காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

பொது பல சேனாவுடன் ஜானாதிபதி விசேட சந்திப்பு

Posted by Kattankudi Web Community on 27/01/2013

1116 ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட ஆங்கில அறிக்கையின் முக்கிய விடயங்கள் தமிழில்:

இன்று 27.01.2013 அலரி மாளிகையில் ஜனாதிபதிக்கும் பொது பல சேனா இயக்கத்தின் முக்கிய தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

சந்திப்பில் பிரதானமாக முஸ்லிம்களுக்கும், பெளத்த குழுக்களுக்கும் இடையில் இடம்பெற்று வரும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. ஊடகளில் வெளியான பல்வேறு தகவல்களை மையப் படுத்தி ஜனாதிபதி இனவாதத்தை தூண்டகூடிய நடவடிக்கை என்று தோன்றும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் என்று பொது பல சேனா இயக்கத்தை கோரியுள்ளார் .

மேலும் ஜனாதிபதி ‘பெளத்த மதத்தை பலப்படுத்துவதற்காக செயலாற்றுவது சரி, ஆனால் மற்ற மதங்களுடம் மோதலை உருவாக்காமல் அது செய்யப்படவேண்டும் ‘என்று பொது பல சேனாவிடம் தெரிவித்துள்ளார் .

இந்த சந்திப்பில் பொது பல சேனா இயக்கத்தின் ஐந்து தேரர்கள் கலந்து கொண்டுள்ளனர் இயக்கத்தின் தலைவரான கிரமா விமலஜோதி , கலாகோடாதே ஞானசார , விதாரடெனிய நந்த தேரர்கள் உட்பட ஐந்து தேரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான தினனேஷ் குணவர்தன , சுசில் பிரேமஜயந்த, புத்த சாசன பிரதியமைச்சர் குணவர்த்தன , ஜனாதிபதியில் செயலாளர் லலித் வீரதுங்க, மேல்மாகாண சபை அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமையவின் கொள்கை பரப்பு செயலாளருமான உதய கம்பன்பில ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

ஊடகளில் வெளியான பல்வேறு தகவல்களை மையப் படுத்தி ஜனாதிபதி இனவாதத்தை தூண்டகூடிய நடவடிக்கை என்று தோன்றும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் என்று பொது பல சேனா இயக்கத்தை கோரியுள்ளார்.

இதற்கு அவர்கள் தமது அமைப்பின் பெயரை தமது சொந்த நோக்கத்துக்காக வேறுசிலர் பயன்படுத்துவதாகவும். மற்ற மதங்களை நிந்திப்பதை தாம் ஏற்றுகொள்ள வில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடம் பொது பல சேனா இயக்கத்திதினர் தெரிவித்துள்ளனர் .

ஜாதிக ஹெல உதய கம்பன்பில

இதில் கலந்துகொண்ட மேல் மாகாண சபை அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமையாவின் கொள்கை பரப்பு செயலாளருமான உதய கம்பன்பில போலியான பெயர்களை பயன்படுத்தும் வேறு குழுக்கள் சம்பந்தமாக விளக்கியுள்ளதுடன், மதங்கள் மத்தியிலான சமாதானத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்துள்ள உதய கம்பன்பில குளியாபிட்டியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பன்றியின் உருவத்தை பயன்படுத்தி இஸ்லாத்தை அவமரியாதை செய்தமையையும் கண்டித்துள்ளார் ‘நாங்கள் எமது மதத்தை விரும்புகிறோம் அவர்கள் அவர்களின் மதத்தை விரும்புகிறார்கள் ‘ என்றும் தெரிவித்துள்ளார்

‘நாங்கள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்தும் அவர்களின் ஒழுங்குமுறையில் இருந்தும் பாடம் கற்க வேண்டும்’

இந்த சந்திப்பில் தாமும் குளியாபிட்டி செயல்பாடுகளை ஏற்றுகொள்ள வில்லை என்று பொது பல சேனா இயக்கத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் .நோலிமிட் சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த அவர்களில் ஒருவர் நாங்களை அதை செய்யவேண்டாம் என்று கூறினோம் இது பெளத்த மதத்துக்கும் இநாட்டுக்கும் நல்லதல்ல என்று கூறினோம் . எங்கள் மத்தியில் எமது மதத்துக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டும் . ‘நாங்கள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்தும் அவர்களின் ஒழுங்குமுறையில் இருந்தும் பாடம் கற்க வேண்டும் என்றார்’ .

ஜனாதிபதி மஹிந்த, அமைச்சர் பசில் ஹலால் சான்றிதழ் விளக்கம்

ஹலால் சான்றிதழ் தொடர்பில் அதிகமாக கேள்விகள் எழுப்பட்டுள்ளது. அவற்றுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் , பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் ஹலால் சான்றிதழ் முறைமை தொடர்பாகவும் , வியாபரத்துக்கு அவை பயன்படுத்தப் படும் காரணம் பற்றியும் விளக்கியுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒருமுறை

இந்த கலந்துரையாடல் முடிவதக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒருமுறை நாட்டில் இன , மத அமைதியை பராமரிக்க உதவுமாறு அந்த பெளத்த தேரர்களிடம் கோரியுள்ளார் . இது தொடர்பில் அவர்களிடம் ஜனாதிபதி கூறும்போது ‘ பெளத்த மதத்தை பலப்படுத்துவதற்காக செயலாற்றுவது சரி இஆனால் மற்ற மதங்களுடம் மோதலை உருவாக்காமல் அது செய்யப்படவேண்டும் ‘என்று தெரிவித்துள்ளார்

1116

Presidential Media: While discussing a number of problems pertaining to Buddhist temples, priests and the practice of the Buddhist religion in the country overall, one of the main points of the conversation revolved around some of the ongoing disputes between some Muslim and Buddhist groups.

 Referring to the various messages that have appeared in the media recently, President Rajapaksa requested the group not to engage in any activities that would be seen as promoting communal hatred.

 The five priests at the meeting, including the head priest Kirama Vimalajothi Nayaka Thero, Galagodaaththe Gnanasara Thero and Vitharandeniye Nanda Thero, informed the President that there are duplicate groups that claim to represent Bodu Bala Sena and use the name for their own purposes. The group reassured President Rajapaksa that they do not condone insulting other religions.

 Provincial council minister Udaya Gammanpila, who further detailed the problem with duplicate groups, reiterated the importance of inter-religious harmony. Condemning the recent incident that insulted the Islamic religion with the photograph of a swine, Minister Gammanpila said, “Just as we love our religion, they love their religion.”

 Priests form the Bodu Bala Sena added that they too do not condone such behavior. Referring to the protest in front of the Nolimit store in Maharagama, one of the Buddhists priests said, “We said don’t do it. It’s not good for Buddhism or the country. Let’s fix problems within our own religion. Let’s learn from the Muslim community and their discipline.”

 For several questions that arose pertaining to the Halal certification, President Rajapaksa and Economic Development Minister Basil Rajapaksa outlined in detail the Halal certification process and the reasons for its use by businesses.

Before the discussion ended, President Rajapaksa once again repeated his request for Buddhist priests to help maintain ethnic and religious harmony in the country. “It is OK to work to strengthen the Buddhist religion, but it should be done without creating conflicts with other religions,” President Rajapaksa said.

 Among the others present at the discussion were Minister of Water Supply & Drainage Dinesh Gunawardena, Minister of Petroleum Industries Susil Premajayantha, Deputy Minister of Buddha Sasana and Religious Affairs M.K.A.D.S. Gunawardana, Secretary to the President Lalith Weeratunga and Chief-of-Staff Gamini Senerath.

Lankamuslim
About these ads

2 Responses to “பொது பல சேனாவுடன் ஜானாதிபதி விசேட சந்திப்பு”

  1. Anver K. said

    When racism and religous intolerance is displayed blatantly, action more than mere words is required by the rulers.

  2. siddeeq said

    இப்பிரச்சனை தொடர்பாக முஸ்லிம் தலைவர்களும் ஜனாதிபதி அவர்களும் கலந்துரையாடிய விசேட சந்திப்பொன்று நடந்தபிரகு பெரும்பான்மை அமைப்பினரும் ஜனாதிபதி அவர்களும் கலந்துரையாடிய விசேட சந்திப்பு தற்போது நடந்துவிட்டது.

    இருந்தாலும் பெரும்பான்மை அமைப்பினர், ஜனாதிபதி, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அ.இ. ஜம் இயதுல் உலாமா ஆகியோர்களை உள்ளடக்கிய முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று நடைபெற்று முஸ்லிம்கலின் பள்ளிவாயல்கள், வர்த்தகம், மார்க்க சட்டங்கள் என்பனவற்றுக்கான உரிமைகளின் உத்தரவாதம் உறுதிப்படுத்தப் படல் வேண்டும். இல்லையேல் பெரும்பான்மை அமைப்பினர் நாங்கள் செய்யவில்லை என்று அடுத்தவர்களின் மேல் பலிசுமத்துவதும், உண்மையில் யார் இதைச் செய்தார்கள் என்று அரசாங்கம் கண்டறியாமல் நாடகமாடுவதும் தொடர்கதையாகவே இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,368 other followers

%d bloggers like this: