மக்தப்(அல்குர்ஆன்) விழிப்பூட்டல் கருத்தரங்கு !
Posted by Kattankudi Web Community on 20/01/2013
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை நாட்டிலுள்ள அல்குர்ஆன் ஆரம்ப பிரிவு மதரஸாக்களை ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கான வேளைத்திட்டங்களை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் காத்தான்குடி கிளையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி தலைமையில் காத்தான்குடி குர்ஆன் மதரஸாக்கள் அபிவிருத்திச் சபையினால் இன்று 20.01.2013 ஞாயிறு காலை காத்தான்குடி ஜாமியுழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் இடம் பெற்ற மக்தப்(அல்குர்ஆன்) விழிப்பூட்டல் கருத்தரங்கு நிகழ்வில் தஜ்வீத், சிறுவர் உளவியல், கற்பித்தல் முறை, மக்தப் ஒழுங்கு முறை போன்ற விடயங்களை கொழுப்பில் இருந்து வந்த உலமாக்களான எம்.பாஹிம் ஹுமைதி, முஹம்மது பிதொனஸ், அஷ்ஷெய்க் செய்யது முகம்மட் காசிமி, அஷ்ஷெய்க் எம்.உவைஸ் காசிமி ,அஷ்ஷெய்க் முகம்மது முபாரக் ஆகியோரால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
இக் கருத்தரங்கில் பள்ளி வாயல்கள் நிருவாகிகள், குர்ஆன் மதரஸாக்களின் அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.















PMAMF Mohammed H.I.R.A.Z said
நல்ல முயட்சி குறுகிய காலத்தில் சிறுவர்களை அவர்களின் உள வளம் அறிந்த நிலையில் புனித குஃஆனை சரளமாக அழகிய குரலில் ஓத கட்பிக்கவும் அதன் பின் அந்த பிஞ்சி உள்ளங்கள் குரானின் பகுதியையாவது மனனமிட்டுகொள்லவும் குஃஆனிய ஒழுக்கங்களை கற்று கடைபிடித்தொழுகவும் இப்படியான நிகழ்சிகள் துணைபுறியும் ஆலிம்களை நிர்வகிகளை புதிய சிந்தனைகளின்பால் இட்டு செல்லும்