காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி பதுறியா பள்ளிவாயலில் இரத்ததான நிகழ்வு
Posted by Kattankudi Web Community on 27/01/2013
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்குவதற்கான இரத்ததான நிகழ்வொன்று காத்தான்குடியில் நேற்று (26.1.2013) நடைபெற்றது.
காத்தான்குடி அஷ்ஷுப்பான் நலன்புரி அமைப்பு மற்றும் காத்தான்குடி றப்பானிய்யாஹ் இளைஞர் கழகம் ஆகிய நிறவனங்களின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி பதுறியா பள்ளிவாயலில் இந்த இரத்ததானம் நடைபெற்றது.
இந்த இரத்த ஆரம்ப வைபவத்தில் காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.எம்.ஜெஸீம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.ஸிறாஜ், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், மௌலவி எச்.எம்.எம்.இப்றாகீம் நத்வீ உட்பட முக்கியஸ்த்தர்கள் பிரமுகர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், அதிகாரிகள் பொதுமக்கள் பொலிசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது இருநூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இரத்ததானம் செய்தனர்.













Zubani said
Really Good Job….
mohd fareed said
masaallah very excellent job this continue.