காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

“சபை நடவடிக்கைகளும் தெரியாமல், தீர்மானங்களும் புரியாமல் குளம்பிப்போய் அறிக்கைகள் தயாரிப்பதில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்” – தவிசாளர்அஸ்பர்

Posted by Kattankudi Web Community on 20/01/2013

dsc09695 காத்தான்குடி அடிப்படை பிரச்சினை தீர்வு தொடர்பாக விளக்கி சம்மேளனத்திற்கு தவிசாளர் கடிதம்

தலைவர்/செயலாளர்,

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,

 காத்தான்குடி.

 அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

 திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக….

 மேற்படி விடயம் தொடர்பாக தங்களது 17.01.2013ம் திகதிய கடிதம் சார்பாக,

 நமதூரில் பலவருடகாலமாக நிலவிவரும் இந்தக் குப்பை பிரச்சினைக்கு நிரந்தரமானதோர் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே எனதும், உங்களினதும் மட்டுமல்ல அனைவரினதும் அவசியத் தேவைப்பாடாகும். காலத்திற்குக் காலம் நகரசபை நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளெல்லாம் இப்பிரச்சினைக்கான தற்காலிகத் தீர்வாகவே அமைந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். இவ்வாறான தற்காலிகத் தீர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தூரநோக்குடனான நிரந்தரத் தீர்வொன்றின் மூலம் மக்களும் சூழலும் பாதுகாக்கப்பட வேண்டுமென்று நானும் எனது நிர்வாகமும் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கான ஒரு முன்னுரையாகவே இன்று இந்த பதிலை எழுத்து மூலமாக உங்கள் முன் வைக்கின்றேன். சம்மேளனத்தில் பல விளக்கங்களுடன் நான் கூறிய பதிலைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு சிலருக்காக…. அல்லது புரியாமல் நடிப்பதில் பிடிவாதமாக இருக்கும் அந்த ஒரு சிலருக்காக இவ்வாறு எழுத்து மூலம் அறியத்தருவதும் பொருத்தமாக இருக்குமென்றே நான் கருதுகிறேன்.

 02. இத்திண்மக்கழிவு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதாயின் காணியொன்று தேவையென்பது பகிரங்கப்படுத்தப்பட்டதோர் உண்மையாகும். அக்காணியைப் பெற்றுக் கொள்ள அரசாங்கத்திடமும் அதற்குரிய அதிகாரிகளிடமும் பல முயற்சிகள் மேற்கொண்டும் அது எமக்கு பயனளிக்கவில்லை. அதன் பிற்பாடுதான் இக்காணிக் கொள்வனவு தொடர்பாக பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடமும், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவுடனும் கலந்துரையாடினோம்.

 03. எத்தர்களின் பல முட்டுக்கட்டைகளுக்கு மத்தியில் சம்மேளனத்தினதும் ஜம்இய்யதுல் உலமா சபையினதும் பெரும் பங்களிப்புடன் எமதூர் மக்களிடமிருந்து ரூபா. 500/= வீதம் பெற்று சேகரிக்கப்பட்ட 3,150,000.00 (முப்பத்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்) ரூபாவும், எனது சொந்தப்பணமான 500,000.00 (ஐந்து இலட்சம்) ரூபாவுமாக மொத்தம்3,650,000.00 (முப்பத்தாறு இலட்சத்து ஐம்பதாயிரம்) ரூபாபெறுமதிக்கு இனங்காணப்பட்ட இடத்தில் 13 காணித்துண்டுகள் கொள்வனவு செய்யப்பட்டது. (அல்ஹம்துலில்லாஹ்)

 04. இச்செயற்பாடுகளின் போது; திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டத்திற்காக உடன்படிக்கை ஒன்றின் மூலம் ‘பிலிசறு’ நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியுதவியைப் பற்றியே தங்களிடம் பேசியிருந்தேன். மாறாக அவ்விடத்தில் அத்திட்டத்தை மேற்கொள்வதற்கான அனுமதி எதுவும் அப்போது வழங்கப்பட்டிருக்கவில்லை. இவ்விடத்தில் நியாயபூர்வமான நடவடிக்கை ஒன்றை நான் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். ஒரு உள்ளுராட்சி மன்றமானது அனுமதிகள் எதுவும் பெறாமல் நகர அபிவிருத்தித்திட்டங்களை மேற்கொள்ள முடியும். அவ்வாறு இத்திண்மக்கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்ளலாம் என்றே எமது நிருவாகம் திட்டமிட்டிருந்தது.

 05. ஆனால் இந்தக்காணிகளை கொள்வனவு செய்த நாளில் இருந்து எமது சபையின் எதிர்க்கட்சியினர் காணிக்கொள்வனவிற்கு எவ்வாறு இடையூறுகள் ஏற்படுத்தினார்களோ அதுபோலவே, காணிக் கொள்வனவின் பின்னரும் அப்பகுதி வாழ் மக்களிடம்  குறித்த வேலைத்திட்டத்தை நிறுத்தும்படி தூண்டுதல் அளித்து மத்திய சூழல் சுற்றாடல் அமைச்சரிடம் நேரடியாகச் சென்று முறைப்பாடு கொடுத்து தொடர்ந்து இதுபோன்ற ‘மெத்தன’மான வேலைகளையே மேற்கொண்டு வந்தனர். ஈற்றில் இது தொடர்பாக எழுப்பப்படும் நிகழ்கால நடப்புகளையும் எதிர்கால எதிர்ப்புகளையும்  முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு சபைத்தீர்மானத்துடன் முறையான அனுமதி பெற்ற பின்னர்தான் வேலைகளை ஆரம்பிக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன்.

 06. முறையான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு;மத்திய சூழல் சுற்றாடல் அதிகாரசபையிடமும், கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடமும், பிரதேச செயலாளரிடமும், நகர அபிவிருத்தி அதிகார சபையிடமும், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளரிடமும், உள்ளுராட்சி ஆணையாளரிடமும்  முறையாக அனுமதி பெற்றதன் பின்னர் வேலைகளை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதற்கான உள்ளுராட்சி ஆணையாளரது இறுதி அனுமதி 2012.12.06ம் திகதி அளவிலேயே கிடைக்கப்பெற்றது.

 07. அதன் பின்னர் இவ்வேலைத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய ‘பிலிசறு’ நிறுவனத்திடம்   அனுமதி வழங்குமாறு கோரப்பட்டதற்கிணங்க அவர்களிடமிருந்து 2012.12.27ம் திகதிதான் முறையான அனுமதி கிடைக்கப்பெற்றது. அதாவது நிதியுதவியளித்த  நிறுவனத்தின் அனுமதி கிடைக்கப்பெற்று இன்னும் ஒரு மாதம் பூர்த்தியடையவில்லை. ஆனால் தற்போது இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஒப்பந்தங்கள் காத்தான்குடி சாமில்Construction க்கு வழங்கப்பட்டுள்ளது.2013 ஜனவரி 15ம் திகதியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான வேலைகள் இன்னும் 03 மாத காலத்திற்குள் முடிவடைந்து விடும். (இன்ஷா அல்லாஹ்)

 08. அத்தோடு அக்காணியிலேயே மடுவ வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. சம்மேளனத்தினாலும், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவினாலும் இணைந்து கொள்வனவு செய்யப்பட்ட 13 காணித்துண்டுகளுடன் சேர்ந்து காணப்பட்ட 77 இலட்சம் ரூபா பெறுமதியான 20 துண்டு காணிகளும் சபை நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு 40 மில்லியன் அதாவது நான்கு கோடி ரூபா செலவில் அக்காணியிலேயே மடுவ வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வேலைகளும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை இவ்விடத்தில் தங்கள் கூற்றுக்கு பதிலாக அறியத்தருகின்றேன்.

 09. மேலும் சபை அமர்வுகளில் பங்கேற்கும் எதிர்க்கட்சியினர் ஊரிற்குள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த உண்மையான செயற்பாடுகள் கூடத் தெரியாமல் ‘சபை நிர்வாகம் ஆங்காங்கு கட்டப்படும் கட்டடங்களை மடுவம் என சுட்டிக்காட்டுவதாக’ குழந்தைத் தனமான அறிக்கைகளை வேறு விட்டுக்கொண்டிருப்பது நகைப்பிற்கிடமான செயலாகவே இருக்கின்றது.

 10. எமது மக்களின் நலனும் சூழல் சுற்றாடல் பாதுகாப்பும் கருதி, சபை அனுமதி பெற்றே மடுவ வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் எனது சுயநலமான, சொந்த நோக்குடனான எந்த செயற்பாடும் இடம் பெறவில்லை. ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுடன் பருவ கால மழை, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தம் என அனைத்திற்கும்  அன்றாடம் நகரசபை நிர்வாகம் முகம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது. எதிர்க்கட்சியினரைப் போல் அழகு தமிழில் அறிக்கைகள் விடுவதும், செய்திகள் தயாரிப்பதும் எளிது..,எளிதிலும் எளிது. சபை நடவடிக்கைகளும் தெரியாமல் சபை அமர்வுகளின் தீர்மானங்களும் புரியாமல் குளம்பிப்போய்,அறிக்கைகள் தயாரிப்பதில் கால நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.

 11. 30.08.2012ம் திகதி இடம் பெற்ற27வது சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மான இலக்கம்:- 2012ஃ66–      திண்மக்கழிவகற்றல் தொடர்பான துணை விதி தயாரிக்க சபையில் முன் அனுமதி.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

மேற்படி விடயம் தொடர்பாக சபையின் வருமானப் பரிசோதகர் ஜனாப். எம்.எம்.எம். பாறூக் அவர்களினால் 2012.08.10ம் திகதி சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் சபையில் நன்கு ஆராயப்பட்ட போது, காத்தான்குடி நகரசபை எல்லைக்குள் திண்மக்கழிவகற்றல் தொடர்பிலானதும், அது தொடர்பிலான கட்டணங்களை விதித்து அறவிடுதலுக்குமான துணை விதி ஒன்றை தயாரிப்பதற்கு சபை அனுமதியை வழங்குவதென கௌரவ துணை நகரமுதல்வர் அல்ஹாஜ். MIM.ஜெஸீம் J.P அவர்கள் முன்மொழிய கௌரவ உறுப்பினர் ஜனாப். MIM.சியாட் J.P அவர்களால் வழிமொழியப்பட்டு சபையினரால் அங்கீகரிக்கப்பட்டது.

12. அன்றைய சபை அமர்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்றாலும் அனுப்பப்பட்ட கூட்டறிக்கையையாவது பார்வையிட்டிருக்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக மக்கள் அனுபவித்து வந்த குப்பை, மடுவம் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு எமது நிர்வாகம் சபையை பொறுப்பெடுத்த ஈராண்டு நிறைவிற்குள்ளேயே தீர்வுகள் கண்டு வருகின்றது. ஆனால் சேருகின்ற குப்பைகளை எங்கே கொட்டினாலும் மக்களை தூண்டிவிடுவதும்,தீர்வுத் திட்டங்களை விமர்சனம் பண்ணுவதும், எந்த அதிகாரிக்கு முறைப்பாடு கொடுத்தாவது அவற்றை குழப்புவதுமாக எதிர்க்கட்சியினர் அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்பது தெளிவு.

13. எமது பிரதேசத்தில் அடையாளம்  காணப்பட்ட பிரச்சினைகளான திண்மக்கழிவு, மடுவம், வடிகான் போன்ற  மூன்று பிரச்சினைகளும் முறையான தீர்வுத் திட்டங்களுடன் தீர்க்கப்பட்டு வருகின்றன. மட்டுமல்ல, மாகாண ரீதியில் இரு முறையும், தேசிய ரீதியிலும், மாகாணமட்டத்திலும் பல விருதுகளையும்  நகரசபை பெற்று இன்று கிழக்குமாகாண உள்ளுராட்சி சபைகளுக்குள்ளேயே தலை நிமிர்ந்து நிற்கின்றது. இதனைப் பொறுக்க முடியாமல் பத்திரிகையில் புலம்புவதோடு மட்டும் நிற்காமல் எமது தாய் நிறுவனமான பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தையும் பிழையாக வழி நடாத்த முனைகிறார்கள். ஆனால் ஒளிவு மறைவாக எதுவும் இங்கு இடம் பெறவில்லை. உண்மை, வெளிப்படைத்தன்மையுடன் ஒளிர்கின்றது. எல்லோரும் புரிந்ததை ஏற்றுக்கொண்டு ஊரிற்கும் மக்களுக்கும் நல்லதை நாட வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோளாகும்.

14. இறுதியாக பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு நான் வருகை தந்து ஒவ்வொரு முறையும் இவை தொடர்பிலான விளக்கங்களையும் கூறி வந்துள்ளேன். இவற்றை விளங்கிக்கொள்ளாமல் அவதிப்படும் ஒரு சிலருக்கு என்னுடைய கடிதம் மூலமான இப்பதிலாவது புரிதலை தரும் என்று நம்புகின்றேன். தலைநகரில் இருந்துகொண்டோ அல்லது அயல் நாட்டில் தொழில் புரிந்துகொண்டோ நான் மக்களுக்கு சேவை செய்யவில்லை. வெயிலிலும், மழையிலும் இந்த மக்களுடனேயே வாழ்கின்றேன். இந்த மக்களின் நன்மை, தீமைகளுடனேயே சேர்ந்திருக்கின்றேன். அல்லாஹ்வும், றசூலும் இந்த மக்களும் என்னை புரிந்து கொள்வார்கள்.

 (அல்ஹம்துலில்லாஹ்)

 SHM.முஹம்மது அஸ்பர்,

நகரமுதல்வர்,

நகரசபை,   

காத்தான்குடி.

 பிரதி:

 தலைவர்ஃசெயலாளர்,        – தங்களின் தகவலுக்காக

ஜம்இய்யதுல் உலமா,

காத்தான்குடி.

About these ads

9 Responses to ““சபை நடவடிக்கைகளும் தெரியாமல், தீர்மானங்களும் புரியாமல் குளம்பிப்போய் அறிக்கைகள் தயாரிப்பதில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்” – தவிசாளர்அஸ்பர்”

  1. rauf -colombo said

    i think this letter is reasonable answer and we hope allah will help to solve this problem as soon as possible to our city.also follow the below link to see the same proble and its weight in current world

  2. இதே விளக்கங்களை நேரகாலத்துடன் மக்களுக்கு தெறியபடுத்தி இருந்தால் அவர்களுக்கு மக்களை தவரான வழியின்பால் அணி திறட்ட சந்தர்பம் கிட்டி இருக்காது அல்லவா எதுவும் வெளிப்பாட்டு தன்மையுடன் இருப்பதால் ஒவ்வொறு நகர்வையும் மக்களுக்கு உடனடியாகவே அறியதருவதால் இப்படியான அரசியலை தடுக்க முடியும் மக்களுக்கு மறைக்கவோ ரகசியமான நகர்வுகளுக்கோ முகாந்திரம் ஏதும் இல்லாத விடத்து விடயங்களை உடனடியாகவே மக்களுக்கு அறியவைபதே மேல்

  3. ALM Ursath said

    மதிப்புக்குரிய தவிசாளர் அவர்களே!

    தங்கள் அறிக்கை பார்த்தேன். நகர சபையில் காணிவாங்கப் பணம் இல்லை என்று சொல்லித்தான் பொதுமக்களிடம் காசு சேகரித்தீர்கள். ஆனால் இப்போது உங்கள் அறிக்கையில் சொல்லுகின்றீர்கள் சபைக் காசிலிருந்தும் காணிவாங்கியதாக…. இது முன்னுக்குப் பின் முரணாக இல்லையா..?

    அத்தோடு தவிசாளர் அவர்களே! உங்கள் திட்டங்களுக்கு எதிர்கட்சியனர் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போடுவதாகவும் சொல்கின்றீர்கள் அவர்கள் எங்கு எப்போது எப்படி உங்கள் திட்டங்களுக்கு குறுக்கே நன்றார்கள் என்பதை தெளிவு படுத்த முடியுமா..?

    தற்போது திட்டங்களைத் தொடங்கிவட்டதாகச் சொல்லும் உங்களால் எங்கே எப்போது தொடங்கப்பட்டது அதற்கான அனுமதி தந்தவர்கள் யார்..? அதற்கான்அனுமதிக் கடிதங்கள் ஆவணங்கள் போன்றவற்றை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு காட்டமுடியுமா..?

    சம்மேளனத்தையும் பொதுமக்களையும் மீண்டும் நீங்கள் ஏமாற்றுவதாககே பலர் பேசிக் கொள்கிறார்கள்.. அதை மறுக்க முடியுமா..?

    • muslim@yahoo.com said

      நீங்கள் அவரை நகர முதல்வராக தெரிவுசெய்ய வில்லையே! அவரை நம்பிய மக்கள் அவரைத் தெரிவு செய்தனர். அவர் அவர்களுக்கு நியாயமான பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் ஓட்டுப் போட்டவர்களிடம்தான் உங்கள் வீட்டுக் குப்பையை எங்கே கொட்டலாம் என்று கேளுங்கள். அல்லது நீங்கள் கிலோ கணக்கில் வாங்கித் திண்னும் மாட்டிறச்சியை பெற்றுக் கொள்ள எங்கே கொண்டுபோய் மாட்டை வெட்டலாம் என்று கேளுங்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் ஈதே பிரச்சினை இருக்கத்தான் போகிறது. நீங்கள் கொழும்பில் இருப்பவர்களுக்கு ஓட்டுப் போட்டதால அவங்களுக்கு குப்பைப் பிரச்சினை இல்லை ஏனென்றால் அவங்க கொழும்புல தானே குப்ப கொட்டுற.

      • Amjath Mohamed said

        சகோதரர் யாகூ அவர்களே! இதை நீங்கள் உங்கள் நெஞ்சில் கை வைத்து அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறமுடியுமா?

      • nalanvirumpi said

        kal——ku kaththamattum than mudiyum.vidunga chairman we are the people who the truth keep your path

      • ziyet al qahthaani said

        யாகூ காகா அவர்களே யார் ஆட்சிக்கு வந்தாலும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும் பிரச்சினை இல்லாவிட்டால் யாரும் ஆட்சிக்கு வரதேவயில்லை இங்கே பிரச்சினைக்குரிய நிரந்தர தீர்வுதான் முக்கியம், நிரந்தர தீர்வுகாண …….லாதவர்களை வோட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தினால் யார் வந்தாலும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும்

    • எதை அவர்கள் செய்யவில்லை இப்போது அவர்கள் சம்மேளனத்தினால் கொள்வனவு செய்த காணியை சம்மேளனத்தை எப்படியாவது வசைபாடி பிரச்சினையை ஏற்படுத்தி காணியை விற்பனை செய்து மக்களிடம் வாங்கிய பணத்தை கொடுத்து விடவேண்டும் அப்படி செய்தால்தான் இந்தக் குப்பை பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்படாது நம்மட அரசியல் புலப்பு நடக்கும் இதுதன் முட்டுக்கட்டை நகரமுதல்வர் தெரிவிக்கப்பட்ட சகல விடயங்களும் எமது எதிர்கட்சிகளுக்கும் தெரிந்தவிடயம் இதுதன்

  4. கஹ்தான் said

    அச்சச்சோ…..
    குப்ப பிரச்சின ரொம்ப குப்பயாவே இருக்கே,
    எத்தன வருசமா மடுவம், குப்ப என்று அரசியல் செய்கிற..,
    கொஞ்ச காலம் ரோட்டுக்கு நடுவுல மரம் என்றாங்க,
    பிறகு concrete road எண்டு சத்தம் போட்டங்க,
    இப்ப குப்ப,மடுவம் என்று போய்ட்டு இருக்கு,
    இப்ப அஸ்பர் சொல்றத பார்த்த 3 மாதம் இல்லாட்டியும் இந்த நகர சபை முடிய முதல்
    முடிதுடுவாங்க போலன் இருக்கு பிறகு எத காட்டி அரசியல் செய்ய போறன்களோ…

    bt நீங்க போடுற concrete road வாடிகன் வைத்து, தோண்டிப்போட்டு போடுங்கப்பா இந்த
    முறை வெள்ளம் வீட்டுக்கான் நின்டுச்சு road நல்ல இருந்துச்சு எல்லாரும் roadku வர வேண்டி வந்துட்டு இனியாச்சும் பாத்து செய்ங்க ….

    எல்லாத்தையும் விமர்சிக்கமா தேவையானத மட்டும் விமர்சிங்க,
    எதிர்கட்சி விமர்சிக்க மட்டும் இல்ல ஆதரவும் கொடுக்கணும் ஒழுங்கான வேலை திட்டத்துக்கு………

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,364 other followers

%d bloggers like this: