Archive for the ‘Kattankudi News’ Category
Posted by Kattankudi Web Community on 22/05/2012
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தில் சாரணர் மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு அன்மையில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் கே.எல்.ஏ.ஹைறுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்விவலய கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன், சாரணர் இயக்க மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பீ.குணரட்னம், ஆசிரியர் பயிற்சி ஆலோசகர் ஏ.எம்.றபீக் உட்பட மத்தி வலய கல்வி அதிகாரிகளும் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஏ.முபாரக் அவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
Read the rest of this entry »
Posted in Education, Kattankudi News | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 22/05/2012
-நமது செய்தியாளர்-
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் சாதனையாளர் பாராட்டு விழா நேற்று (21.5.2012) காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.
சம்மேளன கல்வி அபிவிருத்தி ஸ்த்தாபக தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மட்டக்களப்பு மத்தி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் எம்.ஐ. சேகுஅலி Read the rest of this entry »
Posted in Kattankudi News | 4 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 21/05/2012
- தகவல்: பஸால் ஜிப்ரி -
18.05.2012 வெள்ளிக்கிழமை பூநொச்சிமுனை உமர் இப்னு ஹத்தாப் பள்ளிவாயலில் மீனவ சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட இம் மார்க்க சொற்பொழிவு நிகழ்வில் இரண்டு மார்க்க அறிஞர்களின் உரைகள் இடம்பெற்றன.
Read the rest of this entry »
Posted in Kattankudi News | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 21/05/2012
- நமது செய்தியாளர் -
காத்தான்குடி பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவில் காத்தான்குடி குபா இளைஞர் கழகம் சகல போட்டிகளிலும் 31 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காத்தான்குடி பிரதேச இளைஞர் விளையாட்டு விழா நேற்று (20.5.2012) காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தில் கர்தான்குடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.றம்சி தலைமையில் நடைபெற்றது.
Read the rest of this entry »
Posted in Kattankudi News | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 21/05/2012
- உத்தியோகபூர்வ செய்தி வெளியீடு / நமது செய்தியாளர் -
பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எஸ். லியனகே நேற்று (20.5.2012) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தியமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைகளை பார்வையிட்டார்.
Read the rest of this entry »
Posted in Kattankudi News | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 20/05/2012
பாஸி பஹ்ஜான்
காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்தில் 92வது வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி வெள்ளிகிழமை பிற்பகல் மஞ்சந்தொடுவாய் விளையாட்டு மைதானாத்தில் பாடசாலை அதிபர் அல்லாபிச்சை தலைமையில் நடைபெற்றது. Read the rest of this entry »
Posted in Kattankudi News | 1 Comment »
Posted by Kattankudi Web Community on 20/05/2012
-நமது செய்தியாளர்/ பாஸி பஹ்ஜான்-
காத்தான்குடியில் கல்விச் சபை ஒன்று நேற்று(19.5.2012) ஆரம்பிக்கப்பட்டது. பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் இந்த கல்விச் சபை ஆரம்பிக்கப்பட்டது.
Read the rest of this entry »
Posted in Kattankudi News | 3 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 19/05/2012
-நமது செய்தியாளர்/ காணொளி – எம்.எம்.பர்ஹான்
நேற்று வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாயல் நிருவாக சபை தெரிவை அப் பள்ளிவாயல் ஜமா அத்தார் சங்கம் நிராகரித்து மீரா ஜும்ஆ பள்ளிவாயல் ஜமா அத்தார் சங்கம் நீதிமன்றம் செல்லவுள்ளதாக அதன் தலைவர் எம்.எம்.முஹ்சின் தெரிவித்தார். Read the rest of this entry »
Posted in Kattankudi News | 4 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 18/05/2012
தகவல்- பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு
காத்தான்குடி பிரதேச கல்வியை எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு திட்ட மிட்டு வழி நடாத்துவதற்காக கல்வித்துறை சார்ந்தவர்களைக் கொண்ட உயர் சபை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நாளை (19.05.2012) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, News | 2 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 17/05/2012
- நமது செய்தியாளர் -
மெத்தைப்பள்ளி நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் பதவிக்காலம் இந்த மாதம் முடிவடைந்து புதிய நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையைத் தெரிவு செய்யும் பொதுக் கூட்டம் கூட்டப்படும் என்று பலத்த எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில் இன்று வக்பு சபை இந்த நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பது எனும் தீர்மானத்தை எடுத்ததாக நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் உதவித் தலைவரான றவூப் ஏ. மஜீத் இன்போவுக்குத் தெரிவித்தார்.
Read the rest of this entry »
Posted in Kattankudi News | 2 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 17/05/2012
-நமது செய்தியாளர்-
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த சில தினங்களாக இடம் பெற்றுவந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை காத்தான்குடி பொலிசார் இன்று(16.5.2012) சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
Read the rest of this entry »
Posted in Kattankudi News | 2 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 15/05/2012
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்…
எமதூரின் திண்மக்கழிவகற்றும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு பொருத்தமான இடத்தை கொள்வனவு செய்வதற்காக கடந்த 17.03.2012 ஆம் திகதி எமதூரில் உள்ள பள்ளிவாயல்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் ரூபா. 500.00 வீதம் சம்மேளனத்தினால் வசூல் செய்யப்பட்டது.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, Official Press Release | 3 Comments »
Posted by Kattankudi Web Community on 14/05/2012
நமது செய்தியாளர்
எதிர் வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் அமீர் அலியை தான் ஆதரிக்க திட்டமிட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் தெரிவித்தார்.
கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக்குவதற்கு முன்னாள் அமைச்சர் அமீர் அலி பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டார். எனினும் அவரின் அந்த முயற்சி தோல்வியடைந்தது. Read the rest of this entry »
Posted in Kattankudi News, News | 8 Comments »
Posted by Kattankudi Web Community on 13/05/2012
-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களில் அயராத முயற்சியினால் அமைக்கப்பட்டு வந்த மீராபாலிகா தேசிய பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற நாமம் குறிக்கப்பட்ட பஸ்மலா சதுக்கம் மற்றும் இரும்பு தைக்கா பள்ளிவாயலுக்கு முன்பாக அமைந்துள்ள அல்லாஹ் என்ற நாமம் என்பவற்றின் சுற்றுவட்ட வேலைகள் முடிவுற்று வர்ணம் தீட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.
Read the rest of this entry »
Posted in Kattankudi News | 17 Comments »
Posted by Kattankudi Web Community on 13/05/2012
நமது செய்தியாளர்
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தவிசாளர் யு.ரீ.எம்.அன்வரின் அனுசரணையுடன் துபாய் நாட்டிற்கு இலவச வேலை வாய்ப்பு பெற்றுச் செல்பவர்களுக்கான நேர்முகப்பரீட்சையொன்று இன்று (13.5.2012) பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் காத்தான்குடி அலுவலகத்தில் நடைபெற்றது.
Read the rest of this entry »
Posted in Kattankudi News | Leave a Comment »
Posted by Kattankudi Web Community on 13/05/2012
இன்போ செய்தியாளர்
மட்/அல் அமீன் மகா வித்தியாலயத்திலிருந்து மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்த சகோதரர் APM. ஜலால்தீன் ஆசிரியர் அவர்களையும் புதிதாக நியமனம் பெற்று வந்த ஒலுவில் பாலமுனையைச் சேர்ந்த முஹம்மட் சபீக் ஆசிரியர் அவர்களையும் வரவேற்கும் நிகழ்வும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் செல்லும் திருமதி பர்சானா ஆசிரியை அவர்களை வழியனுப்பும் நிகழ்வும் 11.05.2012 திகதி வெள்ளிக் கிழமை பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
Read the rest of this entry »
Posted in Kattankudi News | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 12/05/2012
- தகவல்: எம். எஸ். எம். நிசார் ஆசிரியர் -
அண்மையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் அங்கம் வகிக்கின்ற மூன்று கோட்டங்களான காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் கல்குடா ஆகிய கோட்டங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட வலய மட்ட 15 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரம், சதுரங்கப் போட்டிகளில் சம்பியன் பட்டத்தை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசலையின் மாணவிகளுக்கான வெற்றிக் கிண்ணமும் சான்றிதழும் வழங்கும் நிகழ்வு 10.05.2012 வியாழக்கிழமை காலை 09.00 மணிக்கு பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் M. M. இஸ்மாலெப்பை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
Read the rest of this entry »
Posted in Kattankudi News | 4 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 11/05/2012
-நமது செய்தியாளர்-
காத்தான்குடி பிரதேசத்தில் இடம் பெற்றுவந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் ஒருவர் காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் ஐந்து கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கொள்ளைச் சம்பவங்கள் வீடுகளிலேயே இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். Read the rest of this entry »
Posted in Kattankudi News | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 10/05/2012
- படங்கள்: அப்துல்லாஹ் ஹாபிஸ் -
இன்று பிற்பகல் 2:00 மணியளவில் மெத்தைப்பள்ளி வீதியில் விறகு ஏற்றி வந்த லொறி ஒன்று ஓரத்தில் நிறுத்த முற்பட்ட போது வடிகானுக்கு மேல் போடப்பட்டிருந்த கொங்ரீட் மூடி உடைந்ததால் குடை சாய்ந்தது.
வாசகர் அனுப்பி வைத்திருந்த இப்படங்கள் பிரசுரிக்கப்படுகின்றன.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, Photos | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 10/05/2012
-எஃப்.எம்.பர்ஹான்-
மஹிந்த சிந்தனையின் கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் வீதிகளை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களினால் காத்தான்குடி பிரதான வீதியில் பல பேரீத்தம் மரங்கள் நடப்பட்டிருந்தன. Read the rest of this entry »
Posted in Kattankudi News | 2 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 09/05/2012
- அபூ ஜுமைல் -
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியை புனரமைப்புச்செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
Read the rest of this entry »
Posted in Kattankudi News | 3 Comments »
Posted by Kattankudi Web Community on 07/05/2012
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் பாவிக்கப்பட்ட ஓரளவு பழுதடைந்த நிலையில் காணப்படும் Cannon IR-1600 ரக போட்டோ பிரதி (Photo Copy) இயந்திரம் விற்பனைக்கு உள்ளது. இதன் ஆரம்ப கேள்விக்கூறல் தொகையாக ரூபா 25000.00 மதிப்பிடப்பட்டுள்ளது. கூடிய கேள்விக்கூரல் விலைக்கு இது விற்பனை செய்யப்படும்.
இதனை எதிர்வரும் 15.05.2012 வரை அலுவலக நேரங்களில் பார்வையிட முடியும் என சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ அன்சார் முகம்மட் நளீமி காத்தான்குடி இன்போவுக்கு தெரிவித்தார்
Posted in Information, Kattankudi News | Leave a Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 06/05/2012

-நமது செய்தியாளர்-
நேற்று விபத்துக்குள்ளான காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை உறுப்பினருமான எம்.எம்.அப்துர் றஹ்மானை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சுகம் விசாரித்ததாக தெரிய வருகின்றது. Read the rest of this entry »
Posted in Kattankudi News | 10 Comments »