காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

மட்டக்களப்பு எல்லை நிர்ணயம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

Posted by Kattankudi Web Community (KWC) on 15/01/2013

DSC01513-றிதா-

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலகப்பிரிவுகளிலுள்ள தமிழ் கிரமாங்கள் ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுடன் இணைப்பதற்கு எடுத்த தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கின்றது என நேற்று (14.1.2013) மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடாத்திய ஊடகவியலாளர் மாநட்டில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மட்டக்களப்பிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை  (13.1.2013) நடைபெற்றுள்ளது.

இந்த எல்லை நிர்ணயம் தொடர்பான கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல் வாதிகள் எவரும் அழைக்கப்படவில்லை. அதிகாரிகள் மாத்திரம் இக் கூட்டத்தில் கலந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள்  அமைச்சின் மேலதிக செயலாளர் டளலகே மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியிலுள்ள கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனானை மேற்கு, மற்றும் வாகனேரி ஆகிய கிராமங்களை ஓட்டமாவடி பிரதேச செயயலகத்துடனும், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனாணை கிழக்கு கிராம சேவகர் பிரிவை கோறளைப்பற்று மத்தி எனப்படும் பிரதேச செயலகத்துடன் இணைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.

இந்த மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளான எங்களை இக் கூட்டத்திற்கு அழைக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நன்கு திட்டமிடப்பட்டு இங்கு வந்து அதிகாரிகளினால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு போதும் இந்த முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது இந்த தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

இந்த கிராமங்களை ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகங்களுடன் இணைப்பதாயின் அந்த கிராம மக்களிடம் முதலில் கேட்க வேண்டும் அடுத்த தாக இதற்கு அரசியல் வாதிகளின் ஒப்புதலும் பெறவேண்டும்.

அவ்வாறில்லாமல் யாருக்கும் தெரியாமல் இந்த கிராமங்கள் இன்னுமொரு பிரதேச செயலகங்களுடன் இணைக்கப்படுவதை அனுமதிக்கமுடியாது.

இந்த கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களுக்கு ஏன் அழைப்பில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்ட போது இது ஆரம்பக் கட்டம் அடுத்த இறுதிக் கூட்டத்திற்கு நீங்கள் அழைக்கப்படுவீர்கள் என கூறினார்.

ஆனால் இது முடிவை அறிவிக்கும் கூட்டமாக இருந்துள்ளது இந்த தீர்மானத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதியமைச்சர்  முரளிதரன் மற்றும் முன்னாள் அமைச்சரும் தற்போதய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோரிகளின் ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் நாங்கள் அறிகின்றோம்.

இந்த மாவட்டத்திலுள்ள ஏனைய அரசியல் வாதிகளின் ஒப்புதல்கள் பெறப்படவில்லை. எந்த முடிவாயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதி நிதிகளான எங்களிடமும் கதைத்திருக்க வேண்டும். எங்களுடன் ஆலோசனை செய்து இணக்கப்பாடுடன் ஒற்றுமையுடன் முடிவுகளை எடுத்திருக்க வேண்டும்.

இன ரீதியான பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படக் கூடாது என அரசாங்கம் தெரிவித்துள்ள போது ஏன் இவ்வாறான ஒரு முடிவு எடுக்கப்படல் வேண்டும். இந்த மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி எனும் இன ரீதியான பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதன் பின்னர்தான் இந்த பிரச்சினைகள் இங்கு உருவானது.

எல்லை நிர்ணயம் தொடர்பாக முடிவெடுப்பதாயின் இந்த மாவட்டத்தின் சகல அரசியல் வாதிகளும் இருக்கவேண்டும் அந்த பகுதி மக்களிடம் ஒப்புதல் பெறவேண்டும்.

தற்போது இது தொடர்பாக எடுத்துள்ள முடிவை மீளாய்வு செய்ய வேண்டும் இந்த விடயமாக பொது நிருவாக உள்நாட்டலுவள்கள் அமைச்சருக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதி நிதிகள், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஒரு கடிதமொன்றை அனுப்பவுள்ளோம்.

இந்த பகுதியில் தமிழ் முஸ்லிம் உறவு வலுவடைந்து வருவதை குழப்புவதற்காக மத்திய அரசாங்கம்  இவ்வாறான சதி நடவடிக்கைகளை செய்வதற்கு முனைகின்றது என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 11300 ஏக்கர் காணியும், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 1200 ஏக்கர் காணிகளும் இதன் மூலம் கோறளைப்பற்ற மத்தி மற்றும் ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மாற்றப்படுகின்றது. இதை ஒரு போதும் ஏற்றக்கொள்ள முடியாது. ஆரம்பமுதல் இந்த கிராம மக்கள் இந்த அலுவலங்களின் கீலேயே வாழ்ந்து வருகின்றனர்.

எனவேதான் இந்த தீர்மானத்தைவன்மையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டிப்பதுடன் அந்த முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும்  மேலும் தெரிவித்தார்.

இதில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.அரிய நேந்திரன் இந்த முடிவுக்கு எதிராக நாங்கள் கையொப்பிமிட்டு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பவுள்ளோம், அடுத்ததாக ஜனாதிபதிக்கும் இது தொடர்பாக தெரியப்படுத்துவோம். இதற்கு சரிவராவிட்டால் மக்கள் சாத்வீக போராட்டமொன்றில் இறங்குவார்கள் என தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், மற்றம் கிழக்கு மாகாண சபை உறப்பினர்களான சட்டத்தரணி துரை ராஜசிங்கம், இரா.துரைரட்ணம், நடராசா, கிருஷ்ணப்பிள்ளை (வெள்ளிமைல) மற்றும் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

DSC01518 DSC01514 DSC01513

About these ads

3 Responses to “மட்டக்களப்பு எல்லை நிர்ணயம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்”

  1. நிர்வாக ரீதியான பாராபட்சங்களினாலேயே இன உறவுகள் பாதிப்படையும் அதட்குறிய ஒரே தீர்வு அந்த கிராமதுமக்களுகு எந்த நிர்வாகத்துடன் இருக்க விருப்பமோ அந்த அந்த கிராமத்தை அந்த நிர்வாக அலகுடன் இணைபதே கிராம மக்களின் சம்மதத்துடன் எடுக்கபட்டிருகும் முடிவுக்கெதிராக சம்மந்த மில்லாத கிராமத்தவரை கூட்டி ஆர்பரிப்பதால் எதுவும் ஆகிவிடாது மட்டகளப்பு தொகுதியிலும் வெகு விரைவில் எல்லைகள் மாற்றபடும் அந்த வேளையிலும் கூட்டமைப்பின் வைகள் போர் மிருகத்தின் வேலைக்கி இடம் கொடுக்காது சம்மந்தபட்டோர் உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும்

  2. கஹ்தான் said

    இப்படியே இந்த காத்தான்குடிய கொஞ்சம் alanthu விடுங்கப்பா உங்களுக்கு புண்ணியமா போய்டும்

  3. jesmin said

    கோறளை பற்று மத்தி ,கோரளைப் பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்தே குறித்த பிரதேசங்கள் கிரான்,வாகரை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மர்கூம் முகைதீன் அப்துல் காதர் பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் கபளீகரம் செய்யப்பட்ட விடயங்கள் செல்வராசா போன்ற எம்பிக்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் .உண்மையில் குறித்த பிரதேசங்கள் கோறளை பற்று மேற்கு ,கோரளை பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள் வரவேண்டிய பிரதேசங்கள்தான் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,323 other followers

%d bloggers like this: