காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

புறப்பட்டு வருகிறது புதிய சேனையொன்று.!

Posted by Kattankudi Web Community (KWC) on 12/02/2013

Bodu Bala Sena-மதியன்பன்-

புறப்பட்டு வருகிறது..
புதிய சேனையொன்று.!
துவேச ஆடையை
தோளிலே சுமந்து கொண்டு..

பொதுவாக -
பலமே இல்லாத சேனை யென்று
பலர்
பார்த்து ரசிக்கிறார்கள்.!

தாய்ப்பாலும் இல்லாமல்
புட்டிப்பாலும் குடிக்க முடியாமல்
சேரிக்குள் கிடந்த
சில்லறைக ளெல்லாம்
சேர்ந்து கொண்டது இதனோடு…

பிரித்து ஓதி ஓதியே
பிரித்துவிட்டார்கள் எம்மை..
இப்போது
எரியவிடுகிறார்கள்
இனத்துவேசத் தீயை…

ரங்கிரி வானொலியில்
ரீங்காரம் கேட்கிறதா..?
பொதுபல சேனையுடன்
சிங்கள ராவய புறப்பட்டு வருவதாக..

ஹலால் சான்றிதழ்
காலாவதியாக வேண்டுமாம்..?
அதற்குமுன்
காணாமல் போவார்கள் இவர்கள்.
மொத்தத்தில்
நாட்டின் பொருளாதாரத்தை
நசுக்கப் பார்க்கிறார்கள்..!

பள்ளிகளை
உடைத்தழித்தவர்கள்
பன்றியின் உருவத்திற்கு
அல்லாஹ்வின் பெயரை
அர்ப்பணம் செய்தவர்கள்.
அதிலே
சொர்ப்பனம் கண்டு கொண்டிருக்கிறார்கள்..!

இஸ்லாம் எழுச்சி பெறுவதையும்
ஈட்டியாய்
இதயத்தில் குத்துவதையும்
இவர்களால்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதனை
முளையிலேயே கிள்ளிவிட
முட்டாள் தனமாய்
கிளைகளைத் தேடுகிறார்கள்..
விழைவுகளையும், விபரீதங்களையும்
விளங்கிக் கொள்ளாமல்…

ஆசி வழங்குகிறது
அரசும், ஆயுதப் படையும்..!
காசுகொடுக்கத் தேவையில்லை.
காவலுக்கு இருந்தால் போதும்.

இவர்களை
கைது செய்ய முடியாமல்
காலாவதியாகிப் போனதா..?
நாட்டின் சட்டமும் இறைமையும்.!

புலிகளை ஒழித்து
முப்பது வருட யுத்தத்தை
முடிவுக்கு கொண்டு வந்தவர்களால்
ஏனிந்த
சிறு கூட்டத்தை
சிறைபிடிக்க முடியவில்லை..?

அரசாங்கத்தையே
ஆட்டிப்படைக்கிறார்கள் இவர்கள்.!
நாட்டை-
ஆள்பவர்கள் யாரென்றும் புரியவில்லை.

நோலிமிட்டுக்குள் நுழைந்தவர்கள்
நோக்கம் நிறைவேறாமல்
இஸ்லாமிய வங்கியை
இப்போது இலக்கு வைக்கிறார்கள்..!

வீதியின் பெயர்ப்பலகை
விடிவதற்குள்ளாக
நாதியற்றுக் கிடக்கிறது
நம்மவர் பெயர் அழிபட்டுக்கிடக்கிறது.

ஜெய்லாணியில்
பள்ளிவாயல் பிரதேசம்
கள்ளத்தனமாய்
கபளீகரம் செய்யப்படுகிறது.

முஸ்லிம்களின்
கல்வி, பொருளாதாரம்
காணி விவகாரம்
அத்தனையும் இவர்கள்
அழித்துவிடத் துடிக்கிறார்கள்.

இத்தனைக்கும் மத்தியில்
எதுவுமே நடக்கவில்லையென்று
அரசாங்கம் அறிக்கைவிட-
நம் அரசியல் வாதிகளும்
அதனை
ஆமோதித்துக் கொண்டிருக்கிறார்கள்…!

About these ads

8 Responses to “புறப்பட்டு வருகிறது புதிய சேனையொன்று.!”

  1. Irfan said

    Majeed Naana Very Good poem.Keep it up.

    • BBQ said

      இந்தியாவிலே 1991 ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு இன்னும் மரணை தண்டனை நிறைவேறவில்லை. 2001 பாராளுமன்ற தாக்குதல் மற்றும் 2008 மும்பை தாஜ்மஹால் ஹோட்டல் தாக்குதல் குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. பலஸ்தீன், ஈராக், ஆப்கான் எல்லாவிடத்திலும் அமெரிக்க அனுசரணையில் முஸ்லிம்களுக்கே தாக்குதல். இலங்கையில் அரச ஆசீர்வாதத்துடன் மதத்தீவிரவாதிகளால் நமக்கு நெருக்கடி. இவற்றிலிருந்து விளங்குவது என்னவென்றால் இஸ்லாம் பாரிய எழுச்சி அடைகிறது.

  2. marzook said

    நம் அரசியல்வாதிகள் அமோதிப்பதுடன் மட்டும் நின்று விடவில்லை, யார் தாலி அறுந்தாலும் தமக்கு ஒரு மந்திரிபதவி தேவை என நாக்கை தொங்கபோட்டு ஆலாய் பறப்பது அதிலும் விசேடம்….

  3. mmsajp said

    After long time very sweat poem thanks Mathy

  4. Natheera said

    very good poem , thank you very much and my appreciations

  5. Jezan said

    Wonderful poem every one must read it

  6. Faizal Mohamed Farook said

    Oh oh the stupid he can’t do nothing in feature but we want study from about Muslim leaders and goverment

  7. truth said

    அருமையான கவிதை!தான், அதே நேரம், அதன் உள்ளடக்கங்களை புரிந்து விளிப்படையவேண்டியிருக்கிறது!! அதுவே, கவிதையின் நோக்கமென நான் நினைக்கிறேன்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,323 other followers

%d bloggers like this: