முஸ்லிம்களை இலக்கு வைக்கும் பொது பல சேனா: முஸ்லிம் அரசியல் தலைமைகளே மௌனம் ஏன் – ஜவாஹிர் சாலி
Posted by Kattankudi Web Community (KWC) on 20/01/2013
அண்மைக்காலமாக இந்த பொது பல சேனா அமைப்பின் அட்டகாசம் அதிகரித்திருப்பது கவலைப்பட வேண்டியதும், சந்தேகப்பட வேண்டியதுமான விடயமாகும்.
பள்ளிவாயல்களில் தாக்குதல்களை நடாத்தி முஸ்லிம்களை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது, சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சையில் முஸ்லிம் மாணவர்கள் திறமை காட்டியதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், சட்டக்கல்லூரிக்கு உள்ளேயே நுழைந்து பதிவைப் பிற்படுத்தும் அளவுக்கு சக்தியை பயன்படுத்தியுள்ளமை, ஹலால் உணவுச்சான்றிதழ் இந்த நாட்டில் தேவையில்லை என்ற போராட்டம், முஸ்லிம்களது வர்த்தக / வியாபார நிலையங்களுக்கு முன்னால் அல்லது உள்ளே புகுந்து ஆர்ப்பாட்டம் நடாத்தி அவற்றை அப்பிரதேசங்களில் இருந்து அகற்றுதல், இதேபோல வெளியே தெரியாத பல விடயங்கள் இந்த நாட்டிலே நடக்கின்றன. இவ்வளவுக்கும் யுத்தமற்ற அமைதியான நாடு என்ற பெயர்.
இந்த வகையில்தான் NOLIMIT க்கு நுகர்வோரிடம் இருக்கும் செல்வாக்கை பொறுக்காதவர்கள் இதை இனரீதியாக நோக்கி இந்த குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறார்கள். இவ்வாறான விடயங்களை கட்டுப்படுத்த முடியாத அரச பாதுகாப்பு இருக்கின்றது என்பது முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகவும் அபாயகரமான எதிர்காலத்திற்குரிய அடையாளமாகும்.
இது சம்பந்தமாக அரசில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் “இது ஜனாதிபதிக்கு தெரியாமல் நடக்கிறது” என்று சொல்கிறார்கள். சரி, அதுதான் உண்மை என வைத்துக் கொள்வோமே!, இவ்வாறான விடயங்களை அவருக்குத் தெரியப்படுத்தி நியாயம், பாதுகாப்பு பெற்றுத் தருவதற்காகத்தானே உங்களுக்கு அரசியல் அந்தஸ்தை மக்கள் தந்திருக்கிறார்கள். மிகப்பலம் பொருந்திய நிலையில் இருந்து யாரென்று அடையாளம் தெரியாமல் மறைந்திருந்து தாக்கிய புலிகளை இந்த அரசாங்கத்திற்கு அழிக்க, கைது செய்ய முடிந்தது என்றால் நேரடியாக வந்து தொலைக்காட்சி கமெராக்களுக்கு முன்னால் நின்று வீரம் பேசும் இந்த பல சேனாவினருக்கு எதிரான நடவடிக்கைகளை, அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தது கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையாவது செய்ய முடியாதா?
இதே போல முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பௌத்தர்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து ஏற்பட்டிருந்தால் இவ்வாறுதான் கண்டும் காணாமல் இருந்திருப்பார்களா!
இப்போது வீரத்தைக் காட்டும் பல சேனாவினர் புலிகள் இருந்த காலத்தில் வடக்குக்குச் சென்று வீரத்தைக் காட்டி இருக்கலாமே?
அவர்கள் தொடர்ந்து இவ்வாறுதான் நடப்பார்கள், ஆரம்பத்தில் தங்களை அடையாளம் காட்டப் பயந்தவர்கள், இப்போது வெளிப்படையாக இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால்தான் தமக்கு மதிப்பு என்று எண்ணும் அளவிற்கு அவர்களுக்குரிய வாய்ப்பு இருப்பதை உணர்ந்து விட்டார்கள், எனவே இது மென்மேலும் பெருகி பாரிய கலவரமாக மாறுவதை தடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துடன் உள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கே உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்







Naushad said
I am strongly urging our Muslim leaders and public,not to support as we did in the past to next March UNHRC resolution against Sri Lanka.if all minorities come under one banner,we can eradicate the Majority racism and guarantee the rights of minorities.