ஐ.தே.க. ஏற்பாட்டில் பொதுபலசேன – முஸ்லிம் கவுன்சில் சந்திப்பு
Posted by Kattankudi Web Community (KWC) on 12/02/2013
ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் பொது பல சேன அமைப்புக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேன அமைப்பினர் மேற்கொண்டுவரும் பிரசாரங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பிலேயே இச் சந்திப்பு இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கலந்துரையாடலில் அக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், ஹலீம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி, கொழும்பு மாநகர மேயர் முஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுபல சேன சார்பில் அவ்வமைப்பின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர், செயலாளர் அத்தே ஞான சார தேரர், அதன் அமைப்பாளர் டாக்டர் விதானகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் அஸ்கர் கான், மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம், மௌலவி மாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது முஸ்லிம்கள் தொடர்பில் பொதுபல சேன அமைப்பு முன்வைத்துவரும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்பட்டதாக முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர் தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் ஒரு இனமுறுகலைத் தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என பொதுபல சேனவிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டதாகவும் முரண்பாடுகள் ஏற்படும்போது இருதரப்பினரும் அவற்றை நேரடியாகப் பேசித் தீர்க்க வேண்டும் எனும் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
(vidivelli)







Dr M L Najimudeen said
This is a very good effort. My sincere gratitute for all those responsible for organzing and participating this event.
mmsajp said
We hope for the best one thing is sure that you can wake a person who really asleep but you cannot wake a person who act like asleep so these clergy group is only a communal minded actors whom in dark they will never come to the light because their hearts are narrowed
Meezan said
Everybody should help to this move. Almighty Allah change and give understanding about Islam to the people who cant understand about Islam.
Politician and other people those who are pretending that they are sleep, please sleep peacefully rather than making any interruption or statesment to these people.
Please patience patience patience patience ……………………………………………………………………….
Dear responsible muslim politician, you all have a duty towards society but dont forget………………………….and Almighty Allah definitely will question about this duty in his day of judgement. Are you all have reasonable answers ?. If so please sleep sleep sleep.
Muslim Ummah pray pray pray
Thank you.