மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம்
Posted by Kattankudi Web Community (KWC) on 12/02/2013
மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான (2013) முதலாவது அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று(12.2.2013) மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலாசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்பரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பாஸ்கரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், படை அதிகாரிகள் உதவி திட்டமிடிடல் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தின் போது கடந்த வருட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
திவிநெகும மற்றும் சமுர்த்தி விவசாயம், சுகாதாரம்,கல்வி, மீன்பிடி உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.















win said
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கடந்த 2012ம் ஆண்டு யூன் மாதத்திற்கு பின்னர் அதாவது சுமார் 7மாதங்களுக்குப் பின்னர் இன்று நடைபெற்றாலும் வாதப்பிரதி வாதங்கள் குறைவாகவே இருந்தது என்பது பலருக்கு சந்தோசம் அத்தோடு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் தலைமையில் நடந்த கடைசிக் கூட்டமாகவும் இது இருக்கக் கூடும் ஏனெனில் அடுத்த அபிவிருத்திக் குழு கூட்டம் அமைச்சர் பஸீர் சேகுதாவூத் அவர்களின் தலைமையில் இடம்பெறும் என பலராலும் இன்று பேசப்பட்டது அது மாத்திரமின்றி இன்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் அவர்கள் கலந்து கொண்ட விசேடமாக இருந்தாலும் அபிவிருத்திக் குழு தலைவர் அவர்களால் அவர் அவமதிதப்பட்டது போன்று நடாத்தப்பட்டதாக பலரும் பேசிக்
PMAMF Mohammed H.I.R.A.Z said
ஆளுமை கேட்டு பெறுவதல்ல தானாக வருவது அவர் அவமதிக்கபட்டாரா அவராக அவரது ஆளுமை அற்ற நடத்தையால் முதல் அமைச்சர் என்ற ஸ்தானத்தையே அவமானதுகுள்ளாக்கிகொண்டிருக்கிறாரா???
மாவட்டதில் அதி கூடிய விருப்பு வாக்கை எடுதோறுக்கே அபிவிருத்தி குழு தலைவர் பொறுபென்ற அரசின் கொள்கை மாறினால் அம்பாந்தோட்டையில் ஜனாதிபதியின் குடும்பதிட்குள்ளும் குழப்பம் வரும்