காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

ஊர்க்குருவி – YMMA காத்தான்குடி கிளையின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாலரின் உண்மை முகம்

இலங்கை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் சமூக அமைப்பு ‘அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப்பேரவை’ (YMMA) ஆகும். இவ்வியக்கமானது முஸ்லிம் வாலிபர்களை ஒன்றிணைத்து பல சமூக செயல்களை மேற்கொள்வதே இதனது அடிப்படை நோக்கம்.

அதனடிப்படையில் சில வாரங்களுக்கு முன்பு ‘Al Bukhary Foundation, Malaysia’ என்ற கல்வி நிறுவனத்தின் புலமைப்பரிசில் ஒன்றை அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப்பேரவை (YMMA) ஊடாக வழங்கத் தீர்மானித்தது.

Read the rest of this entry »

Filed under: ஊர்க்குருவி, Kattankudi News

ஊர்க்குருவி – இப்படியும் நடக்கின்றது

-அபூ றப்தான்-

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கல்முனையைச் சேர்ந்த ஒரு குழுவினர் உம்றா கடமைக்காகச் சவூதி அரேபியா சென்றிருந்தனர்.

புத்து நாட்களின் பின்னரே திரும்பி வருவோம் எனக் கூறிச் சென்றிருந்த அவர் ஏழு நாட்களிலேயே திரும்பி வந்துவிட்டனர்.

ஆசை ஆசையாக அமல் செய்யச் சென்று இடையிலேயே திரும்பி வந்த கதையை அழாக் குறையாக தற்போது அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Read the rest of this entry »

Filed under: ஊர்க்குருவி

ஊர்குருவி – இப்படியும் நடக்கின்றது

அன்மையில் இடம்பெற்ற  காத்தான்குடி நகரசபைக்கான தேர்தல் முடிவுற்ற நிலையில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

நடைபெற்று முடிந்த தேர்தலில் பலரும் பல்வேறு கட்சிகளுக்கும், சுயோட்சை குழுக்களுக்கும் வாக்களித்து தாம் விரும்பிய வேட்பாளர்களை  தெரிவுசெய்து அவர்களில் சிலர் சத்தியப்பிரமாணம் செய்தும், இன்றும் பலர் செய்யவுள்ள நிலையில் வென்றவர்கள் மக்களிடம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கிடையில் இவர்களுக்கு வாக்களித்த சிலர் தாம் ஏனைய கட்சி, சுயோட்சை குழுக்களின் ஆதரவாளர்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றனர்.

Read the rest of this entry »

Filed under: ஊர்க்குருவி

ஊர்குருவி – உள்வீட்டு தேர்தல் வன்முறை

கடந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் குடும்பத் தலைவி ஒருவர் ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கு வாக்களித்ததன் விளைவாக தனது கணவனுடன் ஏற்பட்ட தகராறு  வன்முறையாக மாறி மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக குறிப்பிட்ட குடும்பத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கையில், மனைவியை ஒரு குறிப்பிட்ட பெரும் கட்சியின் ஒரு குறிப்பிட்ட Read the rest of this entry »

Filed under: ஊர்க்குருவி

ஊர்க்குருவி: சமுர்த்தி முத்திரைக்கான அரிசி விநியோகத்தில் குளறுபடி

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி முத்திரைக்கான அரிசி விநியோகத்தில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெறுவதாக சமுர்த்தி பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று புதன்கிழமை (15.12.2010) காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க 2, 7, 9 ஆம் கிளைகளில் வழங்கப்பட்ட அரிசி மோசமானது என சமுர்த்தி பயனாளிகளினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல்.எம்.சுல்மி, சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.அன்சார் ஆகியோர்  மேற்குறித்த கிளைகளுக்கு சென்று பரிசோதித்த போது மக்களின் புகார் உண்மை என கண்டறியப்பட்டுள்ளது.

Read the rest of this entry »

Filed under: ஊர்க்குருவி

இப்படியும் நடக்கிறது- ஊர்குருவி

ஊர்குருவி தனது நீண்ட தூர பயணத்தின்பின் களைப்பிற்காக அந்த பெரிய பாடசாலையில் ஒதுங்கியது. அப்போது தன்னை யாரோ அழைப்பது கேட்டு திரும்பியபோது, அது எமது ஊரின் பெரிய பாடசாலையின் ஆறாம் தரம் ’G’ பிரிவு வகுப்பு மாணவன். அந்த மாணவன் ஊர்குருவியை நோக்கி:

“ஊர்குருவியாரே! எங்கள் பெரிய பாடசாலையில் ஆரம்ப வகுப்புகளுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுவதில் பெரும் பின்னடைவு காணப்படுகின்றது.  உதாரணமாக எங்கள் வகுப்பு ஆறாம் தரம் ’G‘ பிரிவில்  வாழ்க்கைத் தேர்ச்சியும் புவியியலும் எனும் பாடத்தில் நவம்பர் மாத முதலாம் வாரம் வரை வாழ்க்கைத் தேர்ச்சிக்காக கொப்பியில் ஐந்து பக்கங்களும், புவியியலுக்காக மூன்று பக்கங்களுமே  குறிப்பெழுதியுள்ளோம், ஆசிரியர் வருவார் ஆனால் வரமாட்டார். மேலும் எங்கள் வகுப்பில் தமிழ் பாடமும் குறைந்தளவே கற்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கற்பிக்கப்பட்டால் நாங்கள் எவ்வாறு எதிர்காலத்தில் சம்மேளனத்தின் சாதனையாளர் பட்டியலில் வரமுடியும்”  என்று தனது மனக்குறையை ஒப்புவித்தார் அந்த மாணவர்.

Read the rest of this entry »

Filed under: ஊர்க்குருவி

பெரிய இடம் – சின்ன விஷயம்!

1. கொள்கையளவில் ஒழிக்கப்பட்டு விட்டதாக மார்தட்டப்படும் சீதனம் தொடர்பான விஷயம் அடிக்கடி பூதாகரமாக எழுவதும் பின்னர் சற்றுத் தனிவதுமாக இருப்பது நாம் அறிந்ததே!

அண்மையில் நடந்த பெரிய இடத்துக் கலியாணமொன்றில் இடம்பெற்ற சீதன யாவாரம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழமையில் குறிப்பிட்ட சில பெரிய படிப்புகளைப் படிக்கும் மாப்பிள்ளைமாரை வசதிபடைத்தவர்கள் வளைத்துத் திரிவதும், மாப்பிள்ளையின் குடும்பத்தினரும் வருவதில் நல்ல விலையை தெரிந்து முடிப்பதும் வாடிக்கையான சம்பவங்கள்தானே?

Read the rest of this entry »

Filed under: ஊர்க்குருவி

இப்படியும் நடக்கிறது!

- ஊர்க்குருவி

அண்மையில் காத்தான்குடியில் வைத்து தலைக்கவசம் (helmet) அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்தியமைக்காக போக்குவரத்துப் பொலிசாரால் பிடிக்கப்பட்ட சகோதரர் ஒருவருக்கு வினோதமான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அவரது அனுமதிப்பத்திரத்தை பறிமுதல் செய்த பொலீசார் அவருக்கு தற்காலிக அனுமதிப்பத்திரத்தை வழங்கிவிட்டு சென்றுள்ளனர். தண்டப்பணம் கட்டுவதற்கான படிவத்தைப் பெற இரண்டு வாரங்களாக பொலிஸ் நிலையத்துக்கு இவர் அலைந்துளார். அதற்குரிய படிவம் முடிந்து விட்டதாகவும் பின்னர் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் இவர் அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இரண்டு வாரம் சென்றும் படிவம் வராததால் இவரை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் சென்ற பொலிசார், தண்டப்பனத்தைக் கட்டச் சொல்லி அதற்குரிய பற்றுச்சீட்டைப் பார்வையிட்டு அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளனர்.

Read the rest of this entry »

Filed under: ஊர்க்குருவி

Info SMS

  • UN manitha urimaikal mahanattil arasin sarfil kalanthkolla DM Hizbullah inru iravu Genewa payanam (j) 1 day ago
  • Pirathi amaichar Hizbullah vin vendukolukku innanga kattankudy Base hospitlil ICU amaikka suhathara amaichu 6 million nethi othukkeedu (j) 3 days ago
  • 20.02.2012 Naalai Kaalai 9.00 Manikku Sammelanam, Jammiyathul Ulama Edpaaddil "Vaddi Olippu Maanaadu" Nadaiperavullathu. 5 days ago
  • Kattankudi info vin kouravam- kavimani MHM.Buhari falaahi avarhalin sirappup peddi. Visit http://t.co/ikXGbcUY 1 week ago
  • Post of Auditor from State Printing coperation ( Basic salary 25465/-& Gov.Allow.) please see the page #107 sunday observer on 12-02-2012 1 week ago

பார்த்துக்கொண்டிருப்போர்

web stats

வருகைகள்

  • 3,888,213 மொத்த வருகைகள்

RSS காத்தான்குடி செய்திகள்

முந்தைய பதிவுகள்

புதிய பதிவுகள் தொடர்பில் மின்னஞ்சல் அறிவித்தல்களைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்

Join 473 other followers

பிரபல பதிவுகள்