காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

மீரா பாலிகா மாணவி மருத்துவத் துறைக்கு தெரிவு

Posted by Kattankudi Web Community on 01/02/2013

images (1)- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -

பரீட்சைத் திணைக்களத்தினால் நேற்றைக்கு முன்தினம் வெளியிடப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சை – 2012 பெறுபேறுகளின் படி காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலய மாணவி முஹம்மது அனஸ் பாத்திமா ஸனீஜா விஞ்ஞானப் பிரிவில் மூன்று பாடங்களிலும் ஏ சித்தியையும் மாவட்ட மட்டத்தில் 5ம் இடத்தையும் பெற்று மருத்துவத் துறைக்குத் தெரிவு செய்யப்படவுள்ளார் .

இம்மாணவி முன்னாள் அல்-ஹஸனாத் வித்தியாலய அதிபரும் ஆங்கில பாட ஆசிரியருமான ஆர்.ரி.எம். அனஸ் மற்றும் மீராபாலிகா வித்தியாலய பிரதி அதிபரான ஜனாபா உம்முபரீதா அனஸ் ஆகியோரின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் 2011 ல் இடம்பெற்ற க.பொ.த உ/த பரீட்சையில் இவர்களின் மற்றுமொரு புதல்வியான பாத்திமா ஸீனாஷிபா இதே பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் 3 பாடங்களில் 3 ´ஏ´ பெறுபேறுகளைப் பெற்று மாவட்டத்தில் 2ம் இடத்துடன் தேசிய ரீதியிலான அதிதிறமைச் சத்தி பெற்று தெரிவு முறையில் மருத்துவத்துறைக்குத் தேர்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

About these ads

8 Responses to “மீரா பாலிகா மாணவி மருத்துவத் துறைக்கு தெரிவு”

  1. sajahan said

    alhamdulillah

  2. Mohamed Rizvi said

    மிக்க மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்,

    ஆனால் எத்தனை மாணவிகள் மருத்துவபீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டாலும் இன்றுவரைக்கும் எமது பெண்களை பெண்கள் தொடர்பான நோய்கள், மகப்பேற்று சார்ந்த தேவைகள் போன்றவற்றிற்கு அந்நிய ஆண்களிடம் அழைத்துச் செல்லவேண்டிய அவலநிலை தொடர்கிறதே.

  3. ALI AL ABBAR said

    ALHAMDULILLAH.

  4. MufNath said

    Alhamdhulillah… Congratulations Sister and All others who have scored in the A/L 2012

  5. mmsajp said

    Alhamdu lillahi rabbil aalameen

  6. Badurzaman u .k said

    Alhamdulilah. Congratulations.

  7. மானம் said

    மானம் காத்த மாணவிக்கு வாழ்த்துக்கள். ஆனால் எமது சமூகம் இவ்வருட பெறுபேறுகளில் மகவும் பின்தங்கியுள்ளதை பார்க்கும் போது கவலையளிக்கின்றது. ஆனால் இன்று நிலையில் எமது சம்மேளனமும். அதன் கல்விக்குழுவும் எவ்விதமான ஆக்கபூர்வமான விடயங்களை மேற்கொள்வதில்லை.

    படித்த சமூகம் எனவும் கல்வியால்தான் எமது விடயங்களை வென்றெடுக்க முடியும் எனவும் பேசிவருகின்ற பி.எம்.ஜி.ஜி யும் வெறும் கொப்பிகளை வழங்குவதோடு மாத்திரம் நின்று விடுகின்றார்கள்.

    அவர்களும் ஒரு விடயத்தை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் யாரும் கொப்பிகளை வழங்காமல் எதமது அடைவு மட்டும் அதிகமாகத்தான் இருந்தது. உதாரணமாக 2005ம் ஆண்டு உயர்தர பெறுபேறுகளைக் குறிப்பிடலாம். கொப்பிகளை மாத்திரம் வழங்கி விடுவதால் கல்வி அறிவை அதிகரிக்க முடியாது. மாறாக பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதன் மூலமே அடைவு மட்டங்களை அதிகரிக்க முடியும்.

  8. Dr M L Najimudeen said

    சாதனையாளரான மாணவி பாத்திமா ஸனீஜா அவர்களுக்கும் அவரை வழி நடாத்திய அறிவுசால் ஆசிரியர்களுக்கும் அவருக்காக அருந் தியாகங்கள் செய்த பெற்றோருக்கும் என்னுடைய இதய©ர்வமான பாராட்டுக்கள். இவர் மென்மேலும் முன்னேற அல்லாஹ்வை வேண்டுகிறேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,365 other followers

%d bloggers like this: