காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை அரச நிறுவனத்திடம் ஒப்படைக்குக: ரணில்

Posted by Kattankudi Web Community (KWC) on 01/02/2013

halaal-logoஹலால் சான்றிதழ் வழங்குவதற்கான அதிகாரத்தையும் பொறுப்பையும் அரசாங்க நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைப்பதன் மூலம் இது தொடர்பான தேவையற்ற விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளிவைக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக பௌத்த கடும்போக்கு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் தீவிர பிரசாரங்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

ஹலால் சான்றிதழை முஸ்லிம் நிறுவனங்களோ அல்லது வேறு எந்த தனியார் நிறுவனங்களோ வழங்குவதைவிடவும் அரசாங்க நிறுவனம் ஒன்று வழங்குவதே பொருத்தமானது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதன் மூலமே ஹலால் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளுக்கும் சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்த முடியும்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். இப் பிரச்சினைக்குத் தீர்வு காண எங்களால் இயன்ற முயற்சிகள் அனைத்தையும் நாம் மேற்கொள்வோம். சம்பந்தப்பட்ட பௌத்த பிக்குகளையும் சந்தித்து பேசவுள்ளோம்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இது தொடர்பில் பாராளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை எமது கட்சி விடுக்கவுள்ளது. இது தொடர்பில் எமது கட்சியின் எம்.பி.க்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.

இச் சந்திப்பில் ஐ.தே.கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், ஹலீம் ஆகியோரும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் கவுன்சில் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன், அஸ்கர் கான், அஷ்ஷெய்க் இனாமுல்லாஹ், சிராஜ் மஷ்ஹர் உட்பட பலர் கலந்து கொண்டனர். (vidivelli)

About these ads

6 Responses to “ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை அரச நிறுவனத்திடம் ஒப்படைக்குக: ரணில்”

  1. ஜம்மியாவின் ஹலால் பிரிவை அரச துறையாக அங்கீகரிக்க்குக!!! அதை விடுத்து அரசிடம் கொடுத்தால் அங்கே இலஞ்சம் ஊழல் ஹலால் ஹராமை தீர்மானிக்கும் காரணியாக இருக்காது என்பதட்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை???

  2. mmsajp said

    It is every one knows that ACJU accepted body by the government the problem is law and order is handled by thirt party not authorised to do such thing if government can control the law and order without taking by Buddhist monks thre want be any problem in this country

  3. mohamed niaz said

    This is very good idea,Halal product can be verifite by the halal commiunity or moulavis or inspactors are be an employed but the consumers and law and the money should be handle by the goverment.The govermnt can use the money for our country’s development.

  4. Anver K. said

    Jamiathul Ulama is NOT a politicized body and from all we can see cannot be bribed. Such honest organizations are extremely rare in Sri Lanka and by making Halal Certification through a government control body, it becomes just another area with politicians taking over it, with money-making their only objective, Therefore, we should totally oppose any move to issue Halal cerrtificates through the government.

  5. raaja said

    இதற்கும் ஓர் அமைச்சை ஏற்படுத்தி அசவர் தம்பியை அமைச்சராக்கினால் போச்சு .அவரது ஆத்மாவும் சந்தியடையும் .சிலவேளை பன்றி இறைச்சிக்கும் ஹலால் செர்டிபிகட் கொடுத்து ஜனாதிபதியை சந்தோசப்படுத்த முடிவெடுத்தாலும் எடுத்துவிடுவார் .

  6. Nazmin said

    yah its great idea we will hand over to the government

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,364 other followers

%d bloggers like this: