Archive for the ‘Politics’ Category
Posted by Kattankudi Web Community (KWC) on 29/05/2012

(File Photo)
- நமது செய்தியாளர் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலக்கு என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றபோது என்ன இலக்கு இருந்ததோ அதே இலக்கு புதிய வடிவத்தில் நிர்ணயிக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றோம். முஸ்லிம்களுக்குரிய பாதுகாப்பாக இருப்பதும் இருக்கப்பபோவதும் முஸ்லிம்களின் ஒற்றுமையும் ஏனைய சமூகங்கள் பற்றிய புரிந்துணர்வும் சகவாழ்வக்கான எங்களது பிரச்சாரமும்தான் என உள்நாட்டு வர்த்தக கூட்டுறவுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
Read the rest of this entry »
Posted in Politics | 5 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 14/05/2012
- அஷ் ஷேய்க் கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ் நளீமி -
ரஊப் ஹகீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ், ரிஷாத் பதி தலைமையிலான மக்கள் காங்கிரஸ் மூன்று அணியினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மாபெரும் விருட்சத்தின் கிளைகளாகவே கருதப் பாடல் வேண்டும், கடந்த கால கசப்புணர்வுகளை தொடர்ந்தும் கௌரவப் பிரச்சினைகளாக முன்னெடுத்துச் செல்லாது காலத்தின் தேவை கருதி தேசிய அரசியலில் தனித்தும் சேர்ந்தும் காய் நகர்த்துகின்ற ஒரு ஒழுங்குக்கு வருவது அவசரத் தேவையாக உள்ளது.
Read the rest of this entry »
Posted in கட்டுரைகள், Politics | 5 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 09/05/2012
- நமது செய்தியாளர் -
கிழக்கு மாகாண சபை தேர்தலை புனித றம்ழான் நோன்பு மாதம் கழித்து நடாத்துமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.ஜவாஹிர்சாலி தெரிவித்தார்.
நேற்று (8.5.2012) அலரி மாளிகையில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஆராயும் கூட்டத்திலேயே மேற்படி வேண்டுகோளை முன்வைத்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி தெரிவித்தார்.
Read the rest of this entry »
Posted in Politics | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 13/04/2012
- பாஸி பஹ்ஜான் -
சந்திரகாந்தனா? ரஊப் ஹக்கீமா? கிழக்கு மக்களின் நீண்ட எதிர்பார்ப்பு பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வாம்!
கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தலொன்று வருமாயின், முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் நானே போட்டியிடுவேன் அதில் வேறு பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அண்மையில் தனியார் ஊடகமொன்றுக்கு தெரிவித்தார் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்.
Read the rest of this entry »
Posted in Politics | 4 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 12/03/2012
- றிப்தி அலி -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் யூ.எல்.உவைஸ், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில் இணைவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.40 மணியளவில் அறிவித்துள்ளார்.
Read the rest of this entry »
Posted in Eastern Muslims, Politics | 4 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 10/03/2012
- மப்றூக் -
சில கேள்விகளுக்கு இரண்டு வகையான பதில்களே இருக்கும். ‘ஆம்’, அல்லது ‘இல்லை’! பதில் இல்லாத கேள்விகளும் உள்ளன என்பார்கள். சரியாகக் சொன்னால் குறித்த கேள்விகளுக்கான பதில்களை நாம் அடையவில்லை என்பதே உண்மையாகும்.
Read the rest of this entry »
Posted in கட்டுரைகள், Politics | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 31/12/2011
- எஸ்.எம்.எம்.பஷீர் -
“ஒவ்வொரு நட்பின் பின்னாலும் சில சுய அக்கறை இருக்கிறது. சுய அக்கறையின்றி நட்பில்லை . இது ஒரு கசப்பான உண்மை” - சாணக்கியன்
There is some self-interest behind every friendship. There is no Friendship without self-interests. This is a bitter truth.” – Chanakya
Posted in கட்டுரைகள், Politics | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 28/10/2011
- எஸ்.எம்.எம்.பஷீர் via lankamuslim.org
“உண்மை பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானிக்கப்படுவதல்ல” – தாக் குவைன் ( Truth is not determined by majority vote. ~Doug Gwyn)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்கு மாகான சபை தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் அதில் அபார வெற்றி பெற்றிருந்தாலும் வட கிழக்கு மாகாண சபை நிர்வாகம் யதார்த்தத்தில் செயற்படுமா அதற்கான பாதுகாப்பு சூழல் இல்லாத நிலையில் இந்திய படையின் பாதுகாப்பு உத்தரவாதம் என்ன என்ற கேள்விகள் நிலுவையாக, விடை காணப்படாமல் ஊகங்களுடன் இருந்த போதே நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றன.
Read the rest of this entry »
Posted in கட்டுரைகள், Politics | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 15/10/2011
-மப்றூக்-
முக்கி முக்கி ஒருவாறு பிள்ளையைப் பெற்றாயிற்று! கல்முனை மாநகரசபைக்கான மேயர் தெரிவு பற்றித்தான் சொல்கின்றேன். சும்மா – ஒரு மருத்துவிச்சியை வைத்துப் பார்க்க வேண்டிய இந்தப் பிரசவத்தினை, ஆயிரத்தெட்டு வைத்தியர்கள் ஆயுதங்களோடு சுற்றி நின்று ரணகளப் படுத்தியிருக்கின்றார்கள்!
Read the rest of this entry »
Posted in Eastern Muslims, News, Politics | 2 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 24/01/2011
- எமது விசேட செய்தியாளர் -
UPFA வேட்பாளர் பட்டியலுக்காக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் பெயரிடப்பட்ட பட்டியலில் ஒருவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சுபைர் (C.C) யின் பெயர் இடம்பெறக்கூடும் என்று நம்பகமான தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
நீக்கப்படப்போவது யார் என்ற உறுதியான விபரம் கிடைக்கவில்லை.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, Politics | 5 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 16/11/2010
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி அதிகார சபைகள் திருத்தச் சட்டம் அரசியல் யாப்புக்கு முரணானதல்ல என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
கடந்த வார வெள்ளத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட போது, பாராளுமன்ற செயலாளர் இத்தீர்மானம் குறித்து பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
Read the rest of this entry »
Posted in News, Politics | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 15/11/2010

(Photo Courtesy: Tamil Mirror)
Posted in Politics | 32 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 05/09/2010
காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை ஒரு போதும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் கைப்பற்ற முடியாதென காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார். காத்தான்குடி இன்போவுக்களித்த விஷேட பேட்டியின் போதே நகர சபை உறுப்பினர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிடிப்பதென்பது பகற்கனவாகும்.
கடந்த நகர சபைத்தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பெற்ற 3000 வாக்குகளைக் கூட இம்முறை அவாகளால் பெறமுடியாது என்றே நான் கருதுகின்றேன்.
Read the rest of this entry »
Posted in Interview, Politics | 24 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 26/07/2010
ஐ.நா. நிபுணர் குழுவைக் கலைக்கும்வரை சாகும்வரையிலான உண்ணாவிர தத்தைத் தொடரப் போவதாக நீங்கள் அறிவித்தபோது உண்மையிலேயே ஆச் சரியமாக இருந்தது.
அதன்போது உயிர் பிரிந்தால் போராட்டத்தைத் தொடரு மாறு உங்களது ஆதரவாளர்களைக் கோரியிருந்தீர்களே -அதுதான் அதைவிட வும் ஆச்சரியமானது.
அரசியல்வாதிகள் உண்ணாவிரதம் இருப்பதில் அப்படி ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என நீங்கள் எண்ணக் கூடும். இதுவொன்றும் சாதாரண உண்ணா விரதம் இல்லை. உயிரையே கொடையாகக் கொடுக்கும் உண்ணாவிரதம் இது.
Read the rest of this entry »
Posted in Politics | 2 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2010
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவி கிடைக்காமைக்கு முன்னாள் அமைச்சர் அமீர் அலியே காரணம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹர் சாலி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு முஸ்லிம் சமாதான அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசியல் அந்தஸ்தினை வழங்கிய முன்னாள் அமைச்சர் அமீர் அலி தொடர்பான இவ்வாறான விமர்சனங்கள் தொடரும் பட்சத்தில் ஜவாஹர் சாலிக்கு எதிராக பகிரங்க கண்டன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அந்த அமைப்பு விடுத்துள்ள அறக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் ஜவாஹர் சாலியின் மாகாண உறுப்பினர் பதவியினையும் மீளப் பெற்றுக்கொள்ள கட்சியினூடாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் குறித்த அமைப்பு அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. (R.A)
Tamil Daily Mirror
Posted in News, Politics | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2010
கல்முனை மாநகர மேயராக நியமிக்கப்பட்டுள்ள மசூர் மெளலானவுக்கான நியமனக் கடிதத்தினைக் கையளிக்கும் நிகழ்வு இன்று நண்பகல் மாநகர சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதனையடுத்து பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏ.எம்.பசீர் மற்றும் கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினர் எம்.எஸ்.எம்.நிஸார் ஆகியோருக்கான நியமனக் கடிதங்களும் கையளிக்கப்பட்டன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலியினாலேயே இந்த நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், திகாமடுல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எம்.சலீம் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதேவேளை, குறித்த மாநகரசபையின் மேயராக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்திடம் வேண்டியிருந்த மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான றகீப், இந்நிகழ்வில் கலந்துகொள்ளாமை குறிப்பிடத்தக்கதாகும். (R.A)
Tamil Daily Mirror
Posted in News, Politics | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 26/05/2010
அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கியத் தேசியக் கட்சியின் தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தலைவர் பொறுப்பிலிருந்து ரணில் விக்ரமசிங்க பதவி விலகவேண்டும் என்று அக்கட்சியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகக் கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த இவர், சென்னையிலுள்ள அபுபேலஸ் ஹோட்டலில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றினார்.
Read the rest of this entry »
Posted in News, Politics | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 16/05/2010
(Kattankudi.info Exclusive)

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரிந்த 110 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஒரேநாளில் இடமாற்ற உத்தரவுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொறுப்பதிகாரியைத் தவிர ஏனைய அனைத்து உத்தியோகத்தர்களுக்குமே இவ்வாறு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற இப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரே இந்த இடமாற்ற உத்தரவின் பின்னணியில் இருப்பதாக இடமாற்றப்பட்ட பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த அமைச்சர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பொலிசார் உறுதுணையாக இருக்கவில்லை என்பதாலேயே அவர் இந்த இடமாற்றத்தின் பின்னணியில் நின்று செயற்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை வரலாற்றில் அரசியல் பழிவாங்கல் மூலம் இவ்வாறு ஒரே தடவையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார் இடமாற்றம் செய்யப்பட்டது இதுவே முதற்தடவை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
Posted in News, Politics | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 14/05/2010
படித்த படிப்பினைகளை கொண்டு பிரச்சினைகளின் அடிப்படையை கண்டறிவதற்காக ஏழுபேர் கொண்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
தீர்வினை எட்டாவிட்டால் அது நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சினையாக அமைந்து விடும் என்பதுடன் சமாதானமும் அபிவிருத்தியும் ஒரே பாதையில் முன்னெடுத்து செல்லப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.
Read the rest of this entry »
Posted in News, Politics | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 14/05/2010
ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவராக மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச நியமிக்கப்படக் கூடும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனை மேலும் உறுதிப்படுத்துவதற்கான நிகழ்வொன்றை இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இன்றைய ஊடகவியலார் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
Read the rest of this entry »
Posted in News, Politics | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 12/05/2010
“ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண கிராமங்களில் சுதந்திரம் இன்றித் தவித்துக்கொண்டிருக்க, மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இராணுவ வெற்றியை கோலாகலமாகக் கொண்டாடுகிறது. ஓர் இனம் அந்நியப்படுத்தப்பட்டிருக்கையில் நாட்டின் வெற்றி எனக் கொண்டாடுவது எந்த வகையில் நியாயம்?” என ஐக்கிய தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன வீரகேசரி இணையத்தளத்துக்கு இவ்வாறு தெரிவித்தார்.
Read the rest of this entry »
Posted in News, Politics | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 11/05/2010
சுகந்தினி ரட்னம்
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் தயாராகவே உள்ளது என்று அக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், சற்று முன்னர் தமிழ்மிரர் இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு நிலையில், அரசாங்கத்துடன் இணையும் எண்ணம் தமது கட்சிக்கு ஒருபோதும் இல்லை என்று தெரிவித்த அவர், எப்பொழுதும் தமது கட்சி தனித்தே செயற்படும் என்றும் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப்போவதாக வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த பொதுத் தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்தே போட்டியிட்டது. இனிவரும் காலங்களிலும் அவ்வாறே செயற்படும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார். அதேபோன்று அவசரகாலச் சட்டத்தை தமது கட்சி அப்போதும் எதிர்த்தது, இனிமேலும் எதிர்க்கும் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில் அரசாங்கத்துடன் இணையும் எண்ணம் தமது கட்சிக்கு இல்லை. இருப்பினும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
(Tamil Daily Mirror)
Posted in News, Politics | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 11/05/2010
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு தனது தலைமைத்துவம் தொடர்பில் திருப்தியின்மை காணப்பட்டால், தலைமைத்துவ பதவியிலிருந்து விலகுவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்ததாக டெயிலிமிரர் இணையதளத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதையிட்டு, அந்தக் கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்ஹ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன், கட்சித் தலைமைத்துவத்திற்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்றிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 117 ஆசங்களைப் பெற்றிருக்கும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டிருந்தது.
(Tamil Daily Mirror)
Posted in News, Politics | Leave a Comment »