‘மனிதன் சிந்திக்கக்கூடியவன்’ இது நியதி. ஆனால் எல்லோரும் சிந்திக்கின்றனரா? இது விடை காண முடியாத வினா!இறைப்படைப்புகள் ஒவ்வொன்றிலிருந்தும் பாடம் பெறக்கூடியவனே. சிந்தனைவாதி! இந்த அடிப்படையில் எல்லாம் வல்ல அல்லாஹ், மனித இனத்தவராகிய நம்மைப் பார்த்து சில வினாக்கள் தொடுக்கின்றான்.
Archive for the ‘கட்டுரைகள்’ Category
மனிதர்கள் சிந்திக்கின்றனரா?
Posted by Kattankudi Web Community on 31/05/2012
Posted in கட்டுரைகள் | Leave a Comment »
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உண்மை கண்டறியும் குழு உருவாக்கப்பட வேண்டும் என்ற தற்போதைய கோரிக்கை! கையில் கிடைத்த பறவையை பறக்க விட்டு காட்டில் தேடும் முயற்சி !
Posted by Kattankudi Web Community (KWC) on 31/05/2012
இலங்கையில் போருக்குப் பின்னர் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை அரசிடம் கையளித்து ஆறுமாதங்கள் ஆகியுள்ள நிலையில் அதனை அமுல்படுத்துகின்ற வகையில் ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகளின் கருத்துக்களை அரசு கேட்டுள்ளது. அதனடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தனது கருத்துக்களை அரசிடம் முன்வைத்துள்ளது.
Posted in கட்டுரைகள் | 1 Comment »
முஸ்லிம் காங்கிரசும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலும்- ஓர் கண்ணோட்டம்
Posted by Kattankudi Web Community on 28/05/2012
இந்த நிமிடம் கட்சிக்குள் இவர்களுக்கிடையே உள்ள புரிந்துணர்வுகள்,அபிலாஷைகள் என்ன என்பது எனக்கு சரியாகத் தெரியாது என்றாலும், கேள்வி மற்றும் ஊடகம் மூலம் நான் உள்வாங்கிக் கொண்ட விடயங்களை வைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசில் உள்ள அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கலாம் என்பதை ஒரு கண்ணோட்டமிடலாம் என நினைக்கிறேன். Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 6 Comments »
புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யார் மறுக்கமுடியும்?
Posted by Kattankudi Web Community on 26/05/2012
நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.
Posted in கட்டுரைகள் | 1 Comment »
கிழக்கு முதலமைச்சர் காய்ச்சலும் தொடரப் போகும் தலைவலியும்!
Posted by Kattankudi Web Community (KWC) on 25/05/2012
இலங்கையை ஒரு ஜனநாயக நாடு என்பார்கள்! ஜனநாயகம் என்பதை மிக இலகுவாக நாம் இப்படி விளங்கிக் கொள்ளலாம். அதாவது, பெரும்பான்மை விருப்புகளுக்கு மதிப்பளித்தல் – ஜனநாயகமாகும். இந்த நிலையிலிருந்து பார்த்தால், இப்போது பரவலாகப் பேசப்பட்டு வரும் கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் பதவி யாருக்கு என்பது ஒரு சிக்கலான விவகாரமேயல்ல!
தேர்தல் என்பதே பொதுமக்களின் பெரும்பான்மை விருப்பினை அடையாளம் காண்பதற்கானதொரு முறைமையாகும். அப்படியாயின், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய பிரதிநிதிகளைப் பெறும் கட்சி முதலமைச்சர் பதவியினைப் பெற்றுக் கொள்ளும். Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | Leave a Comment »
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் : கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை!
Posted by Kattankudi Web Community (KWC) on 24/05/2012
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் மீது பௌத்த பேரினவாதக் கும்பல் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் பூர்த்தியாகிவிட்டபோதிலும் அப் பிரச்சினைக்கு இது வரை எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை என்பது முஸ்லிம் சமூகத்தை பெரும் ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது.
Posted in கட்டுரைகள், Sri Lankan Muslims | 2 Comments »
அழிந்து போகுமா முஸ்லிம்களின் வியாபாரம் (தொடர்-1)
Posted by Kattankudi Web Community (KWC) on 24/05/2012
மக்களின் அன்றாட வாழ்வில் வியாபாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. வியாபாரம்முஸ்லிம்களின் பரம்பரை தொழிலாகவும் இருந்து வருகிறது. வியாபாரத்தின் மூலம் கொடிகட்டி பரந்தவர்களும் உண்டு. நடை இழந்து முடமாகிப் போனவர்களும் உண்டு.
இலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் வியாபார ரீதியாக வருகைத் தந்தவர்கள். Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | Leave a Comment »
பொன்சேகாவை விடுவிக்க அரசாங்கம் அவசரப்பட்டது ஏன்?.
Posted by Kattankudi Web Community (KWC) on 22/05/2012
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுமார் 27 மாதகால சிறைவாழ்வில் இருந்து மீண்டு வெளியே வந்துள்ளார்.
இவரை விடுவிப்பதற்கு பிடிவாதமாக மறுத்து வந்த அரசாங்கம் இப்போது, அவரை விடுவிப்பதில் அதீத அக்கறை காட்டியது பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.
Posted in கட்டுரைகள் | Leave a Comment »
சூடு பறக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்
Posted by Kattankudi Web Community (KWC) on 21/05/2012
அண்மையில் படித்த கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. மயானமொன்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட சில துறைசார்ந்தோரின் கல்லறைகளில் ஒரு வரிக் கவிதை பொறிக்கும் போட்டி நடத்தப்பட்டது. அதில் அரசியல்வாதி ஒருவனின் கல்லறையில் பொறிக்கப்பட்ட வாசகத்துக்கே பரிசு கிடைத்தது.
“தயவு செய்து கைதட்டி விடாதீர்கள் எழுந்துவிடப் போகிறான்”
Posted in கட்டுரைகள் | 2 Comments »
கிழக்கு மாகாண சபை தேர்தலும் தமிழ் பேசும் தமிழ்-முஸ்லிம் மக்களும்
Posted by Kattankudi Web Community (KWC) on 20/05/2012
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெகு விரைவில் அதற்கான அறிவிப்பு உத்தியோக பூர்வமாக விடுக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்படலாம் என்னும் செய்தி செவி வழியாகப் பரவியதுமே அரசியல் கட் சிகள் பலவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்து விட்டன. இப்போது அது ஓரளவு உறுதியாகிவிட்டதால் ஏற்பாடுகள், பேச்சுவார்த்தைகள், கூட்டு முயற்சிகள் என்று தேர்தல் சூடு பிடித்துள்ளதைக் காணமுடிகிறது. Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | Leave a Comment »
மே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும் – மீள்பிரசுரம்
Posted by Kattankudi Web Community (KWC) on 18/05/2012
-எஸ்.எஸ்.எம்.பஷீர்-
“நமது தாய் நாடானதும் நமது மூதாதயர்கள் 2600 ஆன்டுகள் வாழ்ந்ததுமான இலங்கை குடியரசின் குடிமக்களாய் இருப்பதிலும் நாம் பெருமை அடைகிறோம் . இலங்கையின் தேசிய தனித்துவத்தின் பிரிக்கமுடியாத ஒற்றுமையின் ஒரு அங்கம் நாம். ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்னவென்றால் இலங்கை குடியரசின் ஒற்றுமைக்கும் , வலிமைக்கும், இறைமைக்கும், அச்சமின்றி சுயநலமின்றி உழைத்தலாகும்”
-கலாநிதி பதியுதின் மஹ்முத்-
Posted in கட்டுரைகள் | Leave a Comment »
ACJU – முரண்பாடும் நிலைப்பாடும்!
Posted by Kattankudi Web Community (KWC) on 17/05/2012
அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபை என்பது பொதுவாக இலங்கை வாழ் மக்களின் மார்க்க ரீதியான விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்கும் உலமாக்களின் (அறிஞர்களின்) சபை எனும் நிலைப்பாடு மாறி, சமூகத்தை அரசியல் ரீதியாகவும் பிரதிநிதித்துவம் செய்யும், சமூக விடயங்களுக்கு அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கும் ஒரு அமைப்பாக மாற எத்தனிப்பது தொடர்பான ஆச்சரியத்தை கடந்த கால எமது பதிவுகளிலும் குறிப்பிட்டிருந்தோம். Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 8 Comments »
(அ)(சு)மங்கல தேரரும் (அ)நீதி அமைச்சரும்
Posted by Kattankudi Web Community (KWC) on 16/05/2012
சமகாலத்தில் இங்கிலாந்தில் நாடுகடத்தல் வழக்கொன்றில் சிக்கி தவிக்கும் இஸ்லாமிய பயங்கரவாதி(?)யாக அறியப்பட்டவர் அபூ கட்டாடா என்ற ஜோர்தானியர். ஜோர்தானிய அரசாங்கத்தால் தேடப்படுபவர், 30 வருங்களுக்கு மேலாக இங்கிலாந்தில் வசிப்பவர், அதுவும் இந்நாட்டு வரியிறுப்பாளர் பணத்தில். Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 1 Comment »
ரிஸ்வி முப்தி அவர்களின் தம்புள்ளை பள்ளி விவகார விட்டுக்கொடுத்தலுக்கான அழைப்பு வன்முறைக்கு அடிபணிவதாகவும் சமூகத்தை விற்பதாகவும் அமைந்துள்ளது
Posted by Kattankudi Web Community (KWC) on 15/05/2012
- By Latheef Farook / தமிழாக்கம் காத்தான்குடி இன்போ -
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் M.I.M ரிஸ்வி முப்தி அவர்கள் கடந்த 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியாத் பள்ளிவாயல் தொடர்பாக ஆற்றிய உரை இலங்கை முஸ்லிம் சமூக மட்டங்களில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ஒரு கணம் நான் சகோதரர் ரிஸ்வி முப்தி வன்முறை மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரரின் பள்ளி தகர்ப்பு நோக்கத்தை நிறைவேற்றும் பிரச்சாரத்துக்காக ரியாத் நகர் அனுப்பப்பட்டாரோ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
Posted in கட்டுரைகள், Sri Lankan Muslims | 17 Comments »
A.R ரஹ்மானுக்கு சவுதி அரபியாவிலுருந்து……..
Posted by Kattankudi Web Community (KWC) on 15/05/2012
- குளோபல் இஸ்லாம் பேஸ்புக் பக்கம் -
சவுதி அரேபியாவுக்கு சென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜித்தாவில் உற்சாக வரவேற்பு, ‘புனித பூமியில் பிறந்தநாள் கொண்டாடிய இசைமேதை’ என்றெல்லாம் சில தினங்களுக்கு முன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அதுபற்றி தெளிவுபடுத்த விரும்பியதன் விளைவே இந்த கட்டுரை.
Posted in கட்டுரைகள் | 10 Comments »
காலத்தின் தேவை கருதி அரசியலில் ஒன்று படுவோம்! ஹகீம், அதாவுல்லாஹ் ரிஷாத் ஆகியோருக்கு ஓர் அழைப்பு!!
Posted by Kattankudi Web Community (KWC) on 14/05/2012
- அஷ் ஷேய்க் கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ் நளீமி -
ரஊப் ஹகீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ், ரிஷாத் பதி தலைமையிலான மக்கள் காங்கிரஸ் மூன்று அணியினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மாபெரும் விருட்சத்தின் கிளைகளாகவே கருதப் பாடல் வேண்டும், கடந்த கால கசப்புணர்வுகளை தொடர்ந்தும் கௌரவப் பிரச்சினைகளாக முன்னெடுத்துச் செல்லாது காலத்தின் தேவை கருதி தேசிய அரசியலில் தனித்தும் சேர்ந்தும் காய் நகர்த்துகின்ற ஒரு ஒழுங்குக்கு வருவது அவசரத் தேவையாக உள்ளது.
Posted in கட்டுரைகள், Politics | 5 Comments »
கடனால் ஏற்படும் இன்னல்கள்
Posted by Kattankudi Web Community on 13/05/2012
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும். அல்குர்ஆன் 2:282
Posted in கட்டுரைகள் | Leave a Comment »
இதுவல்ல பௌத்தம் சொல்லும் புனிதத்தன்மை
Posted by Kattankudi Web Community (KWC) on 12/05/2012
புத்தரின் வாரிசுகள் என்று கூறிக் கொள்ளும் பிக்குகள் குழுவினால் அண்மையில் தம்புள்ளையில் முஸ்லிம் பள்ளியொன்று சேதமாக்கப்பட்டும் இந்துக் கோவிலொன்று பலாத்காரமாக அகற்றப்படும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Posted in கட்டுரைகள் | 1 Comment »
பொறுமை எதுவரை?
Posted by Kattankudi Web Community (KWC) on 10/05/2012
இலங்கை முஸ்லிம்களுக்கு இன்றைய தேதியில் வழங்கப்படும் ஒரே அறிவுரை பொறுமை! தம்புல்லையில் நடைபெற்றது வெளிப்படையான இனவாதம் என்பது உலகறியும், இலங்கையின் நீதியமைச்சர் ஒரு இஸ்லாமியர் என்பதையும் உலகறியும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர் இருப்பதால் தான் நீதிக்குத் தடையா எனும் கேள்வியெழுவதும் அனைவரும் அறிந்த விடயம். பெளத்த மதத்துறவிகள் இலங்கை நாட்டின் ஜனநாயக சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்களா எனும் கேள்வி ஒவ்வொரு இலங்கையர் மனதிலும் எழுந்திருப்பதும் அனைவருக்கும் தெரியும், ஆனாலும் பொறுமை! யைக் கடைப்பிடியுங்கள். Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | 2 Comments »
சிகரம் கிராம மக்களின் சோகக்கதை
Posted by Kattankudi Web Community (KWC) on 09/05/2012
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகரம் கிராமத்தில் மக்கள் மீள் குடியேறி எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும் தமக்கு நிரந்தர வீடுகள் இது வரை அமைத்து தரப்படவில்லையென அக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Posted in கட்டுரைகள் | Leave a Comment »
சுக வாழ்வும் சுகாதாரக் கல்வியும்
Posted by Kattankudi Web Community (KWC) on 08/05/2012
சுக வாழ்வு என்பது நாம் எல்லோரும் சொந்தமாய் அனுபவிக்க வேண்டிய சொத்தாகும். இது எமக்குப் பிறவியிலேயே கிடைக்க் கூடிய பரிசாகும். எனவே நாம் பிறக்கும்போதே, நம்முடன் கூடவே நமது உரிமையாக சுக வாழ்வும் கலந்தே பிறந்து விடுகின்றது. அதிலும் விஷேடமாக இலங்கையர்களாகிய நாம் இரட்டிப்பு மகிழ்ச்சியடைய வேண்டும் ஏனென்றால் நமது நாடு நமக்குப் பல இலவச சுகாதார சேவைகளை வழங்குகின்றது. Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | Leave a Comment »
ஹற்றனில் ஆயிரக்கணக்கான லீற்றர் பாலை தெருவில் ஊற்றி ஆர்ப்பாட்டம்!
Posted by Kattankudi Web Community (KWC) on 07/05/2012
வீதியிலும் ஆற்றிலும் வழிந்தோடியது பால் மட்டுமல்ல பகுத்தறிவும் மிருக வதையும்தான்.
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் மிக அத்தியாவசியமான ஈடு இணையற்ற நிறையுணவு. பல்வேறு காரணங்களால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்றீடாக உடனடியாகக் கை கொடுப்பது பசும்பால்தான். Read the rest of this entry »
Posted in கட்டுரைகள் | Leave a Comment »
புனித பூமிக்கு ‘புனிதம்’ எங்கிருந்து வருகிறது?
Posted by Kattankudi Web Community on 04/05/2012
புனித பூமி, புனிதமானது. ஒரு மதத்தின் கௌரவங்களில் ஒன்றாக அது திகழ்கிறது. அதனைப் பாதுகாப்பதும் அதன் மரபுரிமையை கௌரவிப்பதும் அம்மத்தை சேர்ந்தவர்களது மட்டுமல்ல அனைத்து மக்களதும் கடப்பாடாகும். இந்த விடயத்தில் இஸ்லாத்தை மார்க்கமாகக் கொண்ட எமக்கு புரிந்துணர்வு இருக்கிறது. காரணம் இஸ்லாம் மார்க்கமும் தனக்குரிய புனித பூமிகளை பிரகடனம் செய்திருக்கிறது. அது பிரகடனம் செய்திருக்கும் புனித பூமிகளைப் பாதுகாப்பது உலக முஸ்லிம்களது கடமையாகும்.
Posted in கட்டுரைகள் | Leave a Comment »


















