கலாநிதி ஜோஸப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளைக்கு சமாதானத்திற்கான விருது
Posted by Kattankudi Web Community on 24/02/2013
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கலாநிதி ஜோஸப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களை விருது வழங்கி கௌரவித்துள்ளது.
கடந்த 30வருட காலமாக மட்டு திருமலை மறைமாவட்ட ஆயராக சிறப்பாக சேவையாற்றியும் இனங்களுக்கிடையிலான நல்லூறவையும் ஏற்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சமாதானத்திற்காக பெரும் பணியாற்றியமைக்காகவே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
சம்மேளனத்தின் தலைவர் மர்சூக் அகமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் தலைவர் ஏ.எம்.அப்துல் காதர் பலாஹி, அதன் செயலாளர் விசுவமூர்த்தி, காத்தான்குடி ஜம்இய்யத்துல் பலாஹ் அரபுக்கல்லூரி அதிபர் மௌலானா மௌலவி அப்துல்லாஹ் ரஹ்மானி, ஜம்மியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரி விரிவுரையாளர் மௌலவி எம்.எச்.எம்.புஹாரி பலாஹி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், கிழக்கு மாகாண முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள பணிப்பாளர் எம்.ஜுனைட், அருட்தந்தை கலாநிதி சுவாமிநாதன் உட்பட சம்மேளன பிதித் தலைவர் ஏ.எல்.அப்துல் ஜவாத், சமூகசேவையாளர் பிளால் M கலீல் ,பிரதி செயலாளர் ஏ.எம்.சாதிக்கீன் மற்றும் சம்மேளன முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.























Dr M L Najimudeen said
இது ஒரு நல்ல நிகழ்ச்சியாகும். இதை ஒழுங்கு செய்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
badurzaman said
இது ஒரு நல்ல நிகழ்ச்சியாகும். இதை ஒழுங்கு செய்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
PMAMF Mohammed H.I.R.A.Z said
பாராட்ட தக்க வைபவம் !!! மத பெரியார்களிடையே இவ்வளவு ஐக்கியமும் அந்நியோனியமும் இருக்கின்ற சந்தர்பங்களை சாதகமாக பயண்படுத்தி நமது முஸ்லிம் பெண்கள் அந்நிய பாடசாலைகளில் இஸ்லாமிய கலாசார உடையுடன் கல்வி பயில வாய்பு வசதிகளை ஏட்படுத்தி கொடுக்க முயட்சிக்கலாம் அல்லவா???
அபூ அத்னான் said
பாராட்டப்பட வேண்டியவர்கள் (இன மத மொழிகளுக்
கப்பால்) பாராட்டப்பட்டேயாக வேண்டும். பிராந்தி
யத்தின் இக்கட்டான வேளைகளில் எல்லாம் எம்ம
வர்களது கண்களுக்குள் நிழலாடுபவர்களில் முதன்மை
யானவர்.
சம்மேளனத்தின் முன்மாதிரியான முன்னெடுப்புக்கள்
என்றென்றும் பாராட்டப்பட வேண்டியவையே!
நன்றி!
shukry said
இந்த விடயம் வரவேற்கத்தக்கவை