காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

அனர்த்தங்களின் போது ஊடகவியலாளர்கள் யாராலும் கணக்கிலெடுக்கப்படுவதில்லை-வாரஉரைகல் ஆசிரியர் றஹ்மத்துல்லா

Posted by Kattankudi Web Community on 26/01/2013

Pooviநமது நிருபர்

அனர்த்தங்களின் போது ஊடகவியலாளர்கள் யாராலும் கணக்கிலெடுக்கப்படுவதில்லை ஊடகவியலாளர்களும் அனர்த்தங்களினால் பாதிக்கப்படுகின்றனர் ஆனால் அவர்களுக்கு எந்தவித நிவாரணங்களும் வழங்கப்படுவதில்லை என வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.ஐ.றஹ்மத்துல்லா தெரிவித்தார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் புதிய காத்தான்குடி அலகுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போதே வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.ஐ.றஹ்மத்துல்லா மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் ஊடகவியலாளர்கள் பல் வேறு அனர்த்தங்களின் போதும் தமது ஊடகப் பணியினை சிறப்பாக மேற் கொண்டு அனர்த்த பாதிப்புக்குறித்தும் மக்கள் அதில் படும் இன்னல்கள் குறித்தும் வெளி உலகுக்கு தெரியப்படுத்துகின்றனர். ஆனால் அதே ஊடகவியலாளர்கள் அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் போது அவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை.

ஒரு வைபவத்திற்காக ஊடகவியலாளர்களாக அழைக்கபடும் ஊடகவியலாளர்களுக்கு அங்கு பரிமாறப்படும் சிற்றண்டிகள் கூட வழங்குவதற்கு மறந்து விடுவார்கள் அல்லது அங்கு கலந்து கொண்ட எல்லோருக்கும் வழங்கி விட்டு இறுதியாக கொடுப்பார்கள். சில வைபவங்களில் ஊடகவியலாளர்களுக்கு கதிரைகள் கூட இருக்காது.

ஆனால் சமூகத்தில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எவ்வளவு தாக்கத்தை செலுத்துகின்றனர் என்பதை இவர்கள் புரிந்திருந்தும் ஊடகவியலாளர்களை சிலர் கணக்கிலெடுப்பதில்லை. தற்போதைய வெள்ள அனர்த்தினாலும் மாவட்டத்திலும் காத்தான்குடியிலும் பல ஊடகவியலாளர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாரும் இவர்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை. எல்லோருக்கும் நிவாரணம் வழங்குவார்கள் அதை ஊடகவியலாளர்கள் செய்தியாக்கி வெளியிடுவார்கள் ஆனால் அதில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை கவனத்திற் கொள்வதில்லை.

எனவே தான் இலங்கை செஞ்சிலுவைச் சங்கமானது வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் உதவ வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

 இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தனது மனிதாபிமான பணியினை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது எனவும் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.ஐ.றஹ்மத்துல்லா மேலும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் உப தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லா மற்றும் காத்தான்குடி கிளையின் தலைவர் எம்.றாபி, மாவட்ட கிளையின் செயலாளர் மதிசுதன் உட்பட அதன் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

About these ads

6 Responses to “அனர்த்தங்களின் போது ஊடகவியலாளர்கள் யாராலும் கணக்கிலெடுக்கப்படுவதில்லை-வாரஉரைகல் ஆசிரியர் றஹ்மத்துல்லா”

  1. Muzzammil said

    இவருக்கு யாராவது நிவாரணம் வழங்கினால் அதிலும் ஊழல் மோசடி என்று கூறி பக்கம் பக்கமாக எழுதி தனது பிழைப்பை தொடருவார்

  2. abooabdurrahman said

    நல்லதை எழுதி நல்ல பேர் வாங்கும் ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள், நாற்றத்தை தேடித் தேடி எழுதி ஊர்வம்பை விலைக்கு விற்கும் ஊடகவியலாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் இவர் எந்தரகமோ?

  3. naraham said

    sariya chonninga..

  4. உண்மை said

    ஊடகவியலாளர்கள் சமூகத்திற்காக மற்றும் சமூக இருப்பிற்காக பாடுபடுபவர்கள். சகோ. புவி ரஹ்மதுல்லாஹ் மற்றும் சகோ. நூர்தீன் போன்றவர்கள் உண்மையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்தான். ஆனால் சகோ. புவி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இதனைச் சொல்வதுதான் கவலையாக இருக்கின்றது… அவருக்கு பலர் உதவி புரிந்தும் மீண்டும் வாய்விட்டுக் கேட்பது போல இருக்கிறது. ஆனால் அவர்கள் உண்மையில் வெள்ள நிவாரணம் இவருக்கு கொடுக்காவிட்டாலும் நிறையவே கொடுத்திருக்கிறார்கள். அது அவருக்கும் நன்கு தெரியும்…. ஆனால் மனிதனின் வாயை மண்தான் நிரப்பப் போதுமானது என இஸ்லாம் சொல்வது இதைத்தானோ?????????

    • noordeen said

      எம்.எஸ்.எம்.நூர்தீன்,
      ஊடகவியலாளர்,
      தாறுஸ்ஸலாம் வீதி,
      காத்தான்குடி.06,

      அஸ்ஸலாமு அலைக்கும்

      மேலே கருத்துச் சொல்லியுள்ள சகோதரர்கள்
      வார உரைகல் பத்திரிகை பிரதம ஆசிரியர் எம்.ஐ.றஹ்மத்துல்லா அவர்கள் தனக்கு நிவாரணம் தேவையென்று பேசியது போன்று கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

      அந்த வைபவத்தில் நானும் இருந்தவன் என்ற வகையில் அவர் அவ்வாறு அவருக்கு வெள்ள நிவாரணம் கேட்டு பேசவில்லை.

      நடைமுறையில் ஊடகவியலாளர்கள் புறக்கனிக்கப்படுவதையும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை யாரும் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்ற அடிப்படையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர் அங்கு பேசினார்.

      அவர் அந்த வைபவத்தில் பேசியதையடுத்து அங்கு இருந்த இலங்கை செஞ்சிலுவைச் சங்க நிருவாகிகள் காத்தான்குடி மீடியா போரத்தின் ஊடாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் விபரத்தை கோரியுள்ளனர்.

      காத்தான்குடி மீடியா போரம் இது தொடர்பான கோரிக்கை கடிதமொன்றையும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்கியுள்ளது.

      இந்த வகையில் ஊடகவியலாளர்களின் நிலைமையை அவ்விடத்தில் எடுத்துக் கூறிய சகோதரர் புவி றஹ்மத்துல்லா அவர்களுக்கு எனது நன்றிகள்.

      இவ்வண்ணம்
      எம்.எஸ்.எம்.நூர்தீன்

      ஊடகவியலாளர்

  5. கஹத்தான் said

    எமதூரிலுள்ள உடகவியலாளர்கள் கடந்த சுனாமிக்குப் பின்னர் பெற்ற பண உதவிகளை, பொருள் உதவிகளை முதலில் பட்டியலிட்டுக் கூறட்டும் .அதன் பின்னர் காத்தான்குடி மக்கள் வாயில் கை வைப்பார்கள் .இவ்வளவு காலமும் பாதிக்கப்பட்டதாகக் காட்டி உதவிகள் பெற்றே வந்துள்ளார்கள்.கடந்த சுனாமியின்போது பாதிக்கப் பட்டதாகக் கூறி ஒவ்வொருவரும் ……………………..பெற்றுள்ளார்கள் ………………………………………………………………………………………………………….இவர்கள் யாரிடம் கையேந்தவில்லை.இந்த விடயத்தை இன்போ பகிரங்கமாக வெளியிடவேண்டும் …….காத்தான்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,323 other followers

%d bloggers like this: