காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

அரசியல் கட்சிகளின் பெயர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படும் !

Posted by Kattankudi Web Community on 27/01/2013

mahinda_desapiriya_200_135இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பெயர் பட்டியல் 31ஆம் திகதி வெளியிடப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறுவதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல் யாப்பின் அடிப்படையில் சொத்துக்கள் தொடர்பான பிரகடனங்கள் மற்றும் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பித்த அரசியல் கட்சிகளின் பெயர் பட்டியலை எதிர்வரும் 31ஆம் திகதி வெளியிடப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் செயலாளர்களினால் இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கும் படி கோரிக்கை விடப்பட்டது. இதனை முன்னிட்டு இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேவையான தகவல்களை வழங்காத அரசியல் கட்சிகளின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளது. இலங்கையில் இது வரை 64 அரசியல் கட்சிகள் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About these ads

One Response to “அரசியல் கட்சிகளின் பெயர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படும் !”

  1. நம்ம ஊரில் உருவான அரசியல் கட்சிகளின் நிலமை என்னவோ??? இந்த பட்டியலிலாவது அரசியல் செய்ய அவர்கள் கட்சியாக பதிவு செய்த அறிவிட்பு வெளிவருமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,365 other followers

%d bloggers like this: