காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info • Online Viewers

  web stats

முஸ்லிம் காங்கிரசை பற்றி விமர்சிக்க நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு எந்த வித அருகதையும் இல்லை – எம்.ஏ.எம்.அஷ்ரப்

Posted by Kattankudi Web Community (KWC) on 16/09/2012

-நமது செய்தியாளர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைப்பற்றி விமர்சிக்க நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு எந்தவித தகுதியம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரசின் புதிய அமைப்பாளார் எம்.ஏ.எம்.அஷ்ரப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ் வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 14.09.2012 அன்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் வெளியிடப்பட்ட நன்றி நவில்கிறோம் என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தலுக்குப் பின்னரான முடிவுகள் பற்றி விமர்சிக்கப்பட்டிருந்தது.

இன்று இலங்கை வாழ் முஸ்லிம்கள் தலை நிமிர்ந்து வாழ வழிவகுத்து முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரிய பேரம் பேசும் சக்தியாகவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பற்றி விமர்சிக்க  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு எந்த வித அருகதையும் இல்லை

இத்தேர்தலில் ஒரு பிரதிநிதித்துவத்தை பெற முடியாது என தெரிந்தும் தேர்தலில் களமிறங்கிகி வாக்குகளை பிரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு காத்தான்குடியில் கிடைக்கவிருந்த பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து முஸ்லிம் சமூகத்திற்கு மிகப்பெரும் துரோகத்தை செய்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்  இவ்வாறு பேசுவது குப்புர விழுந்தும் மீசையில் மண் ஒட்டல என்று சொல்வதைப் போலுள்ளது. மேலும் மற்றவர்களையும் மாற்றுக் கருத்துள்ளவர்களையும் விமர்சித்து அரசியல் ஆதரவு தேடுகின்ற உங்களுக்கு கிழக்கு மகாண சபை தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள் எனவும் இளைஞர் அமைப்பாளர் அஷ்ரப் மேலும் தெரிவித்தார்.

About these ads

19 Responses to “முஸ்லிம் காங்கிரசை பற்றி விமர்சிக்க நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு எந்த வித அருகதையும் இல்லை – எம்.ஏ.எம்.அஷ்ரப்”

 1. qatarg said

  தெரியுமா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்பு காலத்தில் நாட்டின் அரசை நியமிக்கிற சக்தியாஹ இருந்தது (கட்ட எறும்பு சுரின்கி கோமநத்தோட வந்துனிக்கு) மாஹான சபைய் தீர் மாணிக்கிர அதுவும் முடிவுஹல் எடுக்க முடியாத தலமைதுவம் மாஹ முஸ்லிம்கல் இன்னும் நம் பிதான் வாக்கு அளிக்கிரார்ஹல் அனால் அவனுஹல் பதவிக்காஹ அடிச்சிக்கிராணுஹல்……

 2. Mohideen said

  அப்படி என்றால் உங்களது ஆஷாத் சாலியும் SLMC யைப் பற்றி விமர்சிக்கிறாரே அப்ப அவரும் என்ன PMGG யா? உங்களின் உண்மையான கொள்கைதான் என்ன ? நோக்கம்தான் என்ன ? தெளிவாய் சொல்லுங்களேன்..

 3. வெள்ளத்தம்பி said

  விடுடா மன. இவகளுக்கு இதுதான்டா மன புளப்பா போச்சு. தன்ற கொள்கய செல்லி வாக்கு கேட்காம மற்றவன்ட மானத்த மேடையேற்றி தோற்றுப் போனவக. இப்ப தன்ற தோல்விய மறைக்கிறதுக்கு இப்படி அறிக்கை விடுறாங்க. நன்றி கின்றி நவிழல் என்று போட்டு மீண்டும் மற்றவனுக்கு ஏசுறாங்க. இதெல்லாம் தான் படித்தவர்களுக்கு இப்போதைய லேட்டஸ்ட் றா மன

 4. marzook said

  ஜனநாயக உரிமையுள்ள நமது நாட்டில்,அரசியல் களத்தில் யாரும் யாரையும் அவர்களது கருத்துக்களை முன்னிறுத்தி விமர்சிக்கும் உரிமை உண்டு. அந்தவகையில் முஸ்லிம்களது உரிமை விடயமாக பேசுவதில் மு.கா.,தே.கா.,அ.இ.மு.கா.(இவை 3 ம் மு.கா.வின் பிரிவு) ந.ம.இ. முதன்மை பெற்றாலும், மு.கா. பெரும்பான்மை முஸ்லிம்மக்களின் ஆதரவு பெற்றுள்ளைமையினால் அவர்கள் தடம் புரளும்போது அது பற்றி விமர்சிக்க தார்மிக கடப்பாடு மற்றைய கட்சிகளுக்கும் உண்டு,இது மற்றைய கட்சிகள் விடயத்தில் மு.கா.வுக்கும் பொருந்தும், இவ்விடயத்தில் சகோ.அஸ்ரபின் அறிக்கை சிறுபிள்ளைத்தனமானது.

  • Mr.RM. Siraaj said

   ஆனால் இதுபற்றி விமர்சிக்க கடந்த 06 வருடங்கள் அரசியலுக்குள் நுழைந்த நல்லாச்சி அமைப்பு ஒரு கட்சியில்லையே! ஆகவே இயக்கங்கள் கட்சிகளை விமர்சிக்க அருகதையற்றவையே!

 5. Ashraff still you are a trinee and you don’t know SLMC’s selfish politics. During the poll it was opposing president and his ally in each and every public addressing meet. PMGG duty was to guide the community, pmgg has right to ask any one regarding public issue

 6. baawaajee said

  பைபிளில் புதிய ஏற்பாடு ,பழைய ஏற்பாடு என்பதுபோல் முஸ்லிம் காங்கிரசிலும் புதிய அமைப்பாளர் ,பழைய அமைப்பாளர் என்றும் உள்ளதாக்கும் .முபீனின் வெற்றியை நானாமானா இயக்கம் இல்லாமலாக்கியது என்றால் .கல்குடாவுக்கு கிடைக்கவேண்டிய பிரதிநிதித்துவத்தை முஸ்லிம் காங்கிரசே இல்லாமலாக்கியது என்று நான் கூறுகின்றேன் .இது சரியாகப் படவில்லையா .ஏனெனில் மூன்று வேட்பாளர்களைப் போட்டு அவர்களது வாக்குகளை பிரித்தது போதாமல்,நசீர் ஹாபீசையும்,ஆசாத் சாலியையும் தலைவர் தனியாக எடுத்துக் கொண்டு கல்குடா முஸ்லிம் வேட்பாளர்களுக்குத் தெரியாமல் ரிதிதென்ன ,ஜெயந்தியாய போன்ற முஸ்லிம் கிராமங்களுக்கு ஆதரவு தேடிச்செல்லவில்லையா? இதற்கு இந்த புதிய அமைப்பாளர் என்ன சொல்லப்போகின்றார் .ஏற்கனவே கல்குடாத் தொகுதியில் பாராளுமன்ற தேர்தலிலும் இருவரைப் போட்டு பசீர் சேகுதாவூத் எம்பியாகினார்.முந்திய மாகாண சபைத்தேர்தலிலும் இருவரைப் போட்டு அவரே மாகாண சபை உறுப்பினரானார் .இம்முறையும் காத்தான்குடியில் மூவரை போட்டு ஒருவரையும் வராமல் செய்தது முஸ்லிம் காங்கிரஸ்தான் என்றும் சொல்லலாம்தானே .அதேபோன்று ஏறாவூரில் பிரபலமில்லாத ஒருவரையும் முஸ்லிக் காங்கிரஸ் போட்டதே .இதற்கு என்ன சொல்லப்போகின்றீர்கள் .அதேபோன்று தலைவர் விருபியவாறு முதல் இரண்டு இடங்களையும் தலைவரின் ஆசீர்வாதம் பெற்றவர்களே பெற்றுள்ளார்கள் .இதனை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியுமா?.

 7. அத்து ஸமது said

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரசின் புதிய அமைப்பாளார் எம்.ஏ.எம்.அஷ்ரப் தன்னை விளம்பரப்படுத்தவே இப்படி சொல்கிறார்.இவர் முபீனின் பாசறையில் வளர்ந்தவர்.கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார் என்பதை காட்டுவதற்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை விமர்சிக்கிறார்.

  • Mr.MM.Mohamed Rameez said

   மன்னிக்கவும் இவர் ஹிஸ்புழ்ழாஹ்வின் போராளியே! கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் பதுறியா பகுதியில் அலிசப்ரி என்பவரை ஹிஸ்புழ்ழாஹ் களமிறக்கியதனை விரும்பாததால் முபீனின் அணியில் சென்று சேர்ந்து கொண்டவர். 2010 பொதுத் தேர்தலின்போது அப்பகுதியில் அவரின் வெற்றிக்காக வீடுவீடாகச் சென்றவர்.

 8. Hanees said

  சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் அல்ல என நான் நினைக்கின்றேன். இதன் ஸ்தாபக தலைவர் மர்ஹும் அஷ்ஷஹீத் அஹமட் லெவ்வை அவர்கள் தான்.

 9. Fnmera said

  “Peram Pesum Sakthi” —I agreed. But, not on behalf of the community, but for the benefit of Leader, MP and MPCs and their supporters. Nothing requested for the sake of people.

 10. rauffabagam said

  நீங்க ஹிஸ்புல்லாவுடன் ஒட்டி திரிந்தபோது முஸ்லிம் காங்கிரேச மிகவும் வன்மையாக விமர்சிதவர்தான் நீங்க.

 11. அரசியல் என்று வந்துவிட்டால் யாரும் யாரையும் விமர்சிக்க முடியும் அதட்கு ஒவ்வோறுத்தருக்கும் உரிமையும் தகுதியும் இருக்கிறது!!! ஆளும் கட்சி எதிர்கட்சிகளை விமர்சிக்க முடியும் எதிர்கட்சிகள் ஆளும் கட்சிகளை விமர்சிக்கமுடியும் பிராந்தியகட்சிகள் தேசியகட்சிகளை விமர்சிக்க முடியும் தேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகளை விமர்சிக்க முடியும் வலது சாரிகள் இடது சாரிகளை இடது சாரிகள் வலது சாரிகளை விமர்சிக்கமுடியும் நாடுகள் தமக்கிடையே விமர்சனங்களை வைக்க முடியும் அதட்கு பெயர்தான் ஜனநாயகம்

 12. Faiz - Qatar said

  முப்பது வருடங்கள் காத்திருந்து நம்பிக்கை இழந்துதான் இன்று மக்கள் உங்களை கேள்வி கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பின் முஸ்லிம் காங்கிரஸ் இந்த மக்களுக்காக பெற்றுக்கொடுத்த ஒரு ஐந்து உரிமைகளை/விடயங்களை உங்களால் கூற முடியுமா சகோதரரே? உங்கள் பார்வையில் பேரம் பேசுதல் என்றால் என்னவென்று கூறுங்கள்?
  இந்த நாட்டில் அண்மைக்காலமாக உருவாகிவரும் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய இனவாதத்துக்கு எதிராக இன்றுவரை என்ன காத்திரமான நடவடிக்கைகள் உங்கள் கட்சியால் எடுக்கப்பட்டுள்ளது? நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கிழக்கு மாகாணம் முழுவதும் ஏழாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைக் கொண்டுள்ளது, இதைவிட வேறு என்ன தகுதி வேண்டும் உங்கள் கட்சியை விமர்சிக்க? துஆ செய்து, நோன்பு நோன்று, நானும் நீங்களும் நம் எல்லோரும் வாக்களித்து உருவாக்கிய கட்சிதான் முஸ்லிம் காங்கிரஸ், அக்கட்சி சரியான பாதையில் செல்லாத போது தட்டிக் கேட்க வாக்களித்த எல்லோருக்குமே உரிமை இருக்கிறது. இனியும் மக்கள் பொறுமை செய்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது முட்டாள்தனம்.
  வருடம் முழுவது மக்கள் குறை தீர்க்க ஒரு கட்சி அலுவலகத்தைக்கூட கிழக்கு மாகாணத்தில் திறக்க உங்கள் கட்சியால் முடியவில்லை….எமது ஊர் குப்பைகளைக் கொட்ட ஒரு இரண்டு ஏக்கர் நிலத்தை கூட இந்தக் கட்சியால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை….எமது ஊரின் எல்லை பிரச்சினைக்கு உங்கள் கட்சி என்ன தீர்வை பெற்றுத்தந்துள்ளது. உங்களால் முடிந்தால் மக்கள் முன்னிலையில் ஒரு திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுங்கள், அங்கு பேசுவோம், மக்கள் தீர்ப்பளிப்பார்கள்!

  • Mohideen said

   பேரம் பேசுதல் என்பதைவிட விலை பேசுதல் என்பது சிறந்தது என நான் நினைக்கிறேன்……சரியா பாயிஸ் ?

 13. sj said

  சரியா சொன்னிங்க போங்க … அதுதானே.. ஒரு கட்சி எண்டா பேச ஏழும்… இது ஒரு பதிவு செய்யபடாத கூட்டம்தானே… பெரிசா பேரு மட்டும் இருக்கு… இன்னும் சுயேச்சை குழுவுலதானே இறங்குறாங்க… முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிச்ச காலம் கூட இருக்காது இவங்கட வயசு… அதுக்குள்ள இவங்க விமர்சிக்குற அளவுக்கு போயிட்டு..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,856 other followers

%d bloggers like this: