காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

உலமா சபையின் முடிவை ஏற்க முடியாது :அரசின் நிலைப்பாடுஎன்ன?: பொதுபலசேனா

Posted by Kattankudi Web Community on 23/02/2013

Bodu-pala-sena_1அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் ஹலால் தொடர்பான முடிவை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் முடிவு என்ன என்பதையே நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் தேரர் கூறினார்.

இது தொடர்பாக கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜமியத்துல் உலமா சபை என்பது முஸ்லிம் மதம் சார்ந்த தனியார் அமைப்பாகும். எனவே நாட்டில் பிரச்சினையை தோற்றுவித்துள்ள ஹலால் உணவு சான்றிதழ் தொடர்பாக தீர்மானிப்பதற்கு அவ் அமைப்பிற்கு அதிகாரம் கிடையாது.

இதேவேளை ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு உலமா சபைக்கு யார் அதிகாரம் வழங்கியது. இதுவொரு மத அமைப்பே தவிர அரசாங்கத்தின் அமைப்பல்ல.

எனவே முஸ்லிம்களுக்கு மட்டும் ஹலால் சான்றிதழ் என்ற அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரையை ஏற்பதாக உலமா சபை தெரிவித்துள்ளது. இவர்கள் யார்?

இம்முடிவை எடுப்பதற்கு. இலங்கையின் ஆட்சியாளர்களா? எனவே அரசாங்கம் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக முடிவை அறிவிக்க வேண்டும்.
வெறுமனே மத அமைப்பொன்றின் முடிவை ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை.

அத்தோடு அரசாங்கத்தின் அனுமதியுடன் இயங்கும் உணவுத் தரச்சான்றிதழ் வழங்கும் அமைப்பொன்றே இவ்வாறான சான்றிதழை வழங்க வேண்டும்.
தனிப்பட்ட உலமா சபையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது என்றார்.

(விடிவெள்ளி)

About these ads

12 Responses to “உலமா சபையின் முடிவை ஏற்க முடியாது :அரசின் நிலைப்பாடுஎன்ன?: பொதுபலசேனா”

  1. உங்களில் ஒருவன் said

    அப்படி என்றால் அரசாங்கமும் முஸ்லிம்களும் இதைப் பார்த்துக்கொள்ளட்டுமே இதில் தலையிடுவதற்கு பொது பல சேனா வாகிய நீங்கள் யார்?

  2. A. Mustafa. Kalumnai said

    இவனுகள் ஓயப்போவதும் இல்லை இந்த பிரச்சனை நிட்கப்போவதும் இல்லை
    இதை நாம் படிப்படியாக விட்டுகொடுத்தால் நாளை இஸ்லாத்தையே இலங்கையில் தடை செய்யவேண்டும் எனும் கோரிக்கை இந்த இனவாதிகள் முன் வைத்தாலும் வைக்கலாம்.

  3. முடிவை ஏட்கமுடியாவிட்டால் கோட்டுக்கு போங்கள்!!! உங்களை திருப்திபடுத்த இங்கே யாறும் முடிவுகள் எடுக்கவில்லை உங்கள் சித்துவிளையாட்டை உங்களுக்கே திருப்பி அடிக்க வேண்டும் என்பதட்காகவே முடிவுகள் எடுக்கபட்டுள்ளன்!!! 58 நாடுகளுக்கான ஏற்றுமதிக்கான ஏகபோக உரிமை முஸ்லிம்களின் கைகளில் நீங்கள் செய்த மடத்தனதால் விழுந்துவிட்டது என்பதை அதனால் பாதிக்கபடபோகும் பலரும் உங்களுக்கு உணர்த்துவதால் இப்போது ஹலால் முத்திரை அரச துறையினூடே வழங்கபட வேண்டும் என்று தாளத்தை மாற்றுகிறீர்கள்???

    அரச அனுசரனையில் ஹலால் தரசான்றிதல் இடம் பெறலாமே அன்றி ஹலால் தர சான்றிதலுக்கான சகல நடவடிக்கைகளையும் அரசிடம் அரச துறை ஒன்றாக ஒப்படைத்துவிட்டு மார்கம் கற்றறிந்த உலமாக்களால் இடம்பெற கூடிய ஊழல்களை பார்துகொண்டு சும்மா இருக்க முடியாது ஒரு இலட்சம் இலஞ்சத்தினால் பல கோடி பெறுமதிக்கி நோய் பினியால் செத்த மாமிசங்கள் ஹலால் சான்றிதல் பெறபடவும் மலிவு விளையில் கிடைக்கும் ஹராமான கழவைகளால் தயாரிக்கபடும் உட்பத்திகள் கையூட்டுகளால் ஹலாலாக முத்திரையிடபடும் அநியாயங்களே அரச துறை ஹலால் பிரிவால் இடம் பெறும்

    அதனால் ஏற்றுமதி செய்யபடும் உட்பத்திகளின் ஹல்லால் தன்மையும் கேள்விகுள்ளாகி காலபோக்கில் 58 நாடுகளுக்குமான உட்பத்தி பொருட்களின் ஏற்றுமதி முற்றாகவே தடைபடவே வழி சமைக்கபடும் ???
    உங்கட இந்த மடத்தனமான துள்ளலால் இனி ஏற்றுமதி செய்யபடும் தேயிலையை கூட முஸ்லிம் நாடும்கள் ஹலால் முத்திரை பதிக்கபட்டதா என்று உத்தரவாதபடுத்தியபின் இறக்குமதி செய்ய அனுமதிக்கவே தூண்டபடும் நிலமை ஏட்படுத்தபட்டுள்ளது

    சுண்டக்கா நாட்டில் இருந்துகொண்டு என்னத்த பேசினாலும் உலகம் விளங்கிகொள்ளாது என்று நினைக்க இது என்ன வேடவர் காலமா???

    பொதுபலசேனயின் பிரச்சாரத்தால் ஹலால் அற்ற சுத்தம் அற்ற உட்பத்திகளே ஸ்ரீலங்காவில் இருந்து ஏற்றுமதிபடுத்தபடுகின்றது என்ற ஆழமான ஒரு கருத்தும் உணர்வும் உலகின் அனேக நாடுகளை ஆக்கிரமித்து இருப்பது நம் நாட்டின் பொருளாதாரதிட்கு எவ்வளவு கேடானது???

  4. Muhammed Fairoas said

    தனிப்பட்ட உலமா சபையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது என்றாள், நீங்க யாரு??????????? தனிப்பட்டவங்கதானே???? என்ன தேரர்மாரே!! தெரின்சிட்டே குழப்புரிங்க!இவ்வளவு பகிரங்கமக உங்களால் சொல்லமுடிடுமென்டால் ஸ்ரீலங்காவில் பொறுப்பு கூறவேண்டியர்கள்/பொறுப்பு ஏட்கவேண்டியவர்களின் பின்புளத்தில் இயன்குகிரிங்கள் என்று நாங்களும் முடிவெடுக்கலாம்தானே!!!

  5. Wahidmahroof said

    அரசாங்கத்தினுடைய ஆசீர்வாதத்துடன் செயற்படும் இந்த பொதுபல சேனா என்ற அமைப்புக்கு எதிராக இதுவரை எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதிகளும் பகிரங்கமாக எந்த கருத்துக்களையும் கூறவில்லை… எந்த நடவடிக்கையு்ம் எடுக்கவில்லை.

    தம்புள்ளைப் பள்ளிவாயலில் ஆரம்பித்த இந்த முஸ்லிம்களுக்கெதிரான நாசகார வேலைத்திட்டத்தில் இருந்து இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான சகல அக்கிரமங்களுக்கும் இந்த முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருப்பது போல் உள்ளது சந்தேகத்துக்கிடமானது.

    அரசாங்கத்தினுடைய பதவிகளையும் பட்டங்களையும் பெற்றுக்கொண்டு அரசினுடைய உத்தரவுக்கேற்ப வாய் மூடி மௌணிகளாகவும் சிலர் அவர்களுக்கே கூஜா தூக்கும் தேஜாக்களாகவும் இருப்பது இலங்ககை முஸ்லிம் சமூகத்து இந்த இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் செய்யும் மாபெரும் துரோகமாகும்..

    இனியும் பொறுமை காப்பது….. கொல்லன் கையில் கொடுத்த நெருப்பும் இரும்பும் போல் ஆகிவிடும்… எமது போராட்டங்களும் முன்னெடுப்பபுக்களும் பொதுபல சேனா என்று இப்போ முளைத்த களைக்கு எதிராக அல்லாமல் தொன்று தொட்டு எம்மோடு வளர்ந்து எமக்கே துரோகஞ் செய்யும் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக இருக்கவேண்டும்.

    இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இலங்கை அரசாங்கத்திற்கு போதிய அழுத்தம் கொடுத்திருந்தால் என்றைக்கோ இந்தப்பிரச்சனைக்கு முடிவு கிடைத்திருக்கும்….

  6. உங்களில் ஒருவன் said

    பொதுபல சேனா அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதனால் எமக்கு கிடைக்கப்பெற்ற நன்மைகள்..

    01.இதற்கு முன்னால் ஹலால் உணவுகள் தொடர்பில் கரிசனை செழுத்தாத நம்மவர்கள் தற்போது ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பெற்ற உற்பத்திகளை தேடுகின்றார்கள்.

    02.குழுக்களாகப்பிரிந்திருந்த நமது உம்மத் சகல வேறுபாடுகளையும் களைந்து இலங்கை வாழ் முஸ்லிம் உம்மத் என்ற ரீதியில் ஒன்று பட்டுள்ளார்கள்.

    03.முஸ்லிம் அர்சியல் தலைமைகளும் சரி உலமாக்களும் சரி ஒரே நோக்கத்திற்காக ஒன்று பட்டுள்ளார்கள்.

    04.அந்நியவர்கள் கூட எமது சத்திய மார்க்கம் பற்றி தேட ஆரமபித்துள்ளார்கள். இது தஃவாவிற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.

    05.பள்ளி வாசலுக்கே செல்லாதவர்கள் கூட பள்ளிவாசலுக்கு செல்கிறார்கள், அதிக ஆதிகமாக அல்லாஹ்விடம் துஆ கேட்கின்றார்கள், அதிகமான அமல் இபாதத்களில் ஈடு படுகின்றார்கள்.

    06.அந்நியவர்களைப்பற்றியே அலட்டிக்கொள்லாதவர்கள் வலியவே அவர்களுடன் சென்று பழகுகின்றார்கள், அவர்களுடன் நல்ல உறவுகளைப்பேணிக்கொள்ள முற்படுகின்றார்கள்.

    07.வியாபாரத்தில் பல மோசடிகளைச் செய்தவர்கள் இஸ்லாம் கூறிய முறைப்படி வியாபாரம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

    08.மார்க்கத்தைப்பற்றி பெரிதாக அக்கரைக்கொண்டிராதவர்கள் கூட ஹலாலுக்காகவும், மற்றும் பல உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கின்றார்கள்.

    எத்தனை நன்மைகள்!! இப்படி வைத்துப்பார்க்கும் போது அல்லாஹ் த ஆலா பொதுபல சேனா என்ற அமைப்பினூடாக எங்களை ஒற்றுமைப்படுத்தியுள்ளான்! சாதகமான பல மாற்றங்களை எமது உம்மத்திற்குள் ஏற்படுத்தியுள்ளான்.

    அல்ஹம்துலில்லாஹ்!!

  7. Ramsan said

    மக்கள் பிரச்சினையை கையில் எடுப்பதற்கு முன் பாராளுமன்றில் பேசி ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுங்கள். மக்கள் பிரச்சினையை கையில் எடுத்த பிறகு பாராளுமன்றத்தில் விடிய விடிய பேசியும் எந்த பயனும் இருக்கப் போவதில்லை.

  8. ALM.FAREED said

    intha Halal mattum eanaya vidayathil ACJU &Muslim kawncil vittukkoduththal muslimkalin nilamai eannavaahum. intha nilmaihalukku kaaranam arasukku vakkalaththu vaankum MUSLIM MPmaarhalthaan. allah muslimkaliyum porulaatharaththaiyum kaappaatuvanaha!

  9. shukry said

    ஜனாதிபதி அவர்களும் இலங்கையில் நல்வாழ்வை ஏற்படுத்த முனைகிறார் இதுவும் ஒரு வகையில் ஹலால்தானே

  10. ishan said

    Who is bothu bala sena. there are many Buddhist org are in the country they are so friendly with the other communities. put them out and ask them to be silence. we belie parliament will definitely give better solution.

  11. Mohideen said

    இந்த யதார்தத்தை இலங்கை மக்கள் சிந்திக்க மாட்டர்களா?

    இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையுடன் அராபியர்கள் முதன் முதலில் தொடர்பை ஏற்படுத்தினார்கள் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ள அதே வேளை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இலங்கையில் இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    எமது அயல் நாடான இந்தியாவை வந்து பிடித்து கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் ஆட்சிசெய்த முஸ்லிம்கள் இலங்கையை பிடிப்பதற்கு ஒரு பெரிய சவால் இருக்க வில்லை.

    அதே வேளை எமது அழகிய தேசத்தை காலனித்துவம் செய்து அதன் இயற்கை வளங்களையும் மக்களையும் சுரண்டி வாழ்ந்த போத்துக்கேயர் ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பதில் முன்னின்று உழைத்து நாட்டின் முன்னேற்றத்தில் என்றும் பங்களிப்பு வழங்கி வந்துள்ள முஸ்லிம்களது வாழ்கை முறை குறித்து ஏற்பட்டுள்ள சந்தேகம் தற்பொழுதும் அதே மேற்கின் வாழ்கை முறைக்கு இரையான அதன் அரசியல் முறையை பின்பற்றி தற்பொழுது அதனது இறைமையை இழந்துள்ள இலங்கையின் நிலைப்பாடு குறித்து சிந்திக்க தவறியுள்ள பொதுபல சேனா மற்றும் சிங்கள தீவதை நினைக்கும் போது பெரும் கவலையத் தருகிறது.

    இந்த யதார்த்தத்தை விளங்கப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு அனைத்து முஸ்லிம்களுக்கும் உள்ளது.

    குறிப்பாக இக்கருத்துக்கள் பலமட்டங்களில் விரிவாகப் பேசப்படவேண்டும். அதற்கான முன்னெடுப்புக்களை முஸ்லிம் புத்தி ஜீவிகள் எடுக்க வேண்டும்.

    உண்மையில் இது கவலைக்குரிய விடயமே. மேற்கினது கலாச்சாரம் எந்தளவு எமது நாட்டு மக்களை சூரையாடுகிறது. மேற்கினது பொருளாதாரம் எந்தளவு அனைத்து மக்களையும் சுரண்டுகிறது. மேற்கினது அரசியல் ஒழுங்கு எந்தளவு அடிமட்ட மக்களது வாழ்வாதாரத்தை சுரண்டுகிறது; கொள்ளையடிக்கிறது. மேற்கினது கல்வி முறை எவ்வாறான ஒரு சமூகத்தை உருவாக்க நினைக்கிறது. இவைகள் உணர்த்தப்பட வேண்டிய அடிப்படை உண்மைகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,368 other followers

%d bloggers like this: