மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பிரிவின் ஏறாவூர் கோட்ட மட்டத்தில் கல்வியில் அதிகூடிய புலமை காட்டிய மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்து பரிசுகள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
Filed under: Batticaloa Muslims, Education
05/02/2012 • 13:55 1
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பிரிவின் ஏறாவூர் கோட்ட மட்டத்தில் கல்வியில் அதிகூடிய புலமை காட்டிய மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்து பரிசுகள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
Filed under: Batticaloa Muslims, Education
13/09/2011 • 11:13 3
காத்தான்குடி 01 அந் நாசர் வித்தியாலயம் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அடுத்த வருடத்துக்கு தரம் 01ல் சேர அனுமதி கோரிய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Filed under: Education, Kattankudi News
21/08/2011 • 12:37 0
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடுமுழுவதும் நடைபெறுகின்றது. இவ்வருடம் தமிழ் சிங்களம் அகிய இரு மொழிகளிலும் 3இலட்சத்து 21ஆயிரத்தி 427 மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இதில் தமிழ் மொழி மூலம் 79ஆயிரத்தி 817மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 2 இலட்சத்து 41ஆயிரத்தி 610 மாணவர்களும் இப்பரீட்சையினை எழுதுகின்றனர்.
07/08/2011 • 09:45 4
-தகவல்:MIM.முப்ராஸ் (செயலாளர்-தாறுல்ஹைர்)-
கடந்த 20-07-2011 இல் க.பொ.த உயர் தர கணித,விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான தொடர் பரீட்சையின் 4வது பரீட்சை நடைபெற்றது.தாறுல்ஹைரானது நான்கு வருடங்களாக பல்கலைக்கழக பொறியியல்,மருத்துவ பீட மாணவர்களை கொண்டு ஒவ்வொரு வருடமும் க.பொ.த உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாராந்த தொடர் பரீட்சைகளையும்,வருட முடிவில் கல்விக்கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றது.
Filed under: Education
31/07/2011 • 18:29 1
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி மத்திய கல்லூரி, அல்அமீன் வித்தியாலயம், அன்வர் வித்தியாலய அதிபர்கள் ஆகியோர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று 20.07.2011 வெள்ளிக்கிழமை மாலை சம்மேளன கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.
Filed under: Education
30/07/2011 • 14:08 10
-தகவல்: APM. ஜலால்தீன் BBA (நூலக ஆசிரியர்)-
மட்/ஷுஹதா வித்தியாலய அதிபர் ஜனாப். எம்.எம். கலாவுதீன் (SLPS – 2II) அவர்கள் மட்/அல் அமீன் மகா வித்தியாலயத்திற்கு அதிபர் இடமாற்றத்தின் கீழ் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.மிக நீண்ட காலமாக மட்/அல் அமீன் மகா வித்தியாலயத்திற்கு நிரந்தர அதிபர் ஒருவர் நியமிக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.
Filed under: Education
29/06/2011 • 01:11 0
22/06/2011 • 11:42 3
கடந்த திங்கட்கிழமை 20.6.2011 மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்டத்திலான 65 பாடசாலைகள் கலந்து கொண்ட தமிழ் மொழித் தினப் போட்டியில் காத்தான்குடி அல் அமீன் மகா வித்தியாலயம் பத்து புள்ளிகளை பெற்று 9வது இடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரை வரைதல் போட்டியில் அல் அமீன் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி எம்.ஐ.பாத்திமா ஷப்னா முதலாமிடத்தையும், பேச்சுப்போட்டியில் இதே பாடசாலையைச்சேர்ந்த மாணவி எச்.எம்.எப்.ஷேஹா முதலாமிடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Filed under: Education
19/06/2011 • 22:49 7
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவர் விடுதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் யு.எல்.எம்.முபாரக்கின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாணவர் விடுதியில் மாணவர்கள் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர்.
Filed under: Education, Kattankudi News
19/06/2011 • 16:52 0
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மஹிந்த சிந்தனையின் 1000பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடராக, அனுபவத்தினை மூலமாகக் கொண்ட சமுகத்திற்கான கல்வி செயற்திட்டத்தின் கீழ் இடைநிலைப் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆசிரியர்களுக்கான ஒரு நாள் வலுவூட்டல் பயிற்சி செயலமர்வு 18.06.2011 சனிக்கிழமை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
Filed under: Education, Kattankudi News
17/06/2011 • 18:09 1
காத்தான்குடி மட்/மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 2010ல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் விழா 2011.06.16 வியாழக்கிழமை இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் எம்.எம்.இஸ்மாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய 32மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவித்தார்.
Filed under: Education, Kattankudi News
07/06/2011 • 15:04 4
-அபூ றப்தான் / எம்.ஏ.சீ.எம். ஜெலீஸ்-
மட்டக்களப்பு மத்தி வலய கல்வியலுவலக பிரிவிலுள்ள காத்தான்குடி கல்வி கோட்டத்தின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (5.6.2011) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன காரியாலயத்தில் நடைபெற்றது.
Filed under: Education, Kattankudi News
04/06/2011 • 19:58 1
இவ்வாண்டுக்கான பங்களாதேஷ் பல்கலைக்கழக கற்கைநெறிகளுக்கான புலமைப்பரிசில்கள் தொடர்பான அறிவித்தல் ஒன்றை World Assembly of Muslim Youth (WAMY) யின் கொழும்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
பொருத்தமான தகமையுடைய மாணவர்களுடன் இவ்விடயத்தைப் பகிர்ந்து கொள்ளவும்.
அறிவித்தல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
Filed under: Education
09/05/2011 • 12:01 3
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அதன் கல்விக் குழு என்பன காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் அவர்களை கௌரவித்துள்ளன.
சம்மேளன தலைவர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் தலைமையில் 08.05.2011 ஞாயிற்றுக்கிழமை சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மேளன உதவிச் செயலாளர் ஏ.எல்.இசெட். பஹ்மி, கல்வி அபிவிருத்தி சபையின் தலைவர் ஏ.எம். ஹிழுறு ஆகியோர் மத்திய கல்லூரியின் ஆரம்பம் அங்கு அதிபர்களாக கடமையாற்றியவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தற்போதைய கல்லூரியின் செயற்பாடுகளைப் பற்றி உரையாற்றினர்.
Filed under: Education, Kattankudi News
24/04/2011 • 22:47 0
–நமது நிருபர்-
காத்தான்குடிப் பிரதேசம் சுமார் 29 பாடசாலைகளைக் கொண்ட மட்டக்களப்பு மத்தி வலயத்தின் அதிகூடிய பாடசாலைகளைக் கொண்ட கோட்டமாகும்.
ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்கள் தலா 15 ஐ விட குறைவான பாடசாலைகளையே கொண்டுள்ளன.
Filed under: Education, Kattankudi News
01/04/2011 • 18:05 4
இன்று காத்தான்குடி கோட்டத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் 2010 ம் ஆண்டு 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்தவர்களை காத்தான்குடிபள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பாராட்டி கெளரவித்தது.
இந்த நிகழ்வு காத்தான்குடி முகிதின் பெரிய ஜும்ஆ பள்ளி வாயலில் இடம் பெற்றது.
Filed under: Education, Kattankudi News
21/10/2010 • 17:13 2
இன்று காலை 10 மணியளவில் காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மூன்றாம் தரம் முதல் கற்பித்த ஆசிரயர்களுக்கான பாராட்டு விழா ஒன்றை நடத்தினர்.
இறுதியாக நடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் ஸாவியா வித்தியாலயத்திலிருந்து 12 மாணவிகள் சித்தியடைந்திருந்தனர். அவர்களது விபரங்கள் வருமாறு:
Filed under: Education, Kattankudi News
27/06/2010 • 10:36 10
காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள அந் நாசர் வித்தியாலயம் சில காலத்துக்கு முன்னர் தனியான ஆண்கள் பாடசாலையாக மாற்றம் பெற்றது அனைவரும் அறிந்ததே. இவ்விடயம் உட்பட பாடசாலை விடயங்களில் அதிக கவனம் எடுத்து வருவது, காத்தான்குடி 1 மீரா ஜும்மாஹ் பள்ளிவாயலின் நம்பிக்கையாளர்களை அதிகளவில் கொண்ட பாடசாலை அபிவிருத்தி சங்கமாகும்.
கடந்த 23.06.2010 புதன்கிழமை காலையில் திடீரென பாடசாலைக்குள் நுழைந்த அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் தலைமையிலான குழுவொன்று, வகுப்புகளை அவதானித்ததோடு, அதில் ஒருவர் வகுப்பொன்றுக்குள் நுழைந்து வரவுப்பதிவேடு மற்றும் பாடக் குறிப்புப் புத்தகம் ஆகியவற்றைப் பார்வையிட்டதோடு, அங்கிருந்த ஆசிரியரிடம் பாடங்களின் விபரங்கள், எத்தனை பாடங்கள் நடைபெறுகின்றன போன்ற விபரங்களைக் கோரியுள்ளார்.
Filed under: Education, Kattankudi News
02/06/2010 • 11:10 0
2011ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைப்பதற்கான புதிய திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பப் பத்திரங்கள் கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் முதலாம் தரத்துக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
கடந்த காலங்களில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களில் காணப்பட்ட குளறுபடிகளை இல்லாதொழிக்கவே சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். முன்னைய காலங்களில் நேர்முகத் தேர்வுக்கு கல்வியமைச்சர் அல்லது மாகாண கல்வியமைச்சரே தலைமை வகிப்பர். இம்முறை அது மாற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக பாடசாலை அதிபர்கள், உதவி அதிபர், அனுபவமிக்க ஆசிரியர்கள் ஆகியோரினால் இத்தேர்வினை மேற்கொள்ள முடியும் என்றார்.
Read the rest of this entry »
11/05/2010 • 11:29 8
Filed under: Education, Kattankudi News
21/03/2010 • 04:50 0
நாடளாவிய ரீதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் ஏப்ரல் மாதம் 2 ஆம் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.
சுமார் 4 ஆயிரம் பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைக்குத் தோற்றிய 5 இலட்சத்து 45 ஆயிரம் பரீட்சார்த்திகளில் 3 இலட்சத்து 40 ஆயிரம் பாடசாலை பரீட்சார்த்திகளும் 2 இலட்சத்து 5 ஆயிரம் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர். பாடசாலை பரீட்சார்த்திகளில் 3 இலட்சம் பேர் முதல் தடவையாக இவ்வருடம் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
வீரகேசரி இணையம்
23/02/2010 • 14:32 5
11/02/2010 • 21:55 0
பொறுப்பாளர்
காத்தான்குடி யாஹூ குறூப்ஸ்
அஸ்ஸலாமு அலைக்கும்
காத்தான்குடி வறிய மாணவர்களுக்கான உதவிக் கொடுப்பனவுத் திட்டம்.
எமதூரில்கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு சிறு உதவிக் கொடுப்பனவு திட்டம் ஒன்றை காத்தான்குடி யாஹூ குறூப்ஸ் ஊடாக ஏற்பாடு செய்வதற்கு ஆலோசனை ஒன்றை முன் வைக்கின்றேன். ஊரிலும் மற்றும் கடல் கடந்து வாழும் எம் சகோதர்களின் உதவியுடன் இத்திட்டத்தினை மேற்கொள்ள முடியும்.
இத்திட்டம் அரசியல், மார்க்க முரண்பாடுகள், பாடசாலை மற்றும் மஹல்லா என்பவற்றைத் தாண்டி பொது நோக்கம் கொண்ட உண்மையில் வறிய சிரார்களை நோக்கமாகக் கொண்டதாக அமைய வேண்டும். ஆகக்குறைந்தது அவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், கொப்பிகள் மற்றும் தனியார் வகுப்புக்களுக்கு வழங்கும் கட்டணங்களை ஓரளவுக்காவது பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கவேண்டும்.
இத்திட்டம் பற்றிய கருத்துக்களையும் கொடுப்பனவுகள் மாதாந்தம், காலாண்டு அல்லது வருடாந்தம் எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளையும் யாஹூ குறூப்ஸ் பொறுப்பாளர் மற்றும் அங்கத்தவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.
நன்றி
அன்புடன்
எம். முகம்மட் ஜலீஸ் -UK
Filed under: Education
அண்மைய கருத்துகள்