காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

தேசிய கீதத்தில் தமிழ் மொழியை கலந்தால் பிரச்சினை: ராமன்ய பீடாதிபதி

Posted by Kattankudi Web Community on 26/01/2013

srilankan flagதேசிய கீதத்தில் தமிழ்மொழியையும் உள்ளடக்கினால் பிரச்சினை உருவாகும் என்று  சிறிலங்கா ராமன்ய பீடத்தின் பிரதம சங்கநாயக்க வண. நபன பிறேமசிறி நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, இலங்கையின் தேசிய கீதத்தில் தமிழ் மொழியும் உள்ளடக்கும் யோசனை ஒன்றை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்துள்ளார்.
மடவளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே இலங்கை ராமன்ய பீடத்தின் பிரதம சங்கநாயக்கரான வண. நபன பிறேமசிறி நாயக்க தேரர்,

இலங்கையின் தேசிய கீதத்தினுள் தமிழ்மொழியும் சேர்க்கப்பட்டால், நாட்டில் மேலும் பல பிரச்சினைகள் தோன்றும்.

எல்லா இனத்தவர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலேயே, இந்த தேசியகீதம் 1940களில் இயற்றப்பட்டது.

நாட்டில் உள்ள எல்லா இன மக்களிடையேயும் இது சகோதர உணர்வை ஏற்படுத்துகிறது.

இந்த தேசிய கீதத்தை எல்லா இனமக்களும் மதிக்கின்றனர். இதனை மாற்றும் அரசியல்வாதிகளின் முயற்சி அதிர்ச்சி அளிக்கிறது. இது இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சி என்றார்.

Source-tamilmirror

About these ads

2 Responses to “தேசிய கீதத்தில் தமிழ் மொழியை கலந்தால் பிரச்சினை: ராமன்ய பீடாதிபதி”

  1. Dr M L Najimudeen said

    இலங்கையில் தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து என்று வான் முழங்கக் கூறுகிறார்கள். ஆனால் தேசிய கீதத்தில் இரண்டு வரிகள் தமிழில் இடுவதற்கு இத்தனை எதிர்ப்புக்கள் தெரிவிக்கிறார்கள். சிங்களம் ஒரு சொல்லேனும் தெரியாத பத்து இலட்சம் மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். சிங்களத்தில் பாடும்போது எந்தத் தேசிய உணர்ச்சி அவர்களுக்கு வரும்?

  2. abooabdurrahman said

    தேசிய கீதம் என்பது தேசத்திற்கும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும், அப்போதுதான் அது தேசிய கீதமாக இருக்கமுடியும். ஆளுக்கொரு பாசையில் இருந்தால் அது தேசியகீதமாக இருக்காது. எமது “அதானை” எடுத்துக்கொண்டால், அது ஒவ்வொரு நாட்டுப்பாசையிலும் ஒலித்தால் எப்படி அதில் தனித்துவம் இருக்காதோ, அதே போன்று தேசிய கீதத்திலும் தனித்துவம் இல்லாது போகும், என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,324 other followers

%d bloggers like this: