காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘News’ Category

News about Kattankudi

இனப்பிரச்சினையின் தோற்றுவாய்களை ஒத்த நிகழ்வுகள் மு. கா. தோற்றம் பெற்ற போதிருந்த இலக்குகளை புதுப்பிக்க வேண்டுகின்றன – காத்தான்குடியில் பசீர் சேகுதாவூத் உரை

Posted by Kattankudi Web Community (KWC) on 29/05/2012

(File Photo)

- நமது செய்தியாளர் -

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலக்கு என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றபோது என்ன இலக்கு இருந்ததோ அதே இலக்கு புதிய வடிவத்தில் நிர்ணயிக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றோம். முஸ்லிம்களுக்குரிய பாதுகாப்பாக இருப்பதும் இருக்கப்பபோவதும் முஸ்லிம்களின் ஒற்றுமையும் ஏனைய சமூகங்கள் பற்றிய புரிந்துணர்வும் சகவாழ்வக்கான எங்களது பிரச்சாரமும்தான் என உள்நாட்டு வர்த்தக கூட்டுறவுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

Read the rest of this entry »

Posted in Politics | 5 Comments »

”வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா..!

Posted by Kattankudi Web Community (KWC) on 28/05/2012

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றத்தை கவிதை வடிவில் ஆவணப்படுத்தும் நோக்குடன்  (www.jaffnamuslim.com) யாழ் முஸ்லிம் இணையம் வெளியிடவுள்ள ”வேர் அறுதலின் வலி” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 02-06-212 அன்று, காலை 10 மணிக்கு, முஸ்லிம் மாதர் நிலையம், இல 201 டீ.ஆர்.விஜயவர்த்தனா மாவத்த, கொழும்பு 10 (Muslim Ladies Study Circle, No. 201, D. R. Wijewardena Mawatha,Colombo 10) என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசளுக்கு அமைச்சர்கள் பௌசி மற்றும் றிசாத் விஜயம்

Posted by Kattankudi Web Community (KWC) on 28/05/2012

-இர்ஷாத் றஹ்மத்துல்லா–

தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசலில் தொழுகையினை நிறுத்த வேண்டும் என பெரும்பான்மை மதகுரு்க்களால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் இன்று அங்கு சென்ற அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, றிசாத் பதியுதீன் மற்றும் முஸ்லிம் சமய திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி ஆகியோர் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், ளுஹர் தொழுகையினையும் அங்கு  நிறைவேற்றியுள்ளனர். Read the rest of this entry »

Posted in News | 6 Comments »

கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனித்துப்போட்டியிடுவது பிழையான வழியல்ல- றஊப் ஹக்கீம்

Posted by Kattankudi Web Community (KWC) on 28/05/2012

-நமது செய்தியாளர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியிலும் ஒரு எதிர்க்கட்சியாக இருப்பதன் அடையாளமே காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரசின் கிளை அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

முஸ்லிம் மக்களுக்கு மத உரிமை மறுக்கப்படுகிறது – ஜயலத் எம்பி கண்டனம்

Posted by Kattankudi Web Community (KWC) on 28/05/2012

அனைத்து இலங்கையர்களுக்கும் தமது மத வழபாடுகளில் ஈடுபட இலங்கை அரசியலமைப்பில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும் துரதிஷ்டவசமாக எமது நாட்டு முஸ்லிம் மக்களுக்கு அந்த உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக அண்மைக்கால சம்பவங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

இலவச கல்வியை பெற்றுக்கொண்ட நாம் நாட்டுப்பற்றுக் கொண்டவராக இருக்கவேண்டும் – றிசாத் பதியுதீன்

Posted by Kattankudi Web Community (KWC) on 28/05/2012

-வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா-

அரசாங்கத்தின் இலவச கல்வியை பெற்றுக் கொண்ட நாம் நாட்டுப்பற்றுக் கொண்டவராக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த கல்விக்கு அரசு செலவு செய்யும் நிதியானது  இந்த நாட்டில் ஒவ்வொரு மனிதனது பங்களிப்பாகும் என சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இதன் மூலம் அடையும் பதவிகள் சகல சமூகத்துக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்ற நியாயத்தை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். Read the rest of this entry »

Posted in News | 1 Comment »

மட்டக்களப்பு மாநகர மேயரின் தாயார் காலமானார்

Posted by Kattankudi Web Community (KWC) on 28/05/2012

-நமது செய்தியாளர்-

மட்டக்களப்பு மாநகர மேயரின் தாயார் பிறேமா தேவி ராஜன் சத்தியமூர்த்தி (79) இன்று (28.5.2012) பிற்பகள் மரணமடைந்துள்ளார்.

சுகயீனமுற்றிருந்த இவர் இன்று மரணமடைந்ததாக மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் தெரிவித்தார்.

Read the rest of this entry »

Posted in News | 1 Comment »

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரே கிழக்கு முதலமைச்சராக வர வேண்டும்: அதாவுல்லா

Posted by Kattankudi Web Community (KWC) on 28/05/2012

-எம்.பரீட்-

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரே கிழக்கு முதலமைச்சராக வர வேண்டும் என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

அத்துடன் எம்மை அறிந்தவரே எம்மை ஆள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். கிண்ணியா பிரதேசத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண அறிவியல் கண்காட்சியில் வெற்றியீட் பாடசாலை மாணவர்களுக்கான Read the rest of this entry »

Posted in News | 9 Comments »

விடிவெள்ளி ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் – ரிசார்ட் பதியுதீன் கண்டனம்

Posted by Kattankudi Web Community on 28/05/2012

இர்ஷாத் றஹ்மத்துல்லா

தெஹிவளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற விடிவெள்ளி பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் பௌத்த மத பிக்குகளால் சுற்றிவளைக்கப்பட்டு அவர்களது கமரா கருவிகளுக்கு இழைக்கப்பட்ட சேதங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதொன்று என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

மட்டு விமான சேவைகள் அபிவிருத்தி—அமைச்சர் பிரியங்கர மட்டு விஜயம்

Posted by Kattankudi Web Community on 28/05/2012

அபூ ஜுமைல்

சமாதான சூழலில் உல்லாசப்பயணத்துறையை கிழக்கு மாகாணத்தில் விருத்திசெய்யும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.1958ம் ஆண்டு நிறுவப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம் முதன்முறையாக விமான ஓடுபாதைகள் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டு முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »

தெஹிவளையில் ‘விடிவெள்ளி’ ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்; புகைப்படங்களும் அழிப்பு

Posted by Kattankudi Web Community (KWC) on 28/05/2012

தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் செய்தி சேரிக்கச் சென்ற விடிவெள்ளி பத்திரிகையின் இரு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களது கமெரா பறிமுதல் செய்யப்பட்டு அதில் இருந்த புகைப்படங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »

Posted in News | 1 Comment »

தமிழரசுக்கட்சி பேராளர் மாநாட்டில் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பேஷ் இமாம் எச்.எம். ஷாஜஹான் பலாஹி ஆசியுரை! ஏகோபித்த கரகோஷம் !

Posted by Kattankudi Web Community (KWC) on 28/05/2012

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மட்டக்களப்பில் ஞாயிறன்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு மதப்பெரியார்களின் ஆசியுரையுடன் துவங்கியது. இஸ்லாமிய மதப் பிரார்த்தனையை நிகழ்த்த காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பேஷ் இமாம் எச்.எம். ஷாஜஹான் பலாஹி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.

Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

கிழக்கிலங்கை சர்வதேசக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

Posted by Kattankudi Web Community (KWC) on 28/05/2012

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மட்டக்களப்பிலுள்ள ஈஸ்டர்ன் இன்ரநேசனல் கொலேஜ் இன் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி சனிக்கிழமையன்று கல்லூரி மைதானத்தில் அதன் நிர்வாகப் பணிப்பாளர் சிரீன் தனுஜா அலிஸாஹிர் மௌலானா தலைமையில் இடம்பெற்றது.

Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணிகளை இழந்த மக்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்கும் சட்டத்திருத்தம் – காத்தான்குடியில் றஊப் ஹக்கீம்

Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012

-நமது செய்தியாளர்-

போர்ச் சூழல் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணிகளை இழந்த மக்களுக்கு அவர்களின் காணிகளை பெற்றுக்கொடுக்கும் சட்டத்திருத்தமொன்றை மிகவிரைவில் அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்பிக்கவுள்ளதாக நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான அமைச்சர் றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

Read the rest of this entry »

Posted in News | 1 Comment »

புறநெகும மீளாய்வு கூட்டம்

Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012

-அபூ ஜுமைல்-

கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் உலக வங்கியின் நிதி உதவிதிட்டதின் கீழ் இலங்கை அரசினால் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டத்தின் (புறநெகும) மீளாய்வுக் கூட்டம் இன்று (24.05.2012) கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உள்ளுராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

இலங்கை தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு

Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012

-நமது செய்தியாளர்-

இலங்கை தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு இன்று காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பிலுள்ள அமெரிக்க மிஸன் மண்டபத்தில் ஆரம்பமானது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் மாநாடு ஆரம்பமானது.

Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

ஏறாவூர் நகர முகப்புக்கு அழகூட்ட ஐபிகேஎப் பூங்கா – இந்தியத் தூதரிடம் அலிஸாஹிர் மௌலானா வேண்டுகோள்

Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

இந்திய அமைதிகாப்புப் படையினர் (ஐபிகேஎப்) இலங்கையில் இருந்த காலத்தில் ஏறாவூரில் உருவாக்கிய பூங்காவை புனரமைப்புச் செய்ய உதவுமாறு ஏறாவூர் நகர முதல்வர் அலிஸாஹிர் மௌலானா நேற்று மட்டக்களப்புக்கு வந்த இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டை கண்டித்து மட்டக்களப்பில் கறுப்புக்கொடி

Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012

-நமது செய்தியாளர்-

மட்டக்களப்பில் இன்று இடம்பெறும் இலங்கை தமிழரசுக்கட்சின் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரின் ஒரு சில இடங்களில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் மாநட்டை எதிர்க்கும் பிரசுரங்களும் ஒட்டப்பட்டுள்ளன. Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

காத்தான்குடி சம்மேளனம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மிடையிலான சந்திப்பு

Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012

-நமது செய்தியாளர்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தனை காத்தான்குடிக்கு வருகை தருமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் நேற்று (26.5.2012) மாலை அழைப்பு விடுத்துள்ளது.

Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்

Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012

நவமணி பத்திரிகையில் இந்தவாரம் (27-05-2012) வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்

இலங்கை முஸ்லிம்களின் இரு கண்களில் ஒன்றாகவே பள்ளிவாசல்கள் இருக்கின்றன. பள்ளிவாசல் இன்று இந்த நாட்டில் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே மாறியுள்ளது. முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் தமது ஐங்காலத் தொழுகையை நடத்துவதற்காக பள்ளிவாசல்களை அமைத்துக் கொள்கின்றனர். Read the rest of this entry »

Posted in News | Leave a Comment »

முஸ்லிம்கள் அச்சம்கொள்ள தேவையில்லை – கோத்தபாய ராஜபக்ஷ றிசாத் பதியுதீனிடம் உறுதி

Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2012

இர்ஷாத் றஹ்மத்துல்லா

தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸா தொடர்பில் சில  பெரும்பான்மை சமூகத்தினர் ஆரம்பித்துள்ள அத்துமீறல் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கவனத்திற்கு, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன்  கொண்டுவந்துள்ளார். Read the rest of this entry »

Posted in News | 8 Comments »

இந்திய உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்துடன் சந்திப்பு

Posted by Kattankudi Web Community on 26/05/2012

நமது செய்தியாளர்

இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கேகாந் இன்று (26.5.2012) காலை மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தையும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பையும் மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் வைத்து சந்தித்தார். மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் பல்சமய ஒன்றியத்தின் தலைவரும் மட்டு அம்பாறை மறைமாவட்ட ஆயருமான கிங்ஸ்லி சுவாமி பிள்ளை தலைமையில் நடைபெற்றது. Read the rest of this entry »

Posted in Batticaloa, News | Leave a Comment »

முஸ்லிம் காங்கிரஸ் அலுவகத்தீக்கிரை சம்பவம் ஜனநாயக அரசியலின் மற்றொரு கழுத்து நெரிப்பு – ரீ.எல்.ஜவ்பர்கான்

Posted by Kattankudi Web Community (KWC) on 26/05/2012

-இன்போ செய்தியாளர்-

முஸ்லிம் சமுகத்தின் அரசியல் முகவரியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய காத்தான்குடி பிரதேசத்திற்கான அலுவலகம் இன்று மாலை கட்சியின் தேசிய தலைவரினால் திறக்கப்படவிருந்த நிலையில் திட்டமிடப்பட்ட ரீதியில் தீவைத்து கொழுத்திய சம்பவமானது ஜனநாயக அரசியிலின் மற்றொரு கழுத்து நெரிப்புச்செயலாகும்.

Read the rest of this entry »

Posted in News | 4 Comments »