மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தின் தரம் 01 இற்கு அனுமதி பெறும் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு
Posted by Kattankudi Web Community on 19/01/2013
காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் – 01 அனுமதி பெறும் மாணவர்களுக்கான நிகழ்வு நேற்று வெள்ளிக் கிழமை கல்லூரியின் அதிபர் திருமதி. ஜெஸீமா முஸம்மில் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஸிப்லி பாறுக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கௌரவ அதிதிகளாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அல்ஹாஜ். S.H.M. அஸ்பர் , பிரதேசக் கல்விப் பணிப்பாளர் S.M.M. சுபைர் BA, மட்டக்களப்பு மத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர்களான M. நஸீம், A.L.M. சரிபுத்தீன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கல்லூரியின் அதிபர் ஜெஸீமா முஸம்மில் தமது தலைமையுரையில் இது காலவரை இப் பாடசாலையின் முயற்சிக்கு அரும் பங்காற்றிய அதிபர்களுக்கு நன்றி கூறியதோடு இப் பாடசாலையின் பௌதீக வளத்தேவை மிக அதிகமாக காணப்படுவதுடன் அதனை நிறைவு செய்து தருவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் பாடசாலை அபிவிருத்திக் குழவினதும் பாடசாலை சமூகத்தினதும் பங்களிப்பு பற்றியும் தெரிவித்தார்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட பொறியியலாளருமான ஸிப்லி பாறுக் உரையாற்றுகையில் ஒவ்வொரு பிள்ளையையும் அவர்களது பெற்றோர் பொறியியலாளராக, வைத்தியராக சிறந்த பிரஜையாக வர வேண்டும் என்பதற்காகவே பாடசாலையில் அனுமதிக்கின்றனர். எமது அரசாங்கமும் அதனையே விரும்புகின்றது. அதற்காகத்தான் பல்கலைக் கழகம் வரை இலவசக் கல்வியை அரசு வழங்குகின்றது. ஆனால் துரதிஸ்ட வசமாக மாணவர்கள் க.பொ.த சாஃதர பரீட்சை, உயர்தரப் பரீட்சை போன்ற பரீட்சைகளின் பின்னர் பல்வேறு மாயைகளுக்கு ஆட்பட்டு தமது எதிர்கால வாழ்வை சீரழித்து விடுகி;றனர். எனவே, பெற்றோர்களாகிய நீங்கள் தமது இலக்கை அடைவதில் மிகவும் கவனத்துடன் இருப்பது முக்கியமாகும் எனக் குறிப்பிட்டார்.
புதுமுக மாணவர்களை தரம் 02 மாணவர்கள் மலர், இனிப்புப் பண்டம் என்பன கொண்டு வரவேற்றனர்.













PMAMF Mohammed H.I.R.A.Z said
மகளிர் கல்லூரிகள் தரம் ஒன்று முதலே ஆண்மாணவர்களை உள்ளீர்பதை தவிர்ந்து கொள்ளுவதை தடுப்பது எது??? பொது வாக நம் மாவட்டதிலும் மாகாணத்திலும் தேசிய ரீதியிலும் சிறந்து மிளிரும் எந்த ஒரு திறமையான மகளிர் கல்லூரியிலுமே ஆண்பிள்ளைகள் தரம் ஐந்துக்கு கீழ் கூட உள்வாங்க படுவதில்லை அந்நிய மத பாடசாலைகளே இப்படி முன்மாதிரியாக நடந்துகொள்கையில் முஸ்லிம்களாகிய நாமும் 10 வயதுவரை சிறுவர்கள் என்ற கோட்பாட்டை புறந்தள்ளி பருவ வயது மனிதனுக்கு மனிதன் வேறுபட கூடியது என்ற உண்மை நிலையை புறிந்து ஆண்கள் வேராகவும் பெண்கள் வேறாகவுமே அறிவையில் இருந்து கல்வி கட்கும் நிலையை இப்போதே எட்படுத்த சிந்திதால் என்ன???
எதிர்காலத்தில் நாம் இப்படி பிரிக்க முட்பட்டாலும் அரச சட்டபடி பிர்க்க முடியாத கலவன் பாடசாலை மட்டுமே என்ற சட்டம் தடையாக குறுக்கே வந்துவிடுமுன் செய்ய வேண்டிய நல்லவைகளை செய்துவிடுவது கல்வி அபிவிருத்தி சபைகள் உலகாக்கள் ஜம்மியதுல் உலமாசபை சம்மேளனம் கல்வி அபிவிருத்தி குழு யாவறினதும் ஊர் தலைவர்களினதும் பொறுப்பாகும்