எனது உம்மா கதை சொல்வதில் அருமையானவள். நான் சாப்பிட இயலாது என அடம்பிடிக்கும் போது ஒரு கதை சொல்லுவார். எனக்கான சாப்பாடு முடியும் வரையிலும் அக்கதையை நீட்டி, மடக்கி, ருசிச்சிச் சொல்லுவார். Read the rest of this entry »
Filed under: சிறுகதை
15/02/2012 • 15:01 1
எனது உம்மா கதை சொல்வதில் அருமையானவள். நான் சாப்பிட இயலாது என அடம்பிடிக்கும் போது ஒரு கதை சொல்லுவார். எனக்கான சாப்பாடு முடியும் வரையிலும் அக்கதையை நீட்டி, மடக்கி, ருசிச்சிச் சொல்லுவார். Read the rest of this entry »
Filed under: சிறுகதை
22/11/2011 • 18:18 0

காத்தநகர் முகைதீன்சாலியின் வாழ்தல் மீதான வன்முறைகள் சிறுகதைத் தொகுப்பிலிருந்து மற்றுமொரு சிறுகதை இன்போ வாசகர்களுக்காக.
‘இன்னைக்கி ஆட்கள வரச்சொல்லியிருக்கன் பைரூஸா. இந்த வேப்ப மரத்த தறிச்சாத்தான் நம்ம வீடு வெளியால தெரியும், வீதியில இருந்து பார்த்தா காடு மாதிரி தெரியுது. இப்ப எந்த வீட்ல இப்பிடி மரமெல்லாம் வளர்க்கிறாங்க வளகு நிறைய சருகெல்லாம் கொட்டி அசிங்கமா கிடக்குது’
Filed under: சிறுகதை
16/11/2011 • 20:13 4
காத்தநகர் முகைதீன்சாலியின் வாழ்தல்மீதான வன்முறைகள் சிறுகதைத்தொகுப்பிலிருந்து மற்றுமொரு சிறுகதை இன்போ வாசகர்களுக்காக….
‘இந்தாங்க சம்மந்தி முதல்ல வாயில போடுங்க மத்தத மறுகா கதைப்பம்’
தேசிக்காயும் சாம்பலும் சேர்த்து தேங்காய்ச் சும்பினால் தேய்த்துக் கழுவிய அரசிலை வட்டாவை மாப்புள்ளட உம்மா மரியம்பு முன்னால கொண்டு வந்து வெக்கிறா செய்னம்பு நாச்சி.
Filed under: சிறுகதை
22/10/2011 • 13:28 1
காத்தநகர் முகைதீன்சாலி எழுதிய வாழ்தல் மீதான வன்முறைகள் சிறுகதைத் தொகுப்பிலிருந்து மற்றுமொரு சிறுகதை இன்போ வாசகர்களுக்காக
பால் நிலவின் ஒளிக்கீற்றுகள் இருளை விரட்டிக்கொண்டிருந்தன. ஊரெங்கணும் ஒரே நிசப்தம். ஆங்காங்கே நாய்களின் ஊளைச்சத்தம் அமைதியை குலைத்துக் கொண்டிருந்தது.
ஊரே உறங்கிக்கொண்டிருக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ‘றிழ்வான்’ மட்டும் விழித்துக் கொண்டிருந்தான்.
Filed under: சிறுகதை
06/10/2011 • 19:40 2
காத்தநகர் முகைதீன்சாலி எழுதிய ‘வாழ்தல்மீதான வன்முறைகள் சிறுகதைத் தொகுப்பிலிருந்து மற்றுமொரு சிறுகதை சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு…
மழை சோவெனப் பெய்துகொண்டிருக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் மனைவியுடன் வெளியே எங்கேனும் போய் வருவது வழமை. பழக்க தோசத்தில் வெளியில் செல்வதற்காக பரீதா அலங்காரம் செய்த போது மழை திடீரெனக் கொட்டத் துவங்கிற்று. ‘இந்த மழைக்கு நேரம் காலம் தெரியாது இன்டெக்கிதானா பெய்யணும்’ மழையை பார்த்து அவள் சபித்ததும் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது.
Filed under: சிறுகதை
30/09/2011 • 21:11 1
‘எவ்வளவு நேரமாடா இந்த பாத்திரத்தையே தேச்சிட்டு இருப்ப’ என் எஜமானியின் குரல் கேட்டு நிமிர்கிறேன். பத்திரகாளி போன்று காணப்பட்டாள் அவள். கையில் தடி வேறு. அடி விழுவது நிச்சயம். மனதை கட்டுப்படுத்தி அடக்கமாக தேய்க்கிறேன். முதுகில் விழுந்தது அடி. தாங்கிக் கொள்கிறேன். கண்கள் தாங்குமா என் கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீர் கண்ணங்கள் வழியே வழிந்து கழிவு நீருடன் சங்கமிக்கிறது. இந்த வீட்டுக்கு வந்த நாள் முதல் இப்படித்தான் ஏச்சும்,அடியும்,சூடும். அடிபட்டு சூடுபட்டு என் உடம்பே சுரணை கெட்டுப்போனது.
Filed under: சிறுகதை
25/08/2011 • 03:15 4
-காத்தநகர் முகைதீன் சாலி
ஆடுமாடுகள் நுழைகின்ற அளவு இடைவெளியுடைய முட்கம்பி வேலியினால் காவலிடப்பட்ட முகாம். ஆங்காங்கே ஆமைகள் குந்தியிருப்பது போல கிழிஞ்சல் நிறைந்த, காற்றடித்தால் விழுந்திடும் நிலையில் குடிசைகள். முகாமின் மத்தியில் ஆண்பெண் வேறுபாடுன்றி ஒன்றாக சங்கமிக்கும் மறைக்கும் வேலியற்ற திறந்தவெளிக் கிணறு. கிணற்றைச் சுற்றி இதுவரை காலமும் குளித்து, கழுவி, அழுக்கு நீக்கிய அசுத்தநீர்தேங்கி நுளம்புகளினதும், நோய்க்காவிகளினதும் குடியிருப்பாக…..
Filed under: சிறுகதை
09/08/2011 • 17:37 4
அண்மையில் காத்தான்குடியில் வெளியிடப்பட்ட, காத்தநகர் முகைதீன்சாலி எழதிய ‘வாழ்தல் மீதான வன்முறைகள்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ‘பேரீத்தம் பழம்’ எனும் சிறுகதை இன்போ வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றப்படுகின்றது.
ரமழான் மாதம் வந்துவிட்டால் எல்லோர் மனதிலும் ஒருவித மகிழ்ச்சி. அதிலும் ஏழைகளுக்கு என்றுமில்லாத சந்தோசம். ஏனெனில் இந்த ரமழான் மாதம்தான் அவர்கள் உத்தியோகபூர்வமாக பசித்திருக்கக்கூடிய மாதம். இருந்தாலும் இன்று அவ்வூரில் இரட்டிப்பு சந்தோசம்.
Filed under: சிறுகதை
03/08/2011 • 01:34 9
அண்மையில் காத்தான்குடியில் வெளியிடப்பட்ட, காத்தநகர் முகைதீன்சாலி எழதிய ‘வாழ்தல் மீதான வன்முறைகள்’ சிறுகதைத்தொகுப்பில் இடம்பெற்ற ‘வாழ்தல் மீதான வன்முறைகள்’ எனும் சிறுகதை சுஹதாக்கள் தினத்தை ஒட்டி இன்போ வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றப்படுகின்றது.
Filed under: சிறுகதை
08/04/2011 • 13:28 1
மழை பெய்து வீதியில் தேங்கியிருந்த வெள்ள நீரில் மூழ்கி சந்தோசமாய் நீராடி, தனக்கு எந்த கவலையோ பிரச்சினையோ இல்லையென்று சொல்வதுபோல சிறகை அடித்து நீரை தெளித்து பறந்து சென்று கிளை பரப்பி செழித்து நிற்கும் மரத்திலிருந்து சிறகுலர்த்தும் பறவையை பார்க்க பொறாமையாய் இருந்தது நசீருக்கு.
‘எவ்வளவு சுதந்திரம், எவ்வளவு நிம்மதி, எதைப்பற்றியும் எந்தக் கவலையுமில்லாமல் என்ன அழகாக நிம்மதியாக பறந்து திரிகிறது. நான் இந்த பறவையாய் பிறந்திருக்கக்கூடாதா?’
Filed under: சிறுகதை
13/02/2011 • 20:31 0
கூட்டம் ஆரம்பமானது. அதிகாரி பேச ஆரம்பித்தார்.
“எந்த வகையிலும் நோய் காவிகளான நுளம்புகளையும் அதன் வாழ்விடங்களையும் அழிக்க முடியவில்லை. டெங்கு, யானைக்கால், மலேரியா போன்ற பயங்கர நோய்களை கடத்துகின்ற நோய் காவிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நமது திணைக்களம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கிறது. ஊரில் ஆங்காங்கே காணப்படுகின்ற பழைய டயர்கள், உக்கிய மரக்குற்றிகள், வெற்றுக்குரும்பைகள், சிரட்டைகள் என்பவற்றை அழிப்பதற்கு எவ்வளவு முயற்சியை மேற்கொண்டாலும் மக்கள் அதை கவணத்திலெடுப்பதாயில்லை.
Filed under: சிறுகதை
22/01/2011 • 22:42 1
-காத்தநகர் முகைதீன்சாலி-
ஏன், எப்படி, என்று எதையுமே அவன் யோசிப்ப தில்லை. இந்த உலகம், உலகத்தில் நடக்கும் ஆயிரமாயிரம் விந்தைகள் எவை பற்றியுமே அவன் அலட்டிக் கொள்வதில்லை. சாதாரன மனிதனுக்கு இருக்க வேண்டிய அன்பு, பாசம், இன்பம், துன்பம் போன்ற எந்த உணர்வுகளுமே அவனைப் பாதிப்பதில்லை. மொத்தத்தில் அவன் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு மிருகத்தனங்களை தன்னில் வளரவிட்டு அரக்கத்தனமாய் வாழும் ஒரு பிறவி. அவனுக்கு தேவைப் படுவதெல்லாம் பணம், போதைப்பொருள்.
Filed under: சிறுகதை
15/12/2010 • 18:18 7
-காத்தான்குடி நசீலா-
ஹமீது நாநா இந்தமுறையும் ஹஜ்ஜுக்குப் போறாராம். ஹமீது நாநாவின் உறவுமுறை தெரிந்தவர்களிடையே பேசப்பட்ட சாதாரண விடயம் அது. அருந்தி வருந்தி கஷ்டப்பட்டு உழைத்து காசு சேர்த்து, பயணம் போக வெளிக்கிட்டால் அந்தப் பயணத்திற்குரிய பெறுமதியோடு பேச்சும் இருந்திருக்கும்.
ஆனால் ஹமீது நாநாவுக்கு ஏதோ அடுத்த ஊருக்கு போய்வருவது போலத்தான். அவரிடம் இருக்கும் சொத்திற்கும், சுகத்திற்கும் வருடத்திற்கு ஒரு தரம் ஹஜ்ஜுக்குப் போய்வரலாம். கஷ்டப்பட்டவர்கிட்டத்தான் காசு பணம் சேர்ரதுக்கும் கஷ்டப்படும். ஹமீது நாநா போன்றவங்க ஆடி ஓடியெல்லாம் உழைக்கத் தேவையில்லை. காலையில் எழும்பி உக்கார்ந்தா பல்துலக்க முதல் கையில இருக்கிற ஹேன் போன் மூலமாகவே ஆயிரக்கணக்கில் யாவாரம் பார்த்திடுவாங்க. அது ஹலாலா ஹராமா என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. அது அவங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் தான் வெளிச்சம். பணம் பணத்தோடுதான் சேரனும்.
Filed under: சிறுகதை
27/11/2010 • 19:56 1
கலர் கலரான அலங்காரங்கலோடு கலாசார மண்டபம் களைகட்டி இருக்கிறது. மேடை நிறைந்த ஊர்ப்பிரமுகர்கள் முன்னிலையில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள். கல்வித்துறையில் சாதனை படைத்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்னும் சற்று நேரத்தில் அரங்கேற இருக்கிறது.
சாதனையாளர்கள் பிறப்பதில்லை மாறாக வாழும் சமூக சுழலும் சுற்றியிருக்கும் வளங்களும் சாதாரணமானவர்களை கூட சில நேரம் சாதனையாளராக்கிவிடுகின்றன. ஆனால் அதே சமூக சூழல் பாதகமாக அமையும் போது சாதனையாளராக வேண்டிய பலரை சாதாரணமானவர்களாக்கியும் விடுகிறது. எது சாதனை என்பது காலத்துக்கு காலம் ஏன் இடத்துக்கு இடமும் வேறுபடுகிறது.
Filed under: சிறுகதை
01/11/2010 • 10:54 4
(வாசகர் ஆக்கமாக சகோதரர் அபூ ஹம்ஸா அனுப்பி வைத்திருந்த சிறுகதை நன்றியுடன் பிரசுரிக்கப்படுகின்றது. கதையில் வரும் நபர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இவ்வாக்கத்தினை அனுமதியின்றி மீள்பிரசுரம் செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது)
-அபூ ஹம்ஸா -
“அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு அண்டை வீட்டார் பற்றி ஜப்ரீல் (அலை) என்னிடம் வலியுறுத்திக்கொண்டே இருந்தனர். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரலி), இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்கள். புஹாரி, முஸ்லிம்.”
Filed under: சிறுகதை
30/10/2010 • 16:06 6
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக்குழு ஏற்பாடு செய்த ‘வியர்வையின் ஓவியம்’ உழைக்கும் மக்கள் கலைவிழா 2010 இனை முன்னிட்டு தேசிய ரீதியில் இடம்பெற்ற சிறுகதைப் போட்டியில் ‘காத்தநகர் முகைதீன் சாலி’ எழுதிய ‘வெள்ளத்தம்பி வெளிநாடு போறார்‘ சிறுகதை முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. இதற்கான பரிசளிப்பும் விருது வழங்கும் நிகழ்வும் 14.10.2010 அன்று கொழும்பு எல்பின்ஸ்டன் அரங்கில் இடம்பெற்றது. எமது வாசகர்களுக்காக அந்த சிறுகதை இங்கே பிரசுரிக்கப்படுகின்றது.
குடிசையின் முன்னால் கிளைபரப்பி அடர்ந்து கிடக்கும் கறுத்தக் கொழும்பான் மாமரம் மஞ்சள் நிறத்தில் மாம்பூக்களை பிரசவித்து குழந்தைப்பிள்ளை சிரிப்பது போல் பளிச்சென்று கிடக்கிறது. பரண் மேல் தங்கியிருந்த பாணிச்சாவல் படபடவென்று இறக்கையடித்துக் கூவிற்று. கோழிச்சாவலின் காட்டுக் கத்தலில் கண் விழிக்கிறாள் சுபைதா. பக்கத்தில் படுத்துக்கிடக்கும் அஸ்லத்தை தட்டி எழுப்புகிறாள்.
“டேய் அஸ்லம் எழும்புடா மன விடியப்போகுது. வாங்கு சென்னதும் கேக்காம இவளவு நேத்தக்கி படுத்துக்கிடக்கம். போய் டக்கெண்டு தொழுதுட்டு வா நானும் தொழுதுதிட்டு எடுக்கன். கடலுக்குப் போன வாப்பாவையும் இன்னும் காணல்ல மூணு மணிக்கெல்லாம் வந்திருவாரு இவளவு நேத்தக்கி என்ன செய்யிறாரோ தெரியா பயமாவும் கிடக்கு அல்லாதான் காப்பாத்தணும்.”
Filed under: சிறுகதை
22/10/2010 • 01:01 5


-எம்.ஜே.அன்வர் அலி-
அந்திமயங்கிய மாலை வேளை வானுயர் மரங்களின் சோலைகளின் மத்தியில் ஒரு சிறிய வறண்டகுளத்திலே மீனும் தவளையும் வாழ்ந்து வந்தன. அதன் அருகிலொரு மரப்பொந்தில் நீண்ட நெடிய கரு நாகமொன்றும் மறைந்திருந்தது.
நீண்ட நாட்களாய் மழை இல்லாததால் வறட்சி அதிகரித்து குளம் வற்றிப்போகும் நிலை ஏற்பட்டது. குளம் வற்றிப்போனால் உயிர் வாழமுடியாமல் இறந்துபோய்விடுவோம் என்ற அச்சத்தால் மீனும் தவளையும் பாம்பும் இறைவனிடத்தில் மழைவேண்டி பிராத்தித்தன.
Filed under: சிறுகதை
17/10/2010 • 13:18 9
(வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட சிறுகதை ஒன்று முதல்முறையாக எமது இணையத்தளத்தில் பிரசுரமாகிறது. கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. அனுமதியற்ற மீள்பிரசுரம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது)
-அபூ ஹம்ஸா-
1.
தொழிலை முடித்து வீடு வந்த களைப்பில் சற்று நேரம் சாய்வு நாட்காலியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காதர் நானாவின் கண்கள் வீட்டுக்கூரையை மேய்ந்து கொண்டிருக்க அவரது மனது ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியது. கடந்த மாரியில் தன் குடும்பம் பட்ட கஷ்டங்கள் ஒவ்வொன்றாய் கண்முன் தோன்றின. ஒவ்வொறு மாரிக்கும் ஒரிரு கண்களால் அழும் இந்த கூரை கடந்த மாரியில் பல கண்களால் அழுது இவர்களை படாத பாடுபடுத்தி விட்டது. இந்த வருட மாரி வருவதற்கு முதல் எப்பாடு பட்டாவது கூரையை புனர்நிர்மாணம் செய்வதுதான் இந்த ஆண்டு வரவு செல்வு திட்டத்தின் பிரதான பணியாக இருந்தது அவருக்கு.
Filed under: சிறுகதை
அண்மைய கருத்துகள்