நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது காத்தான்குடிக்கு பெயர்ப்பலகை நடப்பட்டது – கிழக்கு மண்ணுக்கு கிடைத்த முதல் வெற்றி
Posted by Kattankudi Web Community (KWC) on 16/01/2013
கிழக்குமண் பத்திரிகையின் முதலாவது வெற்றி நேற்று பதிவாகியதாக அதன் பிரதம ஆசிரியர் ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார்.
கிழக்கு மண் தனது முதலாவது இதழில் விடுத்த கோரிக்கையை அடுத்து காத்தான்குடி மக்களின் நீண்டகால கோரிக்கையை வீதி அபிவிருத்தி அதிகார சபை இன்று நிறைவேற்றியது.
காத்தான்குடியின் பெயர்குறித்த எல்லைப்பெயாப் பலகையை நடுமாறு பொதுமக்களும், கிழக்குமண்ணும், எமது பிராந்திய ஊடகங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இன்று அக்கோரிக்கையை குறித்த சபை நிறைவேற்றியதுடன் பெயர்ப்பலகையையும் இருமுனைகளிலும் நட்டுள்’ளது.
கிழக்குமண் பத்திரிகையில் வந்துள்ள தொடர்புடைய செய்தியை வாசகர்கள் இங்கே காணலாம்









அறபாத் said
அன்புச் சகோதரர் ஜௌபர் கான் அவர்களுக்கு
தங்களது பத்திரிகையில் செய்தி வந்தது உண்மை என்றாலும் இந்த விடயத்துக்கு நீங்கள் உரிமை கோருவது சிறுபிள்ளைத் தனமானது.
உங்கள் பத்திரிகை வரத் தொடங்கி சில மாதங்களே ஆகிறது. ஆனால் இந்தப் பிரச்சினை தொடர்பில் பலர் முயற்சி எடுத்திருந்தனர் காத்தான்குடி இன்பொ கூட பல மாதங்களுக்கு முன்னர் இந்த விடயத்தை தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தது.
PMAMF Mohammed H.I.R.A.Z said
இந்த பெயர் பலகை இவ்விடத்தில் அல்ல திருகோணமலை வீதியில் இருந்து மட்டு நகரும் கல்முனைக்குமான வீதியும் பிரியும் மட்டு நகரில் உள்ள அந்த சுற்று வட்டாரத்துக்கு அருகாமையிலெயே நட பட வேண்டியது அந்த இடத்தில் காதான்குடியை விட்டு விட்டு அதட்கு அடுத்த நகரம் இத்தனை கிலோமீட்டருக்கப்பால் உள்ளது என்று சுட்டி விட்டு இவ்விடத்தில் அரசியலுக்காக இப்படி நடப்பட்டுள்ளது நகைப்புகிடமானது
ஒரு பெருந்தெருவில் ஒருவர் பயணிக்கையில் ஒரு நகரை அடைகையில அதே வீதியில் அடுதடுத்த நகரங்களின் தூரங்கள் தரவுகளாக விளம்பரபடுத்தபட்டு முதலாவதாக வரும் நகருக்குறிய வழிகாட்டலே அறிவித்தலாக இடபட்டிருக்கும் மாறாக முதலாவது வரும் நகரை விட்டு விட்டு அடுத்த நகருக்குறிய வழியை காட்டும் அறிவித்தல் பலகையை நிறுவி விட்டு சில கிலோ மீட்டர் கழித்து அடுட்த்து வரும் நகரை அறிவிட்பு செய்வது நகைப்பு கிடமானது அரசியல் சித்து விளையாட்டு
ooraan said
உங்கட மண்ணின் மைந்தன் நல்ல காலம் இதற்கு உரிமை கோரவில்லை 25 வருட அரசியலில் இது கூட செய்ய முடியவில்லையே
thala said
pammaththu J……..an
M.I.A.Nasar said
காத்தான்குடியின் பெயரை மாற்றுவது தொடர்பாக அண்மைக் காலங்களில் பேசப்பட்டது. அவ்வாறு பெயர் மாற்றம் ஏதும் நடைபெற்றால், மாற்றப்பட்ட பெயரை இவ்வாறு பெயர்பலகையில் இடுவதற்கு பல தலைமுறைகள் காத்திருக்க வேண்டிவரும் என்பதை நாம் கவனத்தில் கொள்வது நல்லது
deen said
Politics….
sham said
which name are you going to give your town?
aliyarmohideen said
இவுக கொஞ்சப் பேரு……….. Politics எங்காக..அரசியல் எங்காக……. என்ன மனிசங்களடா மக்காள் நீங்க………. ???
வேண்டாப் பொண்டாட்டிட கை பட்டாலும் குத்தமாம்… கால் பட்டாலும் குத்தமாம்… அந்த மாதிரிக் கிடக்குது இவுக கத…
போடு வைக்கல… வைக்கல.. எவனும் பாக்கல…..யென்டு இவ்ளோ நாளா கத்தி திரிஞ்சதுக்கு.. ஏதோ ஆண்டவன்ட அருளாள இந்த போடு வைக்கப்பட்டிரிக்கி என்டு சந்தோசப்படாம அதுக்கும் வந்துட்டு உங்க தனத்த காட்டுறீங்களே….
தம்பி ஜவ்பர்கானு சொந்தந்கொண்டாடுரதா வேற ஒரு கத…… தலையங்கத்தையும் அரவாசி பாத்துட்டு கருத்து தெரிவிக்க வாரவக நின்டு நிதானமா எழுத்துக்கூட்டியாவது வாசிச்சிட்டு அப்புறம் உங்கட கருத்து?? கள சொல்லனும்…
அவரு முயற்சிச்சதுக்குஅ அவரு சந்தேசாப்படுறாரு…. கீழ நல்லாத்தானே சொல்லியிருக்காரு……..எல்லாரும் பாடுப்டயென்டு…….
நம்முட ஊருல இந்த போடு விசயமா தங்கட தங்கட முயற்சி செய்தாக்கள் எக்கச்சக்கம் பேரு…… வெளியால செய்தமாதிரி படங்காட்டுனவகள விட தன்ட தன்ட சுயமுயற்சியால வெளியகத்துக்குத்தெரியாம பலபேரு இதுக்கு தன்னால ஏன்ட மட்டும் பாடுபட்டது அந்த ஆண்டவனுக்கு நல்லாத்தெரியும்…..
நல்ல விசயம் நடந்தா அத வரவேற்குரதும் தீம நடந்தா அத சுட்டிக்காட்டி நல்லதா மாத்துறதும் மாத்த முயற்சிக்கிறதும் தான் நல்ல மனிசங்களுக்கு அடையாளம்…. இது என்னடான்டா…….
எதுக்கெடுத்தாலும் அவுகட மேதாவித்தனத்த காட்றதா நினச்சி கருத்து என்ட பேருல உளரிக்கொட்றதே வேலையாப்போச்சி…… மக்காள்……
Jawahir Saly said
சகோதரர் அறபாத் சொல்லி இருப்பதைப்போல கிழக்கு மண்ணுக்குக் கிடைத்த முதல் வெற்றி இது என்று கொண்டாட வேண்டாம். ஏனென்றால் இது சம்பந்தமாக பலர் முயற்சித்திருக்கிறார்கள். எல்லோரும் உரிமை கொண்டாடப்பார்த்தால் தங்களுக்கு இன்னும் முதல் வெற்றி கிடைக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் எனக்குத் தெரிந்ததையும் சொல்ல வேண்டும், நீங்கள் கிழக்கு மண் என்று பெயரை வைத்துவிட்டு காத்தான்குடிக்கு மாத்திரம் பெயர்ப்பலகை நாட்டியதை பேசுகிறீர்கள். ஆனால் முஸ்லிம் சமாதான செயலகத்தின் ( Peace Secretariat for Muslims ) மட்டக்களப்பு பிரதேச காரியாலயம் காத்தான்குடியில் இயங்கிய காலத்தில் அதன் பணிப்பாளராக கடமையாற்றிய சகோதரர் SM. இஸ்ஸதீன் அவர்கள் மாவட்டத்தில் அநேகமான இடங்களில் ஊர்களுக்கான பெயர்பலகைகள் நடப்பட்டுள்ளன ஆனாலும் காத்தான்குடி , ஏறாவூர் , ஓட்டமாவடி ஆகிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களுக்கு மாத்திரம் பெயர்பலகை போடப்படவில்லை எனவே இது சம்பந்தமாக கவனிக்குமாறு என்னிடம் ( அப்போது நான் மாகாண சபை உறுப்பினராக இருந்ததனால் ) கேட்டுக்கொண்டார். அப்போது இது சம்பந்தமான சாதக பாதகங்களை ஆராய்ந்து விட்டு மாகாண சபையில் வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்திலும் கச்சேரி DCC meeting இலும் நான் எடுத்துச் சொன்னேன். இதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுவதாக அப்போது சொல்லப்பட்டது. இது போல வேறு சிலரும் முயற்சித்திருக்கலாம். இப்போது காத்தான்குடிக்கு இது நடப்பட்டுள்ளதை பெரிய சாதனையாக கொள்ளக்கூடாது. இதை எல்லாம் பெரிது படுத்திக்காட்டும்போதுதான் இனவாதிகள் இதுபற்றி எல்லாம் சிந்திப்பார்கள். உண்மையில் இது பெரிய விடயமல்ல , காத்தான்குடிக்கு இந்த Board ஐ விட ஈத்தமரம்தான் எல்லா ஊர்களிலும் பேசப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். எது எப்படியோ முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் செய்த எல்லாவற்றுக்கும் புகழ் பாடுவதால்தான் மற்ற சமூகங்கள் தங்களுக்கு எதுவும் நடைபெறவில்லை முஸ்லிம்களுக்கு மாத்திரம்தான் எல்லாம் நடக்கிறது என எண்ணி வீரர்களாக மாறி பொது பலசேனா என்று திரிகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இருந்தும் ஜௌபர்கான் நல்ல சிந்தனை கொண்டவர் , மனம் தளராமல் எல்லா விடயங்களிலும் நல்ல நோக்கத்தோடு தலையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
Minnix (@minnixio) said
தினமும் பல்லாயிரம்பேர் வருகின்றனர்?! :O
MSM NASIR said
அல்ஹம்துலில்லாஹ், யார்,யார் முயற்சித்தார் என்பது நமக்கு தேவையில்லை.விடயம் நடந்துமுடிந்த்திருக்கிறது.
அதேபோன்று எல்லோருமாக சேர்ந்து காத்தான்குடிக்கு மிக அண்மையிலுள்ள காங்கயனோடைக்கும் இவ்வாறன பெயர் பலகையை நிர்மாணிக்க முயற்சியுங்கள்.எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன். (எம்.எஸ்.எம்.நஸீர் ,ஏறாவூ