Archive for the ‘Obituary’ Category
Posted by Kattankudi Web Community on 24/06/2011
புதிய காத்தான்குடியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் சலுசலா இப்றாகிம் அவர்கள் காலமானார்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜியுன்
இவர் காத்தான்குடி காங்கேயயோடை மற்றும் பாலமுனை பிரதேசங்களில் மிக நீண்ட காலமாக கிராம உத்தியோகத்தராக கடமை புரிந்தவர்.
ஆசிரியர் அன்வர் மற்றும் சட்டத்தரணி அஸ்ஹர் ஆகியோர்களது தந்தையான இவர் இன்று மதிய வேளையில் காலமாகி உள்ளார்.
Read the rest of this entry »
Posted in Obituary | 10 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 29/05/2011
-அபூ றப்தான்-
இன்று காலை கட்டுவன்புல் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த ஓட்டமாவடி சிறாஜிய்யா அறபிக்கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மற்றும் விடுதி மேற்பார்வையாளரின் ஜனாஸாக்கள் இன்று இரவு பெருந்திரளான மக்கள் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஓட்டமாவடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலுக்கு மூன்று பேரின் ஜனாஸாக்களும் இரவு 11மணிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு தொழுகை நடாத்தப்பட்டு ஓட்டமாவடி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Read the rest of this entry »
Posted in Batticaloa Muslims, Obituary | 5 Comments »
Posted by kattankudi web site on 12/05/2011
-அபு ஜுரைப்-
பூநொச்சிமுனையின் மூத்த பிரஜையும் பூநொச்சிமுனை ஜும்ஆ பள்ளி உருவாக பாடுபட்டவரில் ஒருவருமான யஹ்யா நேற்று காலமானார்கள் இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியுன்.
82 வருட காலம் பூநொச்சிமுனையில் வாழ்ந்த இவர் பூநொச்சிமனையின் இருப்புக்கு பாடுபட்டதோடு தமிழ் முஸ்லிம் உறவையும் பேணி நடந்தவர்.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, Obituary | 6 Comments »
Posted by kattankudi web site on 09/05/2011
-அபு ஜுரைப்-
காத்தான்குடி மத்திய கல்லூரியல் கல்விப்பணி புரிந்து நேற்று மாரடைப்பால் காலமான அபுபக்கர் ஆசிரியரின் ஜனாஸா இன்று அஸர்த் தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்கத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஜனாஸாத் தொழுகைக்கு முன்னர் இரங்கல் உரை நிகழ்த்தப்பட்டது.
Read the rest of this entry »
Posted in Obituary | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 09/05/2011
நேற்று (08.05.2011 – ஞாயிற்றுக்கிழமை) இரவு மாரடைப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்த காத்தான்குடி மத்திய கல்லூரியின் கணிதப் பாட ஆசிரியர் அபூபக்கர் அவர்களது ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விபரங்கள்:
Read the rest of this entry »
Posted in Obituary | 36 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 09/05/2011
காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய கணித ஆசிரியர் அபூபக்கர் அவர்கள் நேற்றிரவு வைத்தியசாலையில் காலமானதாக அறியக்கிடைக்கிறது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்
Posted in Obituary | 17 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 03/05/2011
காத்தான்குடியின் மூத்த சமூக சேவையாளரும், முன்னாள் அதிபரும், காத்தான்குடி அனாதைகள் இல்லத்தின் முன்னாள் முகாமையாளரும், முன்னாள் குர்ஆன் மதிர்ஸா அபிவிருத்தி குழு செயலாளருமான ஏ.எல். அபுல் ஹஸன் அவர்கள் இன்று மாலை 7.00 மணியளவில் காலமானார்கள், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் மர்ஹூம்களான அலியார் ஆலிம், ஆசியா உம்மா ஆகியோரின் புதல்வரும் எட்டு பிள்ளைகளின் தந்தையுமாவார்.
Read the rest of this entry »
Posted in Obituary | 22 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 21/03/2011
- தகவல்: RTM. றியாஸ் -
நேற்று இறையடி சேர்ந்த முன்னாள் காதி நீதிபதியும் ஜாமியுல் ழாபிரீன் நம்பிக்கையாளருமான காலிதீன் அவர்களது மனைவியான ஆமினா உம்மா அவர்களது ஜனாஸா தொழுகை இன்று காலை 9:00 மணியளவில் காத்தான்குடி 05 ஜாமியுல் ழாபிரீன் ஜும்மாஹ் பள்ளிவாயலில் நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மக்பறாவில் நல்லடக்கம் இடம்பெறும்.
இவரது பிரிவால் துயருறும் உற்றார் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும் இவரின் சிறப்பான மறுமை வாழ்வுக்கு பிரார்த்திப்பதிலும் எமது இணையச் சமூகமும் இணைந்து கொள்கிறது.
Posted in Obituary | 3 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 13/03/2011
- தகவல்: எம். எம். ஏ. சாக்கிர் -
சலாம் ஹாஜியார் என அறியப்படுகின்ற M. T. அப்துல் சலாம் அவர்கள் இன்று காலமானார்கள், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
காத்தான்குடி 4, அரபிக் கலாசாலை வீதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான அறுபது வயதான இவர் கடந்த சில காலமாக சுகவீனமுற்று வீட்டிலிருந்த நிலையில் இன்று பிற்பகல் 1:00 மணியளவில் காலமானர்.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, Obituary | 26 Comments »
Posted by kattankudi web site on 12/02/2011
-அபூஜுரைப்-
பல பாடசாலைகளில் அதிபராகவும், பல சமுக சேவை நிறுவனங்களில் முன்னர் தன்னை இணைத்து பல சேவைகளைப் புரிந்தவருமான அதிபர் H.M. அலி அவர்கள் சில காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்று இரவு காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.
இவர் மில்லத் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர் M.A. ஹஸன்அலி, தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் M.A. ஹுசைன்அலி, மீராபாலிகா மகாவித்தியாலய ஆசிரியர் M.A. ஹைதர்அலி ஆகியோர் உட்பட நான்கு பிள்ளைககளின் தந்தையாவார்.
Read the rest of this entry »
Posted in Information, Kattankudi News, Obituary | 21 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 05/02/2011
காத்தான்குடி டெலிகொம் வீதி சந்தியில் பழச் சாறு (சர்பத்) கடை வைத்திருந்த அசனார் அமீர் அவர்கள் இன்று காலமானார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
மூன்று பிள்ளைகளின் தந்தையாராகிய இவருக்கு இறக்கும்போது 48 வயது. இவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜெளபர்கான் அவர்களின் மச்சானுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு மஃரிப் தொழுகையின் பின் 1ம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளி வாயலில் நல்லடக்கம் செய்யப்படும்.
Read the rest of this entry »
Posted in Obituary | 46 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 22/01/2011
-அபூ ஜுரைப்-
நேற்று இரவு மரணமான அன்வர் வித்தியாலய ஆசிரியை பரீதா அஸீஸ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (22.01.2011) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
கல்விப் பகுதியைச் சேர்ந்த பெருந்திரளானோர் நல்லடக்கத்தில் பங்கு கொண்டனர். தக்வாப் பள்ளியில் நடந்த ஜனாஸாத் தொழுகையின் போது இரங்கல் உரையும் நிகழ்த்தப்பட்து.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, Obituary | 9 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 14/01/2011
-அபூ றப்தான்-
ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் இன்று( 14.1.2011) காலை உயிரிழந்துள்ளார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஏறாவூர் முனையளவு வீதியிலுள்ள ஜௌபர் முகம்மது சுஐப் (9) எனும் சிறுவன் ஒருவன் நேற்று மாலை அவரின் வீட்டுக்குப்பக்கத்திலுள்ள சிறிய பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்த போது தவறி வீழுந்ததில் இச்சிறுவன் வெள்ளத்தில் மூழ்கி காணாமற்போயுள்ளார்.
Read the rest of this entry »
Posted in News, Obituary | 5 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 04/12/2010
நேற்றிரவு இறையடி சேர்ந்த கமால் புர்ஹியின் ஜனாஸா நல்லடக்கம் பற்றி பள்ளிவாயல்களில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் இன்று அசர்த் தொழுகையின் பின்னர் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள செயின் மௌலானா பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். Read the rest of this entry »
Posted in Obituary | 7 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 03/12/2010
அஸ்ஸலாமு அலைக்கும்,
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணியளவில் காத்தான்குடி – ஆரையம்பதி எல்லைப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அண்மையில் இடம்பெற்ற வீதி விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த அஹ்மத் சாலி கமால் புர்ஹி (வயது 30) படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது பற்றிய செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம்.
கோமா நிலைக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிக்கிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று பிற்பகல்காலமானார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். Read the rest of this entry »
Posted in Kattankudi News, Obituary | 28 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 02/12/2010
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய நூர்டீன் மசூர் வியாழக்கிழமை 2 ஆம் திகதி கொழும்பில் மாரடைப்பினால் காலமானார்.
சுகவீனம் காரணமாக புதன்கிழமை இரவு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காத நிலையில் இவர் காலமாகியுள்ளார்.
மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த இவர் எருக்கலம்பிட்டியில் தனது ஆரம்பப் படிப்பை முடித்துக்கொண்டு, யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரியாக வெளியேறினார்.
Read the rest of this entry »
Posted in Obituary | 9 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 14/11/2010
காத்தான்குடி அல் அமீன் வித்தியாலய அதிபர் எம். சீ. எம். சுபைர் அவர்கள் இன்று காலை காலமானார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அண்மைக்காலமாக சுகவீனமுற்றிருந்த இவர் சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அங்கு காலமானார்.
இவர் எமதூர் முன்னாள் தவிசாளர் காசிம் ஹாஜியார் அவர்களது மகனும் ஓய்வு பெற்ற ஆசிரியர் எம். சீ. எம். நிலாம் அவர்களது சகோதரரும் ஆவார்.
ஜனாஸா தொழுகை இன்ஷா அல்லாஹ் இன்று பிற்பகல் காத்தான்குடி 03 முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெறும்.
(தகவல்: சகோதரர் எம். எம். ஏ. றபீக்)
Posted in Obituary | 9 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 13/09/2010
காத்தான்குடி 06 டீன் வீதி ஓடாவியார் ஒழுங்கையைச் சேர்ந்த அபூசாலி முஹம்மத் பாயிஸ் (வயது 36) கடந்த ரமளான் 26 அன்று கல்முனைக்குச் சென்று கொண்டிருக்கும் போது தாளங்குடாச் சந்தியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் கோமா நிலைக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Read the rest of this entry »
Posted in Kattankudi News, Obituary | 10 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 20/08/2010
ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் அப்துல் ரசூல் இன்று மாலை சுகவீனம் காரணமாக காலமானார்.
இவர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளரானார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பொது முன்னணியின் பங்காளி கட்சிகளில் ஒன்றாக விளங்கியது.
Read the rest of this entry »
Posted in Obituary | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 25/07/2010
மிக நீண்ட காலம் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் இலிகிதராக கடமை புரிந்தவரும் சுக்ரியாஸ் நிறுவனத்தின் பங்காளருமாக இருந்த அல்ஹாஜ் முகம்மது காசீம் அவர்கள் காலமானார்கள்.
இவர் ஸாவியா மகளிர் வித்தியாலய ஆசிரியர் ஜனாப் மஹ்றுப், மீராகேணி வைத்தியசாலை வைத்தியர் உவைஸ், சார்ஜா எடிசலாட் நிறுவனத்தின் தொலைத் தொடர்புப் பொறியியலாளரான முஹம்மத் மாஹிர் மற்றும் காத்தான்குடி பிரதேச வைத்தியசாலை வைத்திய அத்தியட்சர் டாக்டர் நசூர்தீன் ஆகியோரின் மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஸாத் தொழுகையின் பின் மெத்தைப்பெரிய ஜும்ஆ பள்ளி வாயலில் நல்லடக்கம் செய்யப்படும்.
Read the rest of this entry »
Posted in Obituary | 7 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 08/07/2010
தென் கிழக்கு பல்கலைகழகத்தின் சமூகவியல் பீடத்தின் பீடாதிபதியாக மௌலவி , கலாநிதி கே . எம் .எச் காலித்தீன் நேற்று மாலை 4.00 மணியளவில் ராஜகிரியவில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் வபாதாகியுள்ளார் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். இவர் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா ஈச்சந்தீவு கிராமத்தில் 1944 ஆண்டு பிறந்தார் இவர் ஒரு இஸ்லாமிய மற்றும் பொதுத்துறை புத்திஜிவியுமாவார் இவர் தனது ஆரம்ப கல்வியை முடித்து அறபு கல்லூரி ஒன்றில் மௌலவி பட்டம் பெற்ற இவர் தனது உயர் கல்வியை இலங்கையின் மூன்று பல்கலைகழகங்களில் பெற்றுள்ளார்.
Read the rest of this entry »
Posted in Obituary | 1 Comment »
Posted by Kattankudi Web Community (KWC) on 06/07/2010
ஓய்வு பெற்ற ஆசிரியர் அல்ஹாஜ் முகம்மது ஹனிபா நேற்று மாலை காலமானார். இவர் எராவூர் செல்லும் போது ஏற்பட்ட வீதி விபத்தில் நேற்று அகால மரணமடைந்தார்.
ஜனாசா நல்லடக்கம் இன்று காலை காத்தான்குடியில் நடைபெற்றது. இவர் மர்கும் அப்துல் மஜீத் ஹாஜியர் J.P. (Ex Ward No 04 member) அவர்களின் மருமகனாவார்.
இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தெரிவிப்பதிலும், இவருக்காகப் பிரார்த்திப்பதிலும் எமது இணையச் சமூகமும் இணைந்து கொள்கிறது.
Posted in Obituary | 6 Comments »
Posted by Kattankudi Web Community (KWC) on 04/07/2010
ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்கான ஆலோசகர் மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத்(கபூரி) இன்று காலை காலமானார்.
இலங்கையின் தலைசிறந்த சன்மார்க்க அறிஞர்களில் ஒருவரான மௌலவி நியாஸ் முஹம்மத்,கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் நாயகமாகவும் சர்வமத அமைப்பின் ஸ்த்தாபகர்களில் ஒருவராகும் செயற்பட்டார்.
Read the rest of this entry »
Posted in Obituary | 17 Comments »