ஹைறாத்தில் முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.
Posted by Kattankudi Web Community on 19/01/2013
2013ம் கல்வியாண்டிற்கு முதலாம் தர புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவம் நேற்று 19.01.2013 ஹைராத் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அதிபர் அஜிறா காலிதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது இரண்டாம் தர மாணவர்களினால் முதலாம் தர மாணவர்கள் மாலையணிவித்தும் இனிப்பு வழங்கியும் வரவேற்கப்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மௌலவி ஏ.எம்.மஜீட் ரப்பாணி கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்துடன் பெற்றோர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது மாணவர்களுக்கு புத்தக பைகளும் வழங்கப்பட்டன.
















sadiq said
பாத்திமா வித்தியாலயத்தில் நடைபெற்ற வரவேற்பு வைபவத்தினை முடிந்தால் பதிவேற்றுமாரு இன்போவினறை தயவாய் வேண்டுகிறேன். நன்றி