காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டி சொத்துக்களை சூறையாடுவதற்குத் திட்டம்: முஜிபுர் ரஹ்மான்

Posted by Kattankudi Web Community (KWC) on 21/01/2013

MujiburRahumanமுஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டி சொத்துக்களை சூறையாடும் சதித்திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் அதில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களும் இதனை மௌனமாக பார்த்துக்கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று முன்தினம் சனிக்கிழமை மகரகமவிலுள்ள நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்துக்கு முன்பாக பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய என்ற அமைப்பும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன.

நோலிமிட் நிறுவனத்தை மூடுமாறும் முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க வேண்டாம், கடைகள், வீடுகளை வழங்க வேண்டாம் என சிங்கள மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் இதனைத் தடுக்காது பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அதேபோன்று அண்மையில் தெஹிவளை, சரணங்கர வீதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான உணவு விற்பனை நிலையத்தை இரண்டு பிக்குமாறு மூடுமாறு அறிவித்துள்ளனர்.

களுத்துறை வடக்கிலும் முஸ்லிம் ஒருவரின் சில்லறைக் கடையை பிக்குமார் வந்து மூடுமாறு தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று நாடு முழுவதும் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை சிங்கள பேரினவாத சக்திகள் முன்னெடுத்து வருகின்றன.

முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிட்டு 1915ஆம் ஆண்டைப்போன்று கலவரத்தைத் தூண்டிவிட்டு முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. முஸ்லிம்களின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது என்றார். (வீரகேசரி)

About these ads

4 Responses to “முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டி சொத்துக்களை சூறையாடுவதற்குத் திட்டம்: முஜிபுர் ரஹ்மான்”

  1. habeeb mohamed said

    உண்மையில் அரசியல் வாதிகள் வேடிக்கையானவர்கல்தான். எதிர்க் கட்சியில் இருக்கும்போது அறிக்கைகள் விடுவது பின்னர் ஆளும் தரப்பிற்கு வந்த பின்னர் அதே தவறைக் கண்டும் காணமல் வாய் மூடி இருப்பதும் வினோதம்தான். எத்தனையோ விடயங்களுக்கு ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தும் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் சார்திருக்கும் பெரும் பான்மைக் கட்சியைக் கொண்டு இன ஒற்றுமையை சீற்குலைக்காதே, இனவாதிகளை உடனடியாக கைது செய் என்ற தொனியில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்ய முடியுமா அல்லது ஒரு பத்தரிகையாளர் மாநாடுதான் நடத்த முடியுமா? வெறுமனே வாய் வார்த்தைகள், அறிக்கைகள், நீண்ட ஆக்கங்கள் எல்லாம் அற்ப அரசியல் நோக்கங்களுக்கே.

  2. காஸிம்காக்கா said

    அரசியல்வாதி ஆகிய இவர்கள் யாவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

  3. இப்படி அறிக்கை இட முன்னர் உங்கள் கட்சியை சேர்ந்த ரோசி சேனாஞாயகாவையும் ஜோன் அமரதூங்கவையும் அடக்கி வைக்கலாமே? அவர்கள்தானே முஸ்லிம்களை சீண்ட நாடாளுமன்றில் பன்றியை பச்சையாக கேட்டு அடம்பிடித்தவர்கள்!!!

  4. jesmin said

    கொஞ்சம் பொறுங்கள் அமைச்சுப் பதவியைப் பெற்றவுடன் எமது குரன்கிராஸ் தலைவர்கள் அறிக்கை விடுவார்கள் .மகரகமவில் வியாபாரம் நடத்த எமது இனத்தவர்கள் எதற்காக போகவேண்டும் ,பாராளுமன்றத்தில் முஸ்லிம் எம்பிமார்கள் பன்றி இறைச்சியைச் சாப்பிடாமல் விட்டால் சரிதானே என்று அறிக்கை விட்டால் சரிதானே ,சிலவேளை எமது கோமாளி தம்பி இது மகிந்த சிந்தனை என்று விட்டாலும் விடுவார் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,323 other followers

%d bloggers like this: