விஞ்ஞான மற்றும் கலைப் பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்
Posted by Kattankudi Web Community on 01/02/2013
மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதன் நிலை மாணவியாக ஓட்டமாவாடி தேசிய பாடசாலையை சேர்ந்த மாணவியும், கலைப் பிரிவில் முதன் நிலை மாணவியாக மீராவோடை அல்-ஹிதாயா மஹா வித்தியாலய மாணவியும் தெரிவாகி உள்ளனர்.
ஓட்டமாவாடி 3 இல் வசிக்கும் முஹமட் முஹைதீன் ரிஷ்வியா உயிரியல், இரசாயனவியல் ஆகிய பாடங்களில் A தர சித்தியையும், பெளதீகவியலில் B தர சித்தியையும், 1.9711 இசட் வெட்டுப் புள்ளியையும் பெற்று மாவட்டத்தில் முதன் நிலையை பெற்றுள்ளார்.
மேலும் அதே பாடசலையில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்ற முஹமட் அக்பர் இம்சீர் உயிரியல், இரசாயனவியல், பெளதீகவியல் ஆகிய பாடங்களில் B தர சித்தியையும், 1.6120 இசட் வெட்டுப் புள்ளியையும் பெற்று மாவட்டத்தில் ஐந்தாம் நிலையை பெற்றுள்ளார்.
மேற்படி இருவரும் பழைய பாடத் திட்டத்தில் மூன்றாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றி இவர் இப்பெறுபேரைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கலைப் பிரிவில் A,B,Cபெருபேரைப் பெற்று அல்-ஹிதாயா மஹா வித்தியாலய மாணவி எப்.றவுசானா மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் நிலையைப் பெற்றுள்ளார். மேலும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மக வித்தியாலயத்தில் கல்வி கற்ற எ.டபிள்யு.அப்றோசா கலைப் பிரிவில் மூன்று பாடங்களிலும் A,A,B தரத்தைப் பெற்று மாவட்டத்தில் 02ம் இடத்தைப் பெற்றுள்ளார்.









mohamedmohideen said
congratulation,studens,teachers of oddamavadi division