பரிசுத்த பாப்பரசருக்கு ஜனாதிபதி “செய்தி’
Posted by Kattankudi Web Community on 23/02/2013
பதவி விலகும் பரிசுத்த பாப்பரசர் 16 ஆம் ஆசீர்வாதப்பருக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். “இலங்கையிலுள்ள கத்தோலிக்கர்களினதும் மற்றும் ஏனைய மக்களினதும் பிரார்த்தனைகள் நல்வாழ்த்துகளில் நானும் இணைந்து கொள்கிறேன். தங்களின் ஆரோக்கியம் மற்றும் ஆசீர்வாதங்களுக்காக வேண்டுகிறேன்’ என்று ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு ஆதரவாக எப்போதுமே பரிசுத்த பாப்பரசர் செயற்பட்டதாக ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் அச்சுறுத்தலாகவிருந்த பயங்கரவாதத்திற்கு தாங்கள் வலுவான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தீர்கள். அதற்கான நன்றியை இலங்கை மக்கள் எப்போதுமே நினைவுகூருவர். பயங்கரவாதமானது ஏனைய சமூகங்களுக்கும் நாடுகளுக்கும் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. எமது நாட்டில் அமைதியையும் மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு தங்கள் வார்த்தைகள் ஊக்குவிப்பையும் வலுவையும் அளித்திருந்தன என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பரிசுத்த பாப்பரசர் பதவி விலகுவதாக அறிந்து ஆச்சரியமும் கவலையும் அடைந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தங்களைச் சந்தித்த போது தாங்கள் வழங்கிய உற்சாகமான வார்த்தைகள் வழிகாட்டல்கள், ஆலோசனைகளை மிகுந்த மரியாதையுடன் நான் எப்போதும் நினைவுகூருவேன். ஆட்சி தொடர்பான எனது இலக்குகளுக்கு தங்கள் வழிகாட்டல்கள் உதவியாக அமைந்தன என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.







shukry said
ஜனாதிபதி அவர்களும் இலங்கையில் நல்வாழ்வை ஏற்படுத்த முனைகிறார் இதுவும் ஒரு வகையில் ஹலால்தானே