காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘Poem’ Category

உம்மாவுக்கொரு கவிதை

Posted by Kattankudi Web Community on 22/12/2011

காத்தநகர் முகைதீன்சாலி

இதய அறைகளிலே
இதமாய் உறைந்திருக்கும்
ஈரம் கசிகின்ற ஊரின்
உணர்வு என்னை
உசுப்பேத்தி விடும்போது
இதயம் அமைதிபெற
உனக்கொரு கவிதை உம்மா!

Read the rest of this entry »

Posted in Poem | 6 Comments »

மரணித்து விட்டது மனிதம்

Posted by Kattankudi Web Community on 11/12/2011

-முஹம்மட் பஸ்ஹான்-

காலத்தின் கட்டளைக்குள்
கட்டுண்டு போன நாம்,
அக் காலத்தை விட வேகமாய் ஓடுகின்றோம்.
எதற்காய் ஓடுகின்றோம்?

எதுவுமே நிலையில்லா இவ்வுலகில்
எதை நிலையாக ஓடுகின்றோம்?

Read the rest of this entry »

Posted in Poem | 3 Comments »

“கைதட்டும் கவிதை” – காத்தநகர் முகைதீன்சாலி

Posted by Kattankudi Web Community (KWC) on 25/11/2011

அறிவின் வளர்ச்சியினை
ஆதாரமாய்க் கொண்டு
ஊரின் செய்திகளை
உடனுக்குடன் பெற்று
உலகமெல்லாம் வாழுகின்ற
நம் உடன் பிறப்புகளின்
உணர்வுக்கு தீனி போடும்
ஊடகம் உண்டென்றால்
நம் காத்தான்குடி இன்போதான்!

Read the rest of this entry »

Posted in Poem | 2 Comments »

கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை

Posted by Kattankudi Web Community (KWC) on 04/11/2011

-காத்தநகர் முகைதீன்சாலி-

முஹம்மது நபி(ஸல்) தொடர்பான கேலிச்சித்திரத்திற்கு எதிராக!

உணர்வுகள்பொங்கி
உயிரைக்குடிக்கும்
கண்களில் குருதி
கண்ணீராய் வடியும்
இதயம் எங்கினும்
பரந்து கிடக்கும்
நபியின் புகழை
நசுக்கும் போது.
Read the rest of this entry »

Posted in Poem | 1 Comment »

‘வியர்வைக்கு விலைபேசாதீர்கள்’

Posted by Kattankudi Web Community (KWC) on 01/11/2011

காத்தநகர் முகைதீன்சாலி அவர்கள் எழுதி தேசிய ரீதியல் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட கவிதை இன்போ வாகர்களுக்காக…

தோளுக்கு தோள் கொடுக்கும் தோழர்களே
இந்தத் தொழிலாளியைக் கொஞ்சம் பாருங்களன்
நாளெல்லாம் நாவறல உழைத்தாலும் – நல்ல
சோறு தின்பதற்கு முடியலையே!

Read the rest of this entry »

Posted in Poem | Leave a Comment »

சத்திய சேவகர் வேண்டும்

Posted by Kattankudi Web Community on 19/10/2011

-இல்மி அஹமட் லெவ்வை-

வீட்டுச்சிறையில்
விடுதலை வேண்டி
விரக்தியில் நிரம்பி
வாழ்வின் விழிப்பில்
வாழும் -நம்
விதவையர்க்குதவ
சேவகர் வேண்டும் !
-0-

Read the rest of this entry »

Posted in Poem | 1 Comment »

வாய் தவறி………

Posted by Kattankudi Web Community on 08/10/2011

-கலாபூஷணம் காத்தான்குடி பாத்திமா -

மனம் அமைதியை இழக்க
சொல்லை விதைத்து மௌனமாகி
சொன்ன சொல்லே அரக்கனாகி
சொல்லால் சுடப்பட்டவன் தலைநிமிர
மனிதபலவீனம் வெளிப்படுகிறது…

Read the rest of this entry »

Posted in Poem | Leave a Comment »

நான் எனும் நீ………..

Posted by Kattankudi Web Community (KWC) on 15/09/2011

- மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் நான் எனும் நீ கவிதைத் தொகுப்பிலிருந்து - 

போராளிகளே புறப்படுங்கள்
ஒரு துப்பாக்கியின் ரவைகளினால்
எனது இரைச்சல் அடங்கி விட்டதுக்காய்
நமது எதிரி
வென்றுவிட்டான் என்று நீ
குழம்பிவிடக் கூடாது

Read the rest of this entry »

Posted in Poem | 5 Comments »

அடிச் செருப்பாலே!

Posted by Kattankudi Web Community (KWC) on 15/09/2011

-யாசர் அரஃபாத் -

கற்கை நன்றே;
கற்கை நன்றே;
பிச்சைபுகினும்
கற்கை நன்றே;
இல்லை இல்லை
கற்கை நன்றே;
கற்கை நன்றே;
Read the rest of this entry »

Posted in Poem | 3 Comments »

வள்ளல் மாதமே விடைபெறலாமா?

Posted by Kattankudi Web Community (KWC) on 30/08/2011

-இல்மி அஹமட் லெவ்வை-

கண்ணியம் நிறைந்த
புண்ணியம் சுமந்திட்ட
மாதமே-நீ
புறப்படலாமா ?

Read the rest of this entry »

Posted in Poem | Leave a Comment »

தலைப்பிறையும் தாயகமும் !

Posted by Kattankudi Web Community (KWC) on 25/08/2011

- இல்மி அஹமட் லெவ்வை  - காத்தான்குடி -

காற்றடித்து பார்த்தஊரு
கடலலையும் புகுந்து
பார்த்த ஊரு
கரிமருந்தும்
கலக்கிப்பார்த்த மண்ணு
காத்த மண்ணு
Read the rest of this entry »

Posted in Poem | 3 Comments »

சகாப்தமாய்ப்போன எங்கள் ஸதக்கா

Posted by Kattankudi Web Community (KWC) on 23/08/2011

-ரீ.எல்.ஜவ்பர்கான்-

(Image from: idrees.lk)

 

(மரணம் அணைத்துக்கொண்ட மாபெரிய ஆழுமை கவிஞர் ஏ.ஜீ.எம் ஸதக்காவை நினைந்து….தோழமைப்பேனா சிந்திய கண்ணீர்…)

ஸதக்கா…
இலக்கியப் பள்ளிக்கூடத்திற்குள்
நானும் நீயும் பாலர்வகுப்புத்தோழர்கள்…
Read the rest of this entry »

Posted in Poem | 1 Comment »

சிதைந்த கொலை நடந்த இரவின் கவிதையொன்று

Posted by Kattankudi Web Community (KWC) on 03/08/2011

- அசரீரி -

இனப்படுகொலை தொடர்பான அசரீரியின் கவிதை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்யப்படுகிறது

காரணம் தெரியாமல் கொல்லப்படுகின்றதன் துயர எண்ணமாக
Read the rest of this entry »

Posted in Poem | Leave a Comment »

ஓர் அபலையின் குரல்..!

Posted by Kattankudi Web Community (KWC) on 06/07/2011

- காத்தநகர் நிலாக்கவி -

வறுமைப்பிணி தந்த

வலியின் ரணம் -

பல கனவுகளை

இதயத்தில் தேக்கி…

பூப்பெய்தும்  வயதிலேயே

புறப்படச் செய்ததெனை

பிறிதொரு தேசம் நோக்கி…!

Read the rest of this entry »

Posted in Poem | 9 Comments »

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது…?

Posted by Kattankudi Web Community (KWC) on 30/06/2011

- காத்தநகர் நிலாக்கவி -

எத்தனைமுறை

விரட்டியடித்தாலும்

என்னையே

சுற்றிச் சுற்றி வருகிறாயே…

Read the rest of this entry »

Posted in Poem | 8 Comments »

வெறுமையாகிய அகக்காயம்…

Posted by Kattankudi Web Community (KWC) on 17/06/2011

-ரீ.எல். ஜவ்பர்கான்-

அறுபட்ட கோழியின் உடலாக

படபடத்துக்கிடக்கிறது ஆத்மாத்துண்டு…..

ஓப்பாரிவைத்து அழவேண்டும்போலுள்ளது

ஓன்றிலென்றால் சமாளித்துக்கொள்ளலாம்…

எல்லாப்பக்கங்களும் அப்படித்தானென்றால்…

வாசிப்பே சூன்யம்தானா?

Read the rest of this entry »

Posted in Poem | 3 Comments »

“சம்மேளனம்” – சிறப்புக் கவிதை

Posted by Kattankudi Web Community (KWC) on 12/06/2011

12.06.2011 நடைபெறவுள்ள காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன வருடாந்த பொதுச்சபைக் கூட்டத்தையொட்டி எம்.ஐ.எம். முஸ்தபா அவர்களால் எழுதப்பட்ட சிறப்புக் கவிதை.

அன்று எங்கள் தலைவர்கள்
ஒன்றுபட்டு ஊர்ப்பணிக்கு
தொண்டு நிறுவன சம்மேளனம்
தொடங்கி வைத்தனர் காத்த மண்ணில்
நின்றே இந்த சம்மேளனம்
நேரிய சீரிய பணி செய்து
இன்று இருபத் தேழாண்டு
கடந்து வெற்றி நடைபோடுது
Read the rest of this entry »

Posted in Poem | 3 Comments »

ஐந்தில் வளைந்தது!

Posted by Kattankudi Web Community (KWC) on 11/06/2011

- காத்தான்குடி ஸரந்தீப் முஸ்தபா -

ஐந்தில் 
வளைந்தவர்கள்
அமைதியாக வாழ்ந்தார்கள்
பிஞ்சில் பழுத்தவர்கள்தான்
இப்போது
பிரச்சினைகளை 
பிரசவிக்கின்றனர்.....

Posted in Poem | 2 Comments »

இது கவிஞர்களுக்கு….

Posted by Kattankudi Web Community (KWC) on 07/06/2011

- காத்தநகர் முகைதீன்சாலி -

கனன்று சுழன்று வரும்

காற்றைப் போல உன்

கவிதை அமைதல் வேண்டும்.

கானல் நீரைப் போல

அருகில் சென்றவுடன்

மறையா உருவம் வேண்டும்.

.

Read the rest of this entry »

Posted in Poem | 3 Comments »

வாழ்க்கை…

Posted by Kattankudi Web Community (KWC) on 06/06/2011

 -றிசாத் பி(B)ன் ஆதம்-

வாழ்க்கையின் ஒவ்வொரு

அடைவுகளும்,,,,,,

ஏதோ ஒன்றை இன்னும் தேடியே

நகரவும் விரையவும் துடிக்கிறது.

Read the rest of this entry »

Posted in Poem | Leave a Comment »

மல்யுத்தம் நடக்கின்றது இந்தநாளில் (மணிக்கவிதை)

Posted by Kattankudi Web Community (KWC) on 03/06/2011

-எம்.ஐ.எம்.முஸ்தபா-

பரிசுத்தம் நிறைந்ததெங்கள் பள்ளிவாயல் – அங்கே

மல்யுத்தம் நடக்கின்றது இந்தநாளில்

இறையோனத் தொழுகின்ற நேரம்தன்னில்

இரு சாரார் மோதுகின்றார் தீனைச்சொல்லி

நெறிகாக்க வேண்டிய எம் புனிதஇல்லம் – இன்று

வெறிகொண்டு ஆடுவோரின் போர்க்களமாச்சு

சீற்றத்தால் பள்ளிக்குள் குதித்தோரெல்லாம்

சீரழிந்தார் வாழ்க்கையிலே வரலாறுண்டு.

Posted in Poem | 3 Comments »

சாயம் (மணிக்கவிதை)

Posted by Kattankudi Web Community (KWC) on 01/06/2011

- காத்தான்குடி செரண்டிப் முஸ்தபா -

புகைத்தல் 
புதைக்கப்படவேண்டிய
புண்ணிய நாளில்
புதுச்சாயம்
பூசப்பட்டுக்கொண்டிருக்கின்றது
சில்றை பிரச்சினைகளுக்கு

Posted in Poem | Leave a Comment »

நீங்காத நினைவுகள்

Posted by Kattankudi Web Community (KWC) on 12/05/2011

-Prefects &  Advanced Level Students, Kattankudy Central College-

காத்தான்குடி மத்திய கல்லூரியில்
அயராது பணியாற்றிய எங்கள் ஆசிரியர்
சேவகனே உம் செய்தி கேட்டவுடன் எங்களை
மெய் சிலர்க்க வைத்தது!

என்னறிவு இல்லாத மாணவனை
இனிமையாக அழைத்து எளிதாக திட்டமிட்டு தந்து
எதிர்காலத்தில் கம்பீரமாக கால் பதிக்க வைத்த
என் ஆசானே!
எங்களால் ஒரு போதும் மறக்க முடியாது உன் சேவையை…..

Read the rest of this entry »

Posted in Poem | Leave a Comment »