காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

மட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கண்ணுக்கு காத்தான்குடி தெரிந்தது: பெயர்ப்பலகைகள் மற்றும் தூரக்குறிப்பு பலகைகள் பொருத்தப்பட்டன

Posted by Kattankudi Web Community (KWC) on 19/01/2013

Kky nameboard (4)- எமது விஷேட செய்தியாளர் -

சுனாமியைத் தொடர்ந்த ஜப்பானின் நிதியுதவியில் பொத்துவில் முதல் திருக்கொண்டியாமாடு வரையிலான ஏறத்தாள 100 கிலோமீற்றர் வீதி பிரதான காபட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட போது, வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அவ்வீதியில் அமைந்திருந்த ஊர்களுக்குரிய பெயர்ப்பலகைகளும், முக்கியமான சந்திகளில் ஊர்களுக்கான தூரத்தைக் குறிப்பிடும் பலகைகளும் இடப்பட்டன.

ஏறத்தாள இரண்டு வருடங்களுக்கு முன்னால் நிறைவு பெற்ற இந்த வேலைகளில் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளால் காத்தன்குடியின் பெயர் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டது. தனியான ஊர்களாக இல்லாமல் மட்டக்களப்பு நகரின் பகுதியாக உள்ள அரசடி போன்ற பகுதிகளுக்கு கூட பெயர்ப்பலகை இட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை காத்தன்குடியின் பெயரை கவனமாக தவிர்த்துக் கொண்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின்  நிர்வாக உயர் பதவிகளில் இருக்கும் அதிகமான தமிழ் அதிகாரிகள் புலிகள் ஆதிக்கம் செலுத்திய காலம் முதல் பிரதேச முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களின் மீது தங்களது அதிகாரங்களை துவேசமான முறையில் துஸ்பிரயோகம் செய்தே வந்துள்ளனர். இன்னும் இந்த விடயங்கள் நிலப்பிரச்சினை உட்பட அநேக விடயங்களில் தொடர்கின்றன. முஸ்லிம்கள் மற்றும் அவர்களது பிரதேசங்களின் மீது இவர்கள் எவ்வளவு மோசமான காழ்ப்புணர்வை கொண்டுள்ளனர் என்பதற்கு இந்தப் பெயர்ப்பலகை விடயம் சிறந்த உதாரணமாகும்.

மேற்குறித்த விடயம் தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மேற்குறித்த விடயம் தொடர்பில்  வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருந்ததும், காத்தான்குடியில் இருந்து இயங்கும் பிராந்திய ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைத்துத் தரப்புகளும் இவ்விடயம் தொடர்பான அதிருப்தியை வெளியிட்டிருந்தன.

காத்தான்குடி இன்போ இவ்விடயம் தொடர்பில் 05.04.2012 அன்று  வெளியிட்ட செய்தியை வாசகர்கள் இந்த இணைப்பில் காணலாம்.

கடந்த செவ்வாய்க்கிழமை காத்தன்குடியின் இரு எல்லைப் பகுதிகளிலும் காத்தான்குடி என்று மும்மொழிகளிலும் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொருத்தியுள்ளது.

Kky nameboard (3)

.

Kky nameboard (1)

மாத்திரமன்றி கோயில்குளம் ராணுவ முகாமுக்கு முன்னாள் களமுனையிலிருந்து மட்டக்களப்புத் திசையில் பயணிப்போர் காணத்தக்கதாக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி ஆகியவற்றுக்கான தூரங்களைக் குறிக்கும் பலகையும், கல்லடியில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கியப் பராமரிப்புப் பீடத்தின் முன்னாள் அமைந்துள்ள சுற்றுவட்டப் பகுதியில் மட்டக்களப்பில் இருந்து களமுனைத் திசையில் பயணிப்போர் காணத்தக்கதாக காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகியவற்றுக்கான தூரங்களைக் குறிக்கும் பலகையும் பொருத்தப்பட்டுள்ளன.

Kky nameboard (5)

About these ads

One Response to “மட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கண்ணுக்கு காத்தான்குடி தெரிந்தது: பெயர்ப்பலகைகள் மற்றும் தூரக்குறிப்பு பலகைகள் பொருத்தப்பட்டன”

  1. கஹ்தான் said

    நன்றி, இதற்காக சிரமம் எடுத்து உழைத்த நல் உள்ளங்களுக்கு இது முடிவல்ல, இன்னும் இது போன்று நிறைய தேவைகள் உள்ளது எமது மண்ணுக்கு, எம் அனைவருக்குமான அடுத்த இலக்காக எமது தெளிவான எல்லை இருக்கட்டும் இன்ஷா அல்லாஹ்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,372 other followers

%d bloggers like this: