காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

நிலையற்ற மனித வாழ்வு

காத்தநகர் முகைதீன்சாலி

சொத்து சுகம் கொண்டு
சுகதேகியாய் வாழ்ந்தாலும்
முதுமை தேசத்திலொருநாள்
முகாமிடத்தான் வேண்டும்.

Read the rest of this entry »

Filed under: Poem

நிச்சயிக்கப்பட்ட அந்த நாளிகை

கருத்து வேறுபாடற்ற ஒரே தலைப்பு, அது மரணம் என்பது மட்டுமே! இரண்டாம் கருத்துக்கு இடம்பாடுள்ள விடயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் நாம், நிச்சயிக்கப்பட்ட அந்த நாளிகையை மறந்து விட்டோமா? அல்லது உலக வாழ்க்கையும் சடவாதமும் நம்மை மறக்கடிக்கச் செய்து விட்டதா?

Read the rest of this entry »

Filed under: Poem

பிறமதக் கலாச்சாரத்தை..

சேதப்படுத்தப்பட்ட விபுலானந்தர் சிலை-மதியன்பன்-

அடுத்தவ ரோடு சேர்ந்து
அமைதியாய் வாழும் உறவை
தடுத்திட வேண்டும் என்ற
தவறான சிந்தனைக்குள்
Read the rest of this entry »

Filed under: Poem

இருத்தினோம் இதயத்தில் உம்மை…

-மதியன்பன்-

இம்முறை நடைபெற்ற கல்விப்; பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி வெற்றி பெற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான காத்தான்குடி மாணவர்களை வாழ்த்தி எழுதப்பட்ட கவிதை. Read the rest of this entry »

Filed under: Poem

மழையது ஓய்ந்த தென்று…

-மதியன்பன்-

மழையது ஓய்ந்த தென்று
மகிழ்விலே நாங்க ளெல்லாம்
திளைத்துமே இருந்த வேளை
திரும்பவும் பெய்யும் மழையால்
முளைத்திடும் நுளம்பு மற்றும்
முடிவிலா நோய்கள் தன்னால்
Read the rest of this entry »

Filed under: Poem

மழை நோய்

- காத்தான்குடி அனு -

மழையது நின்று போச்சு

மாரியும் விலக லாச்சு

நோய்களே தொற்றி யாச்சு

நுளம்புகள் பெருக்க மாச்சு

Read the rest of this entry »

Filed under: Poem

புரண்டு போன பூமி.

-முஹமட் பஸ்ஹான்-

அன்று,
உழைப்பவனின் உழைப்பை
மதிப்பிடத்தான்
பணம்.

Read the rest of this entry »

Filed under: Poem

கல்வி அமைச்சரே! உங்களுக்கென்ன ஆச்சி..?

-காத்தான்குடி மதியன்பன்-

பரீட்சைப் பெறுபேற்றில் குழப்பம்!
படித்தவர்க்கும் புரியவில்லை விளப்பம்!
பாவிகளோ செய்த பிழை -
பார்த்திடவோ யாருமிலை -
படித்தாலும் எதிர் காலம் கலக்கம்!

Read the rest of this entry »

Filed under: Poem

ஏனிந்தப் பேரவலம்

-காத்தான்குடி அனு-

பால்வத்தை ஓடையோரம் வீடு
படுகின்றோம் நாம்பெரிய பாடு
கால்வாயில் பாய்ந்துவரும் வெள்ளம்
கரைபுரள நாசம்தான் இல்லம்

Read the rest of this entry »

Filed under: Poem

சோகம் தந்த சுனாமி

– மதியன்பன்-

பின்னோக்கிப் போனாயே பெருங்கடலே – விழி
பிதுங்காமல் வேடிக்கை பார்த்தோமே
முன்னோக்கிப் பாய்ந்தாயே மான்போலே – நாம்
மூழ்கிவிட்டோம் தண்ணீரில் மீன்போல

Read the rest of this entry »

Filed under: Poem

உம்மாவுக்கொரு கவிதை

காத்தநகர் முகைதீன்சாலி

இதய அறைகளிலே
இதமாய் உறைந்திருக்கும்
ஈரம் கசிகின்ற ஊரின்
உணர்வு என்னை
உசுப்பேத்தி விடும்போது
இதயம் அமைதிபெற
உனக்கொரு கவிதை உம்மா!

Read the rest of this entry »

Filed under: Poem

மரணித்து விட்டது மனிதம்

-முஹம்மட் பஸ்ஹான்-

காலத்தின் கட்டளைக்குள்
கட்டுண்டு போன நாம்,
அக் காலத்தை விட வேகமாய் ஓடுகின்றோம்.
எதற்காய் ஓடுகின்றோம்?

எதுவுமே நிலையில்லா இவ்வுலகில்
எதை நிலையாக ஓடுகின்றோம்?

Read the rest of this entry »

Filed under: Poem

“கைதட்டும் கவிதை” – காத்தநகர் முகைதீன்சாலி

அறிவின் வளர்ச்சியினை
ஆதாரமாய்க் கொண்டு
ஊரின் செய்திகளை
உடனுக்குடன் பெற்று
உலகமெல்லாம் வாழுகின்ற
நம் உடன் பிறப்புகளின்
உணர்வுக்கு தீனி போடும்
ஊடகம் உண்டென்றால்
நம் காத்தான்குடி இன்போதான்!

Read the rest of this entry »

Filed under: Poem

கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை

-காத்தநகர் முகைதீன்சாலி-

முஹம்மது நபி(ஸல்) தொடர்பான கேலிச்சித்திரத்திற்கு எதிராக!

உணர்வுகள்பொங்கி
உயிரைக்குடிக்கும்
கண்களில் குருதி
கண்ணீராய் வடியும்
இதயம் எங்கினும்
பரந்து கிடக்கும்
நபியின் புகழை
நசுக்கும் போது.
Read the rest of this entry »

Filed under: Poem

‘வியர்வைக்கு விலைபேசாதீர்கள்’

காத்தநகர் முகைதீன்சாலி அவர்கள் எழுதி தேசிய ரீதியல் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட கவிதை இன்போ வாகர்களுக்காக…

தோளுக்கு தோள் கொடுக்கும் தோழர்களே
இந்தத் தொழிலாளியைக் கொஞ்சம் பாருங்களன்
நாளெல்லாம் நாவறல உழைத்தாலும் – நல்ல
சோறு தின்பதற்கு முடியலையே!

Read the rest of this entry »

Filed under: Poem

சத்திய சேவகர் வேண்டும்

-இல்மி அஹமட் லெவ்வை-

வீட்டுச்சிறையில்
விடுதலை வேண்டி
விரக்தியில் நிரம்பி
வாழ்வின் விழிப்பில்
வாழும் -நம்
விதவையர்க்குதவ
சேவகர் வேண்டும் !
-0-

Read the rest of this entry »

Filed under: Poem

வாய் தவறி………

-கலாபூஷணம் காத்தான்குடி பாத்திமா -

மனம் அமைதியை இழக்க
சொல்லை விதைத்து மௌனமாகி
சொன்ன சொல்லே அரக்கனாகி
சொல்லால் சுடப்பட்டவன் தலைநிமிர
மனிதபலவீனம் வெளிப்படுகிறது…

Read the rest of this entry »

Filed under: Poem

நான் எனும் நீ………..

- மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் நான் எனும் நீ கவிதைத் தொகுப்பிலிருந்து - 

போராளிகளே புறப்படுங்கள்
ஒரு துப்பாக்கியின் ரவைகளினால்
எனது இரைச்சல் அடங்கி விட்டதுக்காய்
நமது எதிரி
வென்றுவிட்டான் என்று நீ
குழம்பிவிடக் கூடாது

Read the rest of this entry »

Filed under: Poem

அடிச் செருப்பாலே!

-யாசர் அரஃபாத் -

கற்கை நன்றே;
கற்கை நன்றே;
பிச்சைபுகினும்
கற்கை நன்றே;
இல்லை இல்லை
கற்கை நன்றே;
கற்கை நன்றே;
Read the rest of this entry »

Filed under: Poem

வள்ளல் மாதமே விடைபெறலாமா?

-இல்மி அஹமட் லெவ்வை-

கண்ணியம் நிறைந்த
புண்ணியம் சுமந்திட்ட
மாதமே-நீ
புறப்படலாமா ?

Read the rest of this entry »

Filed under: Poem

தலைப்பிறையும் தாயகமும் !

- இல்மி அஹமட் லெவ்வை  - காத்தான்குடி -

காற்றடித்து பார்த்தஊரு
கடலலையும் புகுந்து
பார்த்த ஊரு
கரிமருந்தும்
கலக்கிப்பார்த்த மண்ணு
காத்த மண்ணு
Read the rest of this entry »

Filed under: Poem

சகாப்தமாய்ப்போன எங்கள் ஸதக்கா

-ரீ.எல்.ஜவ்பர்கான்-

(Image from: idrees.lk)

 

(மரணம் அணைத்துக்கொண்ட மாபெரிய ஆழுமை கவிஞர் ஏ.ஜீ.எம் ஸதக்காவை நினைந்து….தோழமைப்பேனா சிந்திய கண்ணீர்…)

ஸதக்கா…
இலக்கியப் பள்ளிக்கூடத்திற்குள்
நானும் நீயும் பாலர்வகுப்புத்தோழர்கள்…
Read the rest of this entry »

Filed under: Poem

சிதைந்த கொலை நடந்த இரவின் கவிதையொன்று

- அசரீரி -

இனப்படுகொலை தொடர்பான அசரீரியின் கவிதை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்யப்படுகிறது

காரணம் தெரியாமல் கொல்லப்படுகின்றதன் துயர எண்ணமாக
Read the rest of this entry »

Filed under: Poem

Info SMS

  • UN manitha urimaikal mahanattil arasin sarfil kalanthkolla DM Hizbullah inru iravu Genewa payanam (j) 1 day ago
  • Pirathi amaichar Hizbullah vin vendukolukku innanga kattankudy Base hospitlil ICU amaikka suhathara amaichu 6 million nethi othukkeedu (j) 3 days ago
  • 20.02.2012 Naalai Kaalai 9.00 Manikku Sammelanam, Jammiyathul Ulama Edpaaddil "Vaddi Olippu Maanaadu" Nadaiperavullathu. 5 days ago
  • Kattankudi info vin kouravam- kavimani MHM.Buhari falaahi avarhalin sirappup peddi. Visit http://t.co/ikXGbcUY 1 week ago
  • Post of Auditor from State Printing coperation ( Basic salary 25465/-& Gov.Allow.) please see the page #107 sunday observer on 12-02-2012 1 week ago

பார்த்துக்கொண்டிருப்போர்

web stats

வருகைகள்

  • 3,888,213 மொத்த வருகைகள்

RSS காத்தான்குடி செய்திகள்

முந்தைய பதிவுகள்

புதிய பதிவுகள் தொடர்பில் மின்னஞ்சல் அறிவித்தல்களைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்

Join 473 other followers

பிரபல பதிவுகள்