காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

ஷிராணி பண்டாரநாயக்காவின் கண்ணியமும் கௌரவமும் புதிய சட்ட மற்றும் அரசியல் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம்

Posted by Kattankudi Web Community (KWC) on 20/01/2013

shirani_CJ-என்.சத்தியமூர்த்தி-

பாராளுமன்றத்தில் குற்றப் பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப் பட்டதன் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, நாட்டின் பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கம் செய்துள்ளார்.

கடந்த வார முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானம், இந்த விடயத்தில் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு, நான்கு சிறப்பு பிரதிநிதிகளிடம் அவர்களின் கருத்தை அறிவதற்காக இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என்கிற ஜனாதிபதியின் முந்திய அறிவிப்பு வெறும் பொய்யான வார்த்தைகள் என்பதை நிரூபணமாக்கியுள்ளது.

ஆனால் அப்போதும் பாராளுமன்ற தீhமானத்தின் பிணைப்பு இயல்பை அரசியல் அமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான சிறிய விடயத்தையாவது அவர்களால் செய்யக்கூடியதாக இருந்திருக்கும்.

பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணை கொண்டு வரப்பட்ட ஆரம்பம் முதலே,அதன் முடிவின் ஒவ்வொரு திருப்பமும் மற்றும் அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஜனாதிபதி ராஜபக்ஸ மற்றும் அவரது அரசியல் ஆலோசகர்களின் கைகளிலேயே தங்கியிருந்தது, என்பது வெகு தெளிவாகவே தெரிந்தது. ஆளும்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – பொதுசன ஐக்கிய கூட்டு முன்னணி, என்பனவற்றைச் சேர்ந்த 117 பாராளுமன்ற அங்கத்தவர்களால் முன்மொழியப்பட்ட பாராளுமன்ற தீர்மானத்தில் ஷிராணி பண்டாரநாயக்கா மீதான குற்றப் பிரேரணைக்கு 14 காரணங்கள் கூறப்பட்டிருந்தன, மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு மூன்று குற்றங்களை மட்டுமே உறுதி செய்துவிட்டு எனையவற்றை தொட்டுப் பார்க்கவோ அல்லது விசாரணை செய்யவோ முயற்சிக்காமல் விட்டுவிட்டது.

எதிர்கட்சிகள் பிளவு பட்டிருந்த அதேசமயம் பாராளுமன்றத்தின் மீயுயர் தன்மை என்கிற மிகப் பெரிய பிரச்சினையில் அரசாங்கத்துடன் ஒன்றுபட்டு நின்று ,இந்த விடயத்தின் செயல்முறைக் குறைவு சம்பந்தமான எந்தவித கருவூல வாதங்களுக்கும் இடமில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக பாரம்பரிய ஜனநாயகத்தின் மூன்று சொத்துக்களில் மூன்றாவதான நீதித்துறை, பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள், பாராளுமன்ற விசாரணை மூலமாக ஒரு முன் குற்றவியல் பிரேரணையை மேற்கொள்வதற்கு போதுமானவை அல்ல என்று தீர்ப்பு வழங்கியதன் பின்னரும், அவர்களின் கைகளைப் பலப்படுத்தப் பட்டன. இந்த நோக்கத்துக்காக ஒரு தனிச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது.

நீதிமன்றக் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது குற்றப் பிரேரணை நடவடிக்கைகளில்; தீர்ப்பினை வழங்கும் நீதித்துறையே இத்தகைய அரசியற் பிரச்சினைகளுக்கான இறுதியான நடுவர் என்பது. பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைப்படி தற்போதைய தீர்ப்பு நீண்ட கால பின்விளைவுகளை ஏற்படுத்தும். 17வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கி, 18வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னர், பல கட்சிகளை கொண்ட அரசியலமைப்பு சபை ஒன்று அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. குற்றப் பிரேரணை வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, குறிப்பிட்ட சட்ட நிலைகள் மற்றும் நீதித்துறை தீர்ப்புகள் என்பனவற்றை தொலைநோக்கு கண்ணோட்டத்தில் ஒரு மறுபார்வை பார்க்கவேண்டியதாக உள்ளது.

18 ஏ மற்றும் 17 ஏ என்பனவற்றுக்கு இடையில் வேறுபட்ட கோணங்களாக இருந்தாலும்கூட, அரசியல் ரீதியாக குற்றப் பிரேரணை, ஆளும் கூட்டணி அதேபோல எதிர்கட்சிகள் என்பனவற்றில் பிளவுகளை எற்படுத்தியுள்ளது. பாரம்பரிய இடதுசாரிகளான இரண்டு மூத்த அமைச்சர்கள் டியு குணசேகரா மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் பிரதானமாக இந்த தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் நடுநிலை வகித்த அதேவேளை, அவர்களுடன் கைகோர்த்து நிற்கும் தோழர்களான வாசுதேவ நாணயக்காரவும் மற்றும் ஒருவரும் அதற்கு ஆதரவாக அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களித்துள்ளார்கள். தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினரும் மற்றும் ஆளும் கூட்டணியில் உள்ள ஸ்ரீ.ல.சு.க தலைவருமான ராஜிவ விஜயசேகராவும் நடுநிலை வகித்துள்ளார். எதிர் கட்சிகளும் கருத்துக்கள் மற்றும் தந்திரோபாயங்கள் என்கிற நிலையில் பிளவுபட்டு நின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, நீண்ட காலமாக அரசாங்கத்துடன் சேர்ந்துள்ள அதன் அங்கத்தவர்கள் உட்பட கட்சியில் உள்ள கிளர்ச்சியாளர்களர்கள், ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும் என்று சொல்லி வருகிறது.Mohan Peris

முதலில். பிரதம நீதியரசர் பதவி உட்பட அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கான பெயர்களை பரிந்துரை செய்யும் அதிகாரம், முன்னர் இருந்தது போல சுயாதீன அரசியலமைப்பு சபைக்கு அல்லாது, 18வது திருத்தப்படி வித்தியாசமாக பாராளுமன்ற பேரவை ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனினும் சுயாதீன அரசியலமைப்பு சபைக்கு உள்ளது போலல்லாது, தற்போதைய அமைப்பு முறைக்கு நிறைவேற்று ஜனாதிபதியின் தெரிவை கட்டாயமாக ஏற்றுக்கொள்ளும் அனுமதி வழங்கப்படவில்லை அதன் கருத்து புதிய பிரதம நீதியரசரின் நியமனம் உச்ச நீதிமன்றத்தில் சவால் விடுக்கும் சாத்தியத்தை கொண்டிருக்கவில்லை என்பதாகும். எனினும் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் தான் கடைசிநாள் மட்டும் வகித்து வந்த தனது பதவிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றப் பிரேரணையை எதிர்த்து  நீதித்துறையின் முன்னால் நீதி கோரும் தனி உரிமையை கொண்டுள்ளார். நிலையியல் கட்டளைகளுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பும் அவரிடம் உள்ளது. அரசாங்கத்தின் முயற்சிகள் உணர்த்தப்படும் அடிப்படையில், இந்த நடவடிக்கைகள் காரணமாக, தனது கண்ணியம் மற்றும் கௌரவம் என்பனவற்றை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைக்கு தான் தள்ளப்பட்டதாக அரசாங்கத்துக்கு எதிராக அவரால் சவால்விட முடியும்,இந்த குற்றப் பிரேரணைக்கு எதிராக அவர் சவால்விட மாட்டார் என்று எதைக் கொண்டும் இன்னும் தீர்மானம் செய்துவிட முடியாது.

ஸ்ரீலங்கா என்கிற தேசத்தை பொறுத்த மட்டில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பின்தாங்கிய இந்த குற்றப் பிரேரணை சம்பந்தமான நிறைவேற்றுக் கட்டளையை எதிர்க்கும் எந்த சவாலும், நீதித்துறைக்குள்ளும் மற்றும் அதனாலும் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். இந்த விடயம் வெறும் செயல்முறை தன்மையாக மட்டும் இருந்தாலும்கூட, நிலையில் கட்டளைகளின் வழியில் அரசாங்கம் சிக்கிக்கொள்ளும்போது, தனக்கு மேலுள்ள உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தின்படி செயலாற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம், வாக்குறுதி வழங்கிய பின்னர்,அரசாங்கத்திடம் பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டு, குற்றப் பிரேரணை சம்பந்தமான புதிய சட்டங்களை நிறைவேற்றி அதிலிருந்து விடுபட அரசாங்கத்தால் இன்னமும் இயலுமானதாக இருக்கும்.

பிரதம நீதியரசர் பண்டாரநாயக்கா இன்னமும் ஒரு தசாப்தத்துக்கு மேலான காலம் சேவையாற்றக்கூடிய தகுதியை கொண்டிருப்பதால், குற்றவியல் தண்டனையை ஒரு புதிய வடிவத்தின் கீழ் நிறைவேற்றியிருக்க முடியும். தற்போது ஜனநாயகத்தின் பாதுகாவலர் அல்லது அதற்காக போராடுபவராக காட்சி தரும் பிரதம நீதியரசரின் கண்ணியம், மற்றும் கௌரவம் என்பன அரசியலமைப்பின்படி பின்தாங்கும் சட்ட மற்றும் அரசியல் ரீதியான புதிய தாக்குதலின் கீழ் அகப்படலாம். குறிப்பாக அரசியல் எதிராளிகள் இப்போது அவருடன் நீதித்துறை சுதந்திரத்துக்கு மேலாக பாராளுமன்ற மீயுயர் தன்மை பற்றிய விடயம் சம்பந்தமாக வாதாடி வருவதால், அதன்பின்னர் அவரது நிலை தற்காத்துக் கொள்ள முடியாத ஒரு நிலையை எட்டிவிடும்.

பிரதம நீதியரசரை வெளியேற்றுவதில் உறுதியாக உள்ள அரசாங்கம் எப்படியாயினும் இது அப்படியான ஒரு நிலையை எட்டி விடாது. பிரதம நீதியரசரின் குற்றப் பிரேரணையில், புதிய விதி எதனையும் பின்பற்றப் போவதில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. உத்தியோகபூர்வ ஆதாரங்களை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள ஸ்ரீலங்கா ஊடகங்களின் செய்திகள், வரும் ஏப்ரல் மாதம்வரை பண்டாரநாயக்கா அம்மையாருக்கு கால அவகாசம் வழங்க அரசாங்கம் தயாராக இல்லை, வெள்ளி மாலை பாராளுமன்றத்தில்; குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதுமே பதவியை இராஜினாமா செய்யும்படி அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றன. எனினும் அறிக்கைகளின்படி ஜனாதிபதி பிரதம நீதியரசர் பண்டாரநாயக்காவின் இராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார், அப்படி நடந்தால் குற்றவியல் கட்டளையில் கையெழுத்திட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. இராஜினாமா செய்யும் பட்சத்தில் பண்டாரநாயக்காவால் குறைந்தது தனது ஓய்வூதிய நலன்களை பாதுகாக்க முடிந்திருக்கும், குற்றவியல் தண்டனையின் பின் அது முடியாது. குற்றவியல் தண்டனையின் பின் ஷிராணி பண்டாரநாயக்காவால் ஸ்ரீலங்காவில் ஒரு சட்டத்தரணியாக கடமையாற்ற முடியுமா என்கிற ஒரு கேள்வியும் எழுகிறது. தற்சமயம் பெரும்பான்மையான  சட்டத்தரணிகள் மற்றும் நீதித்துறையில் சகல மட்டங்களில் உள்ளவர்களும் அவருக்கு பின்னால் உள்ளனர், ஆனால் ஆகக்கூடி அவர் அலுவலகத்தை விட்டு வெளியேறியவுடன் நிலமை மாறக்கூடும். அங்கு ஒரு புதிய பிரதம நீதியரசர் வரும்போது விடயங்கள் நிச்சயமாக ஒரு புதிய திருப்பத்தை அடையக்கூடும். எனினும் ஒரு பகுதி சட்டத்தரணிகள் மற்றும் அரசியல்வாதிகள் தாங்கள் புதிய பிரதம நீதியரசரை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார்கள், ஆனால் அவர்களது எண்ணிக்கை பெரிதாக தென்படவில்லை.

பிரதம நீதியரசரின் சவால்

தற்போது தனக்கு சாதகமாகவுள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மேன்மறையீட்டு நீதி மன்றங்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் குற்றவியல் தண்டனையை எதிர்த்து, ஷிராணி பண்டாரநாயக்கா நீதித்துறையை அணுகுவாரானால் நிலமை மோசமான ஒரு வழிக்கு திரும்பக்கூடும். இது மேலும் பல விளைவுகளையும் கூட ஏற்படுத்தலாம். நீதித்துறையால் நிறைவேற்று அதிகாரமுள்ளவரையும் சட்டவாக்க அதிகாரமுள்ளவர்களையும் நீதிமன்ற அவமதிப்பு செய்த குற்றத்துக்கு வலிந்து இழுக்கலாம். ஷிராணி பண்டாரநாயக்காவின் பின்னாலுள்ள நீதித்துறையை சேர்ந்தவர்கள், சட்டத்தரணிகள், அரசியற்கட்சிகள்,மற்றும் சமூக அமைப்புகள் என்பனவற்றின் அங்கத்தவர்களின் உரிமைகளை மீறல் செய்ததாக பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு எதிராகவும் பிரச்சினை திரும்பலாம்.

குற்றப் பிரேரணை தொடர்பான பாராளுமன்ற விவாதத்துக்கு முன்பும் அதன் பின்னரும் அரசாங்க அங்கத்தவர்கள், நீதித்துறையின் ஒரு பகுதியினர்,; அரசியல் எதிராளிகள்,மற்றும் சாத்தியமுள்ள வெளிச் சக்திகள் ஆகியன ஒன்றுசேர்ந்து ஸ்ரீலங்காவின் உறுதிப்பாட்டை சீர்குலைக்கவும் மற்றும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் கூட்டுச் சதி செய்கிறார்கள் என குற்றம் சாட்டி வந்துள்ளார்கள். யுத்தத்துக்கு பின்பு நடந்த 2010 ஜனாதிபதி தேர்தலின் போதும் இதே குற்றச்சாட்டுகளை, ஆனால் நீதித்துறையை அதில் சோக்காமல் முன்வைத்திருந்தார்கள். பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியபடி அப்போதைய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியான, ஈழப்போர் – 4 ன் இராணுவ கதாநாயகன், சரத் பொன்சேகா, தனது பதவியை துறந்து போரின் அரசியல் கதாநாயகன் ஜனாதிபதி ராஜபக்ஸவுக்கு எதிராக தேர்தல் களமிறங்கினார்.

அதன்பின் பொன்சேகாவின் விடயத்தில் என்ன நடந்தது என்று சரித்திரம் பேசும். அது இரண்டு இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் மூலம் தங்களின் முன்னாள் இராணுவ தளபதி குற்றவியல் குற்றங்களுக்கான குற்றவாளியாக காணப்பட்ட ஒரு இழிவான  பாடத்தையும் உள்ளடக்கியதாகவும் இருந்தது. அந்த நேரம் இராணுவ நீதிமன்ற நடைமுறைகளை நீதித்துறை சரியெனவும் ஏற்றுக் கொண்டது. தற்போது சிறையிலிருந்து வெளிவந்திருக்கும் பொன்சேகா, ஜனநாயக தேசிய முன்னணிக்கு தலைமை தாங்குகிறார், அவர் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு தனது கட்சி மூலம் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். எனினும் ஷிராணி பண்டாரநாயக்கா  தன்னுடைய போராட்டத்தில் அரசியல்வாதிகளை ஈடுபடுத்துவதை தூர ஒதுக்கி வைத்துள்ளார்.

ராஜபக்ஸவின் தலைமைத்துவம், இந்த குற்றப் பிரேரணை மூலமாக தங்கள் கண்களுக்கு  சங்கடம் தரும்; நடவடிக்கையில் தானே வலியச்சென்று விழாது என்று சர்வதேச சமூகம் நம்புமானால், அது அப்படியல்ல. பொன்சேகா விடயத்திலும் அவரது 2010 தேர்தல்  தோல்விக்குப் பின்னர் சட்டப் பிரச்சினைகள் அவரைச் சூழ்ந்து கொண்டபொழுதும், அவர்கள் இதேபோன்ற முறையீடுகளைச் செய்தார்கள். இருந்தபோதும் மேற்கு தொடர்ந்தும் ஸ்ரீலங்காவுடன் தொடாந்தும் வியாபாரங்களில் ஈடுபட்டு வருகிறது. அதே போலத்தான் சீனாவும், ஈழப் போர் – 4 முடிவடைந்ததும் பொன்சேகா அந்த நாட்டுக்குத்தான் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

உலகின் பனிப்போர் காலத்தின் பின்னர் பெரிய சக்திகளின் இராஜதந்திர வரையறைகளை கொழும்பு நன்கு புரிந்து கொண்டதுபோலத் தெரிகிறது, மற்றும் தனது அரசியல் இலாபத்துக்காக எப்படி சுரண்டல் நடத்துவது என்பதையும் அது தெரிந்து வைத்துள்ளது. கடந்த வருடம் மே மாதம் ஜெனிவாவின் ஐநா மனித உரிமைகள் பேரவையில் வாஷிங்டனின் கௌரவ பிரச்சினை காரணமாக, பொறுப்புக் கூறல் விடயங்கள் சம்பந்தமாக உரத்த தொனியில் எழுப்பபட்ட அமெரிக்காவின் தீhமானமும் அப்படிப்பட்டதுதான். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் மனித உரிமைகள் பதிவு சம்பந்தமாக கடந்த நவம்பரில் நடந்த மீளாய்வினை ஒப்பிட்டு நோக்கும்போது அது ஒரு பழகிப்போன விவகாரமாகத்தான் உள்ளது.

வரப்போகும் மார்ச்சிலும் ஐநா மனித உரிமைகள் பேரவை, அரசாங்கம் நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமாக கடந்த மார்ச் முதல்; இடம்பெற்ற நடவடிக்கைகள் ஏதாவது இருப்பின் அதுபற்றிய ஸ்ரீலங்காவின் தேர்ச்சி அறிக்கை சம்பந்தமாக கலந்தாய்வு செய்ய எதிர்பார்த்துள்ளது. எனினும் உலகளாவிய நடவடிக்கைகளின் வரையறைகளை நன்கு அறிந்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு கால நீட்டிப்புக் காரணம் சற்று ஆறுதலை அளிக்கலாம். பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணையும் மற்றொரு மனித உரிமை மீறல் சம்பவமாக  பரந்த அளவில் இதில் பார்க்கப்படக் கூடும்,ஆனால் சர்வதேச சமூகம் போர்க்காலத்தில் நடைபெற்ற குற்றங்கள் பற்றி மனித உரிமைகள் முன்னணியினருடன் அதிகம் கவனிக்கப்பட வேண்டி உள்ளதால், இது போருடன் தொடர்பு பட்டது அல்லது போர் நடவடிக்கையில் இழைத்த குற்றமாக இல்லாதபடியால் அதைப்பற்றி  பெரிது படுத்தாமல் விட்டுவிடலாம்.

எங்கு பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு?

இப்போது அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் விளைவு என்னவென்றால் பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டை ஸ்ரீலங்காவில் நடத்துவது பற்றி அதன் உறுப்பு நாடுகள் முடிவெடுக்க வேண்டிய விடயம்தான். பொதுநலவாய நாடுகளின் தலைமை நாடாக உள்ள ஐக்கிய இராச்சியம் இந்த குற்றப் பிரேரணை சம்பந்தமாக தனது கவலையை வெளியிட்டுள்ளது, அதே போலத்தான் அமெரிக்காவும், அது இதில் அங்கத்துவம் வகிக்காத போதும் சர்வதேச விவகாரங்களில் அதற்குள்ள செல்வாக்கினை ஒருபோதும் குறைவாக மதிப்பிட முடியாது.

பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் ஒரு முன்னணி நாடாக உள்ள கனடா, பிரதம நீதியரசர் விவகாரத்துக்கு முன்னரே, இனப்பிரச்சினை, யுத்தம் மற்றும் வன்முறை, மற்றும் பொறுப்புக் கூறலை அடிப்படையாக கொண்ட விடயங்கள் சம்பந்தமாக பிரச்சினையை கிளப்ப போவதாக ஏற்கனவே அச்சுறுத்தி வருகிறது.

அவுஸ்திரேலியாவை பொறுத்த மட்டில் எப்படியாயினும் குற்றப் பிரேரணைக்கு பின்னரும் அது மாநாட்டில் கொழும்புக்கு பின்துணை வழங்கும்.முன்னைய இரு நாடுகளிலும் தேர்தலை பொறுத்தமட்டில் கணிசமானளவு புலம்பெயர் ஸ்ரீலங்கா தமிழர்களைக் கொண்ட தேர்தல் தொகுதிகள் உள்ளன. அவுஸ்திரேலியாவும், ஸ்ரீலங்கா தமிழர்கள் மனிதக் கடத்தல் மூலமாக நாட்டுக்குள் ஊடுருவுவதை தடுப்பதற்கு கொழும்பின் ஒத்துழைப்பை நாடுகிறது.

இதன் பின்னணி எப்படியிருந்தாலும், பிரதம நீதியரசரின் குற்றப் பிரேரணையின் விளைவுகள் காரணமாக ஸ்ரீலங்கா இனப்பிரச்சினை சம்பந்தமாக கலந்துரையாடுவதையோ அந்த நடவடிக்கை சம்பந்தமாக விவாதிப்பதையோ நிறுத்தி வைத்துள்ளது, இந்த விடயத்தில்தான் சமீபத்தைய வருடங்களில் பாராளுமன்ற தெரிவுக்குழு சம்பந்தமாக முதல்முறையாக பேசப்பட்டது. அதே போலத்தான் சர்வதேச சமூகமும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது பற்றிய விடயங்களை திரும்பவும் வற்புறுத்தாது, அரசாங்கம் வழங்கியுள்ள கால எல்லையை அப்படியே ஏற்றுக் கொண்டதைப்போல தெரிகிறது. இதற்கிடையில் குற்றப் பிரேரணையுடன் தொடர்புடைய சாத்தியமான ஒரு நீதித்துறையின் தலையீடு காரணமாக இந்த இறுதிக் கட்டத்தில் பெருகி வரக்கூடிய எந்தவிதமான அரசியலமைப்பு  நெருக்கடிகளினாலும் முன்னோடியற்ற உள்நாட்டு பின்விளைவுகளுக்கு இன்னமும் இடம் உண்டு.அதனால்தான் அதை தடுப்பதில் அரசு முனைப்பாக உள்ளது. முதலில் பொதுநலவாய நாடுகளின உச்சி மாநாடு, மிகுதி அதை பின்தொடர்ந்து செல்லவுள்ளது.

(இந்த கட்டுரை எழுத்தாளர்,ஒப்சேவர் ரிசேர்ச் பவுண்டேசனின் ஒரு மூத்த உறுப்பினர்)

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

-தேனீ-

About these ads

One Response to “ஷிராணி பண்டாரநாயக்காவின் கண்ணியமும் கௌரவமும் புதிய சட்ட மற்றும் அரசியல் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம்”

  1. Dr M L Najimudeen said

    What happened to SF (Sarath Fonseka) can occur to SB (Shirani Banadaranayakke). It is foolish to be wise where ignorant bliss

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,368 other followers

%d bloggers like this: