காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

மீண்டும் உளறும் சர்மிளா ஸெய்யித்

Posted by Kattankudi Web Community (KWC) on 01/02/2013

Sarmilaமத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்: ஸர்மிளா ஸெய்யித்

விஸ்வரூபம் திரைப்படத்தைத் தடை செய்யக் கோரும் இஸ்லாமியர்களின் கோரிக்கையின் காரணத்தை முழுமையாக விளங்காத சிங்கள நண்பர் ஒருவர் தற்செயலாக அதுபற்றிக் கேட்டார். ‘இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதால்’ என்றேன். ‘சொல்றேன் என்று தப்பா நினைக்காதே.. இவர்கள் இப்போது நடந்து கொள்வது மட்டும் ஜனநாயகமா?’ என்றார் நண்பர்.

இந்தக் கேள்வி யாரோ ஒரு சிங்களவரினுடையது மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழுகின்ற இஸ்லாமியர் அல்லாத அனைவரினுடையதும்தான்.

சில இஸ்லாமியர்களினுடையதாயும் இருக்கலாம். விஸ்வரூபம் திரைப்படத்தின் உப்பு, காரம் தெரியாமலே இலங்கையில் தடை செய்தாயிற்று. தமிழகத்தில் அனைத்திந்திய ஜமாஅத் தடை செய்யக் கோரியதன் எதிரொலியாக இலங்கையிலும் அது செய்யப்பட்டது. தடையுத்தரவை நீக்குவதா வேண்டாமா என ஆலோசிப்பதற்காக உலமாக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்களுக்கு அத்திரைப்படம் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் காண்பிக்கப்பட்டிருந்தது. உலமாக்கள் புத்திஜீவிகளால் அந்தத் திரைப்படம் பார்க்க முடியுமாக இருந்தால் சாதாரண மக்களுக்குத் தடை செய்வதிலுள்ள நியாயமென்பது பிரத்தியேகமானது. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் மிக உறுதியாக இருக்கின்ற உலமாக்கள் திரைப்படம் பார்க்க முடியுமா என்பது மற்றொரு கேள்வி; விமர்சனத்திற்குரியது.

நாம் எத்தனையோ சினிமாக்களைப் பாத்திருக்கிறோம். மிகக் குரூரமானதும் நெஞ்சை நெருக்குவதுமான சமூகக் கொடுமைகளையும் பார்த்து ரசித்துவிட்டு எதுவுமே நடவாதது போல திரையரங்கிலிருந்து வெளியேறி விடுகின்றோம். ஏனைய சமயங்களைக் கேள்விக்குட்படுத்துகின்ற குறிப்பாக இந்து சமய வரலாற்றுப் பாரம்பரியக் கதைகளையும் பாத்திரங்களையும் விமர்சிக்கின்ற, பாரம்பரியங்களை உடைத்தெறிகின்ற சினிமாக்களும் வந்துதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் மிக ஆரோக்கியமான விமர்சனங்கள், கருத்தியல்களால் சமூகவியலாளர்களும் சமயத்தவர்களும் அவற்றை எதிர்கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆரோக்கியமான விவாதங்களுக்கும், கருத்தியல் வெளிக்கு முன்வரவும் தயாரில்லாதவர்கள். சினிமாவில் சித்தரிப்பதால் ஒன்றும் கிழிந்துவிடப் போவதில்லை என்று தம் வேலையைப் பார்க்கத் திராணியற்றவர்கள். ஒரு சினிமா வந்துதான் சமுதாய மாற்றம் வந்துவிடப் போகின்றது என்றால், சினிமா பார்த்துத்தான் சமூகம் சீரழிந்துவிடப் போகிறதென்றால் இதுவரை வெளிவந்த இலட்சக்கணக்கான சினிமாக்களால் உலகம் மகத்தான அளவில் சீரடைந்திருக்கவேண்டும். அல்லது சீரமைக்கவே ஒண்ணாதளவில் சின்னாபின்னமாகியிருக்க வேண்டும். பத்தில் ஒன்றாகச் சும்மா வரவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிக‌ள் உலகத் தரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றனர். அர்த்தமற்ற எதிர்ப்பே, அப்படி என்னதான் அதில் இருக்கின்றதென்று பார்ப்பதற்கு தூண்டச் செய்துள்ளது. தடையிட்டால் என்ன எங்காவது இணையத்தில் டௌவ்ண்லோட் செய்யலாமா, எவ்வளவு கொடுத்தாவது பிளக்கில் வாங்கலாமா என்று எல்லாரையும் பைத்தியம் பிடிக்கச் செய்திருக்கின்றனர் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.

மேலைத்தேய நாடுகள் தங்களைத் தீவிரவாதிகளாகக் காண்பிக்கச் சதிகள் செய்வதாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சுயப் பிரச்சாரம் செய்து வருகின்ற சூழலில் சமீபத்தில் ரிஸானா றபீக் என்ற சிறுமிக்கு சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை உலகத்தின் மனசாட்சிக்குப் பேரிடியாக அமைந்திருந்தது.

1999 ஆம் ஆண்டு துருக்கிய அரசு குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவரான அப்துல்லா ஒச்சலானுக்கு மரணதண்டனை விதித்தது. மரண தண்டனை, மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் நீண்ட காலமாக உலகெங்கிலும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்துல்லா ஒச்சலானுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னரே அது குறித்த விவாதங்கள் உலகெங்கிலும் முனைப்புப் பெற்றன. ஐரோப்பிய யூனியனின் நெருக்குதல் காரணமாக 2001ஆம் ஆண்டு துருக்கிய அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக மரண தண்டனையை முற்றிலும் கைவிட்டது. சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், குவைத், பர்மா போன்ற இஸ்லாமிய நாடுகளில் மரண தண்டனை மாற்ற முடியாத சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மிகப் பலமான மதஅடிப்படையே இச்சட்டங்கள் நடைமுறையில் இருப்பதற்கான காரணங்களாகின்றன.

மரண தண்டனைக்கு எதிரான இயக்கமும் மனித உரிமைகள் சார்ந்த அக்கறைகளும், குரல்களும் முக்கியத்துவம் பெற்றுள்ள சமகாலத்தில் ரிஸானா றபீக் சிறுமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பல தளங்களில் விவாதிக்கப்பட வேண்டியதும், மனித உரிமைகளுக்கான அறைகூவல்களுக்கு பலமான பின்னடைவு என்பதும் ஏற்க வேண்டியவையே.

ரிஸானா றபீக்கிற்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை குறித்த கவலைகளை, அந்தச் செய்தி அளித்த ஏமாற்றங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலை சமீப காலங்களில் காணக்கூடியதாக இருந்தது. இஸ்லாமிய ஷரீஆ சரியா என்ற விவாதங்கள் எழுந்தன. இது மிக இயல்பானது, ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்புக்கு விவாதங்கள் கருத்தியல்கள் மிக இன்றியமையாததாகின்றது. இதன்போதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பொங்கி எழுந்தனர். றிஸானா றபீக்கிற்கு அளிக்கப்பட்ட தண்டனை சரியோ, பிழையோ யாரும் அது பற்றி மூச்சுவிடக்கூடாது, அது இஸ்லாமிய ஷரீஆ, அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களது வாதமாக இருந்தது. மேனியில் வடுக்கள் தெரியக்கூடிய ஈச்சம் பாயில்தான் முஹம்மது படுத்துறங்கினார்; ஒட்டகத்தில் பயணித்தார். ஷரீஆவை அப்படியே பிசகாமல் பின்பற்றுவதாக கூப்பாடு போடுகின்றவர்கள் ஈச்சம் பாயில் படுத்து ஒட்டகத்தில் பயணிக்கலாமே!

இஸ்லாத்திற்கு எதிரான கருத்தொன்று எழும்போது அதனை எதிர்கொள்ளத் தெரியாதவர்களாக, எதிர்கொள்வதற்கான பக்குவமற்றவர்களாகவே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களை நிரூபித்து வருகின்றனர். இலங்கையில் மட்டுமல்ல, ஆசிய நாடுகளில் வாழும் முஸ்லிம் இயக்கத்தவர்கள் எதிர்த்தலில் ஒரே பொதுக்குறியைக் கொண்டவர்கள்தான். தமிழகத்தில் நக்கீரன் இதழில் றிஸானாவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை மிகக் கொடுமையானது என்று எழுதியதற்காக மனுஷ்யபுத்திரனுக்கு மிருகபுத்திரன் பட்டமளித்து அங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தமிழக அரசியலில் முன்னிலையில் இருக்கும் கருணாநிதி, றிஸானாவின் மரணதண்டனையைக் கண்டித்தார் என்பதற்காக அவருக்கும் ஏச்சுப்பேச்சு. எதிர்கருத்தாளரை எப்படி எதிர்கொள்வதென்பதும், தனிமனிதனுக்கு இருக்கத்தக்க கருத்துச் சுதந்திரத்தையும், சமூகத்தில் தனிமனிதர்களுடைய வகிபாகத்தையும் இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மறுக்கின்றதையுமே இவை காட்டுகின்றன. ஈழத்திலும் இது தொடர்பான பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றன.

மிகத்தொன்மையான வரலாற்றைக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏதோ நேற்றுத் தோன்றிய மதம் என்பது போலும், தப்பபிப்பிராயங்கள் ஏற்படுத்தச் சதிகள் நடக்கின்றன என்பதாகவும் வரிந்து கொண்டு செயற்படுவது கேலிக்கூத்தாகி ஏனைய சமூகத்தவர்கள் முகம்சுளிக்கின்ற குரோதத்தை ஏற்படுத்துகின்ற நிலைக்கு வந்துள்ளது.

முரண்பாடுகளை இல்லாதொழிப்பதே ஜனநாயகத்தின் இலட்சியம். இஸ்லாம் என்பதே சமாதான வழி மார்க்கம். இஸ்லாத்தின் முன்மாதிரி முஹம்மது மன்னிப்பை நல்லிணக்கத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தியவர். இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நல்லிணக்கம் என்றால் எப்படி இருக்கும் என்று கேட்கின்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். ஏனைய சமூகங்களைப் பற்றிய எந்த அக்கறையும் அவர்களுக்கிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு மூடிய சமூகமாக, தொட்டாற்சிணுங்கி சமூகமாக, தொட்டதெற்கெல்லாம் கண்டனம், ஆர்பாட்டம், போஸ்டர் என கிளர்ந்தெழுகின்ற சமூகமாக நலிந்த சமூகமாக இஸ்லாமிய சமூகத்தை அடிப்படைவாதிகள் மாற்றி வருகின்றனர்.

பலநூறு பேரை கொத்து, கொத்தாக் கொன்று, கிராமங்கள் பலவற்றை அழித்து அட்டூழியம் புரிந்த ‘சுமாமா’ என்ற அராஜகனை முஹம்மது மன்னித்ததாக இஸ்லாமிய வரலாறு சொல்கிறது. சுமாமாவைத் துன்புறுத்தவோ குறைந்தபட்சம் திட்டவோ செய்யவில்லை என ஸஹீஹ_ல் புகாரி என்ற ஹதீஸ் கிரந்தம் கூறுகிறது. தன் இளைய தந்தையின் ஈரலைச் சப்பித் துப்பிய ஹிந்தாவையே மக்கா வெற்றியின்போது முஹம்மது மன்னித்தார் என்று இன்னொரு ஹதீஸ் கூறுகிறது. அக்கிரமங்களில் ஈடுபட்டவர்களை முஹம்மது மன்னித்தாரென்றால் றிஸானா றபீக் போன்ற அறியாச் சிறுமிகளை மன்னிக்க முடியாதா என்ன?

ரிஸானா 2005ஆம் ஆண்டு சவூதி அரேயியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற சிறுமி. நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்தாள் என்று 2007ஆம் ஆண்டு சவூதி அரேபிய அரசாங்கம் தீர்ப்பு வழங்கியது. 2013 ஜனவரி 09ஆந் திகதி சிறுமி றிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதி அரேபியாவினுடையது மதஅடிப்படைச் சட்டம் எனில் முஹம்மதின் முன்மாதிரியை கைவிட்டதை யாரும் விமர்சிக்கக்கூடாது என்கிறார்களா அடிப்படைவாதிகள்?

மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் றிஸானா றபீக் 5 ஆண்டுகள் சிறையில் இருந்தாள். அவளை விடுவிப்பதற்கு இஸ்லாமிய சமூகம் முயற்சி எடுத்ததா? மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்றுள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி இஸ்லாமிய சமூகம் ஆராய்ந்ததா? பொருளாதாரத்தை ஈட்ட பெண்கள் நாடு கடந்து செல்கின்றளவு இருக்கின்ற சமூகத்தேவை குறித்தும், அது தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எப்போதாவது அக்கறைப்பட்டுள்ளார்களா? பணிப்பெண்கள் என்ற பெயரில் அரபு நாடுகளில் பாலியல் அடிமைகளாகச் சிக்கிக் கிடக்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம் பெண்களை மீட்கவும், மறுவாழ்வளிக்கவும் அடிப்படைவாதிகளிடமுள்ள தீர்வுதான் என்ன? இஸ்லாமிய சமூகத்துக்குள்ளே புரையோடிக் கிடக்கின்ற சமூகக் கொடுமைகளுக்காக அக்கறைப்படாத அடிப்படைவாதிகள் யாராவது கருத்துக் கூறும்போது, எழுதும்போது, சினிமாவில் சித்தரிக்கும்போது மட்டும் இது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கச்சைகட்டிக் கொண்டு வந்துவிடுவது ஏன்?

இத்தகைய முரண்பாடான சூழ்நிலையினிடையே முஸ்லிம்கள் தீவிரவாதிகளைப் போன்று செயற்படுகின்றார்கள் என்று மேலைத்தேய நாடுகள் என்ன உள்நாட்டுக்குள்ளேயே குரல்கள் எழுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லையே.

பல்லின சமூகத்திற்குள் வாழுகிறோம் என்பதையே பல தருணங்களில் மறந்துவிடுவதும், இன்றைய செயற்பாடுகள் எதிர்கால சந்ததிகளை எவ்வளவு தூரம் பாதிக்கக்கூடும் என்பது குறித்ததுமான விரிவான நோக்குகளும் சிந்தனைகளும் இல்லாமலேயே இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாதிக‌ள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் மேலும், மேலும் பாதிக்கப்படுவது இஸ்லாமிய சமூகம் என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

-கீற்று-

About these ads

40 Responses to “மீண்டும் உளறும் சர்மிளா ஸெய்யித்”

  1. இவாட வாய வெச்சிட்டு சும்மா இருக்கபடாதா அவள நினச்சி உரல இடிகிறத்தான் இவட புலப்பு

  2. jaslan said

    ivvalavu naalum enka irunthavo theriyala

  3. araf said

    …………………. உனக்கு இஸ்லாத்தை பற்றி சொல்ல என்ன அருகதை இருக்கு ….சும்மா கோபத்த தீண்டாதே

    • தம்பாளை PL said

      ரிசான நபீக் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது சிருமியாம்..24….25..வயது .உனக்கு சிறுமியா???????உன் நாட்டில் கல்யாண வயது 18….உன் பாய் ப்ரண்ட் ஊரில்.அமெரிக்காவில் கல்யாண வயது 16…..அரபு நாடுகளில் பருவ வயதை அடைவது பெண்களின் பருவ வயது….17வயதும் 11மாதமும் 30நாலும் முடிந்த ஒரு பெண் சிறுமி.இன்னும் ஒரு நாள் கழிந்தால் மேஜரான பெண்ணாம்.இது அமெரிக்காவில் வேறு சட்டம்…

  4. Jaufar Mohd. Haneefa said

    Shut her mouth…..

  5. Jaufar Mohd. Haneefa said

    Friends…..
    We should ignore her totally….. plz dont give any importance for her stupid statements….

  6. kohillam said

    இதில் உளறுவதாக ஒன்றும் இல்லை கால்த்துகேற்ற கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றது

    • thalaban said

      விபச்சாரம் சட்டரீதியாக்கப்பட வேண்டும் என்று உளறுவதும் காலத்திற்கேற்ற கருத்தா?

      அப்படிச் சொல்லிவிட்டு, மன்னிப்புக்கு கேட்பதும் காலத்திற் கேற்றதா?

      மன்னிப்பை ஏற்ற சமூகத்தாரிடம், சும்மா விடமாட்டேன், வழக்குப் போடுவேன் என்று தன் தங்கையினூடாக மிரட்டுவதும் காலத்திற்கேற்றதா?

    • Muzzammil said

      Mr. kohillam விபச்சாரம் காலத்துக்கு எற்றது என்றால் அதை தயங்காமல் செய்வீரகள் போலும்

  7. MOHAMMEDFAROOK MOHAMMED ANEES KATTANKUDY. said

    ulamaakalin theerpuhalil thalaieduvathatku yarukkum avasiyam illai. athai pattri pesa aruhathayum illai.

  8. muslim said

    தயவு செய்து இந்த கட்டுரையை இன்போவை விட்டும் நீக்கவும். இவ்வாறான கட்டுரைகள் எழுதி பிரபல்யமாகி அவ பிழைப்பு நடத்துகிறதாக தெரிகிறது. சமுதாயத்தில் இதுபோன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஏனெனில் முஸ்லிம் சமூகம் என்பது ஒரு கடல் அதில் சில அழுக்குகளும் இருக்கத்தான் செய்யும் ஆனால் அவை நிரந்தரமாக கடலில் தங்கி விடுவதில்லை.

  9. win said

    சகோதரி சர்மிளா தனது பெயர் சர்வதேசம் வரையும் பேசப்பட வேண்டும் அதன் மூலம் தான் அனைவராலும் பேசப்பட வேண்டும் அதனால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என நம்பவைத்து தானும் தனது குடும்பமும் வெளிநாடு ஒன்றில் அரசியல் அல்லது பாதுகாப்பு தஞ்சம் பெற்றுக் கொண்டு செகுசு வாழ்க்கை வாழ மேற்கொள்ளும் ஒரு இராஜ தந்திரமே தேவையில்லாத விடயங்களுக்கு மூக்கை நுழைக்கின்றார்

  10. அப்பாவி ஆதம் காக்கா said

    “நாம் எத்தனையோ சினிமாக்களைப் பாத்திருக்கிறோம். ……… பார்த்து ரசித்துவிட்டு எதுவுமே நடவாதது போல திரையரங்கிலிருந்து வெளியேறி விடுகின்றோம்”

    அப்ப, நீ கொழும்பில Hallல படம் பார்த்து கூத்தடிக்கிறவள் எண்டு ஒத்துக் கொள்கிறாய். நீ எல்லாம் நபிட வாழ்க்கையை பத்தி சமுதாயத்துக்கு சொல்லி ……..பிஸ்மி சொல்லி பியர் குடி. அது இதவிட நல்லம்.

  11. adrm said

    allah ivallukku nalla valiyei kadda vendum + kalimachcholli meandum islathukku varathevarai ivalluk murthath paddam kodukka vendum.

  12. Anver K. said

    I do not see anything wrong in this article as there are plenty of points she has raised which many of our religious leaders will have no answer. She has every right to express her views and sad to see even the title to her views has been given as “Sharmila Seyyed blabbering again” something this editor should not have done. Why can’t we Muslims listen to critricism? Now don’t call me anti-Islamic or American agent – as how those who cannot take up truth blabber!

    • Nawas said

      ok brother, i agree with you no need to shout her because that is not the way of Islam, but she don’t want Interfere in something which she do not know well, and we are in very difficult situation our words should be very careful, if Muslim leaders make mistakes on their work they will be punished by Allah, Allah only know everything.

      Dear respected editor, please remove her statements from here because our Muslim brothers really getting pressure, and using some words which we don’t want to use for our Muslim sister (she has good knowledge “may Allah will give her opportunity to rectify her old statements and doing good deeds”)

  13. Niyas said

    before you write anything on Islam, you should know the subject. You might think that you if you can write an article , you will know everything. In fact, you are not liable to talk anything on Islam. Shut up and ……I don’t know what you are trying to prove here.

  14. rafi said

    கணம் Kattankudi Web Community …. இது மாதிரியான பைத்திய காரத்தனமான பதிவுகளை பதியாது இருந்தால் நல்லது. இதனால் நீங்கள் சர்மிளாவுக்கு விளம்பரத்தையே தேடி கொடுக்கிறிர்கள் என்று நினைக்கிறேன் ..

  15. KMK. Abdullah, Kalmunai said

    சகோதரியின் கருத்திலும் நியாயம் உள்ளது எமது உயிரிலும் மேலான இஸ்லாத்தை நாம் வெறியோடு பார்க்கின்றோம் என்று பிறர் நம்மை பார்த்து பிழையாக நினைக்க கூடாது.

  16. விஸ்வரூப வலிகள் !
    —————————————-
    கமலஹாசன் என்ற மனிதர்.,
    சிறந்த கலைஞர் !
    சிறந்த மனித நேயர் !
    மதங்களுக்கு அப்பாற்பட்டவர் !
    மிகவும் நல்ல மனிதப்பண்பாளர் !
    சீர்திருத்த சிந்தனையாளர் !
    ஊரறிந்த நாத்திகவாதி !
    சமூக ஆர்வலர் !
    மிகுந்த அப்பாவி ! -இவையனைத்துமே முற்றிலும் உண்மைதான் !

    ஆனால்.,இத்தனை பெருமைகளையும்
    கமலஹாசன் உண்மையிலேயே காப்பாற்றும் எண்ணமுடையவரானால் ..
    அவர் கண்டிப்பாக தம்மால் நிகழ்த்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிற அல்லது
    நிகழ்ந்துவிட்டதான இழப்பிற்கு அவருடைய இயல்பான பெருந்தன்மையுடன்

    குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளில் ஏற்பட்டுவிட்ட
    காயங்களுக்கு மருந்திடும்விதமாய்- நீதிமன்றமே
    தனக்குச் சாதகமான தீர்ப்பையே வழங்கியிருந்தாலும் கூட
    சம்பந்த்தப்பட்ட அந்த மதத்தின் முக்கியமானவர்களை
    மறுமுறையும் அழைத்துச்சந்தித்து – கொஞ்சமேனும் வருத்தம் தெரிவித்து ,

    இயலுமானவரை படத்தில் எதையாவது திருத்திக்கொள்ளவோ -நிறுத்திக்கொள்ளவோ
    முயற்சிக்கிறேன்..,என்று, ஒரு வார்த்தையையாவது கூறியிருப்பார்,-கூறியிருக்கவேண்டும்.
    ஏனென்றால்..முஸ்லிம்களுக்கும் கமலுக்குமான உறவு இத்தோடு முறிந்து போய்விடக்கூடியதல்ல!

    பொதுவாகவே சினிமாக்காரர்களும் ,பொது ஜனங்களும்
    சில விசயங்களை கொஞ்சம் மனிதாபிமானத்தோட சிந்திக்கணும் !

    ஒருவன் நல்லவன் என்பதாலேயே..அவன் கத்தியாலே வயிற்றிலேகுத்தினால்
    யாருக்கும் குடல்வெளியே வராது “!- என்கிற ,வாதத்தை
    தயவுசெய்து யாரும் -யாருக்காகவும் முன்னிறுத்தாதீர்கள் ! அடுத்து,

    முதலாவதாக பிரச்சினையை ஏற்படுத்துபவன் யார் ?
    இரண்டாவதாக பிரச்சினையை உண்டாக்குபவன் யார் ?-என்பதை,
    காழ்ப்புணர்ச்சியின்றியும் ,பாரபட்சமின்றியும் விசாரித்து நியாயம் சொல்லுங்கள் !

    பொதுவாய்.,சினிமா என்பதும் அவைசார்ந்த இன்னபிற படைப்புக்கள் எதுவானாலும்
    அவையொன்றும் வாழ்க்கையின் ஆதாரசுருதியுமல்ல ! சமுதாயத்தின் உயிர்மூச்சுமல்ல !
    இவையெல்லாமே அவற்றை ஆக்குபவர்களை மட்டுமே
    அடையாளப்படுத்துகிறது- அவர்களை மட்டுமே ஆடம்பரமாய் வாழவைக்கிறது!என்பதே உண்மை!

    தவிர., சினிமாவும் ஒரு போதைப்பொருள் ,
    சினிமாக்காரனும் புகழ் போதையில் இருப்பவன் – அல்லது
    போதையை தேடும் வெறியுடன் இருப்பவன் !

    அந்த போதையானது எனது மனம் கவர்ந்த பகுத்தறிவுவாதி?!
    கமல் அவர்களுக்கு சற்று மிகுதியாகவே உண்டு! இந்த போதையில்தான்
    முஸ்லிம்களின் மீது அவர்
    “மோடி” இடித்து வம்புக்குஇழுத்து விட்டார்!

    சரியாய் சொல்வதானால்.., ஒரு அவசியமும் இல்லாத “சினிமா”என்கிற
    ஒன்றை அரசியல்வாதிகளும் -ஆட்சியாளர்களுமே “அத்யாவசியத்தேவை” எனும்
    அவலநிலைக்கு தள்ளிவிட்டுவிட்டார்கள் !

    இங்கே மதங்களுக்குள் எச்சில்துப்பாமல் வசூலை வாரிக்குவித்த
    வணிகரீதியானபடங்கள்எத்தனையோஉண்டு !என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது! .

    லாகிரி வஸ்த்துக்களை விற்பவன் “நான் அதிகமாக முதலீடுசெய்து வியாபாரம் துவங்கிவிட்டேன் ,
    என் நிலைமையை யோசியுங்கள் “என்றோ ,
    நீங்கள் வேண்டுமானாலும் புகைத்துப்பாருங்கள் இதில் அப்படியொன்றும் போதை இருக்காது” என்றோ ,
    அல்லது, “பொதுமக்களிடம் நானே நேரில்சென்று விற்கிறேன் விரும்பியவர்கள் வாங்கட்டும் .,
    விரும்பாதவர்கள் போகட்டும் ” என்றோ, ,விளக்கம் தந்தால் ஏற்றுக்கொள்வோமா ..?

    அப்படி ஏற்றுக்கொள்வோமானால் .., அது
    அடுத்தவீட்டுக்காரரின் பிள்ளைகள் நமதுபேச்சை தட்டாமல் கேட்கக்கூடியவர்கள் என்பதற்காக
    பெற்றவர்களையே பகைத்துக்கொள்ளும்படி அவர்களுக்கு பாடம் நடத்தக்கூடியதர்க்கு சமமில்லையா ?!

    யாராகயிருந்தாலும் இங்கே எல்லைதாண்டுவதற்கு சுதந்திரம் இல்லை !

    ஏனென்றால்…ஒற்றுமையும் ,அமைதியும்,சந்தோசமும் அந்த எல்லைக்கோட்டில்தான் பரவிக்கிடக்கிறது !

    ரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்கிறீர்களே..,
    அந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையைவிட
    மதவாதிகள் ஏற்படுத்தும் பிரச்சினை கடுமையானதாக இருக்குமே என்று- யோசிக்கவில்லையா ?!, அல்லது

    இந்தியாவில் முஸ்லிம்கள் மைனரிட்டிகள்தானே ..அவர்களால் என்ன செய்துவிடமுடியும்..என்ற,
    பரிட்சார்த்தமுயற்சியா.?

    தயவுசெய்து நேற்றிருந்த அமைதி குலைந்துவிடாதபடி
    இன்றைய பொழுதை சீர்த்திருத்த முயற்சி மேற்கொள்ளுங்கள் !

    சரி.., கமலஹாசன் எந்த முட்டாள்தனத்தை – எந்த மூடநம்பிக்கையை களைவதற்காக
    இப்படி முழுவீச்சில் களமிறங்கியிருக்கிறார் ?
    நாட்டில் அவங்கஅவங்க வேலை- சோலிகளை பார்த்துக்கிட்டு
    அல்லா ன்னு இருக்கிறமக்களைச்சீண்டி நாட்டிலே இருக்கிற குழப்பமும் ,கலவரங்களும் போதாதென்று

    தனது சுயஆதாயத்திற்கான ஒரு தொழிலில்-வியாபாரத்தில் பலகோடி ரூபாய்களை
    முதலீடுசெய்து ஏற்கெனவே இந்தியாவில் பரிதாபத்திற்குரியவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிற
    ஒரு மைனாரிட்டி சமூகமாயுள்ள முஸ்லிம்மதத்தை ,அவர்களின் நம்பிக்கையை
    இவர் தாம்விரும்புகிற ஒரு கோணத்தில் மட்டும் மேலெழுந்தவாரியாக புரிந்துகொண்டும்

    அதைப்படமெடுத்தும் -பிறகு அதை மத்திய அரசு ஊழியர்கள் சிலரிடம் காண்பித்து
    அந்த படத்தை வியாபாரம் செய்வதற்கு ஒரு தடையில்லா சான்றிதழும் பெற்றுகொண்டு -
    சந்தைக்கும் வியாபாரம் செய்ய வந்திருக்கிறாரே..இதுதானா மனிதநேயம் ?!

    இதற்குப்பெயர்தான் சீர்திருத்தசிந்தனையா ? இவர் நம்பிக்கையின்படி பார்த்தால்..
    இனி எல்லா மதங்களும் ,எல்லா நம்பிக்கைகளும் தணிக்கைகுழுவிடம் கண்டிப்பாக
    சான்றிதழ் பெறவேண்டுமென்றும் சினிமாக்காரர்கள் கூறுவார்கள் போலிருக்கிறது! .

    இங்கே .,கமலஹாசன் ஆகட்டும் அல்லது வேறெந்த சினிமாக்காரர்களும் ஆகட்டும்-
    இவர்கள் யாரும் தங்களைத் தாமே ஒரு பெரிய அவதாரபுருசர்களாக கருதிக்கொள்வதை
    முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும்.கசாப்புக்கடை காரர்களை போல், சலூன் கடை காரர்களை ,
    மளிகைகடைகாரர்களைப் போல இவர்களும் ஒரு வியாபாரிகள்தான் -பிழைப்புவாதிகள்தான்!
    இதைஅவர்கள் நினைவில்வைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது!

    எந்தெந்த மதங்களெல்லாம் சரியானமதங்கள்..? எந்தெந்தமதங்களையெல்லாம்
    தொடர்ந்து நாட்டிலேஇருக்க அனுமதிக்கலாம்..,-என்று ,சினிமாக்காரர்கள் படம் எடுத்து ..,
    அதை இந்தியஅரசின் தண்ணிக்கை குழு அதிகாரிகள் தீர்மானித்துவிட்டால்..
    குறிப்பிட்ட அந்தமதத்தை தேசவிரோதமதம் என்றும், அந்தமதத்தைசார்ந்து இருந்தாலோ.,
    அல்லது அந்தமதத்தை பற்றி உயர்வாய் பேசினாலோ ..
    அவர்களை தேசப்பாதுகாப்புச்சட்டத்தில் கைதுசெய்து, மரணதண்டனையும் வழங்கிவிடலாமா ..?!
    தயவுசெய்து இதுபோன்று கோணல்தனமாக சிந்திக்காதீர்கள் !

    மதங்களை வரையறுப்பதும் – வடிவமைப்பதும், அந்தந்த மதங்கள் சார்ந்த உரிமை என்பதை
    உணர்ந்து பேசுங்கள் -செயல்படுங்கள் ! அப்படியே மதங்களைகைதுசெய்யவோ, சிறையிடவோ-
    சிரசேதம்செய்யவோ தேவையிருந்தாலும்கூட அந்தவேலையை சட்டசபையும் -பாராளுமன்றமும்
    பார்த்துக்கொள்ளும்.

    நீங்கள் கணிசமாக காசுபார்ப்பதற்கு என்ன வழி என்பதை யோசித்து
    உங்க வியாபாரத்தை மட்டும் கண்ணும் கருத்துமா கவனித்துக்கொள்ளுங்கள் ..,பிற கவனம் வேண்டாம்.!

    ஐம்பது வயசு சினிமா ஆயிரத்து ஐநூறு வயதுடைய மதத்தை வழிநடத்த ஆசைப்படுறது-
    உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா..?! அயிரைக்கு எதுக்கு விலாங்கு சேட்டை?

    “எனக்கு பிறந்த நாள், எனவே நீ உன் நேரத்தை -வேலையை வீணடிப்பதுடன்-,
    நூறு ரூபாயையும் செலவுசெய்து என் படம் பார்! இதுதான் உனக்கு நான்தரும் பிறந்த நாள் பரிசு!” என
    மக்களை ஒருவகை போதைக்கு உட்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை உறிஞ்சுபவர்கள்
    மதவாதிகளை சாடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது ?

    மதவாதிகளின் சொகுசுபிளான் ஒருசிறிய வட்டத்திற்குள் என்றால் -
    உங்களின் சொகுசுக்கனவோ உலகளாவியவட்டம்!. இதில் எங்கே இருக்கிறது சமூகப்பார்வை?

    தீவிரவாதம் என்கிறோமே ,அது என்ன ?
    ஒருவர் தமது கொள்கையிலே சற்று கூடுதலான பற்று வைப்பதற்கு பெயர் தீவிரவாதம் !
    சரி.,எந்தக்கொள்கையிலே தீவிரமாக இருக்கிறார்கள் ?
    கடவுள் -மதம் சார்ந்த கொள்கையிலே தீவிரமாக இருக்கிறார்கள்!

    சரி.,கடவுள் -மதம் என்பது என்ன ? அவையெல்லாமே நம்பிக்கைசார்ந்த விசயம்தான் !
    சரி.,நம்பிக்கை என்பது என்ன ? அது முட்டாள்தனங்களின் முழுஉருவம் !

    சரி..,அவை என்ன.,என்ன ? கருவறை துவங்கி கல்லரை வரையிலும்
    முட்டாள்தனங்கள்தான் வாழ்க்கையை முன் நிறுத்துகிறது !

    செத்துப்போய் மண்ணுக்குள் புதைந்து போனவன்
    கல்லுக்கு வந்து காட்சிதருகிறானே..அது முட்டாள்தனம்தான் !
    அந்த கல்லுக்கு அணி அணிஅணியாய் சென்று
    அஞ்சலி செய்கிறோமே அது முட்டாள்தனம்தான் !

    செத்துப்போனவனை அடக்கமாக அடக்கம் செய்யாமல்
    தீயிட்டுக்கொளுத்தி சுற்றுப்புறத்தையும் -சுவாசிக்கும் காற்றையும்
    மாசுபடுத்துகிறோமே..,அது முட்டாள்தனம்தான் !

    செத்துப்போனபிறகும் தனக்கென ஒருதனிவீடு(சமாதி)வேண்டுமென்று கட்டச்சொல்லி
    கட்டையில் போகிறானே..,அது முட்டாள்தனம்தான் !

    இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்..,
    ஆக, மையத்தில் நின்று மதிமயங்காமல் சிந்தித்துப்பார்த்தால்
    கடவுள் ,கற்பு,அறிவு,ஆரூடம்.. என,எல்லாமே நம்பிக்கை சார்ந்ததுதான் !
    நம்பிக்கைசார்ந்த எல்லாமே முட்டாள்தனங்கள்தான்!

    நெற்றியிலே குங்குமம் முட்டாள்தனம்! தலையிலே குல்லா முட்டாள்தனம்!
    நிசப்தத்தில் மனதோடு மனதாக சந்திக்கவேண்டிய இறைவனை –
    ஒப்பாரியோடும் ,கும்மாளத்தோடும் கூக்குரலிட்டு கூப்பிடுவது முட்டாள்தனம்! ,
    தாலி முட்டாள்தனம் , தாயத்துமுட்டாள்தனம் , மதங்கள் முட்டாள்தனம் ,
    கடவுள்கள் முட்டாள்தனம், பண்டிகைகள் முட்டாள்தனம்!

    ,இன்னும் சொல்லப்போனால்
    தேசக்கொடிக்கு சல்யூட்அடிக்கிறோமே அதுகூட மனம்சார்ந்த -
    நம்பிக்கைசார்ந்த ஒரு சடங்குதானேதவிர, அறிவுசார்ந்த அணுகுமுறையல்ல !

    மொத்தத்தில் “மூடும் பழக்கமும் மனம் சார்ந்ததுதான்..-
    நம்பிக்கை சார்ந்ததுதான்..,முட்டாள்தனமானதுதான்”!

    இவற்றில் எதை கமலஹாசன் விட்டொழித்து வெற்றிக்கொடிநாட்டப்போகிறார் ?!
    கமலஹாசனும் ,அவருக்காக வக்காலத்துவாங்கும்
    ஞானசூன்யங்களும் இதற்கு பதில் சொல்லட்டும்!
    .
    (சினிமா தோன்றியதற்கு முன்பிருந்த ஜாதிமதப்பிரிவுகளின் எண்ணிக்கையையும் ,
    அதற்கு பிறகு காணும் ஜாதி மதபிரிவுகளின் எண்ணிக்கையையும்,
    இன்னும் .,கண்ணில் பட்ட இடத்திலெல்லாம் கடைவிரித்திருக்கும்
    கடவுள் கூட்டங்களின் எண்ணிக்கையையும்., இந்த சினிமா மற்றும் சினிமா சார்ந்த
    கூத்தரசர்கள் மட்டுமல்ல!.,
    தயவுசெய்து பொது மக்களும் கொஞ்சம்கூர்ந்துகவனித்து சிந்திப்பார்களாக! )

    வேலைமெனெக்கெட்ட விஸ்வரூபத்திற்கும் ..
    வெட்டித்தனமான சினிமாக்காரர்களுக்கும் சில யோசனைகள் ..!
    ————————————————————————————————————-
    சினிமாவை சினிமா என்ற கண்ணோட்டத்தில் மட்டும் படமெடுங்கள் ,
    அளவுக்குமீறிமுயற்சிசெய்து யதார்த்தத்தை கொண்டுவருகிறேன் பேர்வழி என்று
    எக்கச்சக்கமான சிக்கல்களுக்கு நீங்களும் உள்ளாகாதீர்கள்!
    மற்றவர்களையும் சங்கடப்படுத்தாதீர்கள் !

    ஒரு தனிநபருடைய இடங்களை அல்லது பொருட்களை படம்பிடிப்பதற்கு
    அந்த உரிமையாளரிடம் அனுமதி பெறுவது போல
    மதங்களை மையப்படுத்திதான் நீங்கள் படம் எடுக்கபோகிறீர்கள் என்பது
    உறுதியாகிவிட்டபிறகு
    அந்த மதத்தை சார்ந்த மதகுருக்களை யாரையாவது சந்தித்து
    கதைசொல்லி அல்லது கதைகேட்டு
    ஐயமின்றி-அச்சமின்றி தகவல்களை சேகரித்தபின்பு காட்சிபடுத்துங்கள் ! அல்லது

    அரசாங்கமே தணிக்கைக்குழுவில் மதம்சார்ந்தவிசயத்தை
    முற்றிலுமாக அறிந்த அந்தந்தமதகுருக்களையும்
    அந்தந்தமதங்களின்சார்பாக நியமனம்செய்யட்டும் !

    மக்கட்டி தவசிகுலன்
    babamubeen@gmail.com

  17. naim said

    ஷர்மிளா ரொம்ப பாவம்!பிரபல்லியமாகிக்கலாம் என்று ரொம்ப முயற்சி பண்றா..யாருமே கண்டுக்கிராங்கள்ள…எழுத்தாளர் என்ற நினைப்பு…என்ன செய்ய?எதுக்கும் ஒரு லக் வேணும்.இஸ்லாத்தை பற்றியெல்லாம் பேசுறிங்க…ரொம்ப திருந்திட்டிங்க!முஹம்மது முஹம்மது என்று உங்க மூத்தப்பாவை சொல்றது போல் சொல்கிறீர் என்ன இதுக்கும் ஏதும் கிடச்சுட்டோ!!!

  18. safras said

    she is using ‘இஸ்லாமிய அடிப்படைவாதிகள்’ everywhere in this article because her previous idiotic and barbaric statement got severe criticism by the community. she is trying to tell that community was wrong in her previous case as well. This article is full of her stupidity and there may be some valid points but the way she is trying to express those points made the article a complete bullshit.

  19. Hassan said

    It’s better to approah her,and clarify the matters on Islamic perspective(as she lack in Islamic knowledge).rather than publishing this article in kattankudi.info.or ignore her rabbish article (ignore the saitanic worshipers hate mongering against Islam and muslims).

  20. mohamed said

    சில விடயங்ளில் உண்மை இருக்கிறது.பல விடயங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டு்ம்.

    • thalaban said

      மீளாய்வு செய்வதைக் கூறலாமே!

      • mohamed said

        விளங்கிக்கொள்பவா்கள் விளங்குவா். இது விமா்சனக்களம் என்றால் நிச்சயம் விளக்குவேன்.. நாங்கள் போட்டி போடும் களமல்ல.. இதுவும் புரியாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.வசனங்களால் வெல்ல நினைப்பதை விட வார்த்தைகளால் சொல்ல நினைப்பதே மேல்.தொலைபேசி இலக்கத்தை முடியுமென்றால் தாருங்கள்.விளக்குகிறேன் நாகரிகமாக.

      • thalaban said

        விளங்கமுடியவில்லை என்பதால்தானே, தங்களிடம் மீளாய்வின் பெறுபேறுகளை வினவுகிறேன்.

        வார்த்தைகளின் கூட்டும் வசனங்கள்தானே! தங்களிடம் வென்று நான் என்ன பலனை அடையப் போகிறேன்.

        தொலைபேசி வைத்துக் கொள்வதற்கு என் பொருளாதாரம் இடம் தரவில்லை.

  21. anver said

    காத்தான் குடி இன்போவுக்கு ஒரு சிறிய வேண்டு கோள் . சிலர் வாய்க்கு வந்த வாறெல்லாம் உளறி இன்போ மூலமாஹா popular ஆக முயற்சிக்கின்றனர் .வரும் தகவல்களை நன்றாக படித்து அதனை பிரசுரிக்கவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் .இவ்வாறான தகவல்களை நீக்கி விடுங்கள்

  22. musthafa salami said

    சர்மிளாைவ ஏறாவுர் தேடுகிறது கல்லெறிந்து கொள்வதற்கு எங்கம்மா இருக்கிறாய்

  23. Rinoos said

    Ival Pasuth thoal Poaththiya Puli.
    Iwal pinnal Islamin Athirihal Irukkiraarhal Ana yoohikkalaam

  24. muslim said

    em uyir nabihalarai verum mohammed enru kooriyevel eppedi muslima irukke mudium

  25. Habeeb said

    I do not see anything wrong in this article as there are plenty of points she has raised which many of our religious leaders will have no answer. She has every right to express her views and sad to see even the title to her views has been given as “Sharmila Seyyed blabbering again” something this editor should not have done. Why can’t we Muslims listen to critricism?

    • thalaban said

      Hello Habeeb,

      It is so pathetic that you have keenly supported Sharmila’s blabbering article.

      She has written this in Keetru website, not in this.

      She could write any article like this, but she should come forward to answer the questions what we pose?

      It is not a duty of religious leaders to answer all her lunatic expressions.

      Tell your Sharmila baby, to come forward to face our questions if she has back born.

  26. அபூ அத்னான் said

    இந்தக் கட்டுரையை ஆழப்படிப்பவர்களுக்கு நன்றாகவே
    புரியும் இதனது கரமேதுவென்று. உள்ளங்கை நெல்லிக்
    கனி என்பார்களே அதுபோன்று.

    சகோதரி சர்மிலா ஏன்தான் இவ்வலையில் சிக்கி சீரழி
    கின்ராரோ தெரியவில்லை. ஏதேனும் உங்களுக்கு பெரிய
    தேவை இருக்குமாயின் எம்மின சகோதர்களிடம் அல்லது
    சகோதர அரசியளாலர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள
    லாமே?

    நீங்கள் இன்னுமின்னும் எம்மையும் எம் ”உம்மத்”தின
    ரையும் சீண்டிப்பார்க்கின்றவர்களின் கோட்டைக்குள்
    இருந்துகொண்டு அடிக்கடி உளறுவதும் – கிறுக்குவதுமாய்
    எமது இஸ்லாமிய சகோதரிகளை பாடாய்படுத்துகிறீர்கள்!
    உங்களின் இவ் ஈனச்செயலினால், உங்களை ஈன்று ஆளாக்
    கிய தாய்தந்தையர்களின் உள்ளங்கள் எவ்வளவு அவமான
    மும் வேதனையும் அடையும் என்பதை நீங்கள் எண்ணிப்
    பார்க்கவில்லையா?

    இவைகளின் விளைவுகளையும் அனுகூலங்களையும் விளங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு மூளைச்சலவை
    செய்யப்பட்டு விட்டீர்களோ.. என்னவோ ? என்று எண்ணத்
    தோண்றுகிறது?!

    சகோதரி சர்மிலா! இவ்வுலகம் சொற்பமானது. நமது
    ”மெளத்” நாம் அணிந்திருக்கும் ஆடையை விட மிக அரு
    காமையில் உள்ளது. இவைகள் எல்லாம் நீங்கள் தெரியா
    தவையல்ல!

    எனவே, எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் ”கிதாயத்”
    காக மன்றாடுங்கள். அவன் மகா கிருபையாளன். தாயை
    விட நூறுமடங்கு இரக்கம் கூடியவன்.

    நாங்களும் உங்களுக்காக பிராத்திக்கின்றோம்!

    நன்றி!

  27. KMK. Abdullah, Kalmunai said

    சகோதரியின்(சர்மிளா) கருத்திலும் நியாயம் உள்ளது எமது உயிரிலும் மேலான இஸ்லாத்தை நாம் வெறியோடு பார்க்கின்றோம் என்று பிறர் நம்மை பார்த்து பிழையாக நினைக்க கூடாது.

    தொடர்ந்தும் தங்களின் துணிச்சலான கருத்துக்களையும் ஆக்கங்களையும் எதிர்பார்கின்றேன்

    • Thalaban said

      ஹலோ மிஸ்டர்,

      இப்படி எல்லாம் உளறிக் கொட்டுவதற்கு துணிச்சல் வேண்டுமா?

      தெருவில் போகும் நாயெல்லாம் இதை விட நன்றாக எழுதுமே!

  28. Ali Akbar said

    இந்தக் கட்டுரை எந்த இணையத்தில் இருந்து பிரதி பண்ணப்பட்டதோ அதே இணையத்தில் ஸர்மிளா ஸெய்யித் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அந்தக் கவிதை சொல்கிறது, யார் என்ன உளறினாலும் நான் நிற்கமாட்டேன் என்று. இதுதான் அந்தக் கவிதை.

    ஹூருல் ஈன்கள்

    முள்ளற்ற இலந்தை மரத்தின்
    நீண்ட நிழல்

    தெளிவான உயர் மது நிரம்பிய
    கிண்ணங்கள், குவளைகளை
    ஏந்தியபடி அலையும் சிறுவர்கள்
    பட்சிகளின் மாமிசம்
    காலவித்தியாசமின்றி எச்சமயத்திலும்
    செழித்துக் கிடக்கும்
    ஏராளமான கனிவர்க்கங்கள்

    ஒன்றின் மேல் ஒன்றாக
    உயரமாக்கப்பட்ட விரிப்புகளில் கம்பளங்களில்
    இருக்கைகள், சிம்மாசனங்கள்
    பொன்னிழைகளால் ஆன உன்னதக் கட்டில்கள்

    கேட்பது அத்தனையும் கிடைக்கும்
    நினைப்பது வசமாகும்

    எத்தனை பரவசமானது
    பிர்தவ்ஸ்

    இலந்தை மரத்தின் நிழலாக
    ஓடிக்கொண்டேயிருக்கும்
    நீராறு, பாலாறு, தேனாறு, மதுவாறு
    பட்சிகளின் மாமிசமாக
    கனிவர்க்கமாக
    ஹூருல் ஈன்களும்…

    பெண்ணுடல் மீளுருவாகிறது
    நன்மையான செயலுக்குக் கூலியாக
    ஹூருல் ஈன்கள்

    ஆக, சொர்க்கத்திலும் பிண்டம்தான் பெண்!

    ***
    1. பிர்தவ்ஸ் – சொர்க்கம்
    2. ஹூருல் ஈன்கள் – இளமையான சொர்க்கத்துப் பெண்கள்

    • Thalaban said

      இப்போது ஷர்மிளா சிறகு முளைத்த, முண்டமற்ற பிண்டம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,368 other followers

%d bloggers like this: