடிவை எடுத்ததாக ஹமாஸ் பேச்சாளர் சமி அபூ சுஹ்ரி அறிவித்தார். இன்று திங்கட்கிழமை கொண்டா டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற புனித நோன்புப் பெருநாள் மற்றும் பலஸ்தீன மக்களை கருத்தில் கொண்டு யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. எனினும். இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த பதிலும் உடன் வெளியாகவில்லை.

Read the rest of this entry »

Posted in News | Tagged: | Leave a Comment »

கல்முனை மாநகர சபையின் இப்தார் நிகழ்வில் பலஸ்தீன் முஸ்லிம்களுக்காக பிரார்த்தனை

Posted by infoauthor9 on 28/07/2014

???????????????????????????????கல்முனை மாநகர சபையின் இப்தார் நிகழ்வில் பலஸ்தீன் முஸ்லிம்களுக்காக விசேட துஆப் பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது.

மாநகர சபை வளாகத்தில் கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

Read the rest of this entry »

Posted in News | Tagged: | Leave a Comment »

மத்திய கிழக்கு நாடுகளில் பிறை தென்பட்டது , நாளை நோன்பு பெருநாள்

Posted by infoauthor9 on 27/07/2014

மத்திய கிழக்கு நாடுகளில் நாளை புனித நோன்பு பெருநாள் அனுஷ்டிக்க படவுள்ளது. சவூதிஅராபிய . கட்டார் துபாய் என பல்வேறு நாடுகளில் நாளை நோன்பு பெருநாள் கொண்டாடபடவுள்ளது. ஆயினும் இலங்கையில் பிறை தென்படாததால் ரமலான் நோன்பை முப்பதாக பூர்த்தி செய்யும் படி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கேட்டு கொண்டதற்கு இணங்க எதிர்வரும் செவ்வாய் கிழமை பெருநாள் கொண்டாடபடவுள்ளது.

Posted in News | Leave a Comment »

ஸவ்வால் மாத தலைப்பிறை தென்படவில்லை. றமழான் மாதத்தினை முப்பதாக பூர்த்தி செய்ய தீர்மானம்

Posted by infoauthor9 on 27/07/2014

-கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இருந்து ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா-

நாட்டில்எந்தப்பாகத்திலும் ஸவ்வால் மாத தலைப்பிறை தென்படவில்லை.றழழான் மாதத்தினை முப்பதாக பூர்த்தி செய்ய தீர்மானம். நாட்டின் எந்தப்பாகத்திலும் ஸவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாததால் நாளை றமழான் மாதத்தினை முப்பதாக பூர்த்தி செய்து நாளை மறுதினம் செவ்வாயக்கிழமை(29.7.2014) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுவது என இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாயலில் கூடிய பிறைக்குழு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் கடலில் இன்று பிற்பகள் குளிக்கச் சென்ற நான்கு இளைஞர்களில் மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி மரணம்

Posted by infoauthor9 on 27/07/2014

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் கடலில் இன்று பிற்பகள் குளிக்கச் சென்ற நாள்கு இளைஞர்களில் மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி மரணமாகியுள்ளனர்.இதில் இருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரின சடலம் தேடப்பட்டு வருவதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

Posted in News | Tagged: | Leave a Comment »

இதுவரை நாட்டில் எந்தப்பாகத்திலும் ஸவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதாக தகவில்லை

Posted by infoauthor9 on 27/07/2014

(கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இருந்து ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா)

இதுவரை நாட்டில் எந்தப்பாகத்திலும் ஸவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதாக தகவில்லை

கொழும்பு பெரிய பள்ளிவாயலில பிறை மாநாடு தொடர்கின்றது பிறையைக் கண்டால் அறிவிக்குமாறு வேண்டுகோள்

Posted in News | Leave a Comment »

இது வரை ஸவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதாக தகவலில்லை.

Posted by infoauthor9 on 27/07/2014

(கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இருந்து ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா)

இதுவரை நாட்டில் எந்தப்பாகத்திலும் ஸவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாயலில் நடைபெற்று கொண்டிருக்கும் மாநாட்டுக்கு தகவல் எதுவும் கிடைக்கவி;லை என தெரிய வருகின்றது.
ஸவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாடு தற்போது கொழும்பு பெரிய பள்ளிவாயலில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவர் மற்றும் பிறைக்குழு தலைவர் அதன் பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Posted in News | Leave a Comment »

நோன்பு பெருநாளை தீர்மானிக்கும் மாநாடு

Posted by infoauthor9 on 27/07/2014

நோன்பு பெருநாளை தீர்மானிக்கும் மாநாடு தொடர்பான செய்திகள் உடனுக்குடன் எமது இணையதளத்தில் பதிவேற்றப்படும்

Posted in News | Leave a Comment »

ஸவ்வால் மாத தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு ஆரம்பம்

Posted by infoauthor9 on 27/07/2014

(கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இருந்து ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா)

ஸவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாட்டுக்காக கொழும்பு பெரிய பள்ளிவாயலில் ஒன்று கூடியுள்ளனர்.

தற்போது மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து மாநாடு நடைபெறவுள்ளது.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா தலைவர் உட்பட அதன் பிரதிநிதிகள் கொழும்பு பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் உட்பட முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள் உலமாக்கள் கூடியுள்ளனர்.
நாட்டில் எந்தப்பாகத்திலவாது பிறையைக் கண்டால் வழங்கப்பட்டுள்ள தொலை தொலை பேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுள்ளனர்.

கொழும்பில் இன்று மாலை சிறியளவு மழை பெய்துள்ளதால் வாகம் மப்பும் மந்தாரமுமாக உள்ளது.

Posted in News | Leave a Comment »

பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் நோன்பு பெருநாள் தொழுகை- பாலமுனை நடுத்துறை கடற்கரையில்

Posted by infoauthor9 on 27/07/2014

???????????????????????????????-பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி-பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் நபி வழியில் புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையும் பெருநாள் குத்பா பிரசங்கமும் வழமை போன்று இன்ஷா அல்லாஹ் பாலமுனை நடுத்துறை கடற்கரையில் காலை 6.20 மணிக்கு நடாத்தப்படவுள்ளதாக பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் தலைவர் ஏ.எச்.எம்.அமானுல்லாஹ் தெரிவித்தார். Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

ரமழான் கால பயிற்சி வகுப்புக்களில் இருந்து நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிககள் கௌரவிக்கப்ட்டனர்

Posted by infoauthor9 on 27/07/2014

???????????????????????????????-பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி-பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் புனித றமழான் மாதத்தில் இடம்பெற்ற றமழான் கால பயிற்சி வகுப்புக்களில் இருந்து நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு பணப் பரிசும சான்றிதழும் வழங்கும் நிகழ்வும் கடந்த 25-07-2014 வெள்ளிக்கிழமை மாலை பாலமுனை அம்மார் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது. Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

உம்ராவுக்குச் சென்ற ஹக்கீம் ஜித்தா இஸ்லாமிய கூட்டுத்தாபணத்தின் சிரேஸ்ட தலைவர்களை சந்தித்தார்

Posted by infoauthor9 on 27/07/2014

jee-அஷ்ரப் ஏ சமத்-

கடந்த வாரம் உம்ராவுக்குச் சென்ற முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் கல்முனை மேயர் சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர்  அரசியல் பீட உறுப்பிணர் சட்டத்தரணி பாயிஸ்  மாகாணசபை உறுப்பினர் ஜெமீல்  உட்பட்ட குழுவினர் ஜித்தா இஸ்லாமிய கூட்டுத்தாபணத்தின் சிரேஸ்ட தலைவர்களை அவர்களது அலுவலகத்தில் வைத்து சந்தித்தபோது எடுக்கப்பட்டம் படம். Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் நோன்பு பெருநாள் தொழுகை- காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில்

Posted by infoauthor9 on 27/07/2014

DAAD-Logo-பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி-தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின ஏற்பாட்டில் நபி வழியில் புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையும் பெருநாள் குத்பா பிரசங்கமும் வழமை போன்று இன்ஷா அல்லாஹ் காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் காலை 6.30 மணிக்கு நடாத்தப்படவுள்ளதாக காத்தான்குடி-தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார். Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

சல்மா ஹம்சாவினால் பெருநாளுக்கான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

Posted by infoauthor9 on 27/07/2014

DSC07512நோன்புப் பெருநாளுக்கான உலருணவுப் பொருட்கள் காத்தான்குடியில் (27.7.2014)ஞாயிற்றுக்கிழமை 275குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் அதன் அலுவலகத்தில் வைத்து இந்த உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Read the rest of this entry »

Posted in News | Tagged: | Leave a Comment »

அமைச்சர் பசில் ராஜபக்சவின் ஹம்பாந்தோட்ட அலுவலகத்தில் இப்தார்

Posted by infoauthor9 on 27/07/2014

IMG_9533பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் ஹம்பாந்தோட்ட அலுவலகத்தில் நேற்று மாலை இப்தார் நோன்பு திறக்கம்; வைபவமொன்று நடைபெற்றது.

இதில் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அமைச்சர் பௌசி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.’

Read the rest of this entry »

Posted in News | Tagged: | Leave a Comment »

மக்காவில் நேற்றிரவு மழை

Posted by infoauthor9 on 27/07/2014

10499520_10152632993617125_969113044987483292_oகடந்த மூன்று மாதங்களாக வரட்சி நிலவிய மக்கா நகரில் நேற்றிரவு (றமழான் 29வது இரவு) மழை பெய்துள்ளது.
மக்கா புனித ஹரம் ஸரீபிலும் மழை பெய்துள்ளது.

Read the rest of this entry »

Posted in News | Tagged: | Leave a Comment »

சுபைர் ஹாஜியார் நிறுவனம் ஏறாவூரிலுள்’ள சில குடும்பங்களுக்கு றமழான் உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்

Posted by infoauthor9 on 27/07/2014

IMG_12922989989449சுபைர் ஹாஜியார் நிறுவனம் ஏறாவூரிலுள்’ள சில குடும்பங்களுக்கு றமழான் உலர் உணவுப் பொருட்களை நேற்று வழங்கியது
இதன் போது கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.

Read the rest of this entry »

Posted in News | Tagged: | Leave a Comment »

மாஞ்சோலை கிராம சேவகர் நஜீப் அவர்களை ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அழிவு சத்தியத்துக்காக அழைப்பு!

Posted by infoauthor9 on 27/07/2014

10534831_313390722171874_4795660166391731311_o-பழுலுல்லாஹ் பர்ஹான்-

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாஞ்சோலை 207ஏ கிராம சேவகர் யு.எல்.எம்.நஜீப் அவர்களை மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் பெரு நாள் தினத்தன்று ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப்பள்ளிவாயலுக்கு பகிரங்க அழிவுச் சத்தியம் செய்வதற்காக அழைப்பு விடுத்துள்ளார். Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

காஸாத் திரைக்கு பின்னால் உள்ளஅவலங்கள்

Posted by infoauthor9 on 27/07/2014

gaza_graphic_35-பர்ஹான் பாரிஸ்-

பலஸ்தீனம் முஜாஹித்களின் பூமியாகும். அன்றுமுதல் இன்றுவரை இதுபலதூய போராளிகளைஉருவாக்கிவருகின்றது. இதன் விளைவாக இன்றுஅங்குபலபோராட்டக் குழுக்கள் கொடிய இஸ்ரேலுக்குஎதிராகபோராடிவருகின்றன. இதில் தலைவர் அஹ்மத் யாஸீன் அவர்கள் உருவாக்கிய ஹமாஸ் முன்நிலைவகிக்கின்றது. 1948 இல் தொடங்கி இன்றுவரைஓயாதுநடைபொரும் இந்தயுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

நபிமொழி அறிவோம்

Posted by infoauthor9 on 27/07/2014

IMG_172098373313319-1ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அறியாமைக் காலத்தில் நடந்த) ”புஆஸ்” எனும் போரின்போது அன்சாரிகள் ஒருவரை நோக்கி ஒருவர் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமியர் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர்- (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், ”இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்), அபூபக்ரே! (மகிழ்ச்சியை வெளிப்படுத்த) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள். – மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் ”இரு சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்” என்று இடம்பெற்றுள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 8. பெருநாள் தொழுகை)

தொகுப்பு : அல்ஹாஜ் மௌலவி H.M. ஷாஜஹான் (பலாஹி) BA JP

Posted in News | Leave a Comment »

“ஹக்கீமின் அடுத்ததொரு குண்டு” – சாடுகிறது சிங்கள பத்திரிகை “தேசிய”

Posted by infoauthor9 on 27/07/2014

IMG_20140726_132601-அஷ்ரப் ஏ சமத்-

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கடந்த வாரம் புனித மக்காவுக்கு உம்ராவுக்குச் சென்றதை வைத்து இன்றைய ஞயிறு சிஙக்களப்பத்திரிகையான தேசிய” முன்பக்கத்தில் தலைப்புச் செய்தியாக ஹக்கீமின் படத்தை பிரசுரித்து பின்வரும் செய்தியை வெளியீட்டுள்ளது. Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,874 other followers