சமூகமேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நோயுற்ற குழந்தைக்கு நிதியுதவி
Posted by Kattankudi Web Community (KWC) on 16/01/2013
- உத்தியோகபூர்வ ஊடக வெளியீடு -
கூடுதலான இளைஞர்களை கொண்டு சமூகப்பணிகளை செய்துவரும் சமூகமேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தினால் புதிய காத்தான்குடி-02, பரீட் நகர், இல 36/A எனும் முகவரியை சேர்ந்த முஹம்மது கபீர் என்பவரது மகன் முஹம்மது வலீத் (வயது 9மாதங்கள்) என்ற சிறு குழந்தைக்கு சத்திரசிகிச்சைக்கான நிதியுதவி ஏற்பாடு செய்ய்ப்பட்டது.
இந்தக் குழந்தைக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியினால் சத்திர சிகிச்சை செய்வதற்காக ரூபா 700,000/- பணம் தேவைப்பட்டதனால் அச்சிறுவனின் தந்தை அன்றாட கூலித்தொழில் செய்து வருபவர் அவரிற்கு அப்பணத்தினை ஈடுசெய்ய முடியாததனால் எமது சமூகமேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்திற்கு வருகைதந்து மகனிற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளோம் இன்னும் ரூபா 100,000/- தேவைப்படுவதால் அதனை தாங்கள் வசூல் செய்து தருமாறு கேட்டுக்கொண்னடார்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிருவனங்களின் சம்மேளனத்தின் அனுமதியோடு காத்தான்குடி பொது மக்களிடத்தில் வசூல் செய்து அச்சிறுவனின் தந்தையிடம் ரூபா 90,524/- அப்பணத்தினை சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் M I M. ஹாரிஸ் (JP) அவர்களினால் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், உலமாக்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
அச்சிறுவனிற்காக உதவி செய்த எமது ஊரைச்சேர்ந்த அனைத்து சகேதர, சகோதரிகளிற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் உங்கள் எல்லோருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹவிடம் பிரார்த்திக்கின்றோம்.








I.M.Inshaf said
masha allah……
Mohamed Irsath said
Masha Allah.. Kattankudy Kudy is great city of muslim.
Irsath From Sammanthurai.