காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

Archive for the ‘Interview’ Category

காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை PMGG பிடிக்கவே முடியாது – அடித்துக்கூறுகிறார் நகர சபை உறுப்பினர் நூரி சலீம்

Posted by Kattankudi Web Community (KWC) on 05/09/2010

காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை ஒரு போதும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் கைப்பற்ற முடியாதென காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார். காத்தான்குடி இன்போவுக்களித்த விஷேட பேட்டியின் போதே நகர சபை உறுப்பினர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது காத்தான்குடி நகர சபையின் அதிகாரத்தை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிடிப்பதென்பது பகற்கனவாகும்.

கடந்த நகர சபைத்தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பெற்ற 3000 வாக்குகளைக் கூட இம்முறை அவாகளால் பெறமுடியாது என்றே நான் கருதுகின்றேன்.

Read the rest of this entry »

Posted in Interview, Politics | 24 Comments »

நான் உள்ளே நுழைந்தவுடன் பாதுகாப்புச் செயலாளர் எழுந்து கைகுலுக்கினார்: குமரன் பத்மநாதன்

Posted by Kattankudi Web Community (KWC) on 09/08/2010

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே.பிரகாரனினுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து  கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான கடந்த 5ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக தொலைபேசி மூலம் குமரன் பத்மநாதனை பிரத்தியேகமாக செவ்வி கண்டார்.

Read the rest of this entry »

Posted in Interview | Leave a Comment »

கலந்து வாழும்போது கரைந்து போகாமல் இருப்பதே எமது முதன்மைப் பிரச்சினை

Posted by Kattankudi Web Community (KWC) on 19/06/2010

இலங்கை முஸ்லிம் சமூகம் பெற்றுள்ள அரிதான புத்திஜீவிகளுள் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர் முக்கியமானவர். ஜாமிஆ நளீமிய்யாவின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர். மீள்பார்வையின் ஸ்தாபகர்களுள் ஒருவர். அதன் முன்னாள் பிரதம ஆசிரியர்.  கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்.

இஸ்லாமியக் கலைகளில் இவருக்கு இருக்கும் ஆழ்ந்த பரிச்சயம் அவரது தனித்திறமையாகும். தற்பொழுது அகுரணையில் இயங்கும் அல்குர்ஆன் கற்கைகளுக்கான திறந்த கல்லூரியின் இயக்குநராக கடமையாற்றுகின்றார். அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

சந்திப்பு: இன்ஸாப் ஸலாஹுதீன்

* இலங்கை முஸ்லிம்களை அல்குர்ஆனுடன் தொடர்புபடுத் துவதற்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகள்?

Read the rest of this entry »

Posted in Interview | 3 Comments »

ரணில் விக்கிரமசிங்க தலைவராக இருக்கும்வரை அக்கட்சியுடன் பேசத் தயாரில்லை

Posted by Kattankudi Web Community (KWC) on 25/04/2010

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐ.தே. முன்னணியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருக்கிறார். சமீப காலமாக தமிழ் மக்களிடையே அதிகம் பேசப்படும் நபராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் மனோகணேசன். ஐ.தே.கட்சியுடன் இணைந்து அக்கட்சி முன்னெடுத்த போராட்டங்களிலும் கலந்து கொண்டு மக்களுக்காக குரல் கொடுத்தவர் இன்று…. Read the rest of this entry »

Posted in Interview | Leave a Comment »

புத்தளம் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் மாகாணசபை உறுப்பினரும் முன்னணி வேட்பாளருமான அல்ஹாஜ் ஆப்தீன் எஹியா அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்…..

Posted by Kattankudi Web Community (KWC) on 20/03/2010

கேள்வி : 1977ம் ஆண்டுக்கு பின்னர் புத்தளம் தொகுதியில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அஸ்தமித்து போனதாக பேசப்படுகிறது இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


பதில் : உண்மைதான் கடந்த 33வருடங்களாக புத்தளம் மக்கள் அரசியல் அநாதைகளாக்கப் பட்டிருக்கிறார்கள். புத்தளம் மாவட்டத்தில் சுமார் 4லட்சத்து 80ஆயிரம் வாக்குகள் உள்ளன. அதில் 60ஆயிரம் வாக்குகளே முஸ்லிம் வாக்குகளாகும் வழமையாக 40 – 45ஆயிரம் வாக்குகள் மாத்திரமே விழுகின்றது பெரும்பான்மை கட்சிகள் இதனை பிரிக்கும் பொழுது முஸ்லிம் பிரதிநிதித்துவம் இழப்பதாக ஒரு கருத்து பேசப்படுகிறது எனினும் பொதுஜன ஐக்கிய முன்னணியில் அதிகளவு சிங்கள மக்களின் வாக்குகள் விழும்பொழுது சிறுபான்மை மக்களின் வாக்குகள் குறைவாக விழுவதும் மாறாக ஐக்கிய தேசிய முன்னணியிலோ சிறுபான்மை மக்களின் வாக்குகள் கூடுதலாகும் சிங்கள மக்களின் வாக்குகள் குறைவாகவும் விழுவதும். சிறுபான்மைகளின் பிரதிநிதித்துவம் கூடுதலாக ஐக்கிய தேசிய முன்னணியில் எங்களுக்கு கிடைப்பதற்கு காரணமாக அமைகிறது இம்முறையும் நிச்சயமாக எமது சிறுபான்மை பிரதிநிதித்துவம் ஐக்கிய தேசிய முன்னணியின் மூலம் கிடைக்கவிருக்கிறது. Read the rest of this entry »

Posted in Interview | Leave a Comment »

இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்களின் நேர்கணல்!

Posted by Kattankudi Web Community (KWC) on 15/03/2010

http://2.bp.blogspot.com/_9_3YbUfcp70/SxFjozq39kI/AAAAAAAAAdY/HapNrN6Bs_8/s1600/agarsir.jpgஇலங்கை முஸ்லிம் சமூகம் பெற்றுள்ள புத்திஜீவிகளுள் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் முக்கியமானவர். அவரது ஆளுமை இலங்கைக்கு வெளியிலும் அறிமுகமான ஒன்று. தனது கருத்துக்களை எப்போதும் தெளிவாகவும் உறுதியாகவும் முன்வைக்கும் ஷெய்க் அவர்கள், இஸ்லாத்தைக் கற்பிப்பதி லும் இஸ்லாமிய சிந்தனையை முன்வைப்பதிலும் சமூக மட்டத்தில் ஆலோசனைகள் வழங்குவதிலும் தனித்துவமான தகுதியைப் பெற்றவர்.

இஸ்லா மிய அழைப்புப் பணியில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற ஷெய்க் அகார் அவர்கள், இஸ்லாத்தின் நடுநிலை சிந்தனையைக் கடைபிடிப்ப தோடு பிரதான நீரோட்டத்தில் பணிபுரிவதையும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதையும் வலியுறுத்தி வருகிறார்.

மீள்பார்வை அவருடன் மேற்கொண்ட நேர்காணலை காலப்பொருத்தம் கருதி நன்றியுடன் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். Read the rest of this entry »

Posted in Interview | Leave a Comment »