ஹலாலுக்காக அறவிட்ட கட்டணம் மீள செலுத்தப்படல் வேண்டும்: பொது பல சேனா
Posted by Kattankudi Web Community (KWC) on 24/02/2013
ஹலால் சான்றிதழ் உள்ள பொருட்கள் ஹலால் சான்றிதழ் அற்ற பொருட்கள் என பிரிப்பதால் மட்டும் ஹலால் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க முடியாது என பொது பல சேனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாவது,
ஹலால் சான்றிதழ் தொடர்பில் இன்னல்களுக்குள்ளான இந்நாட்டின் அனைத்து வியாபாரிகள் தொடர்பிலும் உலமா சபை பொறுப்பு கூறவேண்டும். குறித்த சான்றிதழுக்காக அறவிடப்பட்ட கட்டணங்கள் அனைத்தும் வியாபாரிகளுக்கு மீள செலுத்தப்படுவதுடன் சிங்கள,தமிழ்,முஸ்லிம் பொதுமக்களுக்கும் அவை வழங்கப்படவேண்டும்.
ஹலால் சான்றிதழானது சட்டவிரோத செயற்பாடாகும். இது தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கத்தவறியதால் நுகர்வோர் அதிகாரசபை மற்றும் தர நிர்ணய நிறுவனங்களும் இதுதொடர்பில் பொறுப்புக் கூற வேண்டும்.
இது தொடர்பில் பொதுமக்களுக்காக குரல் கொடுத்த பொது பல சேனா தலிபான்களாக சித்தரிக்கப்பட்டது. உலமாக்கள் தமது தராதரம் அறிந்து செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
-vidivelli-








PMAMF Mohammed H.I.R.A.Z said
சட்டத்தை கையில் எடுத்து நீதிமன்றதைபோல் உத்தரவிடும் அதிகாரத்தை யார் கொடுத்த்தது இந்த தீவிரவாத பொய்பல சேன கூட்டதிட்கு??? உங்கள் உத்தரவு எதனையும் செயலாற்றமுடியாது ஏன்ட நியாயத்தை பார்த்துகொள்க என்று விட்டு விட வேண்டியதுதான்!!1 இவனுகளின் கதைய இன்னும் இன்னும் செவி சாய்தம் இவனுகள் அளவுக்கு மீறிகிட்டே போவானுகள் ஜம்மியதுல் உலமா இவனுகளை எதைகொண்டு அடக்க வேண்டுமோ அதைகொண்டு அடக்கிவிடுவதே சிறந்தது ஒட்டு மொத்த முஸ்லிம்களும் கையேந்திய போதெல்லாம் வானத்தில் இருந்து மழைபொழிந்ததைபோல் இவனுகளுக்கு எதிராகவும் ஒட்டுமொத்தமாக கையேந்தினால் இவனுகளுக்கு நேர்வதையும் சமகாலத்திலேயே காணலாம்
mohd fareed said
palayang …
oddamavadi mohamed faris said
allah thaan ivankallukku orru mudiu kodukka vendum yaa allah ivarkallukku nasam undakkuvaayaka …….musilm amaichchar kal yallam innum urankukiraal kalaa? ivarlam velippathanraal aduththa election vara vendum ….{oddamavadi mohamed faris}