இணையத்தளங்களால் இலக்கு வைக்கப்படும் இலங்கை முஸ்லிம்கள்: அப்துஸ்ஸலாம்
Posted by Kattankudi Web Community (KWC) on 12/02/2013
இதனை இந்த நாட்டின் ஜனாதிபதியால் அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் தடுத்து நிறுத்த முடியாதா?
-ஏ.எம்.அஸ்ரிப்-
மதவிவகாரம், கல்வி, வியாபாரம், காணி போன்றவற்றில் முஸ்லிம்கள் இனவாதிகளால் அச்சுறுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் சில இணையத்தள ஊடகங்களாலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவது மிகவும் வேதனையையும், கவலையையும் தருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் அம்பாறை மாவட்ட வி பிரிவின் பிரச்சாரச் செயலாளர் எஸ். அப்துஸ்ஸலாம் தெரிவித்தார்.
முஸ்லிம்களை இனவாதிகளாக காட்டும் சில ஊடகங்கள் தொடர்பாக கருத்துவெளியிடும்போதே அவர்மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் தனது கருத்தில் தெரிவித்தவை வருமாறு,
சுமார் 20க்கு மேற்பட்ட இணையத்தளங்கள் ஊடாகவும், தம்புள்ளவை மையமாக்க்கொண்டு இயங்கும் ரன்கிரி எப்.எம். ஊடாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் பரப்பப்படுகின்றது. இதனை இந்த நாட்டின் ஜனாதிபதியால் அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் தடுத்து நிறுத்த முடியாதா? என்று முஸ்லிம்கள் கவலை கொள்கின்றனர்.
அண்மையில் கல்முனை நகரில் வைத்து ஜனாதிபதி இனி எனது ஆட்சியில் ஒருபோதும் பள்ளிவாயல்கள் உடைக்கப்பட இடமளிக்கப்படமாட்டாது என்று கூறியிருந்தார். இதனை கேட்ட முஸ்லிம்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். ஆனால், அதன் பிற்பாடு பள்ளிவாயில்கள் தாக்குதல்களுக்குள்ளான சம்பவங்களும் நடந்தேறின. ஜனாதிபதியை நம்பிய மக்களுக்கு அது வெறும் ஏமாற்றத்தையே கொடுத்தது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தனியார் துறையின் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஜனாதிபதியின் இனி எனது ஆட்சியில் ஒருபோதும் பள்ளிவாயல்கள் உடைக்கப்பட இடமளிக்கப்படமாட்டாது என்ற கூற்றினை கூறி பெருமைப்பட்டுக்கொண்டார். ஆனால் அதன்பிறகு நடந்த சம்பவங்களுக்கு எந்தவிதமான நீதி நியாயங்களும் முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெற நீதியமைச்சரால் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது உண்மை.
இந்த நாட்டின் சதந்திரத்திற்காக சேர் ராஸீக் பரீட், ரீ.பி. ஜாயா போன்ற சாணக்கியமான முஸ்லிம்களின் தலைவர்கள் பெரும்பங்களிப்பாற்றினார்கள் என்பதையும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, பல வழிகளில் பாக்கிஸ்தான, ஈரான் போன்ற முஸ்லிம் நாடுகள் நேசக்கரம் நீட்டியது என்பதையும் இந்த இனவாதக்குழுக்கள் மறந்தது என்பது நியாயமானதாக இருக்க முடியாது. அதுமாத்திரமல்லாமல், குவைத், சவூதி அரேபியா போன்ற நாடுகள் எமது நாட்டின் அபிவிருத்தியிலும் ஆழமான பங்களிப்பை செய்தது என்பதை குறித்த இனவாதக் குழுக்கள் மீட்டிப்பார்க்க வேண்டும். என்பதுடன் யதார்த்தம் விளங்காமலும், ஊடக தர்மத்திற்கு அப்பாலும் இயங்கும் இணையத்தளங்கள் முஸ்லிம்களின் விடயத்தில் உண்மை நிலையை உணர்த்தும் ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொள்கின்றோம் என்றும் கூறியுள்ளார்.








Anver K. said
It is clear that no one is going to remove anti Muslim products on the Web. It is now up to our local compiuter genius’ to try and hack them if possible,