இளம் சாதனையாளர் அல்-ஹாபிழ் .எம்.ஆர் .முஹம்மத் ரிஸ்கான் அவர்களுக்கான காத்தான்குடி வாழ் மக்களின் வரவேற்பு வைபவம்
Posted by Kattankudi Web Community (KWC) on 16/01/2013
- தகவல்: மௌலவி. MAM.மஸ்ஊத் அஹ்மத் -ஹாஷிமி -
சவூதி அரேபியாவின் புனித மக்கா முகர்ரமாவில் கடந்த 2-7.12.2012 அன்று நடைபெற்ற சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில், உலகின் 83 நாடுகளுக்கிடையில் இலங்கை சார்பாக போட்டியிட்ட கொழும்பு -12, ஆட்டுப்பட்டித் தெரு, சிராங்கு தோட்டத்தைச் சேர்ந்தவரும், கொழும்பு, பெரிய பள்ளிவாயலில் இயங்கும் மதீனதுல் இல்ம் அரபுக் கல்லூரி மாணவருமான அல் -ஹாபிழ் எம்.ஆர்.முஹம்மது ரிஸ்கான் அவர்களுக்கான காத்தான்குடி வாழ் மக்களின் வரவேற்ப்பு வைபவம் இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் 18.01.2013 வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகையைத் தொடர்ந்து முஹைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.
தனிப்பட்ட முறையில் எமது சகோதரர்கள் சிலர் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ள இவ் வைபவத்தில் காத்தான்குடி வாழ் மக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு வைபவ ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
இன் நிகழ்வில் கடந்த 53 வருடங்களாக எமது காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் முதல்வராக இன்றுவரை சேவையாற்றி வரும், எமது சுக துக்கங்களில் ஒன்றறக் கலந்த தியாகச் செம்மல், சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் மௌலவி. எம்.ஏ. அப்துல்லாஹ் (ரஹ்மானி) ஹஸரத் அவர்களும் கெளரவப்படுத்தப்படவுள்ளார்கள்.
————–
குறிப்பு: இந்நிகழ்வை காத்தான்குடி இன்போவில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழிநுட்ப சிக்கல்கள் ஏதும் இல்லாதவிடத்து இன்ஷா அல்லாஹ் நேரடி ஒளிபரப்பு இடம்பெறும்
- நிர்வாகம் -








PMAMF Mohammed H.I.R.A.Z said
மாஷா அல்லாஹ் நல்ல முயட்சி வரவேட்க வேண்டிய பணி இது போல் நம் ஊரில் உள்ள நிறுவனங்கள் முன்வந்து தேசிய ரீதியான கிராஅத் போட்டிகளை வருடா வருடம் ஒழுங்கு செய்வதன் மூலம் இந்த துறையில் நம் செல்வங்கள் இன்னும் இன்னும் சர்வதேச ரீதியில் மிளிர ஊக்கம் கொடுக்க வேண்டும்
KAATHOORAN said
83 Nadukalukkidai il 1aam Idampetrathu enpathu Evvalavu Periya Sathanai. MASHA ALLAH.
MIA.Nasar said
இந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டுள்ள அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. இந்தத் தகவலை தந்த மௌலவி மஸ்ஊத் அஹ்மத் ஹாஷிமி அவர்களுக்கும் காத்தான்குடி இன்போவுக்கும் எனது மனமார்நத நன்றிகள்