ஜவாஹிர் சாலியுடன் ஆசாத் சாலி விவாதிக்க தயார்.
Posted by Kattankudi Web Community on 21/01/2013
முகவரியின்றி மூலையில் முடங்கிக் கிடந்து திடீரென சமூக உணர்வும்,சமய உணர்வும்,அரசியல் உணர்வும் என ஒட்டுமொத்தமாக உணர்வுகளின் பிம்பமாகப் பொங்கி எழுந்திருக்கும் கத்துக்குட்டி அரசியல் வாதியே.
உங்களைப் போன்ற எத்தனையோ துள்ளல்களை என்னுடைய 16 வயதில் இருந்தே பார்த்துப் பழக்கப்பட்டவன் நான்.உங்கள் தகுதிக்கும் அரசியல் அனுபவத்துக்கும் நீங்கள் எல்லாம் மின்னலில் வரவேண்டும் என்று நினைப்பது சற்று ஓவரான ஆசைதான். இருந்தாலும் பரவாயில்லை ஆசை யாரைத்தான் விட்டது.
உங்கள் தலைவரை வேண்டுமானால் மின்னலில் நேரடியாகச் சந்திக்க நான் தயார். என்னோடு தனியாக விவாதிக்க அவர் தயாரா என்று கேட்டுச் சொல்லுங்கள்.உடனே அரங்கத்தை தயார் படுத்த நான் தயார்.உங்களுக்கு வேண்டுமானால் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். ஆனால் மின்னலில் அல்ல. அது உங்களுக்கு அதிகம்.அது முகவரியற்ற அரசியல்வாதிகளுக்கான மேடையல்ல.அது பழம் தின்று கொட்டைபோட்ட என்போன்ற அனுபவசாலிகளுக்கு உரிய களம்.
உங்களை நான் உங்கள் ஊரிலேயே சந்திக்கத் தயார்.அதுதான் என்னை நம்பி வாக்களித்த உங்கள் ஊர் மக்களுக்கு நான் செலுத்தும் கௌரவமும் காணிக்கையுமாகும். இந்த மாதிரி ஒரு அழைப்பு வராதா என்று நான் நீண்ட நாள் காத்திருக்கின்றேன். திகதியையும் இடத்தையும் நேரத்தையும் கூட நீங்களே தெரிவு செய்யுங்கள். என்னுடைய எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு உங்களைச் சந்திக்க நான் தயார். உங்களுக்கு இன்னுமோர் வாய்ப்பு நீங்கள் தனியாக வரவேண்டாம்.தனியாக வந்து என்னோடு விவாதிக்கும் அளவுக்கு உங்களிடம் சரக்கில்லை என்பதை இந்த நாடே அறியும். எனவே நீங்கள் துணைக்கு உங்கள் மாபெரும் கட்சியின் அதி உயர் அரசியல் பீட உறுப்பினர்கள் அனைவரையும் வேண்டுமானாலும் அழைத்து வரலாம்.எல்லோரையும் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் தனியாகச் சந்திப்பதற்கு நான் தயார். ஊடக அனுசரணையையும் காத்தான்குடி இன்போ மூலமாகவே செய்து கொள்வோம்.
நீங்கள் உங்கள் மடலில் குறிப்பிட்டுள்ள எல்லா விடயங்களுக்கும் பதில் அளிக்க எனக்கு நேரமில்லை. எல்லாவற்றுக்குமான பதிலை விவாத மேடையிலேயே தருகிறேன்.நீங்கள் குறிப்பிட்டுள்ளவை மட்டுமல்ல இன்னும் ஏதாவது பொய்யும் பிரட்டும் இருந்தால் அவற்றையும் கொண்டுவாருங்கள்.அவை உங்கள் கட்சியினருக்கு கைவந்த கலையாயிற்றே. எல்லாவற்றுக்கும் ஒரேயடியாக பதில் தருகிறேன்







PMAMF Mohammed H.I.R.A.Z said
இவறு பெரிய பறுப்பு ஜவாஹிர் சாலி அவர்களோடு ஒப்பிடுகையில்
இவருக்கு என்ன அந்தஸ்து மிகைத்திருக்கிறதாம் கல்வியா? ஞானமா?
ஒழுக்கமா? வாய்மையா? நேர்மையா? விசுவாசமா? துணிச்சலா? ஊழல் அற்ற
கரங்களா??? இதில் ஏதாவது ஒன்றாவது இவரிடம் ஜவாஹிர் சாலி அவர்களைவிட
மிகைத்திருப்பதாக இவரால் வெறும் பேச்சுக்காவது பெருமைபட்டு
கூறமுடியுமா??? பழம் திண்டுகொட்ட போட்ட இந்த அரசியல்வாதிய புகழகூடிய
ஒரு செயலாவது இதுவரை இந்த பழம் திண்டு கொட்ட போட்ட காலத்தில
உறுப்படியா நடந்திருக்கா??? எதுவுமே சாதிக்காம அரசியலில் பழந்திண்டு
கொட்டபோட்டதால யாறுக்கு என்ன பயண்???
அப்பாவி ஆதம் காக்கா said
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா
ரடீ! – கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி. கூட்டத்தில் கூடிநின்று
கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! – கிளியே! நாளில்
மறப்பாரடடி – பாரதி
Jawahir Saly said
அஸ்ஸலாமுஅலைக்கும் ஆசாத் சாலி அவர்களே,
ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுகிறீர்கள்? நாங்கள் உளவியல் பாடம் படித்தபோது “சில விடயங்களில் பயந்துவிட்டவர்கள் இப்படித்தான் தடுமாறி என்னசொல்கிறோம் எனப்புரியாமல் உயர்வுச்சிக்கலுடன் இப்படிப் புலம்புவார்கள்” எனப்படித்திருந்தேன். அப்போது நான் இதுபற்றி பெரிதுபடுத்தவில்லை. அந்த நேரத்தில் பரீட்சையில் சித்தியடைவதுதான் நோக்கமாக இருந்தது, ஆனால் இப்போதுதான் அப்படிப்பட்டவர்களுக்கு உதாரணமாக உங்களைப் பார்த்து உளவியலின் மகிமையை மெச்சுகிறேன்.
அதுசரி , மின்னலில் என்னைச்சந்திக்க உங்களுக்கு மட்டுமல்ல உங்களோடு மக்களை ஏமாற்றும் ஸ்ரீரங்கா அவர்களுக்கும் பயம்தான். உங்களுக்கு ஞாபகம் இல்லையா ? 2009ஆம் ஆண்டிலே நீங்களும் , தற்போதைய மேல்மாகாணசபை கௌரவ உறுப்பினர் முஜீபுர்ரஹுமான் அவர்களும் UNP சார்பாகவும் , என்னோடு தற்போதைய புத்தளம் நகர முதல்வர் Mr . பாயிஸ் அவர்களுமாக அரசாங்க சார்பாகவும் கலந்து கொண்ட விவாதத்திலே நீங்கள் பட்டபாடு மறந்து விட்டதா !
பன்னிப்பிட்டிய போய் பழைய cassettes இருக்கும் எடுத்துப்பாருங்கள். 2009 இல் ஸ்ரீரங்கா அவர்கள்தானே என்னை அழைத்திருந்தார். தற்போது பயமாக இருந்தால் பழையதைப் பார்த்தாவது படித்துக் கொள்ளுங்கள்.
எங்களது தலைவரோடு விவாதிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? அவுஸ்திரேலியா அணியுடன் கிரிக்கெட் விளையாட மாலைதீவு அணி சவால் விட்டதுபோலத்தான். உங்களது தமிழைக் கேட்கும்போது எனக்கும் அப்படித்தானிருக்கிறது , இருந்தாலும் பரவாயில்லை விவாதிப்போம் என்றுதான் அழைக்கிறேன். உண்மையில் மின்னல் எனக்குத்தகுதி இல்லைதான் ,சரியாகத் தமிழ் பேசத்தெரியாதவர்கள்தான் இப்போது அதிகமாக வருகிறார்கள் அதிலும் உங்களைப்போன்ற பழம் தின்று கொட்டை போட்டும் பேசத்தெரியாதவர்களின் களம்தான் அது. அதுசரி கத்துக்குட்டி என்று சொன்னால் அது என்னவென்று தெரியுமா ?” நல்ல மாட்டுக்கு ஒருசூடு” என்று ஒரு பழமொழி இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா? அதாவது சிலர் உங்களைப்போல 16 வயதிலிருந்தே ஏதாவது ஒருவிடயத்தில் ஈடுபட்டிருப்பார்கள் , ஆனால் ஒன்றுமே சரியாக இருக்காது, ஆனால் புதிதாக வந்த சிலர் எல்லா விடயங்களையும் உடனடியாகப் புரிந்து விடுவார்கள். அதுதான் அந்தப் பழமொழியின் கருத்து , இதுஉங்களுக்கு விளங்கியதோ தெரியாது! விளங்காமல்தான் இருக்கும் , அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் வடக்கு,கிழக்குக்கு வெளியே தமிழை மிகச்சரியாக அறிந்துள்ள ஒருசிலரில் அவரும் ஒருவர். , என்ன செய்ய சக்தி TV ஜனரஞ்சகமாயிற்றே , அதனாலேதான் நான் கேட்டேன் , உங்களுக்குப் பயமாக இருக்கும்போது நான் என்ன செய்ய ? சும்மா விதண்டாவாதத்திற்காக தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை, அரசியல் உயர்பீட உறுப்பினர்களை கூட்டிக்கொண்டு வருமாறு கூறி உங்களது பயத்திற்கு மருந்து செய்யவேண்டாம் . இது ஒரு பாரிய கட்சி , உங்களதைப் போல பதிவு செய்யாத கட்சி அல்ல.
கடைசியாக சொல்கிறேன் , ஒரு தேசிய தொலைக்காட்சியில் விவாதிக்க நான் தைரியமாக வரும்போது ஏன் பயப்படுகிறீர்கள், பழம் தின்று கொட்டைபோட்ட உங்களுக்கு ஒரு கத்துக்குட்டியிடம் பயமா? இது உங்களை விலைக்கு வாங்கி இருக்கும் சக்தி TV க்கும் அவமானம். இன்ஷா அல்லாஹ் ,எதிர்வரும் ஞாயிறு 27 ந் திகதிக்கு நான் தயார் , 29 ம் திகதி ஒரு வெளிநாட்டுப்பயணம் செல்லவுள்ளேன். நான் நாட்டில் இல்லாத நேரம் பார்த்து அழைத்தோம் , ஆள் பயந்து ஓடி ஒழிந்து விட்டார் என்று சொல்லி விடாதீர்கள். ஆனால் kattaankudi இன்போவை நம்புகிறேன். எல்லாப்புகழும் எம்மைப்படைத்த அல்லாஹ்வுக்கே.
Jawahir Saly said
Thanks Mohammed H.I.R.A.Z for your comment.
Naushad said
Both can do something,witch beneficial for the community.rather than debating for nothing.
mifras said
சரி எது எப்படி இரிந்தாலும் உங்களை நாங்கள் ஒரே மேடயீல் சந்திக்க விரும்புகிறோம் , யாவற்றையும் அறிந்தவன் அவனே alhamdulillah
மக்கள் ஆகிய எங்களுக்கு உண்மை தெரிய வேண்டும்