தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 7 வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
Archive for the ‘Eastern Muslims’ Category
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 7 வது பட்டமளிப்பு விழா
Posted by Kattankudi Web Community (KWC) on 18/05/2012
Posted in Eastern Muslims, News | 1 Comment »
காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய மாணவர்கள் இன்று காலை தொடக்கம் ஆர்ப்பாட்டம்
Posted by Kattankudi Web Community on 08/05/2012
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய பாடசாலை மாணவர்கள் இன்று (8.5.2012) காலை தொடக்கம் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இப்பாடசாலைக்கு ஆசிரியர் ஆளணி பற்றாக்குறை நிலவுவதால் அதை நிவர்த்தி செய்யக்கோரியே இம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இப்பாடசாலையின் அதிபர் எம்.யு.எம்.நசீர் தெரிவித்தார். Read the rest of this entry »
Posted in Eastern Muslims, News | Leave a Comment »
சிகரம் வாழ் மக்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு
Posted by Kattankudi Web Community on 08/05/2012
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் சிகரம் கிராமத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஹிறா பவுண்டேசனின் நிதியுதவியுடன் சிகரம் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் வாழ்வாதார உபகரணங்கள் (6.5.2912) வழங்கி வைக்கப்பட்டன. Read the rest of this entry »
Posted in Eastern Muslims, News | 1 Comment »
மின்னல் தாக்கி மரணம்
Posted by Kattankudi Web Community on 07/05/2012
கந்தளாய் முள்ளிப்பெத்தான கண்டி வீதியில் 95ஆம் கட்டை லுனு சேர்விஸ் சென்டர் உரிமையாளரான முகம்மட் நசீர் (வயது 35) அவர்கள் இன்று மாலை 5.00மணியளவில் மின்னல் தாக்கி மரணமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
கிண்ணியா பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கந்தளாய் பிரதேசத்தில் தமது வீட்டுடன் கூடிய வர்த்தக நிலையத்தில் இன்று வேலை செய்து கொண்டிருக்கும் போதே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அவரின் ஜனாஸா கந்தளாய் மாவட்ட வைத்தியசாலையில் தந்போது உள்ளதாகவும் கந்தளாய் பிரதேசத்தில் கடும் இடியுடன் கூடிய மழை இன்று காணப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted in Eastern Muslims, News | 7 Comments »
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய காங்கிரஸ் அங்குரார்பணமும் தமிழ் பயங்கரவாதமும் !!
Posted by Kattankudi Web Community on 06/05/2012
இலங்கைத் தமிழ் கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்ட தமிழ் தேசியக் காங்கிரஸ் எனும் அமைப்பின் அங்குரார்பண நிகழ்வு 30 ஏப்ரல் 2012ல் பிரித்தானிய நாடாளுமன்ற குழு அரை இலக்கம் பத்தில் என்பீல்ட் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் அன்டி லவ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட அயர்லாந்தின் துணை முதல் மந்திரி மார்டின் மக்கினஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்ட போதும் அந்நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவில்லை ! மாறாக நியூஹாம் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரிபன் ரிம்ஸ் கலந்து கொண்டார். பொன்னாடை போர்த்தி கவுரவிக்கவும் பட்டார் . Read the rest of this entry »
Posted in Eastern Muslims, News, Sri Lankan Muslims | 1 Comment »
ஏறாவூரில் காணிக்கச்சேரி
Posted by Kattankudi Web Community on 26/03/2012
ஏறாவூரில் நேற்று (25.3.2012) காணிக்கச்சேரி நடைபெற்றது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரின் ஏற்பாட்டில் ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் இக்காணி கச்சேரி நடைபெற்றது. Read the rest of this entry »
Posted in Eastern Muslims | Leave a Comment »
முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று அமைப்பாளர் தேசிய காங்கிரஸில் இணைவு
Posted by Kattankudi Web Community (KWC) on 12/03/2012
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் யூ.எல்.உவைஸ், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில் இணைவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.40 மணியளவில் அறிவித்துள்ளார்.
Posted in Eastern Muslims, Politics | 4 Comments »
கிண்ணியாவில் ஜமாஅதுஸ்ஸலாமாவின் தஃவாப் பயண மூன்று நாள் தொடர் நிகழ்ச்சிகள்
Posted by Kattankudi Web Community (KWC) on 10/03/2012
கடந்த 9ம் திகதி முதல் கிண்ணியாவையும் இதனை அண்டியுள்ள பல ஊர்களையும் உள்ளடக்கி ‘காஃபிலா தஅவிய்யா’ எனும் பெயரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
Posted in Eastern Muslims, Islamic | Leave a Comment »
இந்திய உலமாக்கள் சிலர் ஏறாவூருக்கு விஜயம்
Posted by Kattankudi Web Community on 06/03/2012
இந்தியாவின் கேர்ள மாநிலத்திலுள்ள உலமாக்கள் சிலர் நேற்று (5.3.2012) ஏறாவூருக்கு விஜயம் செய்தனர். Read the rest of this entry »
Posted in Eastern Muslims, News | 1 Comment »
ஆளுநரால் கல்முனை மாநகர அபிவிருத்திக்கு 350 மில்லியன் ஒதுக்க முடியாது – கே.எம். ஜவாத்
Posted by Kattankudi Web Community (KWC) on 01/03/2012
கல்முனை மாநகர அபிவிருத்திக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் 350 மில்லியன் ரூபா ஒதுக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். ஜவாத் தெரிவித்தார்.
Posted in Eastern Muslims | Leave a Comment »
கல்முனையில் அரசியல் கட்சிகள் பிரிவினையை தூண்டுகின்றனவா? வர்த்தக சம்மேளனம் கண்டனம்
Posted by Kattankudi Web Community (KWC) on 25/02/2012
கல்முனையில் சாப்புச் சட்டத்தினை நடைமுறைப் படுத்தும் விடயத்தில் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையும், தமிழர்களுக்கு ஞாயிற்றுக் கிழமையும் என Read the rest of this entry »
Posted in Eastern Muslims | Leave a Comment »
வியாபாரத்திற்கு சென்றவர் ஜனாஸாவாக மீட்பு
Posted by Kattankudi Web Community on 05/02/2012
அம்பாறை கல்முனைக்குடியிலிருந்து மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்திற்கு கடந்த வியாழக்கிழமை ஒரு இலட்சத்து 35ஆயிரம் ரூபா பணத்துடன் மாடு வியாபாரத்திற்கு சென்றவர் நேற்று பிற்பகல் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கறுத்த பாலம் அருகே ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது. Read the rest of this entry »
Posted in Eastern Muslims, News | 2 Comments »
முஸ்லிம் முதலமைச்சர் என்கின்ற பதம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமானது
Posted by Kattankudi Web Community (KWC) on 23/01/2012
கிழக்கு மாகாண முஸ்லிம் முதலமைச்சர் என்கின்ற பதம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமானது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எங்களுக்கு முதலமைச்சர் பதவி தேவையில்லையென்று கூறிய பொழுது அதனை தைரியத்தோடும், துணிவோடும் எதிர் கொண்ட கட்சிதான் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்.
Posted in Eastern Muslims, News | Leave a Comment »
மருதமுனையில் சுனாமியால் வீடிழந்தோருக்கு முஸ்லிம் தலைமை தீர்வெதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை: ஏ. ஆர். அமீர்
Posted by Kattankudi Web Community (KWC) on 07/01/2012
சுனாமி அனர்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இன்று வரை எதுவித தீர்வகளுமில்லாமல் கடுமையாக கஸ்டப்படும் மருதமுனை 65 மீற்றருக்கு உட்பட்ட மக்களின் வீடில்லா பிரச்சினைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை Read the rest of this entry »
Posted in Eastern Muslims | Leave a Comment »
லெவ்வை ஹாஜி மடத்தனமானவர் என்பதை நினைத்து கவலையடைகின்றேன் – ஜவாஹிர் சாலி
Posted by Kattankudi Web Community (KWC) on 21/12/2011
ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லெவ்வை ஹாஜியாரின் பேச்சு மடத்தனமானது, அவரை ஒரு விடயம் தெரிந்தவர் என நினைத்திருந்தேன் ஆனால் அவர் ஒரு மடத்தனமானவர் என்பதை நினைத்து கவலையடைகின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி தெரிவித்தார். Read the rest of this entry »
Posted in Batticaloa Muslims, Eastern Muslims | Leave a Comment »
ஜவாஹிர்சாலியை கல்குடா மக்கள் மீண்டும் பாடசாலைக்கு அனுப்புவார்கள் – லெவ்வை ஹாஜி
Posted by Kattankudi Web Community (KWC) on 21/12/2011
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர்சாலியை கல்குடா மக்கள் மீண்டும் பாடசாலைக்கு அனுப்புவார்கள் என ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லெவ்வை ஹாஜியார் தெரிவித்தார். Read the rest of this entry »
Posted in Batticaloa Muslims, Eastern Muslims | Leave a Comment »
கல்முனை காசிம் வீதிப் பிரச்சினை: முதல்வர் சிராஸ் உடனடி நடவடிக்கை
Posted by Kattankudi Web Community (KWC) on 13/12/2011
கல்முனைப் பிரதேச வீதியொன்றின் பிரச்சினை தொடர்பில் சுமார் 15 நிமிடங்களுக்குள் தீர்வு காண்பதற்கான முயற்சியினை மேயர் சிராஸ் மீராசாஹிப் அண்மையில் மேற்கொண்டார்.
Posted in Eastern Muslims | Leave a Comment »
சாய்ந்தமருது கடலில் மூழ்கி ஒருவர் வபாத்
Posted by Kattankudi Web Community (KWC) on 26/11/2011
சாய்ந்தமருது பிரதேச கடலில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் இன்று காலை நீரில் மூழ்கி வபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். கடல் கொந்தளிப்பாக இருந்த வேளையில் நண்பர்களுடன் சாய்ந்தமருது பௌஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் பாரிய அலையில் இழுத்து செல்லப்பட்டே உயிரிழந்துள்ளார்.
Posted in Eastern Muslims | 2 Comments »
அஷ்ரப் நகர் மக்களை உதாசீனப்படுத்துகிறதா மு.கா.?
Posted by Kattankudi Web Community on 12/11/2011
எப்பாடு பட்டேனும் மக்கள் குறைநிறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பிரதிநிதியொருவரை தெரிவு செய்ய வேண்டும் எனும் பலத்த எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியிலேயே மக்கள் வாக்களிக்கின்றனர். அவ்வாறான ஒருவருக்காக வாக்களிப்பதில் அந்த அப்பாவி மக்கள் காட்டும் அக்கறையைக்கூட வாக்குகளைப் பெற்று பதவிகளைக் கைப்பற்றும் அந்த பிரநிதிநிதிகள் பொருட்டாகக் கருதுவதில்லையே என்று என்னும் போது வாக்களித்த மக்கள் பாரிய ஏமாற்றத்துக்குள் தள்ளப்படுகின்றனர்.
Read the rest of this entry »
Posted in Eastern Muslims | Leave a Comment »
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெறுவதே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் இலக்கு – பசீர்
Posted by Kattankudi Web Community (KWC) on 12/11/2011
கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசினூடாக முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெறுவதே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அடுத்த இலக்கு என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
Posted in Eastern Muslims | 1 Comment »
கல்முனை மாநகர சபை மேயர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்
Posted by Kattankudi Web Community (KWC) on 20/10/2011
கடந்த எட்டாந்திகதி நடை பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கல்முனை மாநகர சபைக்கான மாநகர மேயர் திங்கட்கிழமை (19.10.2011) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கல்முனை மாநகர ஆணையாளர் எம்.ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கல்முனை மக்கள் வங்கி சந்தியில் இருந்து வரவேற்கப்பட்டு அழைத்து வரப்பட்டார்.
Posted in Eastern Muslims | 1 Comment »
கல்முனை மேயர் பதவி: மாயக் கரங்களால் அடித்து விளையாடப்பட்ட பந்து
Posted by Kattankudi Web Community on 15/10/2011
முக்கி முக்கி ஒருவாறு பிள்ளையைப் பெற்றாயிற்று! கல்முனை மாநகரசபைக்கான மேயர் தெரிவு பற்றித்தான் சொல்கின்றேன். சும்மா – ஒரு மருத்துவிச்சியை வைத்துப் பார்க்க வேண்டிய இந்தப் பிரசவத்தினை, ஆயிரத்தெட்டு வைத்தியர்கள் ஆயுதங்களோடு சுற்றி நின்று ரணகளப் படுத்தியிருக்கின்றார்கள்!
Posted in Eastern Muslims, News, Politics | 2 Comments »
கல்முனை மாநகர மேயராக முதல் இரண்டு வருடங்களுக்கு சாய்ந்தமருதைச்சேர்ந்த சிராஸ்-பசீர் சேகுதாவூத்
Posted by Kattankudi Web Community on 13/10/2011
கல்முனை மாநகர மேயராக முதல் இரண்டு வருடங்களுக்கு சாய்ந்தமருதைச்சேர்ந்த மீராசாகிப் சிராஸை நியமிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபையின் சர்ச்சைக்குரிய மேயர் விவகாரம் தொடர்பாக இன்று காலை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Posted in Eastern Muslims, News | Leave a Comment »


























